தால்லாடிப் போனாள். ஆனால் மகனை மட்டும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள். “கடவுளே எப்படியாவது என் மகனை அவர்கிட்ட சேர்த்துடனும். அதுவரை எனக்கு மயக்கம் வராம பார்த்துக்கோ” என்று கடவுளிடம் கெஞ்சியவள் வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தினாள். அவளின் போதாத காலமோ என்னவோ ஒரு ஆட்டோ கூட நிற்கவில்லை.
காரணம் அவளின் தலையில் வழிந்துக் கொண்டு இருந்த உதிரம். தேவையில்லாத பிரச்சனையில் சிக்க யாரும் முன் வருவது இல்லையே. எல்லோரும் ஒதிங்கிப் போக தானே நினைக்கிறார்கள்.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவள் ஓடி வர, அவளின் எதிரில் விலை உயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய தேனாண்டாளை கண்டு மொத்த உயிரும் ஆட்டம் கண்டது. பிள்ளையை இறுக்கமாக தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்,
“ப்ளீஸ் என் குழந்தையை விட்டுடுங்க... அவன் இப்ப தான் பிறந்து இருக்கான். அவனுக்கான வாழ்க்கையை அவன் வாழணும்... ரொம்ப சின்ன பிள்ளை. அவனுக்காக கொஞ்சம் மனம் இறங்குங்க. உங்க கால்ல வேணாலும் விழறேன்” என்று அவரின் காலில் விழப் போனவளை
“ஏய் ச்சீ தள்ளிப் போடி... என் காலை பிடிக்க கூட ஒரு தகுதி வேணும்..” என்று அவளை எட்டி உடைத்தார். அதில் காயம் பட்டாலும் தன் மகனை இறுகிப் பிடித்தவள் அவனின் மீது அடி படாமல் பொத்தி வைத்துக் கொண்டாள்.
“இந்த நாயை பிடித்து கட்டுங்கடா... அந்த பீடியை என் கண் முன்னாடி கழுத்தை அறுத்து போடுங்கடா” என்று கையாட்களை ஏவி விட அனைவரும் அவளை சுற்றி வளைத்தார்கள்.
அவர்களை கடந்து எத்தனையோ பேர் போனாலும் ஒருவர் கூட தட்டிக் கேட்கவில்லை. “ப்ளீஸ் என் மகனை மட்டும் விட்டுடுங்க” என்று வராளி கதற, ஒருவருக்கு கூட மனம் இரங்கவில்லை. அவளை பிடித்து காரின் முன் பக்கம் தள்ளி விட்டு சிரித்தார்கள்.
காரிலிருந்த கண்ணாடி அவளின் தலையை பதம் பார்க்கும் முன்பு அவளுக்கும் கண்ணடிக்கும் இடையே ஒரு கை வந்து தடுத்தது. அதோடு குனிந்து இருந்தவளை இன்னொரு கை பற்றி தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டது.
யாரென்று அவள் விழிகளை தூக்கிப் பார்த்தாள். அவளின் கணவன் தான். உதயாதிபன் கடும் சினத்தோடு சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் கைகளில் பாதுகாப்பாக இருந்தாள்.
“என்னங்க” என்று அவள் கதற, “நான் வந்துட்டேன்ல கண்ணம்மா... இனி நீ எதுக்கும் கலங்கக் கூடாது” என்று சொன்னவன் இருவரையும் பத்திரமாக தன் பிஏவோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.
வராளியை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகே அங்கு இருந்தவர்களை உருத்து விழித்தான். அவனது பார்வையில் தேனாண்டாளுக்கு அடிவயிற்றில் பயம் பிடித்துக் கொண்டது.
“இவன் ஊருக்கு போறேன்னு சொன்னான். இப்போ இங்க எப்படிடி?” என்று தன் மகளிடம் கேட்டார். பயத்தில் தொண்டை வரண்டது.
“அன்னைக்கு நான் அந்த பக்கம் போன உடனே நீங்க உங்க வேலையை என் பொண்டாட்டிக்கிட்ட காட்டுனீங்களே. இன்னைக்கும் அப்படி காட்டுவீங்கன்னு எதிர்பார்த்தேன். என்னை கொஞ்சமும் ஏமாற்றாம என் பிள்ளையும் என் பொண்டாட்டியையும் நிரந்தரமா தீர்த்துக் கட்ட முடிவு பண்ணீட்டீங்க சபாஷ்... வாழ்த்துக்கள்” என்றவன் தன் மனைவியை அடித்து காரில் தள்ளி விட்ட அடியாளை போட்டு வெளுத்து எடுத்தவன் அவனது கையை பிடித்து முறித்து உடைத்தே விட்டான்.
