Notifications
Clear all

அத்தியாயம் 43

 
Admin
(@ramya-devi)
Member Admin

அவர் வேரலை அழுத்தமாக பார்க்க,

அவள் மௌனமாக தலையை ஆட்டினாள் இல்லை என்று.

“சீரியஸ்லி” என்றவருக்கு அப்படி ஒரு கோவம் வந்தது.

“என்ன பேசுறீங்க ரெண்டு பேரும். இதனோட சீரியஸ்னஸ் என்னன்னு தெரியுமா?” என்று இருவரையும் அதட்டினார்.

“சார்” என்று கங்குவன் கோவப்பட,

“லுக் மிஸ்டர் கங்குவன் பிள்ளையோட மன நிலை தெரியாம நீங்க எல்லாரும் சேர்ந்து அவனோட விளையாடிட்டு இருக்கீங்க. அவன் பிசைஞ்சு வச்ச களிமண் கிடையாது உங்க விருப்பம் போல கலைச்சு கலைச்சு உருவாக்க. அவ சுட்ட மண் பானை மாதிரி இருக்கான்” என்றார் கோவமாக.

“அப்படி என்ன விளையாடிட்டோம் சார்?” கேட்டவனை இயலாமையுடன் பார்த்தவர்,

“அவனுக்கு எதையும் அவ்வளவு ஈஸியா எடுத்துக்குற குணம் கிடையாது மிஸ்டர் கங்குவன். அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க. அது தெரியாம நீங்களா அவன் மனசுல ஆசையை வளர்த்து விட்டு இருக்கீங்க. சப்போஸ் வேரலுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து அவ வேற ஊருக்கு போயிட்டா உங்க பிள்ளை என்ன நிலைக்கு ஆளாவான்னு தெரியுமா?” என்று கேட்டவரை பயத்துடன் பார்த்தாள் வேரல்.

அவளுக்கும் அந்த பயம் இருந்தது தான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. கங்குவனுக்கு தான் பிள்ளையின் மனநிலை தெரியவில்லை.

அதனால் அசட்டையாக இருந்தான். ஆனால் மருத்துவர் சொல்ல சொல்ல முற்றிலும் அதிர்ந்துப் போய் விட்டான்.

“டாக்டர்” என்று எழுந்தே விட்டான் இருக்கையை விட்டு.

“எஸ்.. வேரல் மட்டும் அவனுக்கு அம்மாவா வரலன்னா அவன் எந்த எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு வேணாலும் போவான்.. குறிப்பா உங்களை கொல்ல கூட தயங்க மாட்டான். பிகாஸ் அவனோட வில்லனா உங்களை தான் பார்க்கிறான். நீங்க வேரலை ஏத்துக்கலன்னா ஒன்னு அவன் பைத்தியமா போவான். இல்லன்னா உங்களை கொன்னு போட்டுடுவான்” என்று சொல்ல வேரல் நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.

கங்குவனின் காலடியில் நிலம் நழுவியது. அவன் செத்துப் போவதை பற்றி கவலை எல்லாம் இல்லை. ஆனால் பிள்ளை பைத்தியமாகவோ இல்லை அநாதையாகவோ போய் விட்டால் என்ன செய்வது என்று விக்கித்து நின்றான்.

வேரலுக்கும் அதே பயம் தான். அவன் இன்னும் எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. தாய் பாசம்னா என்னனு தெரியாது, தகப்பன் இருந்தும் வில்லனாக பார்க்கிறான், யாரிடமும் நெருங்க மாட்டிக்கிறான், தாத்தா பாட்டி அரவணைப்பு இல்லை.

காட்டு செடி போல முரட்டு தனமாக இருப்பவனின் வேரில் சுடு நீரை கொட்டுவது போல அவனை சுற்றி ஒரு சூழல்.. கடவுளே என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள் வேரல்.

இருவரும் ஒரு சேர சாமை பார்த்தார்கள். அவன் கண்ணாடி தடுப்புக்கு அந்த புறம் பொம்மைகளுடன் விளையாண்டுக் கொண்டு இருந்தான் எந்த கள்ளங்கபடமும் இல்லாமல்.

அவன் எப்படி கத்தி எடுப்பான் அவர்களால் நம்பவே முடியவில்லை. பைத்தியமாக சுற்றி திரியும் சமரன், அனாதையாக ஒரு நேர சோற்றுக்கு கையேந்தும் சமரன் என ஒரு நொடி கண்ணுக்குள் அவனது நைந்த தோற்றம் வந்து செல்ல,

“அங்கிள்” என்று கதறிவிட்டாள் வேரல். கங்குவனின் நிலையோ சொல்லவே முடியாத நிலையில் இருந்தது.

“ஷ் வேரல். இது தான் நிஜம். அவன் பார்த்து வளர்ந்தது எல்லாம் கங்குவனை பார்த்து தான். அவரின் முரட்டு தனம் நிறைந்த பொழுதுகள் அவனின் நெஞ்சில் அடி ஆழத்தில் பதிந்து இருக்கு. அவன் ரொம்ப அடமென்ட்டா ஆனதுக்கு காரணம் முழுக்க முழுக்க கங்குவன் மட்டும் தான்” என்று அவர் சொல்ல, வேரல் திரும்பி அவனை முறைத்தாள்.

