Notifications
Clear all

அத்தியாயம் 18

 
Admin
(@ramya-devi)
Member Admin

அந்த நேரம் கதவு தட்டப் பட, அவிழ்ந்த கொண்டையை தூக்கிப் போட்டுக் கொண்டு கதவை திறந்தாள்.

அங்கே வாசலில் தீத்திரள் தீரன் நின்றுக் கொண்டு இருந்தான்.

“சார் நீங்க இங்க? நான் எந்த தப்பும் செய்யல சார். ஜஸ்ட் வெறும் ராஜினாமா கடிதம் மட்டும் தான் குடுத்தேன்” என்று அவள் சொல்ல வர,

“ப்ச் நான் அதுக்காக எல்லாம் வரல.. முதல்ல இது உன் வீடுன்னே எனக்கு தெரியாது. பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் இருந்தா குடு. எமெர்ஜென்சி. தேவையில்லாம பேசி நேரத்தை வீண் பண்ணாத..” சொன்னவனிடம் இருந்த பரபரப்பு அவளிடமும் ஒட்டிக்கொண்டது.

“இதோ கொண்டு வரேன் சார்” என்று சொல்லி உள்ளேப் போனவள் முதலுதவி பெட்டியை வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டு இருந்தாள். அதை பார்த்த தீரன் அவளுக்கு பின்னாடி வந்து நின்றான். அவள் என்ன என்பது திரும்பி பார்க்க, அவளின் முகுதுகை உரசாத குறையாக வந்து நின்றவன் அவளிக்கு கைக்கு எட்டாத உயரத்தில் மேல் செல்பில் இருந்த பெட்டியை இலகுவாக  எடுத்துக் கொண்டு வெளியேப் போனான்.

இவளும் அவனின் பின்னோடு ஓடினாள்.

--

தீரனின் பின்னோடு ஓடிப்போன அதிரல் யாருக்கு என்ன ஆச்சோ என்று பதட்டத்துடன் அவன் போன வழியில் விரைந்துப் போனாள்.

அவளின் வீட்டை விட்டு நான்கடி தொலைவில் ஒரு வயதானவர் தரையில் அமர்ந்து இருந்தார். அவரை சுற்றி இன்னும் இரண்டு பெண்கள் நின்று இருந்தார்கள் முகத்தில் கலவரத்துடன்.

அவர்களின் அருகில் போன தீரன் கீழே அமர்ந்து, “டேட் காலை இப்படி தூக்கி வைங்க..” என்று தன் மடியில் தந்தையின் காலை எடுத்து வைத்தான். உதிரம் கொட்டிக் கொண்டு இருந்த பெருவிரலில் நகம் முழுவதும் பெயர்ந்து இருக்க, வலி உயிர் போனது ஆளவந்தானுக்கு.

“முடியில தீரா” கண்கள் கலங்கி இருந்தது.

“ஒன்னும் இல்ல டாட்.. சரியாகிடும்” என்றவன்,

“அப்பாவை பிடிங்க ரெண்டு பேரும்” தாய்க்கும் தங்கைக்கும் வேலை சொன்னவன்,

அதிரலை பார்த்து, “பெட்டியை திறந்து பஞ்சை எடு” என்று சொல்ல, வேகமாக அவனுக்கு அருகில் இருந்த பெட்டியை எடுத்து அவன் கேட்டதை கொடுத்தாள்.

கொட்டும் உதிரத்தை துடைத்து விட்டு, பெயர்ந்துப் போன நகத்தை வெட்டி எடுக்க

“சிசர் எடு” என்று அவளிடம் கேட்டு மேலும் வலிக்கா வண்ணம் நகத்தை வெட்டி எடுத்தவன், பெருவிரல் முழுவதும் மருந்தை அள்ளி பூசியவன் இறுக்கமாக கட்டுப் போடும் துணியை வைத்து கட்டுப் போட்டான்.

