Notifications
Clear all

அத்தியாயம் 51

 
Admin
(@ramya-devi)
Member Admin

மயூரா தேவி ஆதி தேவனிடம் தன் நிலையை சொல்லி உதவி கேட்டு அமைதியாய் இருக்குமாறு சொல்ல... அவனோ சிங்கத்தின் சீற்றத்தோடு இருந்தான்.

“நீ என்ன நினைச்சுக்கிட்டு இதெல்லாம் பண்றன்னு எனக்கு தெரியல மயூ. ஆனா நீ என்னை விட்டு விலகி போறதுக்கான காரணங்கள் மட்டும் செய்துக்கிட்டு இருக்கன்னு நல்லாவே தெரியுது..”

என்றவன்  தொடர்ந்து, “இப்போ எதுக்குடி அவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து அழகு பார்த்துக்கிட்டு இருக்க... அவளால நமக்குள்ள அதிகமா பிளவு வருதுன்னு உனக்கு தெரியலையா..?” கேட்டான்.

“எனக்கு அவ இந்த வீட்டுல இருக்குறது சுத்தமா பிடிக்கல... முதல்ல அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பு. நமக்கு இன்னும் எவ்வளவோ வீடு இருக்குல்ல... அதுல ஏதாவது ஒண்ணுல அவளை தங்க வச்சிடு..” என்றான்.

“அது எனக்கு தெரியாமலா நான் இங்க அவளை தங்க வச்சி இருக்கேன். கொஞ்ச நாள் எல்லாத்தையும் இயல்புக்கு கொண்டு வரேன் ஆதி. அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கோங்க..” என்று இங்கு ஆதியை சமாதானப் படுத்திக்கொண்டு இருந்தாள்.

ஆனால் நகரத்தின் ஒரு மூலையில் வர்மன் தன் காய்களை மிக தெளிவாக ஆதியின் நிறுவனத்தில் செயல் படுத்திக்கொண்டு இருந்தார்.

ஆதிக்கும் வர்மனுக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கும் இந்த மோதல் எவ்வாறு வெடிக்க போகிறதோ... அதன் விளைவுகள் எவ்வாறு இருக்க போகிறதோ... காண்போம் அடுத்து வரும் பதிவுகளில்...

--

அடுத்த நாள் காலையில் அனைவரும் உணவு மேசையில் கூடியிருந்தார்கள். ஆதிக்கு மயூ பரிமாற வர,

கேசவன், “ஆதிக்கு ரஞ்சனி பரிமாறட்டும் மயூ... நீ வந்து சாப்பிடு...” என்று சொன்னார்.

அதை கேட்டு மயூரா தேவி திடுக்கிட்டு போனாள்.

“மாமா....” என்று விழித்தாள்.

“ம்ம்ம்... இனி ஆதியை ரஞ்சனி தானே கவனிக்கணும். அது தான் இப்போல இருந்தே பார்த்துக்கட்டும். நீ வாடா...” என்று மேலும் விளக்கம் சொல்ல தொண்டை குழிக்குள் வந்து அடைத்தது காற்றடைத்த பந்து ஒன்று.

ஆதியோ அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது போல, போனை பார்த்துக்கொண்டு இருந்தான்.

சீதாவிற்கு மயூவின் கலங்கிய நிலை கண்டு கஷ்டமாய் போனது. கேசவனிடம் பேச முயன்ற சமயம் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்காமல்,

அவரை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“அதுக்கு அவசியமில்லை. எப்பவும் போல மயூவே பரிமாறட்டும்.” என்றான். விழிகளை போனிலிருந்து எடுக்காமல்.

“அதுக்கு இல்ல ஆதி... முறைன்னு ஒன்னு இருக்குல்ல...” கேசவன் கேட்க...

“யா... ரைட்... எதுக்கும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல...” என்றவன், அவரை கூர்மையாக பார்த்து,

“ரஞ்சனி முறைப்படி இந்த வீட்டுக்கு மருமகளா வரட்டும். அதுக்கு பிறகு இந்த முறைகளை செய்யலாம். அதுவரை மயூவே எனக்கு பரிமாறட்டும்...” என்றான் ஆளுமை நிறைந்த குரலில்..   

அதை கேட்டு அங்கு மறு பேச்சு எதுவும் எழவில்லை.

ஆனால் சீதா மட்டும் பொருமினார். ‘நான் பேச வந்ததை அவன் பேசிட்டு ஸ்கோர் எடுக்குறான் எருமை மாடு...’ என்று.

அதில் ஆதி நக்கலாய் அவரை ஒரு பார்வை பார்க்க..

“போடா டேய்... போடா.. உனக்கே நான் அம்மா... பாத்துக்கலாம்... எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும்” என்று வாயசைத்து சொல்ல..

அவனோ அதுக்கும் நக்கலாய் பார்த்துவிட்டு மயூ பரிமாற இரசித்து உண்டான். ஆதிக்கு பரிமாறிவிட்டு மயூ கேசவனுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாற நகர, ஆதி அவளது கையை பற்றி தடுத்துவிட்டான்.

