அத்தியாயம் 9

 
Admin
(@ramya-devi)
Member Admin

“உண்மையாவே இது உங்க பிள்ளை தானா?” என்று நம்ப முடியாமல் கேட்டவளை முறைத்துப் பார்த்தான் கங்குவன்.

“இல்ல நீங்க இப்படி கட்டுமஸ்த்தா இருக்கீங்க.. உங்க பிள்ளை ரொம்ப மோசமா இருக்குறானே. அது தான் கேட்டேன்” என்றாள் நக்கலாக.

“என்னடி கொழுப்பா.. அவன் இப்படி இருக்குறது தான் என் பிரச்சினையே” எரிந்து விழுந்தான்.

“ஹலோ ப்ளோல போடி வாடின்னு வருது..” என்றவளை கண்டு கொள்ளாமல் பிள்ளையை எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“கொஞ்சம் கூட சாப்பிட மாட்டானா?”

“ப்ச் செர்வன்ட் கிட்ட தான் விசாரிப்பேன். சாப்பிடுவான்னு சொல்லுவாங்க”

“நீங்க கேமாராவுல செக் பண்ண மாட்டீங்களா?”

“அபப்டி பார்க்க போய் தான் அவன் சாப்பிடாம தட்டை தூக்கி எறியிறது தெரிஞ்சுது” என்றான் வேதனை அடக்கிய குரலில்.

“டாக்டர் யார் கிட்டயாவது காட்டுனீங்களா?”

“ப்ச் யாரையும் பக்கத்துலையே விட மாட்டான்”

“உங்க முரட்டு தனம் அப்படியே அவனுக்கும் வந்து இருக்கு..”

திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான்.

“நீங்க முறைச்சாலும் அது தான் உண்மை.. பிள்ளைங்க  முன்னாடி நாம என்ன செய்யிறமோ அதை தான் அப்படியே செய்யும். நீங்க கோவத்தை காட்ட பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைச்சு இருப்பீங்க.. சோ அதை அவன் கண்டினியூ பண்றான்” என்றாள் நறுவேரல்.

“ப்ச்”

“ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க.. வெயிட் பண்ணுவோம்” என்றவள்,

“என்ன நடந்ததுன்னு செர்வென்ட் கிட்ட விசாரிங்க முதல்ல” என்று தள்ளி நின்றுக் கொண்டாள். அதன் பிறகே நினைவு வந்து வீட்டின் மேனேஜர் மற்றும் கேர்டேக்கர் இருவரும் அங்கு நின்று இருக்க அவர்களிடம் போய் விசாரித்தான்.

“மூணு நாளா ஒழுங்காவே சாப்பிடல சார்..” என்று தயங்கி தயங்கி சொல்ல, இருவரின் கன்னத்திலும் பொலிரென்று அறை விட்டான்.

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. முதல் நாளே சொல்ல மாட்டீங்களா அவன் சாப்பிடலன்னு.. இப்ப பாருங்க அவனை எங்க கொண்டு வந்து படுக்க வச்சு இருக்கீங்கன்னு. அவனை கவனிச்சுக்க தானே நாலு பேரை அப்பாயின்ட்மென்ட் பண்ணி இருக்கேன்.. கைநிறையய சம்பளம் வாங்க தெரியுதுல்ல.. என் பிள்ளையை கவனிச்சு ரிப்போர்ட் குடுக்க உங்களுக்கு எல்லாம் என்ன கேடு.. சம்பளத்தையும் குடுத்துட்டு உங்கக்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க சொல்றீங்களா? உங்கள்ள ஒருத்தர் கூட இனி என் வீட்டுக்குள்ள இருக்கக் கூடாது. இப்பவே இந்த நிமிடமே எல்லோரையும் வீட்டை விட்டு தூக்குறேன்” என்றவன் பிஏவுக்கு போனை போட்டு எல்லோரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பியவன்,

வேற ஆட்களை அடுத்த நிமிடமே வேலைக்கு அமர்த்தி விட்டு அவன் ஓய்ந்துப் போய் மகனை பார்க்க விரைந்தான்.

கதவை அதிரடியாய் திறந்துக் கொண்டு உள்ளே வர, மிரண்டு போய் அறுகில் அமர்ந்து இருந்தவளின் நெஞ்சுக்குள் பதுங்கிக் கொண்டான் குட்டி வாண்டு..

