மயூ கூட மாப்பிள்ளைக்கும் ஆதிக்கும் ஏதாவது நட்பு பழக்கம் இருக்குமோ? ஒரு வேலை நட்பு ரீதியாக கூட ஆதிக்கு உதவி செய்ய மாப்பிள்ளை வேஷம் போட்டு இருந்து, அதன் பின்பு கல்யாணத்திற்கு அன்று போக சொல்லி சொல்லி இருப்பானோ ஆதி என்று எண்ணி டிடெக்ட்டிவ் வைத்து விசாரித்து விட்டாள்.
அப்படியும் யாதொரு பழக்கமும் இருவரிடமும் இல்லை என்று அவர்கள் சொல்லிவிட மண்டை காய்ந்து போனாள் மயூ.
மயூவின் திருமண ஏற்பாடு ஒரு பக்கம் சென்றுக்கொண்டு இருக்க... ஆதிக்கும் ரஞ்சனிக்கும் இடையே திருமண ஏற்பாடு பற்றி வர்மன் கேசவனிடம் பேச அன்றைக்கு வந்து இருந்தார்.
“சார் இவங்க கல்யாண ஏற்பாடு அப்படியே பாதியிலே நிற்குது... அதை அடுத்த கட்டத்துக்கு...” என்று தயக்கமாய் பேசிய வர்மனை கண்டு புன்னகைத்த கேசவன்,
“நானே உங்கிட்ட வந்து பேசணும்னு நினைச்சேன் வரமன். நீங்களே வந்துட்டீங்க. ரொம்ப நல்லது. மயூவிற்கு கல்யாண நாள் குறிச்சாச்சு... அதனால அந்த கல்யாணம் முதல்ல நடக்கட்டும். அதுக்கு பிறகு ஆதிக்கும் உன் பொண்ணு ரஞ்சனிக்கும் அடுத்த முகுர்த்தத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம். ஆதிக்கும் ஏதோ நேரம் சரியில்லன்னு சொல்லி இருக்காங்க. அதுக்குள்ள அதுவும் முடிஞ்சு போய்டும். நீ கவலை படாத வர்மன். எல்லாம் சுபமா முடியும்.” என்று சொன்னார்.
“அப்போ நிச்சையம் மட்டும் முன்னாடியே வச்சுக்கலாமா கேசவன் சார்..” பவ்யத்துடன் நின்றபடி கேட்டவரை கண்டு
“வச்சுக்கலாம் தான். ஆனா பொண்ணு கல்யாணம் இருக்கும் போது அதுக்கு வேலை பார்ப்பதா? இல்ல இந்த நிச்சயத்துக்கு வேலை பார்ப்பதா சொல்லு...”
“உங்க கிட்ட ஆளுக்கா பஞ்சம்... இன்னைக்கு நைட் சொன்னாலே நாளைக்கு காலையில வேலை முடிஞ்சு இருக்குமே... அப்படி இருக்கும் போது...” தயக்கமாய் இழுத்தார்.
“நீ சொல்றது வாஸ்த்தவம் தான். ஆனா என் பசங்க ஒத்துக்கணுமே... என் பசங்க தான் ஒண்ணு ஒண்ணும் பார்த்து செய்யனும்னு இருக்கணுங்க. அவனுங்க கிட்ட போய் எல்லாத்தையும் வேலை காரங்களே பார்த்துக்கட்டும்னு சொல்ல முடியுமா...? சொல்லு.”
“அவனுங்க விருப்பம் தான் என்னோட விருப்பமும். முதல்ல என் மயூ கல்யாணம் சிறப்பா நடக்கட்டும். அதுக்கு பிறகு எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்.” என்று உள்ளே சென்றுவிட... வர்மனுக்கு அவ்வளவு ஆத்திரமாய் வந்தது. அதை காட்ட முடியாமல் வாலை சுருட்டிக்கொண்டவரின் மனதில் சட்டென்று ஒரு மகிழ்வு வந்தது.
“ச்சை இதை எப்படி மறந்தேன்...” என்று புன்னகைத்தார் அதுவும் விகாரமாய்.
இந்த நஞ்சு ஆதியையும் மயூவையும் கொல்லுமா...? இல்லை சுருண்டு போய் மடியுமா...?
அத்தியாயம் 25
ஆதியின் வீட்டை விட்டு வெளியே வந்த வர்மனின் மனம் கோவத்தில் குதித்துக்கொண்டு இருந்தது. ஆனால் அதன் பின்பு சட்டென்று புன்னகைக்கு மாறியது.
அதன் காரணம் வேறொன்றுமில்லை.
எப்படியும் ஆதியும் மயூவும் பிரிந்தால் மட்டுமே வர்மன் எண்ணியது நடக்கும். ரஞ்சனியை அப்பொழுது தான் ஆதிக்கு கட்டி வைக்க முடியும்.
அதற்காக தானே கேசவனிடம் நடையோ நடை என்று நடந்து அதில் பாதி வெற்றியும் கண்டுவிட்டார். ஆனால் ஆதி ரஞ்சனி கல்யாணம் தடைபட்டுக்கொண்டு இருக்க வர்மன் பலமாய் அடி வாங்கினார்.
அதோடு ஆதிக்கு நேரம் சரியில்லை என்பதால் அவரின் திட்டம் இன்னும் இழுத்துக்கொண்டு இருக்கிறது.
