அத்தியாயம் 8

 
Admin
(@ramya-devi)
Member Admin

“எங்களுக்கு மேனர்ஸ் இருக்க போய் தான் இத்தனை நாள் நீங்க செஞ்சதை எல்லாம் பொறுத்துக் கொண்டு பொறுமையா போனேன். ஆனா உங்களுக்கு தான் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம ஒரு டீச்சரை எப்படி நடனத்தனும்னு தெரியல மிஸ்டர் கங்குவன்” அத்தனை கோவமாக அவனிடம் வெளிபட்டாள்.

“ஏய் யாருக்கிட்ட குரல் உயர்த்தி பேசிக்கிட்டு இருக்கணு தெரியுமா?” அடிக்குரலில் உறுமினான்.

“ஏன் தெரியாம அதிகார திமிர்ல ரொம்பவும் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்க ஒரு சாடிஸ்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்னு ரொம்ப நல்லாவே தெரியும்” என்று சொன்னவளை அறைய கையை ஓங்கினான் கங்குவன்.

“என்னடி உன் தாத்தன் மினிஸ்டர், உங்கப்பன் பெரிய பிஸ்னஸ் மேன், ஆத்தா காரி மேயர், உன் நொண்ணன் போலீஸ்னு என் கிட்ட ஆடி பார்க்குறியா?”

“ச்சீ இவ்வளவு கீழ் தரமா பேசுறீங்க.. என்ன ஸ்லாங் இது.. கொஞ்சம் கூட கரஸ்பாண்டன்ட்க்குறிய மேனர்ஸ் எதுவுமே கிடையாது. இதுல உங்க பையன் அடங்கலன்னு கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. முதல்ல நீங்க நல்லா வளருங்க சார். உங்களுக்கு தான் போர்டிங் தேவை படுது. உங்க மகனுக்கு இல்ல.. அது சரி இப்படி சீப்பா பிகேவ் பண்ற உங்ககிட்ட இருந்து அவன் வேற என்னத்தை கத்துக்க முடியும்.. அப்பன் எப்படியோ அப்படி தான் பிள்ளையும் வளர்ந்து நிற்கும்” என்று அவள் சொல்லி விட, கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அவளின் கன்னத்தில் போலிறென்று ஒரு அரை அறைந்து விட்டான்.

அதை கொஞ்மும் எதிர் பார்க்காதவள் ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள்.

கங்குவனுக்குமே அடித்த பிறகு தான் தான் செய்த மதத்தனம் புரிந்தது.

“காட்..” தனக்குள் முணகிக் கொண்டவன்,

“ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சா..” என்று அவன் மன்னிப்பு கேட்க வரும் பொழுதே அவனின் கன்னத்தில் நச்சென்று ஒரு அறை விட்டாள் நறுவேரல்.

அதை அவளிடம் இருந்து சற்றும் எதிர் பாராதவன் ஒரு நொடி செயலிழந்து தான் போனான். அவன் சுயத்துக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

உணர்வுக்கு வந்தவன்,

“ஹவ் டேர் யூ ...” என்று கெட்டவார்த்தை ஒன்றை அவன் பிரயோகப்படுத்த வர,

“என் முன்னாடி கெட்ட வார்த்தை பேசுனா இன்னொரு அடி விழும் மிஸ்டர் கங்குவன்.. மைன்ட் யூவர் வேர்ட்ஸ்..” என்று எச்சரித்தாள்.

“அப்படி தான்டி பேசுவேன்.. ----- இது மட்டும் இல்ல இன்னும் பல வார்த்தை பேசுவேன்” என்றவன் சில பல வார்த்தைகளை விட்டவன்,

“உன்னால என்ன பண்ண முடியும்.. என்ன புடுங்க முடியுமோ அதை புடுங்கு..” என்று அவன் முடிக்கும் முன்பே மீண்டும் அவனது கன்னத்தில் அறைந்தாள் நறுவேரல்.

“ஏய்..” என்று அவன் கர்ஜிக்க, கொஞ்சமும் பயமில்லாமல்,

“என் முன்னாடி கெட்ட வார்த்தை பேசுனா அடி கண்டிப்பா விழும். அதுவும் வேணும்னே பேசுனா இன்னும் ரெண்டு அடி கூடுதலா விழும்..” என்றாள் நிமிர்வாக.