பார்வையிலே கண்டனத்தை தெரிவித்த வேரல்,

“ஒன்னும் இல்ல கண்ணா... அப்பா தான் உனக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு ஓடி வந்தாரு.. பதட்டத்துல கதவை வேகமா திறந்துட்டாங்க” என்று மிக மிருதுவாக சொன்னவளை குருவி குஞ்சாக தலையை தூக்கி பார்த்தான் பிள்ளை.

அவனின் பார்வையை கண்ட வேரல்,

“என்ன கண்ணா” என்று இதழ் விரித்து கேட்க,

“நீங்க கத்தல” என்றான் முதல் முறையாக வாய் திறந்து.

“ஹாங்” என்று அவள் முழிக்க, கங்குவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

அதென்ன பெத்தவன் நான் இருக்கையில யாரோ ஒருத்தியிடம் ஒண்டிக் கொண்டு இருக்கிறான் என்று கோவம் வர, வேகமாய் அவளிடம் இருந்து பிள்ளையை வெடுக்கென்று உருவி,

“உனக்கு என்னடா குறை வச்சேன்.. எதுல குறைவச்சேன்.. ஏன் இப்படி சாப்பிடாம என்னை சாவடிக்கிற.. பிள்ளையாடா நீயெல்லாம்” ஏகத்துக்கும் அவன் கத்த, பிள்ளை மிரண்டு அழ ஆரம்பித்து விட்டான்.

ஏற்கனவே ஹாஸ்பிட்டல் அட்மாஸ்பியர், ஊசி, மருந்து, மாத்திரை என அலண்டு போய் இருப்பவனை இன்னும் அலங்க மலங்க அடித்தான் கங்குவன்.

“கத்தாதடா.. கத்துனன்னா கன்னம் கன்னமா அறைஞ்சிடுவேன்” மிரட்ட, பிள்ளை வேக குரல் எடுத்து அழ ஆரம்பிக்க, நர்ஸ் டாக்டர் என எல்லோரும் ஓடி வந்து பார்த்தவர்கள், அவனிடம் இருந்து பிள்ளையை பிடுங்கி படுக்கையில் படுக்க வைத்து இவனை வெளியே துரத்தி விட்டார்கள்.

“மிஸ்டர் கங்குவன் நீங்க எல்லாம் மனுசன் தானா? இல்லை மிருகமா? சின்ன பிள்ளையிடம் எப்படி நடந்துக்குறதுன்னு தெரியாதா? இப்படியா காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்குவீங்க” டாக்டர் அவனை கடிந்துக் கொள்ள,

“வேற டாக்டர் என்னை பண்ற சொல்றீங்க.. என்னால இவனை சமாளிக்கவே முடியல.. மண்டைய காய வைக்கிறான்” என்று இயலாமையில் அவன் சோர்ந்துப் போய் சொல்ல,

“முதல்ல நீங்க ட்ரைனிங் எடுத்துக்கோங்க..”

“வாட்?”

“எஸ் மிஸ்டர் கங்குவன்.. நான் உங்க பேமிலி டாக்டர் ன்றதுனால தான் இதை சொல்றேன்.. நீங்க முதல்ல பிள்ளையை எப்படி வளர்ப்பதுன்னு கத்துக்கிட்டு பிறகு வந்து பிள்ளையை வளருங்க.. இல்லன்னா இப்படி தான் அடிக்கடி அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரணும்” என்றார்.

“டாக்டர் ஆகுற காரியமா பேசுங்க” எரிந்து விழுந்தான்.

“காசு பணத்துக்கு பின்னாடி போகாம உங்க மகனுக்காக டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லி நானும் சொல்லிட்டே இருக்கேன். அதை நீங்க காதுலையே வாங்க மாட்டிக்கிறீங்க”

“ப்ச்”

“இல்லன்னா கல்யாணம் பண்ணிக்கோங்க”

“வேற ஆப்ஷன்”

“நல்ல கேர் டேக்கரா போடுங்க”

“அது தான் மாசத்துக்கு பதினைஞ்சு ஆளை மாத்துறனே”

“கங்குவன் பிள்ளையோட சீரியஸ்நெஸ் தெரியாம பேசிட்டு இருக்கீங்க”

“என்னால என்னென்ன பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் பண்ணிட்டேன் டாக்டர். அவனுக்கு தான் பிடிவாதம் அதிகம். நான் என்ன சொன்னாலும் அதை காதிலே வாங்க மாட்டேன்னு என்னை சாவடிக்கிறான். எனக்கு சொல்ற அட்வைசை அவனுக்கு சொல்லி புரிய வைங்க” என்றவனை பார்த்த டாக்டருக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.