இதில் நிச்சயம் கூட இப்பொழுது செய்ய முடியாது என்று கேசவன் சொல்லிவிட, அவரின் கோவம் உச்சத்தை தொட்டது. ஆனால் மயூவிற்கு வேறு ஒருவருடன் கல்யாணம் நடக்க இருக்கிறது. அதுவும் மிக தீவிரமாக அதற்க்கு உண்டான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதை கண்டவருக்கு முழு வெற்றி இப்பொழுதே கிட்டியது போல உணர்ந்தார்.
மயூ இல்லையென்றால் ஆதி ரஞ்சனிக்கு தான் என்று எண்ணம் உறுதியாக, வர்மனுக்கு துள்ளி குதிக்க வேண்டும் போல இருந்தது.
அப்பாடா.... ஆதியின் மாமனார், கேசவனின் சம்மந்தி அதுவும் வேல்ட் பிசினெஸ் கிங் ஓட மாமனார். பிசினெஸ் டைகர் ஓட சம்மந்தி. இந்த அடைமொழியே அவரை பரவசப்படுத்தியது.
இதுக்கு தானே இவ்வளவு வேலையும். கூடவே தொழில் துறையோட மந்திரி. இதுக்கு மேல வேற என்ன வேணும்.
‘இந்தியாவோட தொழில் துறையே என் கைபிடியில தான். இனி நான் சொல்றது தான் இங்க.... பொருளாதாரம் முழுசும் என் வசம் தான்.’
‘இந்தியாவின் டாப் செல்வந்தர் மிஸ்டர் வர்மன்...’ இந்த பட்டத்துக்கு சிறந்தவன் நானே என்ற மமதை எழ... அகம்பாவம் தோன்றியது அவருக்கு.
இந்த அகம்பாவம் நிலைக்குமா...? என்பது விதியின் வசம் இருக்கிறது.
--
விடிந்தால் மயூவிற்கு நிச்சையம். ஆதியிடம் எந்த எதிர்விளைவும் இல்லை. மயூவிற்கு கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது.
ஏதாவது செய்வான். செய்து இந்த கல்யாணத்தை நிறுத்துவான் என்று எண்ணியவளின் எண்ணத்தில் ஆற்று மண்ணை வாரி லாரி லாரியாக கொட்டினான்.
வீட்டிலே நிச்சையம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட, மிக இயல்பாக வீட்டு உள் அலங்கார வேலைகளை செய்துக்கொண்டு இருந்தான்.
கையில் மருதாணி வைக்க பியூட்டி பார்லர் பெண்கள் வர, பத்திக்கொண்டு வந்தது மயூவிற்கு. நடு கூடத்தில் அவளை அமரவைத்து அவர்கள் இவளது கையில் மருதாணியை வைக்க, ஆதி அங்கும் இங்கும் நடந்து அலங்காரத்தை செய்வதோடு இல்லாமல் செய்பவர்களுக்கு சில முறைகளை சொல்லி கொடுத்துக்கொண்டு இருந்தான்.
மனு, முகில், ரேணு, ரோகிணி சீதா ஐவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே தங்களது வேலைகளை செய்துக்கொண்டு இருந்தார்கள்.
மயூ ஆதியை பார்த்துக்கொண்டே இருப்பதும், ஆதியோ அப்படி ஒருவள் அங்கு இருக்கிறாளா... என்பது போல நடந்துக்கொள்ளுவதையும் கண்டு மண்டை காய்ந்து போனார்கள்.
கடைசியில் என்ன தான் நடக்கும்... என்ற டென்சன் அவர்களை ஆட்டி படைத்துக்கொண்டு இருந்தது.
அவர்கள் அனைவரையும் சுத்தலில் விட்டவனோ மர்ம புன்னகையுடன் வளம் வந்துக்கொண்டே அனைத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தான்.
ஆதியின் சதிராட்டம் எப்படி இருக்குமோ...?
--
மெகந்தி பங்சன் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. தனது கைகளில் டிசைன் வரைய இருந்த பெண்ணிடம் ஒரு சில ஆலோசனைகளை மட்டும் சொன்னவள் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல அமர்ந்துக்கொண்டாள்.
அவள் சொன்ன படி வரைந்து முடிந்த பெண்கள், கைகளில் மாப்பிள்ளையின் பெயரை எழுத வேண்டும் என்று சொல்ல, அதில் நிமிர்ந்து தன்னவனை பார்த்தாள். அப்பொழுதும் ஆதி அவளின் பக்கம் திரும்பவே இல்லை.
அதில் கடுப்பான மயூரா தேவி ‘எதுவும் தேவையில்லை’ என்றுவிட்டு வேகமாய் தன் அறைக்கு சென்று நுழைந்துக்கொண்டாள்.
பின்னோடு அவன் வருவான் என்று எதிர் பார்த்தாள். ஆதியோ அந்த செயலை செய்யாமல் மேற்கொண்டு வேலைகளை பார்த்துக்கொண்டே இருந்தான்.
அறையில் காத்துக்கொண்டு இருந்த மயூவுக்கோ கட்டுக்கடங்காமல் கண்ணீர் பெருகியது. ‘ஒரு வேலை எல்லாமே முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறானா..?’ என்று உள்ளம் பதைபதைத்து போனாள்.
அவ்வளவு தானா...? இனி ஆதி எனக்கு இல்லையா...? என்ற எண்ணமே அவளை வாட்டி வதைக்க வாய்விட்டே கதறினாள்.




