அவளது அந்த மௌனம் அவனை வெறியடைய செய்ய அப்படியே பிடித்து கீழே தள்ளிவிட்டான். அதில் நிலை தடுமாறி விழுந்தவள் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அவளது அழுகை அவனை இன்னும் வெறி கொள்ள வைக்க...
“இங்க பாரு என் கண்ணு முன்னாடி இப்படி அழுது வைக்காத... எரிச்சலா இருக்கு.. உன் மேல இருந்த பரிதாபம் எல்லாம் நாள் போக போக கோவமா மாறி இருக்கு..”
“வர்மன் ஏதோ சதி திட்டத்துல இருக்கான். அதனால தான் உன்கிட்ட இவ்வளவு தன்மையாவும் பொறுமையாவும் கேட்டுக்கிட்டு இருக்கேன். சொல்லுடி... உன்னை என்னால இழக்க முடியாது... தயவு செஞ்சு ஒத்துக்கோ மயூ...” கோவமாய் ஆரம்பித்து கெஞ்சலில் வந்து நின்றவனை ஏறெடுத்து பார்த்தவள்
“முடியாது ஆதி...” என்று சொல்ல.. அடுத்த கணம் அவனது முறம் போன்ற கையால் அவளது கன்னத்தில் அறைந்து இருந்தான்.
அதில் இன்னும் நிலை தடுமாறியவள் கலங்கிய விழிகளுடன் அவனை பார்த்தாள். அவளது பார்வையை சந்திக்க முடியாமல் ஆதி தன் பார்வை கோணத்தை மாற்றியவன்
“நாளைக்கு காலையில உனக்கும் எனக்கும் கல்யாணம். நம்ம தோட்ட வீட்டுல... நீ வரணும். இல்லன்னா நிரந்தரமா நான் உனக்கு கிடைக்க மாட்டேன்...” என்று கர்ஜித்தவன் விருட்டென்று வெளியே சென்றுவிட்டான்.
அவனது ஆட்டத்தில் நிலைகுலைந்து போனவள் எழக்கூட மனமில்லாமல் சுவரோடு அப்படியே சரிந்து அமர்ந்தவள், தன் முகத்தை தன் கால்களுக்கு இடையில் மறைத்துக்கொண்டு பொங்கிய மனதை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினாள்.
அவளால் இப்பொழுது அவனுக்கு ஒத்துழைக்க முடியாத நிலையில் இருக்கும் போது நீ ஒத்துளைத்தே ஆக வேண்டும் என்று ஆதி கத்தி விட்டு செல்ல... அவனுக்கு எப்படி புரியவைக்க என்று தடுமாறி நின்றாள்.
ஏற்க்கனவே ஓரளவு இது தான் என்று கோடு போட்டு காண்பித்து இருக்கிறாள். ஆனாலும் அதையெல்லாம் காதிலே வாங்கி கொள்ளாமல் இப்படி அடம் பண்ணுகிறவனை என்ன செய்வது...
வேகமாய் சீதாவிற்கு கால் செய்தாள். அவளின் நேரமோ என்னமோ அவர் எடுக்கவே இல்லை. அதில் இன்னும் சோர்வடைந்தவள் ஆதிக்கு போன் செய்தாள்.
அவனும் எடுக்கவே இல்லை.
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு இயல்பாய் ஒரு புன்னகையை உதட்டில் ஒட்டி வைத்துக்கொண்டு வெளியே வந்தவள் கிளாங்கை அழைத்து ஆதி எங்கே என்று கேட்டாள்.
அவனுக்கும் தெரியாமல் போக... அவர்கள் இருவர் மட்டும் அடிக்கடி செல்லும் பீச் ஹவுஸ்க்கு சென்றாள். அவளை ஏமாற்றாமல் அவனது ரோல்ஸ்ராய் நின்றுக்கொண்டு இருந்தது அதித பலபலப்புடன்.
உள்ளே நுழைந்தவளை வரவேற்றது காட்டு தனமாய் அலறிக்கொண்டு இருந்தது பிஜிஎம்... அதிலே அவனது கோவத்தின் அளவை அளவிட்டவள் அவனிருக்கும் இடம் நோக்கி சென்றாள்.
ஒவ்வொரு இடமாய் தேடி வந்தவள் கடைசியாய் அவன் உப்பரிகையில் சிகரட் இழுத்துக்கொண்டு இருப்பதை கண்டவள் அவனருகில் சென்று நின்றாள்.
அவள் வந்தவுடன் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தால் எப்பொழுதும் தூக்கி எறிந்துவிடுவான். ஆனால் இன்றைக்கு அப்படி செய்யாமல் அலட்ச்சியத்துடன் இருந்தான். அதில் அவளது காதல் இதயம் அடி பட்டு போனது.