“என்னடி முறைக்கிற? எனக்கு என்ன தெரியும் அவன் இப்படி பூஞ்சை மனசோட எல்லாத்தையும் அடி மனசுல போட்டு புதைச்சு வச்சுக்கிட்டு இருப்பான்னு” என்றான்.

“ஆமா உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.. யாராவது சின்ன பிள்ளையை வச்சுக்கிட்டு தண்ணி அடிப்பாங்களா? இல்ல தண்ணி அடிச்சுட்டு சின்ன பிள்ளைன்னு கூட பார்க்காம அவன் கிட்ட சண்டைக்கு போவாங்களா? ஆனா நீங்க இந்த ரெண்டையும் செஞ்சு வச்சு இருக்கீங்க.. பின்ன அவன் மனநிலை பாதிக்காம என்ன ஆகும்.. அவனுக்கு சரியான சூழ்நிலையை அமைச்சு குடுக்காத உங்க மேல தான் மொத்த தப்பும். என் பிள்ளையை குத்தம் சொல்லாதீங்க” என்றாள் வெடுக்கென்று.

“ஆமா உன் புள்ள ரொம்ப யோக்கியம்.. அவன் பார்க்க தான் ஊமை குசும்பன். ஆனா செய்யிறது எல்லாம் பக்க மொள்ள மாரித்தனம்” என்றான் கடுப்பாக.

“அவன் உங்களை தானே பார்த்து வளர்ந்தான். பின்ன வேற எப்படி இருப்பான். அப்பன் புத்தி தப்பாம வந்து இருக்கு” என்று அவள் பதிலுக்கு பேச,

“இப்ப நான் என்னடி மொள்ளமாரித்தனம் பண்ணுனேன்.. என்னவோ எல்லா தப்பும் நான் தான் செஞ்ச மாதிரி பேசிட்டு இருக்க” எகிறினான்.

“ஆகா நீங்க ஒண்ணுமே செய்யல.. நீங்க எதுவுமே செய்யாம தான் அவன் இப்படி இருக்கான் பாருங்க” என்று அவளும் சரிக்கு சரி நிற்க, மருத்துவர் தான் இருவருக்கும் இடையில் புகுந்து மத்தியஸ்த்தனம் செய்து இருவரையும் திசை திருப்பி சமரனை பற்றி முழுமையாக அவர்களிடம் பேசினார்.

“எனக்கு தெரிஞ்சு அவன் எதுக்கோ ஒரு முறை கத்தியை கையில் எடுத்து இருக்கான்.. ஆம் ஐ கரெக்ட் கங்குவன்?” என்று அவனிடம் கேட்க,

அவன் தலையை ஆடினான் கொஞ்சமும் அதிராமல். அவன் தான் மொத்தமும் ஆடிப்போய் இருந்தானே மகனை எண்ணி.

“என்ன அங்கிள் சொல்றீங்க?” நெஞ்சை பிடித்துக் கொண்டாள் வேரல்.

“ம்ம் ஏதோ ஒரு இன்ஸிடன்ட்ல பழம் வெட்டுற கத்தியை எடுத்து வேலையாட்களை பார்த்து நீட்டி இருக்கான்” என்று அவர் சொல்ல கங்குவனும் ஒத்துக் கொண்டான்.

“அவன் கத்தியை எடுக்கிற வரை நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க” அவனை அப்பட்டமாக முறைத்தாள்.

“ஏய் நான் பழம் கட் பண்ணிட்டு இருந்தேன்டி. இவன் விளையாட்டு போக்குல எடுக்குறான்னு இருந்தா வேலையாட்களை பார்த்து காட்டி ஆ ஊன்ட்டு இருக்கான்” என்றான்.

“நீங்க அப்பவே ரெண்டு அடி போட்டு இதெல்லாம் பண்ண கூடாதுன்னு சொல்லி மிரட்டி இருந்தா இவன் இப்ப இந்த நிலைக்கு வந்து இருப்பானா.. உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.. பிள்ளை மட்டும் பெத்து பேரு வச்சா போதுமா.. அதை திருத்தமா வளர்க்க தெரியாம வளர்த்து வச்சு என் உயிரை எடுக்குறீங்க. அவனுக்கு மட்டும் எதாச்சும் ஆகட்டும். உங்களை சும்மாவே விட மாட்டேன்” அப்பவே அவனிடம் காச் மூச் என்று கத்தினாள் வேரல்.

“அடியேய் அவன் செஞ்சதுக்கு என்னடி எப்ப பாரு என்னையவே குத்தம் சொல்லிட்டு திரியிற. அவன் ஒழுங்கா வளரமா என்னை திட்டிட்டு இருக்க.. வந்தேன்னு வை இடுப்பு எலும்பை உடைச்சுடுவேன் பார்த்துக்க”

“ம்ம் இப்படி ரவுடி மாதிரி பேசுங்க செய்யிங்க, பின்ன அவன் கையில கத்தி எடுக்காம மணப்பானா?” கேட்டாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : November 12, 2026 10:14 am
(@nimala19)
Eminent Member

Interesting 

Loading spinner

ReplyQuote
Posted : November 12, 2026 10:49 am
(@niharaj)
Active Member

Family fight (husband and wife)  dialogue s heard so natural and free flow  felt like original. Go on writer madam 💐💐💐💐💐💐💐👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

Loading spinner

ReplyQuote
Posted : November 12, 2026 10:53 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top