பிள்ளை என்ன செய்கிறான் என்று உள்ளே எட்டிப் பார்த்தார் டாக்டர்.

அங்கே வேரலின் மடியில் குருவி குஞ்சாய் தலை சாய்த்து படுத்து இருந்தான்.

“மிஸ்டர் கங்குவன் யார் அந்த லேடி” என்று கேட்டார்.

“யாரு?” என்று உள்ளே பார்த்தவன் தன் மகன் அவளின் மடியில் படுத்து இருப்பதை பார்த்து பத்திக் கொண்டு வந்தது.

“இவனை” என்று பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளேப் போக போனவனை தடுத்து நிறுத்திய டாக்டர்,

“அவசரப்படாதீங்க கங்குவன், அவங்க யாரு?” என்று கேட்டார்.

“என்னோட ஸ்டாஃப்”

“பெட்டர் அவங்க கிட்ட உங்க பிள்ளையை ஒரு வாரம் விட்டு பாருங்க.. ஏதாவது சேஞ்ச் தெரிஞ்சா அவங்களயே கேர் டேக்கரா போடுங்க..” என்றார் அனுபவம் வாய்ந்த அந்த டாக்டர்.

“ப்ச் அதெல்லாம் ஒத்து வராது டாக்டர். அவ மினிஸ்டரோட பேத்தி”

“ஓ..” என்றவர்,

“பேசாம இனி உங்க மகனையும் ஸ்கூலுக்கு அனுப்பி வைங்க.. அங்க அவனை மாதிரியே இருக்கிற பிள்ளைகளை பார்த்து இவனுக்குள்ள ஒரு சேஞ்ச் வரும்” என்றார்.

“இந்த சின்ன வயசுலையேவா”

“தனியா இருக்குறதுக்கு பெட்டர்.. ப்ளே ஸ்கூல் அனுப்பலாம். ஒரு முயற்சி பண்ணி பாருங்க கங்குவன். எதையும் ட்ரை பண்ணி பார்க்குறதுல தப்பு இல்லையே. வெளி ஸ்கூல்னா தான் நீங்க யோசிக்கணும். உங்க ஸ்கூல்லயே போடுங்க.. உங்க கண் பார்வையிலே இருப்பான் இல்லையா?” என்று அவர் சொல்ல தலையை ஆட்டி விட்டு உள்ளே வர,

தகப்பனை பார்த்த உடனே வேரலின் மடியோடு முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டான்.

“அவன் எப்படி உன் கிட்ட மட்டும் ஒட்டிக்கிட்டான்” என்று இவன் கணீர் குரலில் விசாரணையை தொடங்க,

“முதல்ல உங்க சத்தத்தை குறைச்சு பேசுங்க..” அதட்டினாள்.

“என்னடி என்னையவே மிரட்டுற?” அவனது குரலில் பிள்ளையின் உடம்பு தூக்கி வாரிப் போட்டது.

“இல்லடா கண்ணா ஒண்ணுமில்ல... சும்மா சும்மா..” என்று பிள்ளையை சமாதனம் செய்தவள்,

“உங்க சத்தத்துக்கே அவன் பயப்படுறான்..” என்றாள்.

அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

“இங்க இப்படி உட்காருங்க” என்று தனக்கு பக்கத்தில் அவனுக்கு இடம் கொடுத்து அவனை அமர்த்தியவள், அவனின் கையை எடுத்து பிள்ளையின் முதுகில் வைத்தாள்.

தந்தையின் கையை உணர்ந்த பிள்ளை உடம்பை உலுக்கு கையை எடுத்து விட முனைய,

“கண்ணா அமைதியா இருக்கணும்.. நீ குட் பாய் தானே” கேட்ட வினாடி அவன் அமைதியாகி விட்டான். கங்குவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“என் மகனுக்கு என்னடி மந்திரம் போட்ட” என்றவனை முறைத்தாள் வேரல்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 28, 2026 10:17 am
Nimala19 reacted
(@nimala19)
Active Member

Interesting 

Loading spinner

ReplyQuote
Posted : August 29, 2026 6:21 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top