Notifications
Clear all

அத்தியாயம் 56

 
Admin
(@ramya-devi)
Member Admin

போகிற வருகிறவர்கள் எல்லாம் தீரனுக்கு வணக்கம் வைத்து விஷ் பண்ண,

“நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா? எல்லோரும் விஷ் பண்றாங்க” நக்கலாக கேட்டாள். தீரன் எதுவும் சொல்லவில்லை.

“இருங்க இன்னும் ஒருத்தரை மட்டும் பார்த்துட்டு போகலாம்” என்றாள்.

“யாரு?” என்றான்.

“நான் இங்க இருக்கும் பொழுது ஒரு நர்ஸ் ரொம்ப உதவியா இருந்தாங்க.. அவங்களை மட்டும் பார்த்ட்டுட்டு போகலாம்” என்று அந்த நர்சை தேடி அவள் போக,

“நான் இங்க இருக்கேன். நீ மட்டும் போயிட்டு வா” என்று அவன் சொல்ல,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. கூட வாங்க” என்று கட்டிய மனைவி போல அதிகாரம் செய்தவள், அந்த நர்சை தேடி போய் “ஹாய் சிஸ்ட்டர்” என்று அவரின் கையை பற்றிக் கொண்டாள்.

“ஹாய் மா” என்று அவரும் அவளின் கையை பிடித்த நேரம் அவளின் பின்னாடி வந்து நின்ற தீத்திரள் தீரனை கண்டவர் வாய் தந்தி அடித்தது.

“குட் மார்னிங் சார்” என்று அவரும் விஷ் பண்ண, இவளுக்கு உள்ளுக்குள் அலாரம் அடித்தது. ‘எல்லாரும் சொல்லி வைத்தது போல விஷ் பண்ணுகிறார்கள் என்றால் ஒருவேளை...’ என்று அவள் எண்ணும் பொழுதே,

அந்த மருத்துவமனையின் சீப் டாக்டர் வேகமாய் வந்து “குட் மார்னிங் எம்டி சார்” என்று சொல்ல, பக்கென்று ஆனது.

“ஓ.. ஹாஸ்பிட்டலும் இவரோடது தானா..?” எண்ணியவளுக்கு பொசுக்கென்று போனது.

மருத்துவர் விஷ் பண்ணதுக்கு பதிலுக்கு வெறுமென தலை அசைத்தான்,

“ரூம்ல போய் இருக்கலாமே சார்” அவர் பதுசாய் கேட்க,

“இருக்கட்டும்..” என்றவன் அவளை திரும்பி பார்த்தான். இவளுக்கு ஏதோ தப்பு பண்ணியது போல உணர்வு வர,

“சாரி எனக்கு இது உங்க ஹாஸ்பிட்டல்னு தெரியாது” தலையை குனிந்துக் கொண்டு அவள் சொல்ல, அதை கண்டுக் கொள்ளாதவன்,

“நேர்ஸ் கிட்ட பேசிட்டியா?” என்று கேட்டான்.

“ம்ம்”

“இன்னும் வேற யாராவது பாக்கி இருந்தா போய் பேசிட்டு வா.. நானும் வேணா கூட வரேன்” என்றான்.

“அய்யயோ கோவிச்கிக்கிட்டாரோ” பதறியவள், “இல்ல போகலாம்” என்று சொன்னாள். கிளம்பி விட்டான். காரில் ஏறியதில் இருந்து அவன் எதுவும் பேசாமல் வந்தான்.

அவனது உயரம் தெரியாமல் தன்னுடன் ஒவ்வொரு இடமாக அலைய வைத்தது நினைவில் வர,

“சாரி சார்.. அது உங்க ஹாஸ்பிட்டல்னு தெரியாம நான் உங்களை அங்கும் இங்குமா ரொம்பவே அலைக்கழிச்சுட்டேன்” சொன்னவளை கண்டுக் கொள்ளாமல்,

“வீட்டுல விடுறேன். ரெஸ்ட் எடு” என்றான்.

“வேணாம் நான் ஆபிஸ் போறேன்” என்றவளை திரும்பி பார்த்தவன் தோளை குலுக்கி விட்டு பாதையில் கவனமானான்.

ஆனால் உள்ளுக்குள் தீரன் மிக அதிகமாக இறுகிப் போனான். அவனுக்கே தெரியாமல் அவனது மகனை இந்த பூமிக்கு வர வைத்து விட்டார்களே என்ற வேதனை அவனை அரித்தது.

சரி குழந்தைக்கு தான் ஏற்பாடு செய்து விட்டார்கள் என்றால் அந்த குழந்தைக்கு ஏற்பாடு செய்ததையும் மறந்துப் போனது எந்த விதத்தில் நியாயம். என் மகன் எவ்வளவு பெரிய சாம்ராஜியத்துக்கு உரியவன்.

ஆனால் அதில் ஒன்றை கூட அவன் அனுபவிக்காமல் எங்கோ ஒரு மூலையில் அவன் வளர்ந்தது இவனுக்கு உள்ளுக்குள் பெரும் காயத்தை ஏற்படுத்தி இருந்தது.

அது இந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு இன்னும் அதிகமாக வர உள்ளுக்குள் இறுகிப் போனான். அவனது குழந்தையை கண்டு பிடித்ததனால் போச்சு.. இல்லை என்றால் அவனது புத்திர சோகத்தை வார்த்தையால் அளந்து விட முடியமா என்ன?

