அத்தியாயம் 7

 
Admin
(@ramya-devi)
Member Admin

வேரலின் தேவை இல்லாத அட்வைசை கேட்டு எரிச்சல் ஆனவன் அந்த எரிச்சலுடனே வீட்டுக்கு சென்றான் கங்குவன்.

அவனது எரிச்சல் அதிகரிக்கும் படி வீடு முழுக்க உடைந்து சிதறி இருந்தது விலை மதிப்பில்லாத பல பொருட்கள். அதை பார்த்த உடனே அவனுக்கு பிரஷர் இன்னும் அதிகமாகியது. அதீத கோபத்துடன் நேராக அவனது மகனை பார்க்க சென்றான்.

ஒரு கையில் பொம்மையை கட்டி பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் போன் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது சேட்டையை கட்டுப் படுத்த வேலையாட்களுக்கு வேறு வழி இல்லாததால் போனை அவனின் கையில் கொடுத்தார்கள்.

அதில் வீடியோ பார்த்துக் கொண்டு இருந்தவனை அப்படியே ஒற்றை கையில் தூக்கி தலைகீழாக அவனை பிடித்து உலுக்க, பிள்ளை மிரண்டு அலற ஆம்பித்தான்.

“ஏன்டா இப்படி இருந்து என் உயிரை வாங்குற.. கொஞ்சம் கூட அடங்க மாட்டியா? இப்படியா பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைப்ப.. உங்கப்பன் பெரிய பணக்காரன் தான். அதுக்காக இப்படி தினம் தினம் போட்டு உடைச்சா உன்னோட மூர்க தனம் தான் இன்னும் அதிகமாக போகும்” என்று சொன்னவனின் ஒரு பேச்சு கூட சின்னவனின் காதில் ஏறவில்லை.

பின்ன தலைகீழாக பிடித்து உலுக்கும் அப்பனின் செயலில் மிரண்டு போய் முழிக்கிறானே.. சிறுவனிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று புரியாமல் அவன் பிறந்ததில் இருந்து போராடிக் கொண்டு இருக்கிறான்.

இவனுக்கு இருக்கு ஏதோ கொஞ்சமாக மூர்க தனம் இருக்கிற மாதிரி மகனுக்கு ஏகப்பட்ட அட்வைஸ் வழங்கினான்.

பிள்ளைகளுக்கு அட்வைஸ் தேவியில்லை.. நட்பாக வழிநடத்தும் பேரண்டிங் தான் தேவை என அந்த வளர்ந்து கெட்டவனுக்கு தெரியவில்லை.

மகனிடம் ஆற அமர உட்கார்ந்து நேரம் செலவழித்து அவனது பேச்சு மொழியை நிதானமாக கேட்டு அவனுடன் நேரத்தை கழித்தாலே குழந்தையின் செயல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்.

ஆனால் இவனுக்கு நேரம் செலவிடுவதில் கஞ்ச தனம் காட்ட பிள்ளை முரட்டு தனமாக வளர ஆரம்பித்து விட்டான்.

அட்லீஸ்ட் பெரியவர்கள் இல்லை என்றால் தாய் என யாராவது பிள்ளையுடன் இருந்தால் கூட இந்த அளவுக்கு பிள்ளை இருந்து இருக்காது. ஆனால் மற்ற உறவுகளும் தான் அந்த சின்ன மழலைக்கு வாய்க்கவில்லையே.. பிறகு எப்படி அவனது பிடிவாதமும் மூர்கமும் மட்டுப்படும்.

மூர்க்கம் களைவது என்பது அன்பால் மட்டுமே சாத்தியம் என்று அப்பன்காரனுக்கு புரியவில்லை. பிள்ளைக்கும் தெரியவில்லை.

ஒருவருக்கு ஒருவர் சளைச்சவனுங்க கிடையாது. இரண்டும் இரண்டு ரகமாக இருந்தது.

பிள்ளையை அதட்டி மிரட்டி உருட்டி விட்டு மதுவை நாடிப் போனவன் இரவு உணவு என்பதையே பல வருடங்களுக்கு மறந்துப் போய் மூச்சு முட்ட குடித்து விட்டு பிள்ளையின் காலில் படுத்துக் கொண்டான். பிறகு நடுசாமத்தில் எழுந்து தன் அறைக்கு போய் படுத்துக் கொள்வான்.

தினமும் இதே தான் இருவருக்கும் வழக்கமாகி இருந்தது. இதில் ஒரு நாள் கூட மாற்றமில்லை.

வேரலின் தாத்தாவிடம் சரியான காரணத்தை சொல்லி விட்ட காரணத்தால் வேரலை சாயங்காலம் நன்றாகவே வேலை வாங்க தொடங்கி விட்டான் கங்குவன்.

காலையில் இருந்து நின்றுக் கொண்டே பாடம் எடுத்து விட்டு மாலை நேரமும் நின்றுக் கொண்டே அலுவலக வேலை செய்வதால் மிகவும் சோர்ந்துப் போனாள். அவளின் கால்கள் எல்லாம் வீங்க ஆரம்பித்தது. லஞ்ச் பீரியடை தவிர அவள் ஒரு கணமேனும் உட்கார முடியாது..

கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை நிற்க வேண்டி இருந்தது அவளுக்கு. அவள் மறந்து உட்கார்ந்தாலும் இவனுக்கு மூக்கு வேர்த்திடும் போல.. சரியாக அவள் முன்பு வந்து நின்று விடுவான்.

