“ரொம்ப உசுப்பேத்திட்டமோ” என்று கலவரம் கொண்டாள். அதுதான் உண்மை. பெண்ணவள் பாவமே என்று தன் முரட்டு தனங்களை எல்லாம் மூட்டை கட்டி வச்சவன் அவளே அவனை உசுப்பி விடவும் அவளை இனி விடுவானா அவன்.
புயலாய் அவளை சுழற்றி எடுத்தான். அவனது வேகத்தில் திகைத்தாள். எடுத்த உடனே அவள் அணிந்து இருந்த சட்டை பட்டன்களை அவிழ்க்க பொறுமை இல்லாமல் இரு பக்கமும் பிடித்து இழுத்தான்.
அதிலே அவனை மிகவும் சோதனை செய்து விட்டோம் என்று பயந்துப் போனவள் வேகமாய் போர்வையில் தஞ்சம் ஆனாள். ஆனால் அதையும் அவன் துச்சாதனாய் உருவி எடுத்தான். “நோ” என்று அவள் மறுக்க,
“வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா..
தேன் நிலா எனும் நிலா
என் தேவியின் நிலா...
நீயில்லாத நாளெல்லாம்
நான் தேய்ந்த வெண்ணிலா...” என்று பாடியவன்,
“தெய்வம் கல்லிலா ஒரு தொகையின் சொல்லிலா...
பொன்னிலா.. பொட்டிலா..
புன்னகை மொட்டிலா...
அவள் கட்டும் அன்பிலா...” என்று உயிர் உருகியவன், அடுத்த வரிகளை அவளை சீண்டியபடி பாட உயிர் திகைத்துப் போனாள்.
“இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா...
இன்பம் கட்டிலா... அவள் தேகக் கட்டிலா..
தீதிலா காதலா... ஊடலா.. கூடலா...
அவள் மீட்டும் பண்ணிலா...” என்று பாட அவனது நெஞ்சில் வந்து விழுந்தாள் வராளி எண்ணும் நிலவு மகள். அவளை அள்ளி தூக்கியவன் தன் நெஞ்சோடு பொத்தி வைத்துக் கொண்டு காதல் பாடங்களை காமத்தொடும் மோகத்தோடும் குழைத்து அவளுக்கு கற்பித்தான்.
அதில் அவள் நடுநடுங்கிப் போனாலும் அவனது பாடத்தை கற்றுக் கொண்டவள் அவனுக்கே திருப்பி படிக்க இதழ் கடித்து மெச்சுதலாய் அவளை பார்த்தவன் தன் பாணியில் அவளை பாராட்டி பாராட்டு பத்திரம் வாசித்தான்.
“இன்னும் எத்தனை நாளுங்க நாம இங்கயே இருக்க போறோம்?” என்று நிறைவான கூடல் முடிந்த பிறகு கேட்டாள்.
“ஏன் கண்ணம்மா என்னோட இருக்க போரடிக்கிதா?” என்று கேட்டான். “இல்ல கட்சி ஆபிஸ், மீட்டிங், எதுவும் இல்லாம இப்படி எனக்காக இங்க இருக்குறது ஒரு மாதிரியா இருக்குங்க... இருக்கிற அமைச்சர்லையே நீங்க தான் கொஞ்சம் நல்ல மாதிரின்னு கேள்வி பட்டேன். அதோட உங்களால தான் நம்ம நாட்டுக்கு வெளிநாட்டு இன்வெஸ்டர்ஸ் அதிகமா வந்து இருக்குறதா சொல்றாங்க.. நிறைய சிறுதொழில் முனைவோருக்கு சப்போட்டிவா இருக்குரதாகவும் சொல்லி கேள்வி பட்டேன். அப்படி பட்ட நீங்க இப்படி ஒரு சின்ன இதத்தில் முடங்கி இருப்பது நல்லது இல்லங்க. உங்க சேவை நாட்டுக்கு ரொம்ப தேவை. உங்க பீரியட்ல ஏற்றுமதி அதிகமா இருக்குன்னும் சொன்னாங்க” என்றாள்.
“பரவயில்லையே... என்னை பத்தி இவ்வளவு விசயம் சேகரிச்சு வச்சு இருக்க” அவனது கண்களில் மின்னலோடு பாராட்டும் தெரிந்தது. “தொழில்துறை அமைச்சர் என்னோட புருசனாச்சே... அதனால தேடி தேடி சேகரிப்பேன் உங்க பேட்டியையும், உங்களை பத்தி வரும் செய்திகளையும்” என்றாள்.
“காதலிக்கிறியோ?” தாடையை தடவினான் யோசனையுடன். “அதுக்கு வாய்ப்பு இல்ல அமைச்சர் சார்” கேலி பண்ண, “அப்போ நான் தான் இந்த நிலா பொண்ணுக்கிட்ட குப்புற கவிழ்ந்து கிடக்குறனோ?” கேட்டவன் அவளிடம் அத்துமீற,
“குழந்தை எழுந்துக்கப்போறான்” என்று சிணுங்கினாள். “எழுந்தா சமாதனம் செய்துக்கலாம்டி.. என்னை டெம்ப்ட் பண்ணிட்டு ஓடலாம்னு பார்க்காத” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் அப்படியே கீழே இறங்கி அவளின் வயிற்றில் முகம் பதைத்து பற்கள் பட கடித்து வைத்தான்.