பெருமூச்சு விட்டவனை திரும்பி பார்த்தாள் அதிரல். அவனது உணர்வுகள் அவளுக்கு புரியவில்லை. ஆனால் உள்ளுக்கு எதையோ போட்டு உருட்டிக் கொண்டு இருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.

மிக இறுக்கமாக இருப்பது போல உணர்ந்தவள், காதில் ப்லூடூத்தை கனெக்ட் பண்ணி பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.

பாட்டில் மூழ்கிப் போனவளை ஒரு பார்வை பார்த்தவனுக்கு அடுத்த பெருமூச்சு வந்தது.

ஒன்றும் அறியாதவள் அல்லவா இந்த பேதை பெண். தங்கையை காப்பாற்ற முடியுமா முடியாதா என்ற இக்கட்டான உயிருக்கு போராடும் சூழ்நிலையில் துணிந்து முடிவெடுத்து பிள்ளையை கருவில் சுமக்க அத்தனை சோதனைகளையும் தனியாக சந்தித்து பிள்ளையை வயிற்றில் வாங்கிக் கொண்டாள்.

அது மட்டுமா ப்ராசசை கேன்சல் பண்ணிடுங்க என்ற பொழுதும் கொஞ்சமும் எதிர்காலத்தை பற்றி கவலை படாமல் அவ்வளவு ஏழ்மையிலும் வயிற்றில் இருந்த பிள்ளையை கலைக்காமல் இதோ இப்பொழுது வரை அவளின் உயிரில் வைத்து பாதுகாத்து வருகிறாள். இவள் யாருக்கு என்ன துரோகம் செய்தாள்.

சிறு வயதில் இருந்தே அனுபவிக்கத துயரங்களை எல்லாம் பார்த்து மறுத்து போய் விட்டாள். யாரோ செய்த பாவத்துக்கு இல்லையில்லை என் தாய் செய்த பாவத்துக்கு இவள் வாழ் நாள் முழுவதும் தண்டனை அணிபவித்துக் கொண்டு இருக்கிறாள்.

ஆனால் அதை பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலை படமால் பிள்ளையை உயிரை குடுத்து வளர்த்துக் கொண்டு இருக்கிறாள்.

தான் போட்ட அத்தனை கண்டிஷன்களையும் ஏற்றுக் கொண்டு இதோ பிள்ளைக்காக என்னை சகித்துக் கொண்டு இருக்கிறாள்.

அவளின் தியாகங்களுக்கு முன்பு எல்லாமே தூசி தான். நேற்றைக்கு தன் தாய் ஆடிய ஆட்டத்துக்கு அதிரல் கண்கள் கலங்கி நின்ற தோற்றம் கண் முன் வர தொண்டை அடைத்தது தீத்திரள் தீரனுக்கு.

இவளுக்கான நியாயங்களை யார் கேட்டு வாங்கிக் கொடுப்பார்கள் என்று எண்ணியவனின் கைகளில் கார் ஸ்லிப் ஆக, பட்டென்று அவனை திரும்பி பார்த்தாள்.

அவனின் முகம் இன்னும் இருக்கமாகிக் கொண்டு போனது போல இருக்க,

“சார் சார்..” என்று அழைத்தாள்.

“ம்ம்” என்றானே தவிர அவளிடம் வேறு எதுவுமே பேச முடியவில்லை. அவளை நிமிர்ந்துக் கூட அவனால் பார்க்க முடியவில்லை.

“என்ன ஆச்சுங்க..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.. கார் வேற ஸ்லிப் ஆகுது. கொஞ்சம் காரை ஓரம் கட்டுங்க” என்று அவள் பதட்டத்துடன் சொல்ல, அவனுக்கும் அது தான் சரியாகப் பட்டது.

அவன் காரை நிறுத்திய உடன் பேக்கில் இருந்த நீரை எடுத்து அவனுக்கு குடிக்க குடுத்தாள்.

மறுக்காமல் வாங்கிக் குடித்தவன், அவளை நிதானமாக பார்த்தான். அவனது பார்வை புதுசாக இருக்க,

“என்ன ஆச்சுங்க? ஏதும் பிரச்சனையா? நான் உங்களை ரொம்ப அலைக்கழிச்சுட்டனா? எனக்கு தெரியாதுங்க அது உங்க ஹாஸ்பிட்டல்னு.. தெரிஞ்சு இருந்தா நான் அங்க உங்களை கூட்டிட்டு..” எனும் பொழுதே அவளின் கழுத்தை வளைத்து இதழ்களை தன் இதழ்களுக்குள் கவ்விக் கொண்டான் ஆவேசமாக.

திடுதிப்பென்று இப்படி வாயை கடித்து வைப்பான் என்று தெரியாது அவள் திகைக்க, அவளை இழுத்து அப்படியே தன் மடி மீது அமர்த்திக் கொண்டவன் அவளின் இதழ்களை விடாமல் மீண்டும் சுவைத்தவனின் உயிரை உருக்கி அவளிடம் கொடுக்க அவள் திகைத்துப் போனாள்.

அவனுக்கு இணையாக அவளும் அவனுக்கு பதில் கொடுப்பதை தாமதமாக உணர்ந்தவள், சுதாரித்து விலகப் போனாள்.

ஆனால் அவன் விடாமல் தனக்குள் அவளை சுருட்டிக் கொண்டான்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 19, 2026 10:19 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top