“கடங்காரன்.. கொஞ்ச நேரம் கூட உட்கார விட மாட்டிகிறானே.. அய்யோ காலெல்லாம் ரொம்ப வீங்க ஆரம்பிச்சுடுச்சே.. வீட்டுல தெரிஞ்சா வேலைக்கே அனுப்ப மாட்டாங்க.. இப்ப என்ன பண்றது..” மனதுக்குள் புலம்பியவள் இப்பொழுது எல்லாம் வீட்டிலும் புடவையிலே இருந்தாள்.

“என்னம்மா ட்ரஸ் சென்ஞ் பண்ணலையா?” ஆச்சி கேட்க,

“இல்ல ஆச்சி.. மேல போய் தூங்கும் பொழுது குட்டி குளியல் போட்டுட்டு அப்படியே மாத்திக்கிறேன்” என்று சோர்வாக சொன்னவளை பார்த்து,

“டிரஸ் மாத்த கூட இவ்வளவு டையர்டா இருக்கியே கண்ணா.. இப்படி வேலைக்கு போய் தான் ஆகணுமா?” கேட்டவரை சின்ன சிரிப்புடன் பார்த்தவள்,

“டீச்சிங் ஒர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆச்சி... அதுக்காக எவ்வளவு பெயினையும் தாங்குவேன்” என்று அவள் சொல்ல,

வேலைக்காக அவளின் அற்பணிப்பை கண்டு உள்ளம் நெகிழ்ந்த ஆச்சி,

“அதுக்காக உன் ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்காத கண்ணா. எங்களுக்கு நீ தான் முக்கியம். இன்னும் ஒரு வருடத்துல உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிடுவாங்க” என்றார்.

“அது வரை இந்த ஒன் இயர் மட்டும் எனக்கு பிடிச்ச மாதிரி வேலைக்கு போயிட்டு வரேன் ஆச்சி..” என்று அவரின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சையவளுக்கு காலில் ஒவ்வொரு இடமும் ஊசிக் குடுத்துவதை போல அத்தனை வலி எடுத்தது.

உணவு உண்டுவிட்டு மேலே தன் அறைக்கு வந்தவள், பெயின் கில்லரை போட்டு படுத்து விட்டாள். அந்த பெயின் கில்லரை போட்டால் தான் இரவு அவளால் வலி மறந்து தூங்க முடியும். இல்லை என்றால் இரவு முழுவதும் படுக்கையில் உறுண்டுக் கொண்டு தான் இருப்பாள். ஒரு கணமேனும் தூங்க முடியாது.

காலுக்கு க்ரீமை தடவி விட்டு படுத்தவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. நாளைக்கு போய் இருக்கு அந்த கரஸ் எருமை மாட்டுக்கு..

தாத்தாவிடம் அவன் நானே ஈவினிங் கொண்டு வந்து விடுவதாக சொன்னவன் அதை ஞாபகமே இல்லாதவன் போல அவன் பாட்டுக்க வீட்டுக்கு கிளம்பி போய் விட்டான்.

இவள் காரும் இல்லாமல் ஸ்கூட்டியும் இல்லாமல் தாடுமாறிப் போய் காரை புக் பண்ணி முதல் நாள் வீட்டுக்கு வந்தாள்.

அடுத்த நாளில் இருந்து தன் வீட்டு ட்ரைவருக்கு போன் பண்ணி காரை எடுத்துக் கொண்டு வர செய்து விட்டாள்.

ஒரு வாரத்துக்கு மேல் அவளை இப்படி  தான் பாடாய் படுத்தி எடுக்கிறான். இந்த ஸ்கூலை விட்டு வேற ஸ்கூலுக்கு வேலைக்கு போகலாம் தான். ஆனால் தன் குடும்பத்தின் ஸ்டேட்ஸ்க்கு இந்த ஸ்கூல் தான் ஏற்றது என்பதால் தான் இவளை இங்கே வேலைக்கு அனுப்பினார்கள்.

இதை தவிர வேற எங்காவது வேலைக்கு போகிறேன் என்று சொன்னால் நிச்சயம் விட மாட்டார்கள். எனவே பல்லைக் கடித்துக் கொண்டு இங்கே வேலைக்கு வந்துக் கொண்டு இருக்கிறாள்.

ஆனால் அவளது பொறுமையை ரொம்பவும் சோதித்துக் கொண்டு இருக்கிறான் இந்த கங்குவன்.

அடுத்த நாள் காலையிலே அவனது அறைக்குள் அதிரடியாய் நுழைந்தாள் வேரல்.

“ஹேய் உனக்கு எத்தனை முறை சொல்றது. கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா? இப்படி தான் அத்துமீறி ஒருத்தவங்க அறைக்குள்ள நுளையிறதா?” எடுத்த உடனே எகிறினான்.

“எங்களுக்கு மேனர்ஸ் இருக்க போய் தான் இத்தனை நாள் நீங்க செஞ்சதை எல்லாம் பொறுத்துக் கொண்டு பொறுமையா போனேன். ஆனா உங்களுக்கு தான் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம ஒரு டீச்சரை எப்படி நடனத்தனும்னு தெரியல மிஸ்டர் கங்குவன்” அத்தனை கோவமாக அவனிடம் வெளிபட்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 26, 2026 10:40 am
(@nimala19)
Active Member

Waiting for next ud 

Loading spinner

ReplyQuote
Posted : August 26, 2026 3:02 pm
Admin
(@ramya-devi)
Member Admin

Posted by: @nimala19

Waiting for next ud 

நன்றி மா 

 

Loading spinner

ReplyQuote
Topic starter Posted : August 26, 2026 3:39 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top