“அடப்பாவி” என்று மிரண்டுப் போனவள் அவன் வன்மையாக தீண்டிய இடமெல்லாம் வலி எடுத்தது. எங்கெங்கோ அவன் தீண்டி வைக்க அவளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
அப்படியே சிறிது நேரம் படுத்து இருந்தாள். கேர்டேக்கர் வர, அவரிடம் பிள்ளையை குடுத்து விட்டு எழுந்து குளிக்க சென்றாள்.
பிள்ளையும் குளித்து வெளியே வர, இவளும் வேறு புடவை கட்டிக் கொண்டு வெளியே வர சரியாக இருந்தது. அதே நேரம் இருவருக்கும் உண்டான உணவு பார்சல் வந்து விட, பிள்ளைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே இவளும் சாப்பிட்டு எழுந்தாள்.
அலுவலகம் போகலாம் என்று எண்ணி தலைவாரி கொஞ்சமாய் மேக்கப் போட்டுக் கொண்டவள் கண்களுக்கு மை இழுத்தாள். அவளின் விரிந்த கண்களுக்கு அந்த மை மிக எடுப்பாக இருந்தது.
அதை ஒரு கணம் இரசித்து விட்டு ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டு வெளியே வர, சோபாவில் கால் மேல் கால் போட்டு பிள்ளையோடு அமர்ந்து இருந்தான் தீரன்.
ஆட்டோ புக் பண்ண பார்த்தவளை தடுத்தவன் தன் காரில் அழைத்துக் கொண்டு போனான்.
சரி ஆபிஸ் தான் போகிறோம் என்று எண்ணி இருந்தவள் ரூட் வேறு எங்கோ போக,
“ஆபிஸ் போகலையா?” பதறி கேட்டவளை திரும்பி பார்க்காது சாலையில் கவனத்தை வைத்து இருந்தபடியே,
“இல்ல” என்றான்.
“ஏன்? இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்குன்னு உங்க பியே சார் சொன்னாரே” அதிரல் கேட்க,
அவனிடம் மேற்கொண்டு எந்த சொல்லும் உதிரவில்லை.
“என்னை கடத்திட்டு எங்கும் போறாரா?” மனதுக்குள்ளே முணகினாள்.
“கடத்திட்டு போற அளவுக்கு நீ அவ்வளவு எல்லாம் ஒர்த் இல்லடி” என்றான்.
“இதுக்கு மட்டும் இவருக்கு முத்து உதிருமே” நொடித்துக் கொண்டாள்.
சரி எங்கயோ போகட்டும் என்று அமர்ந்துக் கொண்டாள். ஆனால் அவன் கொண்டு போய் நிறுத்திய இடம் கண்டு பயந்துப் போனாள்.
“இங்க எதுக்கு வந்து இருக்கோம்?” என்று படபடப்பாக கேட்டவள் தானாக முன் வந்து அவனின் கையை பற்றிக் கொண்டாள் பயத்தில்.
“ஸ்கேன் இல்லன்னா எக்ஸ்ரே எடுக்க தான்” என்றவன் அவளின் பயத்தை கூர்ந்துப் பார்த்தான்.
“என்னடி எதுக்கு பயப்படுற?” கேட்டான்.
“அது.. அது இங்க தான்.. நம்ம தம்பி” என்று அவள் சொல்ல, புரிந்துக் கொண்டான்.
“நாலு வருடத்துக்கு முன்னாடி நடந்த விசயத்துக்கு இப்பவும் பயப்படுறியா?” என்று நக்கலாக கேட்டான். அவனின் நக்கலில் கோவம் வர,
“ஹலோ எனக்கு ஒன்னும் பயம் இல்ல.. நீங்க பாட்டுக்க எதுவும் சொல்லாம இந்த ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்து நிறுத்துனா ஜெர்க் ஆகாதா? மறுபடியும் பிள்ளை குடுத்துட்டா நான் என்ன பண்றதாம்” என்றாள் படபடவென்று..
“ஆஹாங்..” என்று நக்கல் பண்ணியவன், அவளின் காதோரம் சரிந்து,
“இனி புள்ள குடுக்குறதுன்னா டேரக்ட்டாவே குடுத்துடுவேன்டி.. ஹாஸ்பிட்டல் எல்லாம் தேவையே இல்லை..” என்றான்.
“ம்கும் அது முடியாம தானே ஐவிஎப் பண்ணி உள்ள வச்சீங்க உங்க பிள்ளையை. வேலையை பாருங்க சார். சும்மா எப்போ பாரு பயம் காட்டிக்கிட்டே இருக்க வேண்டியது” நக்கல் செய்தவள்,
“ஆமா இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கோம்?” இவள் கேட்க,
“கண்ணாடி பீஸ் எதுவும் உள்ள இருந்தா என்ன பண்றது அதுக்கு தான்” என்றவன் “இன்னைக்கு நைட் காண்பிக்கிறேன்டி என்னால முடியுமா முடியாதான்னு” மிரட்டியவன், அவளை நடக்க விடாமல் வீல் சேரை வரச்செய்து ஸ்கேன் ரூமுக்கு கொண்டு போனான்.