“கொஞ்ச நாள் குடுங்க ஆதி... அதுக்குள்ள நான் எல்லாத்தியும்...” முடிக்கும் முன்பே உப்பரிகையில் இருந்த மர இருக்கையை காலில் எட்டி உதைத்து தன் கோவத்தை காண்பிக்க... அது படார் என்று சுவரில் முட்டி மோதி கீழே விழுந்தது.
அதில் அவளது இதயம் திடுக்கிட்டு போனது.
“ஆதி...” என்றாள் பயத்தில்.
அதில் இன்னும் வெறியானவன் அவளை தன்னருகில் இழுத்து குரல்வளையை பிடித்து நசுக்கி அவளுக்கு வலிக்க செய்தவன்,
“என்னை மேலும் மேலும் வெறுப்பேத்தி பார்க்காத.. ஏற்க்கனவே நான் உன்கிட்ட தோத்து போன வலியில இருக்கேன். மறுபடியும் மறுபடியும் என்னை சீண்டி பார்க்காத... ஆதி, ஆதிதேவனா உக்கிரமா மாறிடுவான்...” என்றவன் கீழே சென்றுவிட்டான்.
அவனது கோவத்தை போக்க வழி தெரியாமல் தடுமாறி போனாள்.
மீண்டும் சீதாவுக்கு போன் செய்தாள். அவரோ ரஞ்சனியோடு எதையோ பேசிக்கொண்டு இருந்ததில் இவளது போனை கவனிக்கவே இல்லை.
‘ஆதி எனக்கு இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் டைம் குடுங்க. எல்லாத்தையும் சரி பண்ணி குடுக்குறேன். அதுவரை இவ்வளவு டென்சன் ஆகாதீங்க ப்பா.. கோவப்பட்டு கோவப்பட்டு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி போய் இருக்கு...’ என்று மனதோடு பேசியவள் அவனை தேடி கீழே சென்றாள்.
அவள் வருவதை உணர்ந்தவன் அந்த இடத்தை விட்டும் அகன்று போக உள்ளே நொறுங்கி போனாள்.
வேகமாய் அவனது வழியை மறைத்தவள் “ஆதி ப்ளீஸ்... ஏன் இப்படி நடந்துக்குறீங்க...” வேதனையுடன் கேட்டவளை ஆத்திரமிக்க பார்த்தவன்
“ஏன்னு காரணம் உனக்கே தெரியும். எதுக்கு தேவையில்லாம மறுபடி மறுபடி என் முன்னாடி வந்து என்னை இரிடேட் பண்ற... உன் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கல... காதலுக்காக என்ன வேணாலும் செய்யலாம். ஆனா காதலனையே தூக்கி தர கூடாது... ஆனா நீ அந்த தப்பையும் அசால்ட்டா செஞ்சுட்டு நிக்கிற. அதுக்கு நான் கோவப்பட்டா ஏன் இப்படி எதுக்கு இப்படின்னு வசனம் பேசிகிட்டு இருக்க... என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு ஏமாளியா தெரியுறனா? இல்ல அவ்வளவு முட்டாளா தெரியுறனா...? சொல்லுடி...”
“என் வேதனையை நானும் எவ்வளவோ நாள் சொல்லிட்டேன். ஆனா நீ உன் வழியில தான் போயிட்டு இருக்க. அப்போ எனக்கு என்ன மரியாத. என் காதலுக்கு தான் என்ன மரியாத சொல்லு.”
“நாளைக்கு நமக்கு கல்யாணம். நீ வர்ற... அவ்வளவு தான். வராம போனா இனி உன் முகத்துல கூட நான் முழிக்க மாட்டேன்... ஏற்க்கனவே ஒரு சான்ஸ் குடுத்து இருந்தேன். அதை நீ ரொம்ப அவமான படுத்திட்ட... அப்பாவும் நான் மழுங்கி போய் உன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கேன். இந்த முறையும் நீ ஏதாவது பண்ணினா உன் ஆதி உனக்கு இல்ல...”
“என் காதலுக்கும், கனவுகளுக்கும் சமாதிகட்டிட்டு நான் என்னோட பிசினசை பார்த்துகிட்டு இருப்பேன். இது தான் என்னோட முடிவு... இதுக்கு முன்னாடி இருந்த ஆதி நான் இல்ல... எப்போ ரஞ்சனி வீட்டுக்கு வந்துட்டாளோ அப்பவே நான் இந்த முடிவு எடுத்துட்டேன்...”
“இனி நான் உயிரோட வாழ்றதும் ஜடாம வாழ்றதும் உன்கையில தான் இருக்கு. உனக்கு முழு ப்ரீடம் குடுக்குறேன். என்னோட வாழ விருப்பம் இருந்தா நாளைக்கு காலையில நம்ம தோட்டத்து வீட்டுக்கு வா...”
“இல்லையா வராதா...” என்றவன் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பட்டென்று சாத்திக்கொண்டான்.




