அவளை கொண்டு போய் அவளது வீட்டில் விட்டான் உதயாதிபன். வீட்டின் உள்ளே வராளியுடன் உள்ளே நுழைந்தான். அவன் வருவான் என்று எதிர் பார்க்காதவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். என்ன இருந்தாலும் தன் வீட்டு ஆட்களை எப்படி எதிர்க்கொள்வது என்கிற பயம் அவளுக்குள் இருந்தது. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. மொத்தமாக பதினான்கு நாள். ஒரு வாரம் என்று சொன்னவன் அவளோடு இன்னும் ஒரு வாரம் சேர்ந்து இருந்தான். அவளை விட அவனுக்கு மனமே வரவில்லை. இந்த மறைவு வாழ்க்கை அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அரசியல் வாழ்க்கையில் தனிமை என்ற ஒன்றே கிடைக்காது. அப்படி கிடைத்தால் அது வரம்.
அந்த வரத்தை உதயாதிபன் நன்கு பயன்படுத்திக் கொண்டான். வீட்டுக்குள் நுழைந்த உதயாதிபனை பார்த்து அனைவரும் திகைத்துப் போனார்கள். அதுவும் அவனோடு புதிய மெருகோடு வந்த வராளியை கண்டு பேச்சின்றி போனார்கள்.
“அவ என்னோட தான் இருந்தா.. அவளை யாராவது ஏதாவது பேசுனீங்க உயிரோட இருக்க மாட்டீங்க. இது அவளுக்காக குடுத்த வீடு. இந்த வீட்டுல அவளுக்கு போக தான் மத்த எல்லோருக்கும்” என்று நொடியில் அவளது பொருள்கள் கூடத்தில் இருப்பதை பார்த்து சுல்லேன்று கோவம் வந்தது.
“இல்ல அது...” என்று கலா அச்சத்தில் வெடவெடக்க, “எது பெரிய ரூம்?” அதட்டலாக கேட்டான். கலா கையை நீட்டி,
அந்த அறைக்கு அவளை கூட்டி சென்றவன் மகனை படுக்கையில் படுக்க வைத்து விட்டு கூடத்தில் இருந்த அவளின் பொருகளை எடுத்து உள்ளே அவனே வைத்தான். அதே போல அந்த அறையில் இருந்த மற்ற பொருள்களை கிளியர் பண்ண சொல்லி சொல்ல அடுத்த நொடியே அந்த அறை காலியானது.
“இதெல்லாம் தேவையாங்க?” வராளி கெஞ்சலாய் கேட்டாள்.
“என் பொண்டாட்டிக்கு இதெல்லாம் வேணும். என் மகனுக்கும் வேணும்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவன், வெளியே வந்து அத்தனை பேரையும் எச்சரிக்கை செய்தான்.
பின் அவளோடு வந்து இருந்தவன் அவளின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் நெடுநேரம்.
உச்சிவேளை வர அவளுக்கு உணவை கடையில் இருந்து வாங்கி வரச்சொல்லி ஊட்டி விட்டவன் அவளது கையால் உண்டு விட்டு,
“நாளைக்கே வர பார்க்கிறேன் கண்ணம்மா.. கொஞ்சம் பொறுத்துக்கோ” என்றவன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தவன் கிளம்பிவிட்டான்.
அவன் போனதுக்கு பிறகு கலா, சிவா, தனுசு மூவரும் உள்ளே வந்து அவளை கேள்வி மேல் கேட்டு “அவனை எங்க பார்த்த? எப்படி பார்த்த? எத்தனை நாள் பழக்கம்... இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க?” என்று ஏகப்பட்ட விசாரணை.
அவள் ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள். “எனக்கு உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லனும்னு ஆசை தான். ஆனா அவரு யாருக்கிட்டயும் எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதனால என்னால எதையும் சொல்ல முடியல... சாரி” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்ல... தன் வாழ்க்கையின் வசந்தமான நாட்கள் அல்லவா அது. அதை எப்படி இவர்களிடம் சொல்ல. அதனால் பழியை தூக்கி கணவன் மேல் போட்டு விட்டு குழந்தையோடு இருந்துக் கொண்டாள்.