அதோடு காலில் அங்கும் இங்குமாய் சிராய்ந்து போன இடத்தையும் சுத்தம் செய்து மருந்து போட்டவன், அவரின் நெற்றியின் ஓரத்தில் அடிபட்டு இருக்க அதையும் கவனித்தான்.

“அவங்க முழங்கைல அடி பட்டு இருக்கு சார்” என்று யாரும் கவனிக்காத காயத்தை அதிரல் சுட்டிக் காட்ட, அங்கயும் சுத்தம் செய்து மருந்து போட்டு விட்டான்.

தேவகிக்கும் தாராவுக்கும் கண்ணீர் வந்து விட்டது.

“ப்ச் ஒன்னும் இல்ல.. இதுக்கெல்லாமா அழறது.. அப்பா நலமா தான் இருக்காங்க” என்றவனுக்கும் லேசாய் மனது பதறி தான் போனது.

அவரின் கையை பிடித்து எழவைத்தாவன்,

“போகலாமா ப்பா” என்று கேட்டான். அவருக்கு விழுந்த போது ஏற்பட்ட நடுக்கம் இன்னமும் குறையாமல் அப்படியே இருந்தது.

“இல்லப்பா கொஞ்ச நேரம் இங்கயே இருந்துட்டு வரேன். என்னவோ படபடன்னு வருது” என்று கீழே அமரப் போனார் ஆளவந்தான்.

“சார்.. அடிபட்டதோட கீழ உட்கார வேணாம்.. வாங்க ரெண்டு அடி எடுத்து வச்சா என் வீடு இருக்கு. அங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறமா கிளம்புங்க..” என்று அதிரல் அவர்களை அழைக்க,

தீரன் யோசனையாக தாயை பார்த்தான். ஏனெனில் அவர் ஸ்டேடஸ் பார்ப்பவர். அப்படி பட்டவர் சாதாரண ஒருத்தியின் வீட்டில் ஒரு நிமிடம் இருப்பது எல்லாம் நடக்காத காரியம்.

எனவே தாயை பார்த்தான்.

“தேங்க்ஸ் ம்மா..” என்ற தேவகி,

“வாங்க தெருவுல நிக்கிறதை விட இந்த பொண்ணு வீட்டுல கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர் சொல்ல, தீரன் தகப்பனை கூட்டிக்கொண்டு அவளின் வீட்டில் நுழைந்தான்.

நால்வருக்கும் சோபாவை கை காட்டியவள், வேகமாய் ஓடிப்போய் ஆளவந்தானுக்கு குளிர் நீரை குடுத்தாள்.

அவரும் தன் பதட்டம், படபடப்பு நீங்க அதை வாங்கி குடித்தார். நீரை மளமளவென்று குடித்த பிறகு தான் அவரின் படபடப்பு நீங்கியது. ஆனாலும் நடுக்கம் குறையவில்லை.

எல்லா இடமும் ஒரளவு சுத்தி பார்த்து விட்டு கெஸ்ட் ஹவுஸ்க்கு திரும்பும் நேரம்,

“தீரா நாலு பேரும் அப்படியே பேசிக்கிட்டே ஒரு வாக் போயிட்டு வரலாம்.. இந்த கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. அதோட போக்குவரத்து எதுவும் இல்லாத இந்த இடத்துல நடை போட்டா இன்னும் நல்லா இருக்கும்..” என்று ஆசை பட்டார் ஆளவந்தான்.

“அதுக்கென்ன ப்பா” என்றவன் காரை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தான். அவனோடு மற்ற மூவரும் இணைந்துக் கொள்ள, கலகலப்பாக பேசிக் கொண்டு வந்தார்கள்.

அது கொஞ்சம் மரங்கள் அடர்த்தியாக இருக்கும் இடம். அதனால் நடக்க பழக அவ்வளவு அருமையாக இருந்தது. பெரிதாக போக்குவரத்து என்று எதுவும் இல்லை. எப்பொழுதாவது ஒருவர் க்ராஸ் ஆகிப் போவார்கள் அவ்வளவு தான். மற்றபடி இவர்கள் நால்வரும் தான் நடந்து போக்கொண்டு இருந்தார்கள்.

