Notifications
Clear all

அத்தியாயம் 48

 
Admin
(@ramya-devi)
Member Admin

“சொல்லுடி பையன் பேரு என்ன?” என்று கேட்டான்.

“சொல்றேன். அதுக்கு முன்னாடி என்னை விடுங்க.. அது தான் பார்த்துட்டீங்கள்ள.. இன்னும் என்ன இருக்கு.. என்னை விடுங்க” என்றாள். இன்னும் உடை விலகியே இருக்க அவளுக்கு அப்பட்டமாய் முகம் சிவந்துப் போனது. அவளின் முக சிவப்பை விழி எடுக்காது பார்த்தவன்,

“நீ முதல்ல பையன் பேரை சொல்லு. பிறகு விடுறேன்” என்றான்.

“இதென்ன வம்பா இருக்கு?” முணுமுணுத்தவள்,

“மகன பேரு அதிதீரா” என்றாள். அதற்கு இன்னொரு சாட்சியாக தன் கையில் அணிந்து இருந்த பிரேஸ்லெட்டையும் அசைத்து காட்டியவள்,

“என் கையிலயும் அதே பேர் போட்டு இருக்கேன்” என்று அவள் மேலும் சொன்னவள்,

“இப்போ நம்புறீங்களா? நான் வேற யார் பெயரையும் டாட்டூ போடலன்னு” எரிச்சல் மண்டிய குரலில் அவள் சொல்ல,

“அப்படியா?” என்று கேட்டவன், “எனக்கு என்னவோ உன் பெயரையும் உன் லவர் பெயரையும் சேர்த்து டாட்டூ போட்ட மாதிரி இருக்கு. இன்னும் க்ளாரிபிகேஷன் வேணும்” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,

“ஹலோ நீங்க ரொம்ப ஓவரா போறீங்க” என்ற நேரமே அவனின் இதழ்களை மீண்டும் அவளின் டாட்டூவில் புதைத்தான்..

“ஹலோ சார்” என்று அவனின் செயலில் துடித்துப் போனவள்,

“ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க? ப்ளீஸ் லீவ் மீ” புழுவாய் துடித்தாள்.

“இப்போதைக்கு உன்னை விடுற ஐடியாவே இல்லை. தீர விசாரிக்கணும்” என்றவன்,

“என் பேர் என்னன்னு தெரியுமா?” அவளிடம் கூர்ந்து கேட்டான்.

“எனக்கு தெரியாது” என்று முகத்தை திருப்பினாள்.

அவளின் திருப்பிய முகத்தை இழுத்து மீண்டும் தன்னை பார்க்க வைத்தவன்,

“சொல்லுடி.. இல்ல கடிச்சு வச்சிடுவேன்” என்று அவளின் இதழ்களை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல, அவன் செய்தாலும் செய்வான் எண்ணியவள்,

“தீத்திரள் தீரன்” என்றாள் வேண்டா வெறுப்பாக.

“அதிரல் உன் பேர்.. அதுல இருந்து அதின்னு எடுத்து இருக்க.. சோ மீதி இருக்க தீரா என் பெயர்ல இருந்து எடுத்து இருக்க கரெக்டா..” என்று கேட்டவனை முறைத்துப்  பார்த்தவள்,

“ரொம்ப கற்பனை பண்ணாதீங்க.. என் மகனுக்கு நீங்க தான் அப்பான்னு இந்த ரெண்டு மூணு நாளா தான் தெரியும். ஆனா நான் அதற்கு முன்னாடியே அவனுக்கு பெயர் வச்சுட்டேன்.  அதுவும் என் மகன் யாருக்கும் அஞ்சாம அதிக தீரத்தோட இருக்கணும்னு தான் அதிதீரான்ற பெயரை வச்சேனே தவிர நீங்க சொன்ன பொருள்ள நான் வைக்கல” என்றாள் கோவமாக.

“பட் இனி இந்த டாட்டூக்கு நான் சொல்றது தான் அர்த்தம்.. அதி உன் பேரு, தீரா என் பேரு.. புரியுதா” என்றவன் மீண்டும் அவளின் நெஞ்சில் தன் இதழ்களை அழுத்தமாக புதைத்தவன் அவளின் இடையோடு இறுக்கமாக காட்டிக் கொண்டான்.

அவனின் அழிச்சாட்டியத்தில் கோவம் வர, “கிடையாது அது என் மகனோட பேரு” என்றாள்.

“வாய்ப்பே இல்ல.. நான் பிக்ஸ் ஆகிட்டேன்..” என்றவனை மூச்சு முட்டப் பார்த்தவள்,

“முதல்ல இந்த இடத்துல டட்டூ போட்டதே தப்பு. அதை ர்மூவ் பண்ணா தான் எனக்கு நல்லது”

“இந்த பெயரை அழிச்ச.. உன்னை கொன்னுடுவேன்டி.. இனி தினமும் இதை செக் பண்றது தான் என்னோட முதல் வேலை.. ஒவ்வொரு நாள் நைட்டும் நீயே வந்து காண்பிக்கிற” என்றவனின் பேச்சில் இருந்த ஆதிக்கம் கண்டு பல்லைக் கடித்தவள்,

“ஹலோ இது என் உடம்பு. இந்த டாட்டூவை வச்சுக்கணுமா அழிக்கனுமான்னு நான் தான் டிசைட் பண்ணுவேன்” என்றவளை கூர்ந்துப் பார்த்தவன்,

“நீ சொல்றது சரி தான். ஆனா இனிமே உன் சம்மந்தப்பட்ட எல்லாமே எனக்கு உரியது. நீ எப்போ சென்னையில காலடி எடுத்து வச்சியோ.. அப்பவே நீ என் கட்டுப்பட்டுள வந்துட்ட” என்றான்.