அன்று மாலை பாரதி அவளுக்கு போன் செய்து “நாளைக்கு காலையில ஒரு ஷூட்டிங் இருக்கு. கிளம்பி வா” என்று சொன்னார். “சரிங்க சார்” என்று ஒத்துக் கொண்டாள். ஏனெனில் அது ஏற்கனவே கமிட் ஆனா வேலை. அதை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல்.
வராளியின் போக்கை பார்த்த கலாவதிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. எங்கே இவள் கைநழுவி போய் விடுவாளோ என்று அச்சம் வந்தது. அதை விட அவளுக்காக கொடுத்த சொத்துக்களை எல்லாம் மறுபடியும் அந்த அமைச்சன் பிடுங்கிக் கொள்வானோ கெதுக்கேன்று இருந்தது.
முதலில் தேனாண்டாளுக்கு இந்த விசயத்தை சொல்லி விடலாமா என்று தான் தோன்றியது. ஆனால் அவரே வரட்டும். அப்போ தான் இன்னும் பேரம் பேச வசதியாக இருக்கும் என்று எண்ணியவர் பெரும் பாடு பட்டு தன்னை அடக்கிக் கொண்டார்.
அடுத்த நாள் காலையில் எப்பொழுதும் போல வராளி எதையும் கண்டு கொள்ளாமல் யாரையும் சட்டை செய்யாமல் அவள் பாட்டுக்க தன் பிள்ளையை மடியில் போட்டு கிளப்பிக் கொண்டு இருந்தாள். அறையை விட்டு வெளியில் கூடத்தில் தான் அவனை தயார் செய்துக் கொண்டு இருந்தாள்.
“செல்லக் குட்டிக்கு அம்மா இப்போ பொட்டு வைக்க போறேன்.. அதுக்கு பிறகு வாசமா இருக்குற பவுடரை போடுறேன்... அப்புறமா உடை மாட்டி விடுவேனாம். தங்க குட்டிக்கு என்ன நிறத்துல உடை வேணும்?” கேட்டுக் கொண்டே பிள்ளையை தயார் செய்தாள்.
அந்த நேரம் கதவை உடைத்துக் கொண்டு தேனாண்டாள் உள்ளே நுழைந்தார். கதவு படீர் என்று திறக்கும் சத்தத்தில் குழந்தை ‘வீல்’ என்று அலறினான்.
அவ்வளவு ஆக்ரோஷமாக கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவர் வழியில் கிடந்த சேரை எட்டி உதைத்து இருந்தார். அந்த சத்தத்தை கேட்க முடியாமல் பிள்ளை அழ,
“சரிடா கண்ணா... ஒன்னும் இல்ல” என்று உடனே பிள்ளையை அள்ளி எடுத்து மார்பில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தவள் உள்ளே வந்த தேனாண்டாளை பயத்துடன் பார்த்தாள் வராளி. உடலெல்லாம் நடுங்கிப் போனது ஆனாலும் அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று எண்ணினாள் போல.
ஆனால் பிள்ளையின் சத்தம் கேட்டு தேனாண்டாள் வராளியின் பக்கம் திரும்பி பார்த்தார். பார்த்தவர்களுக்கு காலுக்கடியில் நிலம் பிளந்தது போல உணர்ந்தார்கள்.
“குழந்தையா?” என்று தேனாண்டாளோடு உடன் வந்த அவரின் இரு மகள்களும் கண்ணை விரித்தார்கள். “என்னம்மா நாம எதிர்பார்க்காத டிவிஸ்ட்ஒன்னு இங்க இருக்கு... சத்தமே இல்லாம உன் மகன் உன் சொத்துக்கு வாரிசு உருவாக்கி வச்கிருக்கா போலயே?” சீதா ஆத்திரமாக தாயிடம் சொன்னாள்.
“அதானே... என்ன தைரியம் இருந்தா இந்த வேலை செய்து இருப்பாள்.. முதல்ல இவளை உயிரோடவே விட்டு இருந்து இருக்கக் கூடாதும்மா... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல.. முதல்ல இந்த பீடியையும் அது பெத்து போட்ட அந்த பீடியையும் தீ வச்சு கொளுத்துங்க” என்றாள் ஆத்திரம் மிகுதியில்.