“ஒரு ஆம்பளையை கை நீட்டி அடிக்கிற.. அதுவும் உன்னை வேலைக்கு எடுத்த முதலாளியையே”

“எவனா இருந்தாலும் அடிப்பேன்..” என்றாள் கொஞ்சமும் சளைக்காமல்.

“எவ்வளவு திமுருடி உனக்கு.. அடிக்கிறதும் அடிச்சுட்டு இன்னமும் அடிப்பேன்னு மரியாதை இல்லாம வேற பேசுற.. உன்னை இங்கயே கொன்னு போடுறேன்டி..” அவளின் கழுத்தை நெரிக்க வர,

அவனின் கையை தட்டி விட்டவள்,

“முதல்ல நீங்க ஒரு முதலாளி மாதிரி நடந்துக்கோங்க.. எவ்வளவு சீப்பா பிகேவ் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு உங்க தகுதியை விட்டு கீழ இறங்கி நடந்துக்கிட்டு இருக்கீங்க” என்றாள்.

“என் நடத்தையில என்ன ஒழுங்கீனத்தை கண்ட” அவளின் அடியில் சிவந்துப் போன கன்னத்தை தேய்த்துக் கொண்டவனுக்கு பெருத்த அவமானமாக போனது.

“ஒரு நாள் ரெண்டு நாள் பழி வாங்கலாம்.. இப்படி ஹாஸ்பிட்டல் போற அளவுக்கா பழி வாங்குவீங்க.. இந்த விசயம் எங்க வீட்டுல இருக்க யாருக்காவது ஒருத்தவங்களுக்கு தெரிஞ்சா போதும். உங்க மொத்த ஸ்கூலையும் சீல் வச்சிடுவாங்க..” என்றவள்,

“பட் எனக்கு அதுல உடன் பாடு இல்ல.. ஏன்னா இங்க படிக்கிற ஒவ்வொரு ஸ்டுடன்ட்டோட எதிர்காலம் எனக்கு ரொம்ப முக்கியம்.. அதனால இந்த விசயத்தை வீட்டுல சொல்லல..”

“இனிமேலும் இப்படியாருக்கவது பனிஷ்மென்ட் குடுக்காதீங்க.. ஏன்னா இங்க இருக்குறவங்க என்னை விட வயசுல கொஞ்சம் பெரியவங்களா இருக்காங்க.. அவங்களால இதை எல்லாம் தாங்க முடியாது. நீங்களே பாருங்க கால் ரெண்டும் எப்படி வீங்கிப் போய் இருக்குன்னு. கொஞ்சம் கூட நடக்க முடியல.. கால் ரெண்டும் வின் வின்னு தெறிக்கிது” என்று புடவையை முட்டிக்கு கீழ் வரை தூக்கி காட்ட,

கீழே அவளின் காலை குனிந்து பார்த்தவனுக்கு பகீர் என்று இருந்தது. அத்தனை அளவுக்கு வீங்கிப் போய் இருந்தது.

அவள் காலில் அணிந்து இருந்த கொலுசே அச்சு பதியும் அளவுக்கு அவளின் காலை இறுக்கிப் பிடித்து இருந்தது. குட்டி குட்டியாக இருக்கும் ஒவ்வொரு விரலும் அளவில் பருத்துப் போய் இருந்தது.

“ஸ்லிப்பர் கூட யூஸ் பண்ண முடியல..” என்றவளின் குரலில் வலி நிறைந்து இருந்தது.

“இந்த அளவுக்கு ஆகும்னு நான் எதிர்பார்க்கல..” என்றவன்,

“சீட் போட சொல்றேன்” என்றான்.

“அதக்கும் உங்கக்கிட்ட போராட வேண்டியதா இருக்கு” என்றவள் வெளியே போய் விட,

“ஈவினிங் ஒர்க் இருக்கு” என்றான்.

அவள் நின்று திரும்பி முறைத்தாள்.

“ஆபிஸ்லையும் சேர் போடுறேன்.. இருந்து செஞ்சு குடுத்துட்டு போ. ஓரளவு தான் பனிஷ்மென்ட் குறைக்க முடியும். அதோட நீ அறைஞ்ச அறைக்கும், என் மகனை பேசுன பேச்சுக்கும் இன்னும் கூடுதலா ஒரு மணி நேரம் வேலை செஞ்சுட்டு தான் போற” என்றான்.