அது கொஞ்சம் சரிவான பாதை. எனவே கவனமாக இருக்க வேண்டும். பேச்சு சுவாரஸ்யத்தில் ஆளவந்தான் சாலையை கவனிக்காமல் நடந்து வந்துக் கொண்டு இருந்தார்.

தேவகியை ஓட்டுவது என்றால் அவருக்கு சக்கரை பொங்கல் சாப்பிடுற மாதிரி அல்லவா.. தாரா முதலில் தாயை வார ஆரம்பிக்க, ஆளவந்தானும் சேர்ந்துக் கொள்ள, தேவகி ஒரு வழியாகிப்போனார். தீரனோ அமைதியாக அவர்களின் சம்பாஷனைகளை கேட்டபடி வந்துக் கொண்டு இருந்தான்.

அப்பொழுது தான் ஆளவந்தானுக்கு கால் இடறி கொஞ்சமும் பேலன்ஸ் பண்ண முடியாமல் கீழே விழுந்து பல குட்டி கரணம் போட்டு ஒரு வளைவில் மோதி தேங்கி நின்றார்.

அந்த இடத்தின் அருகில் அவ்வளவாக வீடு அதிகம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடு இருக்க அதில் முதலாவதாக இருக்கும் வீட்டின் கதவை தட்டிநான் தீரன்.

அங்கு அதிரல் இருக்கவும் உரிமையாகவே அவளின் வீட்டில் நுழைந்து அவளுக்கு எட்டாத முதலுதவி பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தான் தீரன்.

அதை தீரன் சொல்ல, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள் அதிரல்.

அவர்களின் உயரம் தெரியும். எனவே காபி தங்களின் வீட்டில் குடிப்பார்களா என்று தெரிவில்லை. ஆனாலும் உபசரிக்கும் பழக்கம் இருக்க,

“கொஞ்சம் சூடா காபி குடிச்சா நல்லா இருக்கும். போடவாங்க மேடம்” தேவகியிடம் கேட்டாள்.

அவருக்கு விருப்பம் இருக்கவில்லை தான் ஆனால் ஆளவந்தானுக்கு இன்னும் நடுக்கம் தீரவில்லை. எனவே தலையை ஆட்டினார்.

“எல்லோரும் காபி குடிப்பீங்களா? இல்ல வேற எதுவும் வேணுமா போடவா” தன்மையுடன் கேட்டாள்.

“காபியே போதும்” என்று தீரன் சொல்ல, தலையை ஆட்டி விட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்.

தேவகிக்கு தான் பெரும் தலைவலியாக இருந்தது. கோயிலில் பார்த்த பெண், கார்டனில் பார்த்த பெண், இதோ இப்பொழுது மீண்டும் அவளையே பார்க்க நேரிடும் சந்தர்ப்பம். அதுவும் அவளின் வீட்டில் வைத்தே..

இதெல்லாம் எதற்காக நடக்கவேண்டும் என்று மண்டையை போட்டு உடைத்துக் கொண்டு இருந்தார்.

அந்த நேரம், கண்ணை கசக்கிக் கொண்டு,

“ம்மா” என்று மழலை குரல் கேட்க, தேவகிக்கு இன்னும் மண்டை வலி வந்து விட்டது.

“அம்மா இங்க கிட்ச்சேன்ல இருக்கேன் தங்கம்” என்று மறுமொழி குடுத்தாள்.

“ம்மா” என்று மீண்டும் அழைத்துக் கொண்டே பிள்ளை கண்களை கசக்கிக் கொண்டே நேராக அடுப்படிக்கு நடந்தான்.

“ஹலோ ஸ்மால் மென்” தீரன் குரல் கொடுக்க, தூக்கக் கலக்கத்தில் இருந்தவன் கண்களை கசக்கிக் கொண்டு இருந்த கையை விலக்கி விட்டு விழிகளை அதிகமாக விரித்து குரல் வந்த திசையை பார்த்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 30, 2026 11:47 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top