அதிலே அவனது வெறி தெரிய மூன்று பெண்களுக்கும் அச்சத்தில் உறைந்துப் போனார்கள். “உங்களை என் குடும்பமா நினைச்சேன்... ஆனா நீங்க... த்தூ காசுக்காக என்ன வேணாலும் செய்யிற கும்பல்னு காட்டீடிங்க. இனி பரம்பரை வீடு... மத்த மொத்த சொத்துக்களும் எனக்கு தான்.. தாத்தா எல்லாத்தையும் என் பேர்ல எப்பவோ மாத்தி எழுதிட்டாரு. நான் உங்களுக்கு எல்லாம் பிரிச்சு குடுக்கலாம்னு பார்த்தேன். ஆனா இனி ஒருத்தருக்கும் ஒத்த பைசா குடுக்க மாட்டேன். இனி என் மகனோட நிழலை தொடணும்னு நினைச்சா கூட யாரையும் உயிரோட விட மாட்டேன் பார்த்துக்கங்க...” என்று எச்சரித்தவன், தன் அம்மா மற்றும் சகோதரிகளின் மீதும் கொலை முயற்சி கேஸ் குடுத்தான்.
அவர்களிடமிருந்த சொத்துக்களை எல்லாம் பறித்தவன் அத்தனை பேரையும் செல்லாக் காசாக்கி விட்டான். இடை தேர்தலில் வெற்றி பெற்ற அவனை முதலமைச்சராக பதவி ஏற்க சொன்னார் கட்சியின் தலைவர். அதை எல்லா உறுப்பினர்களும் வழிமொழிய நாட்டின் முதலமைச்சர் ஆனான் உதயாதிபன்.
வேலம்மாள் பாட்டிக்கு வராளியின் வாழ்க்கை சீரானதில் பெரும் நிம்மதி பிறந்தது. அவரை நிரந்தரமாக தன் வீட்டில் இருக்க வைத்துக் கொண்டான் உதயாதிபன்.
அதன் பிறகு வந்த நாட்கள் நீரோடைபோல சலனமில்லாமல் சென்றது. உதயாதிபனை எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் யாரையும் வீட்டுக்குள் சேர்க்கவில்லை அவன். எல்லோரையும் வீட்டைவிட்டு துரத்தி அடித்தான் கொஞ்சமும் இரக்கமில்லாமல். அவனது அப்பா பாவமாய் பார்க்க எல்லா துரோகத்துக்கு துணை போனது நீங்க தான். அதனால உங்களையும் நான் சேர்க்க மாட்டேன். என் குடும்பம் இது மட்டும் தான். என்று தாத்தாவை ஒரு பக்கம் அணைத்துக் கொண்டவன் இன்னொரு பக்கம் குழந்தையை தூக்கி வைத்திருந்த மனைவியை அணைத்து நின்றான்.
வீட்டின் உள்ளே நுழைய முயலும் தேனாண்டாள் மற்றும் அவரது மகளுக்கு தடியடி கொடுக்கப் போட அதற்கு மேல் அவனிடம் வாலாட்ட முடியவில்லை அவர்களால். கொஞ்சமே கொஞ்சம் பரிதாபட்டு அவர்களுக்கு சொத்து கொடுத்தவன் தன் குடும்பத்துக்கு கட்டுக்காவலை அதிகப் படுத்தினான். அதே போல வராளியின் குடும்பத்தை செல்லாக்காசாக்கி விட்டான். அவளுக்காக கொடுத்த சொத்துக்களை மீண்டும் வாங்கிக் கொண்டவன் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தினான்.
“என் மனைவியை பிள்ளையை கொள்ள துணிந்தவர்களுக்கு சட்டப்படி சிறையில் தள்ளி இருக்கணும். ஆனா என் மனைவியை இவ்வளவு நாள் பார்த்துக் கொண்டதுக்காக உங்களை இதோட விடுறேன். இனிமே என் பொண்டாட்டியை நெருங்க நினைக்காதீங்க... கருணை எல்லாம் காட்ட மாட்டேன். கன்னு தான் காட்டுவேன்” என்று எச்சரித்து மிரட்டி அனுப்பினான்.
இந்த இடைப்பட்ட வேளையில் வராளியை அவன் நெருங்கவே இல்லை. அவளுக்கு உதிரம் அதிகம் போய் இருக்க அவளை தேற்றும் பணியில் பணியாளர்களை முடுக்கி விட்டான்.
முதலமைச்சராக பதவி ஏற்கும் சமயத்தில் தான் அவளை வெளியவே கூட்டிட்டு வந்தான். அவன் அவளை பார்த்தபடி பதவி ஏற்க நெற்றியில் போட்ட கட்டோடு அவனது மகனை மடியில் வைத்துக் கொண்டு அவனை பெருமையாக பார்த்தாள் வராளி.
அன்றிரவு அவளின் காலை பிடித்து அழுத்தி விட்டுக் கொண்டே அவளிடம் பேசிக்கொண்டு இருந்தான் உதயாதிபன்.
“நீங்க முதல் அமைச்சருங்க... நீங்க போய் என் காலை பிடிச்சுக்கிட்டு” என்று அவள் தன் காலை இழுத்துக் கொள்ள,
“ப்ச் அதனால என்னடி... நீ எப்பவும் எனக்கு என்னோட பொண்டாட்டி. உனக்கு முதல்ல நான் புருசன். அதுக்கு பிறகு தான் நான் உனக்கு முதல்அமைச்சர் புரியுதா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் விரல்களுக்கு பதமாக நெட்டி எடுத்து விட்டான்.