“நான் உண்மையை தான் சொன்னேன். முதல்ல உங்க பிகேவியர மாத்துங்க. ஆட்டோமேட்டிக்கா உங்க மகன் திருந்துவான்” என்ற நேரமே அவனுக்கு ஒரு  போன் வர எடுத்து பேசியவனின் முகம் அத்தனை ஆத்திரமாய் போனது.

“என்ன ஆச்சு?” என்று கேட்க தான் தோன்றியது. எதற்கு வேண்டாத வேலை என்று வெளியேறி விட்டாள்.

ஆனால் அவனோ “ஹேய் நில்லு” என்று கர்ஜிக்க, என்ன என்பது போல தலையை மட்டும் உள்ளே நீட்டினாள்.

“என்னவோ பெரிய இவ மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ணியே.. இப்ப பாரு அவன் சாப்பிடாம மயக்க போட்டு விழுந்து வச்சு இருக்கான். இதுக்கு என்ன சொல்ல போற” என்று சீறினான்.

“சாப்பிடலையா? இந்த சின்ன வயசுல வயிற்றை பட்டினியா போடுற அளவுக்கு என்ன வீம்பு” என்று அவள் வாயை விட,

“அதை தான்டி நானும் புரியாம அவன் கிட்ட எரிஞ்சு விழறேன்” அவன் உறும,

“இப்படியே அவன் கிட்ட உறுமி வச்சா அவன் மிரண்டு முரண்டு பிடிக்க தான் செய்வான்.. உங்களுக்கு கம்மியான டெசிபல்ல பேசவே வராதா” என்றவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் போனான்.

“என்னை எங்க அழைச்சுட்டு போறீங்க.. எனக்கு வேலை இருக்கு. முதல் வகுப்புக்கே மட்டம் போட விடுறீங்க”

“நீ தான் வை கிழிய பேசுனல்ல.. அவனை ஒரு வாய் சாப்பிட வை.. நீ பெரிய புடுங்கின்னு நான் ஒத்துக்குறேன்” என்றவனை என்ன செய்வது என்று தெரியாமல் முறைத்துப் பார்த்தாள்.

“எத்தனை முறை தான் சொல்றது இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு..”

“ப்ளோல வருதுடி” என்றவனுக்கு டென்ஷனில் வண்டியை ஓட்டவே முடியவில்லை.

“எங்காவது கொண்டு போய் ஆக்சிடென்ட் பண்ணிடாதீங்க... இந்த பக்கம் வாங்க நான் கார் ட்ரைவ் பண்றேன்.. எந்த ஹாஸ்பிட்டல்னு சொல்லுங்க” என்று அவனை இந்த பக்கம் வர வைத்து விட்டு அவள் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

அவன் சொல்ல இவள் வேகமாக அங்கே சென்றாள்.

முன்ன பின்ன தெரியாத குழந்தை தான். ஆனால் இவன் சொல்லில் மூலம் அறிமுகமான பிள்ளை மீது இரக்கம் ஏகத்துக்கும் சுரந்து இருந்தது.

பின்ன காட்டானிடம் சிக்கிய மழலை அன்றோ அவன். அவன் மீது அவளுக்கு இயல்பாகவே இரக்கமும் கருணையும் சுரந்தது.

ஹாஸ்பிட்டல் போய் கண்ணாடிக்கு வெளியே நின்று அந்த பிஞ்சு குழந்தையை பார்த்தவளுக்கு நெஞ்சமே கலங்கிப் போனது.

மூன்று வயதுக்கு உரிய சதை பிடிப்பு இல்லாமல் எழும்பும் தோலுமாக பிள்ளை இருந்தான். அது மட்டுமா வாடி வந்தங்கிய கொடி போல துவண்டு இருப்பதை பார்த்து நெஞ்சம் கணத்துப் போனது.

Loading spinner

Quote
Topic starter Posted : August 27, 2026 10:54 am
(@sowmya)
New Member

😍😍😍😍😍

Loading spinner

ReplyQuote
Posted : August 27, 2026 1:15 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top