“வாட்?” அதிர்ந்துப் போனாள்.

“இனி உனக்கு விடுதலையே இல்லை” சொன்னவன் மீண்டும் ஒரு முறை டாட்டூவை பார்த்து முத்தம் குடுத்தவன்,

“சீக்கிரம் கிளம்பி ஆபிஸ் வா” என்றான் அவள் மீது இருந்து எழுந்துக் கொண்டே.

அவன் விலகிய அடுத்த நொடி சேலையை எடுத்து மேலே போட்டுக் கொண்டவள் எழுந்து அவனுக்கு முதுகு காட்டி உடையை சரி பண்ண ஆரம்பித்தவள்,

“நான் வெளில இருக்க ஏதாவது ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போறேன். உங்கக்கிட்ட இருந்தா என் பிள்ளையை பார்க்க கூட விட மாட்டீங்க. அவன் மூணு மணிக்கு எல்லாம் என்னை தேட ஆரம்பிச்சுடுவான்” என்றாள் வெடுக்கென்று.

“வெளில இருக்க கம்பெனிக்கு வேலைக்கு போன காலை உடைச்சுடுவேன்டி..” மிரட்டியவன்,

“ஆபிஸ்லையே வேலை போட்டு தரேன். நீ இருபத்தி நாலு மணிநேரமும் உன் மகனை கட்டிக்கிட்டே அழு” வார்த்தைகளை கடித்து துப்பியவன் எழுந்து வெளியேப் போக அவன் போன பிறகே அவளுக்கு ஆசுவாசமாக இருந்தது.

“எப்படியோ மகன் கூட இருந்தா போதும்” என்று எண்ணியவள் கதவை சாற்றி தாழிட்டு விட்டு கிழிந்துப் போன உடையை மாற்றி வேறு உடைக்கு மாற்றியவள் வெளியே வர,

தீத்திரள் தீரன் அவனது அறையில் இருந்தான். மகனுக்கு உணவை குடுத்து தானும் உணவு உண்டு விட்டு மகனுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள் கிளம்பி கேர்டேக்கருடன் வெளியே வர, தீரனும் அவளுடன் மல்லுக்கட்டியதில் கசங்கிப் போய் இருந்த உடையை மாற்றிக் கொண்டு வேறு உடையில் வெளியே வந்தான். அவனை கண்டுக் கொள்ளாமல் நடந்தே அலுவலகம் சென்றாள்.

அவனும் வா ட்ராப் பண்றேன் என்று எதுவும் சொல்லவில்லை. அவனுக்கு என்று பிரேத்தியகமான லிப்ட் இருக்க அதில் அவன் ஏறிப்போக, பின்னாடி வந்தவள் ரிஷப்ஷனிலே நின்றுக் கொண்டாள்.

“என்ன வேலை என்று எதுவும் சொல்ல வில்லையே..” எனவே அங்கேயே இருக்க, மானிட்டரில் அவளை பார்த்தவன் தன் அறைக்கு வரச் சொன்னான்.

மகனுக்கு என்று தனி அறை ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தான். “கேர்டேக்கர் கிட்ட பிள்ளையை குடுத்துட்டு நீ வா..” என்றான்.

தனியாவா? எண்ணியவளுக்கு கொஞ்சம் பயமாய் தான் இருந்தது. இவன் தான் எந்த நேரம் எப்படி இருப்பானே என்று தெரியாதே.. பெருமூச்சு விட்டவள் அவனின் அறைக்குள் நுழைந்தாள்.

--

உள்ளே நுழைந்த அதிரலை முறைத்துப் பார்த்தவன்,

“என் டெஷிஷனை நான் யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன். பர்ஸ்ட் டைம் என்னையே என் டேஷிஷனை மாத்த வச்சுட்டல்ல.. இடியட்” என்று அவளை திட்டினான்.

“உங்கக்கிட்ட இப்படி திட்டு வாங்கிக்கிட்டு இங்க வேலை செய்யனும்னு அப்படி ஒன்னும் எனக்கு எந்த அவசியமும் இல்லை. ஏற்கனவே நீங்க ஊட்டில திட்டுனதுனால தான் ராஜினாமா செய்தேன். இப்பவும் நீங்க அதை தான் செய்யிறீங்க” என்றாள் தைரியமாக.

“என்னடி ரொம்ப பேசுற.. ஆமா நான் அப்படி தான் திட்டுவேன். நீ திட்டு வாங்கி தான் ஆகணும். இல்லன்னு வை உன் தங்கச்சியை இங்க சென்னைக்கு மாத்திடுவேன்” என்றான் எகத்தாளமாக.

Loading spinner

Quote
Topic starter Posted : November 13, 2026 9:08 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top