கேசவனை பார்த்துக்கொண்டே “யாருக்கும் பரிமாற தேவையில்லை. ஆபிஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு... அதனால நீ சீக்கிரம் சாப்பிடு... மத்தவங்க அவங்கவங்களே போட்டு சாப்பிட்டுக்கிட்டும்..” என்றான்.

அதில் ஜெர்க்கான கேசவன் திருட்டு முழி முழித்தார். ‘ஆகா நாமலே வான்டடா வாயை குடுத்து புன்னாக்கிட்டமோ...’ என்று சீதாவை பார்த்தார், அவர்   பரிமாருவாரா என்று.

சீதாவோ அவரை முறைத்துக்கொண்டே தனக்கு மட்டும் எடுத்து போட்டுக்கொண்டு உண்ண தொடங்க தலையை தொங்க போட்டுக்கொண்டார்.

அதில் ஆதிக்கு இதழ் கடையோரம் புன்னகை எழ, உணவு உண்ணுவது போல அடக்கிக்கொண்டான்.

அவர்களுக்குள் நடந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டு இருந்த சிறியவர்கள் நால்வருக்கும் புன்னகை எழுந்தது. லேசாய் வாய் விட்டே சிரிக்க, ஆதி அவர்களை ஒரு பார்வை பார்த்தான். அதில் கப்சிப் என்றாகி அவசரமாய் உண்டு எழுந்து வெளியே சென்றுவிட்டார்கள்.

மயூவோ கேசவன் சொன்ன முறைகளிலே சுழன்ருக்கொண்டு இருந்தாள். இது வரை தெரியாத இனம் புரியாத அலைப்புருதல் அவளை வந்து ஆட்கொள்ள... ஏதோ கை பொருளை களவு கொடுத்தவள் போல இருந்தாள்.

கை பொருள் களவு போனால் கூட பரவாயில்லை. இங்கு அவளது வாழ்க்கையே அல்லவா பறிக்கொடுக்கும் நிலையில் இருக்கிறது. அதை எண்ணி பார்த்தவளுக்கு தொண்டை குழிக்குள் உணவு இறங்க மறுத்தது. தட்டில் அலைந்துக்கொண்டு இருந்தாளே தவிர, அவளால் ஒரு கவளம் உணவை கூட உண்ணமுடியவில்லை.

விறகு கட்டை போல தொண்டை குழியில் குத்திக்கொண்டு இருந்தது. விழிகளில் நிறைந்த கண்ணீர் அவளது தட்டிலே விழ... பார்த்துக்கொண்டு இருந்த ஆதிக்கு ஆத்திரம் வந்தது.

சட்டென்று அவளது காலை மிதித்து அவளை சுயத்துக்கு கொண்டுவர பார்த்தான். அவன் மிதித்ததில் நிமிர்ந்து அவனை பார்த்தவள், சட்டென்று எழுந்து அவளது அறைக்குள் சென்று நுழைந்துக்கொண்டாள்.

ஆதி மையலாய் புன்னகைத்து வைத்தான். சீதாவிற்கு தன் மருமகளின் நிலையை எண்ணி வருத்தமாய் இருந்தது. அதை விட ஆதியின் இந்த சிரிப்பை கண்டு பொல்லா கோவம் வந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மயூ சென்ற பிறகு திவ்யமாய் உண்டு எழுந்தவன், அவளது அறைக்கு சென்றான்.

வாடிய முகத்துடன் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருந்தவளை ரசனையுடன் பார்த்தவன்,

“இது ஆரம்பம் தான்... இனி தான்டி இருக்கு உனக்கு. அவ்வளவு ஈசியா என்னை தூக்கி குடுக்க பார்த்தல்ல... இப்போ அனுபவி. பாவம் ஒரே வேளையிலேயே மேடம் வாடி வந்தங்கிய கொடியாக போட்டீங்க போல” என்றான் கதவின் ஓரம் மிடுக்காய் சாய்ந்துக்கொண்டு. அவனது குரலில் திரும்பி பார்த்தவள்,

அது வரை இருந்த துக்கத்தை கலைத்து, மிடுக்குடன் “எனக்கு ஒண்ணு தேவைன்னா அது எந்த எல்லைக்கு போனாலும் அதை அடைய கூடிய வலிமை எனக்கு இருக்கு மிஸ்டர் ஆதி. சோ என்னை பத்தி நீங்க கவலை பட வேண்டாம். எனக்கு வேணுங்குறதை என்னால அடைய முடியும்... சேம்பிள் பார்க்குறீங்களா...?” என்றவள் அவனை நெருங்கி வந்து அவன் கட்டி இருந்த டையை பிடித்து இழுத்து தன்னிடம் வர வைத்தவள், அவனது இதழ்களில் தன் இதழை பதித்து அழுத்தி ஆழமாக முத்தமிட தொடங்கினாள்.

வாசற் படியிலே இருவரும் நின்று தங்களது உணர்வுகளை கொட்டிக்கொண்டு இருக்க... ரஞ்சனி எதார்த்தமாய் அங்கு வர.. அவளது கண்களில் அந்த காட்சி பட்டது. சட்டென்று அவளது முகம் சிவந்து போய்விட்டது.

Loading spinner

Quote
Topic starter Posted : November 20, 2026 9:39 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top