அங்கே எக்ஸ்ரே எடுக்கப்பட்டு ஸ்கேனும் எடுக்கப்பட்டு எந்த பீசும் உள்ளே இல்லை என்று ரிசல்ட் எடுத்த நிமிடமே சொல்லி விட்டார்கள்.
“காயத்தை கிளீன் பண்ணி ட்ரெசிங் பண்ணா மேடமை கூட்டிட்டு போகலாம் சார்” என்று மருத்துவர் சொல்ல,
“ஓகே நான் வெயிட் பண்றேன்” என்று அங்கேயே அமர்ந்து விட்டான்.
“இல்ல சார் நீங்க உங்க” என்று அவர் சொல்ல வர,
“தேவையில்லை.. கேரி ஆன்” என்றவன் போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
கிழித்து இருந்த இடத்தை சுத்தம் செய்து கட்டுப் போட ஆரம்பிக்க, அதிரலுக்கு ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.
“டாக்டர் டாக்டர் ஒரு விசயம்” என்றாள்.. தீரனின் காது கூர்மையானது அவள் பேச்சில்.
“என்ன மேம்” என்று அவர் மரியாதையாக அழைக்க,
“அது ஒரு நாலு வருடத்துக்கு முன்னாடி இந்த ஹாஸ்பிட்டலோட எம்டி ரொம்ப சீரீயஸ்னு சொல்லி எல்லாரும் விளக்கு வச்சு பிரேயர் பண்ணாங்க. பிழைக்கவே முடியாதுன்னு சொன்னதா சொல்லி எல்லாரும் வருத்தப் பட்டாங்க.. இப்போ அந்த எம்டி எப்படி இருக்காங்க டாக்டர்” என்று அவள் கேட்க, மருத்துவருக்கு புரை ஏறியது. அவர் திரும்பி தீத்திரள் தீரனை பார்த்தார்.
அவன் வாய் மேல் விரல் வைத்து சொல்லாதே என்று சொல்ல, தலையை ஆட்டிக் கொண்டவர்,
“அவரு இப்போ ரொம்ப நல்லா இருக்காங்க மேம்”
“அப்படியா பரவாயில்ல.. நானும் கேண்டில் வச்சு பிரேயர் பண்ணேன் டாக்டர்.. நல்ல வேலைக்கு என் வேண்டுதல் பளிச்சிடுச்சு” பெருமையாக சொல்லிக் கொண்டவள் தீரனை பார்த்தாள்.
அவன் போனை விட்டு விழிகளை எடுக்கவில்லை. ம்கும் இவருக்கு எங்க தெரியப்போகுது என் பெருமை வாய் விட்டு முணகியவள் அவளுக்கு ஐவிஎப் செய்த மருத்துவரை போய் பார்த்து விட்டு வரலாம் என்று தீரனிடம் சொல்ல, அங்கு இருவரும் சென்றார்கள்.
--
“இந்த டாக்டர் தான் எனக்கு ஐவிஎப் பண்ணாங்க” என்று அவனிடம் அறிமுகம் செய்து வைக்க, அவர் திருதிருவென்று முழித்தார்.
அவன் வாய் மீது கை வைத்து எதுவும் சொல்லாதீங்க என்பது போல சொல்ல, அவர் இரு பக்கமும் தலையை ஆட்டி கொண்டார்.
“இவங்களால தான் நமக்கு நம்ம குட்டி தீரா கிடைச்சான்” என்று சொன்னவள்,
“ரொம்ப தேங்கஸ் டாக்டர். நீங்க இல்லன்னா என் தங்கச்சியும் எனக்கு இல்ல. என் மகனும் எனக்கு கிடைச்சு இருக்க மாட்டான்” என்று அவள் சொல்ல,
“சரிம்மா” என்றவர் அவளின் தங்கை நலத்தை கேட்டுக் கொண்டார்.
“அவ நல்லா இருக்கா டாக்டர்.. என்ன அவளுக்கு சென்னை பொல்யூஷன் சேராதுன்னு ஊட்டியிலே விட்டுட்டு வந்துட்டேன். அது தான் ரொம்ப கஷ்ட்டமா இருக்கு..” என்றாள்.
“சரிம்மா நீ எதுக்கும் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கேட்டுக்கோ.. அவங்க ஒரு முறை உன் தங்கையை செக் பண்ணி பார்த்துட்டு சொன்னா உனக்கும் ஓகேவா இருக்கும் இல்லையா?” என்றார்.
“சரிங்க டாக்டர். நான் கேட்டுக்குறேன்..” என்று அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டவள், தீரனோடு வெளியே போக, அந்த மருத்துவர் மண்டையை பிடித்துக் கொண்டார். “என்னடா நடக்குது இங்க” என்பது போல.
போகிற வருகிறவர்கள் எல்லாம் தீரனுக்கு வணக்கம் வைத்து விஷ் பண்ண,
“நீங்க என்ன அவ்வளவு பெரிய ஆளா? எல்லோரும் விஷ் பண்றாங்க” நக்கலாக கேட்டாள். தீரன் எதுவும் சொல்லவில்லை.