“இதென்னங்க கெட்ட பழக்கம்” என்று சிணுங்கியவள் அவனின் தலையை முடியை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். ஆனால் அவன் இன்னும் கீழே இறங்கி அவளின் பாதத்தில் முத்தம் வைக்க வராளியின் விழிகளில் நீர் நிறைந்துப் போனது.
“என்ன பண்றீங்க முதல்ல மேல வாங்க” என்று வெடுக்கென்று காலை இழுத்துக் கொண்டாள். ஆனால் அவன் விடாமல் அவளின் இரு காலையும் கெட்டியாக பிடித்துக் கொண்டவனின் கண்ணீர் அவளின் காலை நனைத்தது.
“இப்படி பண்ணா பிறகு நானும் அழுவேன்” என்று அவள் தழுதழுக்க சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்தான். “நீங்க என்ன செஞ்சீங்க... இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்குறீங்க? இதுல உங்க தப்பு எதுவும் இல்லை. நம்ம சூழ்நிலை. இதுல யாரையும் தப்பு சொல்ல முடியாது. உங்க கண்ணை மறைத்து அத்தனை வேலையும் பார்த்து வச்சு இருக்காங்க. அதுக்காக நீங்க என்ன பண்ண முடியும். இனி என்னை கவனமா பார்த்துக்கோங்க. அது போதும்” என்று அவனை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவள் அவனின் இதழ்களில் தன் இதழ்களை புதைத்தாள்.
அவனின் கீழ் உதட்டை நறுக்கென்று கடித்து அவனுக்கு தண்டனை வழங்கியவள் அதற்கு மேல் தாங்கமால் அவனோடு பின்னி பிணைந்து தன்னை அவனுக்கு கொடுத்தாள்.
அவளின் காதலில் தன்னை மறந்தவன் அவளுடன் சேர்ந்து அவளையும் மறக்க வைத்தான். அடுத்து வந்த ஒரு வாரமும் இருவரின் காதலிலும் மோகத்திலும் ஊடலிலும் கூடலிலுமே சுகமாக கழிந்தது.
அடுத்த நாள் ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தான் உதயாதிபன். குழந்தை வராளியின் அருகில் படுத்து தூங்கி இருக்க, அவளை அள்ளி எடுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன் அவளின் தலையை வருடியபடி பெருமூச்சு விட்டு தன் பேச்சை தொடங்கினான்.
“நாளைக்கு ஊருக்கு போகணும்டி” என்றான்.
“ஓ...!” என்றாள்.
“ரெண்டு நாள் மட்டும் உன் வீட்டுல இரு... பிறகு நான் வந்து உன்னை கூட்டிகிறேன். ஏற்கனவே கொஞ்ச ஏற்பாடு செய்து வச்சுட்டேன்... ஒரு முறை என் குடும்பத்துக்கு வாய்ப்பு குடுத்து பார்க்கிறேன். ஓகேன்னா பார்க்கலாம். இல்லன்னா நாம தனியா போயிடலாம்” என்றான்.
“என்னால உங்க வீட்டுல பிரச்சனை ஆகிடாதா? நான் உங்களை பிரிச்ச மாதிரி ஆகிடுமே” என்று கவலை பட்டாள்.
“எல்லோரும் அவங்க அவங்க துணையோட இருக்காங்க. அப்போ நானும் என் துணையோட தானே இருக்கணும். தாத்தா மட்டும் நம்மளோட வருவாருன்னு நினைக்கிறேன்” என்றான்.
“ம்ம்” என்று கேட்டுக் கொண்டாள். “போதும்டி நாம பிரிஞ்சி இருந்தது. உன் கூட நான் வாழனும் கண்ணம்மா” என்று ஏக்கமாக சொன்னான். அவனது ஏக்கத்தை கண்டு தன் மீது அவன் எவ்வளவு காதல் வைத்து இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவள் அதே காதலை அவனுக்கு தானும் கொடுக்கணும் என்று எண்ணினாள்.
அன்றிரவு இருவருக்கும் கொஞ்சம் கூட தூக்கமே வரவில்லை. எதுவும் தவறாக போகக்கூடாது என்கிற எண்ணம் உதயாதிபனுக்கு என்றால் எல்லாம் சரியாக நடக்கணும் என்கிற எண்ணம் வராளிக்கு இருந்தது.
இனிமேல் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பதெல்லாம் இயலாத காரியம்... ஒருவரின் அருகாமயில் மற்றவர் இருப்பது தான் இருவருக்கும் நல்லது என்று புரிந்தது. உதயாதிபன் கொண்ட காதலுக்கும் அது தான் உரிய மரியாதை என்று உணர்ந்துக் கொண்டாள்.
அடுத்த நாள் இனிதாக விடிந்தது. உதயாதிபனின் பிஏ காரை எடுத்து வந்தான் அந்த வீட்டுக்கு. ஏற்கனவே அந்த வீட்டை விலை பேசி இருந்தான் குகன். அதனால் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. குழந்தைக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.
அவளை கொண்டு போய் அவளது வீட்டில் விட்டான் உதயாதிபன்.





