எவ்வளவு உறுதி எடுத்தாலும் ஏனோ அவளால் அவன் குடுத்த பனிஷ்மெண்டை மறக்கவே முடியவில்லை. நினைக்கும் பொழுதே கண்கள் கலங்கியது.
தனக்குரிய டைம் டேபிளை பார்த்து பணிக்கு செல்ல இருந்தவளிடம்,
“மேடம் உங்க டைம்டேபிள் மாறி இருக்கு.. இதை உங்கக்கிட்ட ஹெச்.எம் குடுக்க சொன்னாங்க” என்று பியூன் வந்து குடுத்து விட்டு போக, அதை வாங்கிப் பார்த்தவளுக்கு இது யாருடைய வேலை என்று நன்றாகவே புரிந்தது.
காரணம் அவளுக்கு லெசெர் பீரியட்னு ஒரு பீரியடை கூட ஒதுக்கவில்லை. எல்லா கிளாசும் அவளுக்கு என்கேஜுடாகவே இருந்தது.
ஒன்றும் சொல்லாமல் அந்த டைம் டேபிளை பாலோ பண்ணி கிளாசுக்கு சென்றாள். லஞ்ச் அவர்ல அவளுக்கு கொஞ்சம் ப்ரேக் கிடைத்தது. சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் டேபிளில் தலை வைத்து படுத்து இருந்தாள்.
சரியாக அவளை ஆபிஸ் ரூமில் அழைப்பதாக சொல்ல, எழுந்து சென்றாள்.
“மேடம் இந்த இயர் யார் யாருக்கு ஸ்காலர்ஷீப் கிடைச்சு இருக்குன்னு லிஸ்ட் எடுக்க சொன்னாங்க” என்று சொல்ல,
“வாட்? அது என்னோட வேலை இல்லையே” வேரல் சொல்ல,
“இனி இதையும் நீங்க சேர்த்து பார்க்கணுமாம்” என்று அலுவலகர் அதோடு முடித்துக் கொள்ள,
அவளுக்கு கொடுத்த கணினியின் முன்பு அமர்ந்தவளுக்கு வெறுத்துப் போய் வந்தது. இருந்தாலும் அவர் சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து விட்டு நகர்ந்த நேரம், கிளாஸ் ஆரம்பித்து கால்மணி நேரம் ஓடி இருந்தது.
வேகமாய் அவளின் வகுப்புக்குள் நுழைய, அங்கே கையை கட்டிக் கொண்டு நின்று இருந்தான் கங்குவன். கூடவே ஹெச்.எம் வேற.
அங்கு அவர்களை எதிர்பாராதவள் குட் ஆப்டர்நூன் சார்.. மரியாதையாக விஷ் பண்ணினாள்.
தனி அறையில் இருக்கும் பொழுது அது வேறு. ஆனால் மாணவர்கள் முன்னிலையில் அவன் வகிக்கும் பதவிக்கு முக்கியத்துவம் குடுத்து தானே ஆகணும். இல்லை என்றால் வளரும் இளைய சமூதாயம் தன் பாணியை பாலோ பண்ணிடுமே என்று முறையாக விஷ் செய்தாள்.
ஆனால் அந்த தலைகனம் பிடித்த கங்குவனோ,
“வாட்டிஸ் திஸ் மிஸ் வேரல்.. இது தான் க்ளாஸ்க்கு நீங்க வர்ற நேரமா? நீங்களே இவ்வளவு ஒபிடியன்ட் லெஸ்ஸா இருந்தா உங்கக்கிட்ட படிக்கிற ஸ்டுடென்ட்ஸ் மட்டும் எப்படி ஒபிடியன்ட்டை கத்துக்குவாங்க..” கூர் அம்பாய் அவளை தாக்கினான்.
நேற்றைக்கு தனி அறையில் அவளை அவமானப்படுத்தினான். இன்றைக்கு அவளின் வகுப்பு பிள்ளைகள் முன்பு அவமானப்படுத்துகிறான்.
அவனை தீர்க்கமாக பார்த்த வேரல்,
“சாரி சார் லேட்டா வந்ததுக்கு. பட் நீங்க ப்ராப்பரா ஆபிஸ் ஒர்க் பார்க்க ஸ்டாபை அப்பாயின்ட்மென்ட் போட்டு இருந்தா நான் என் கிளாசை விட்டுட்டு ஆபிஸ் வேலையை பார்க்க வேண்டிய அவசியம் வந்து இருக்காது. அப்படியும் இல்லன்னா நான் தான் அந்த ஒர்க்கை பார்க்கணும்னு நினைச்சு இருந்தா நீங்க என் க்ளாசுக்கு லெசர் ப்ரீயட்ல இருக்க ஸ்டாபை இங்கே வர சொல்லி இருந்து இருக்கணும்.. ரெண்டுமே செய்யாதது உங்க தவறு..” என்று யாருக்கும் கேட்கா வண்ணம் அவனுக்கு மட்டும் அழுத்தமாக சொன்னவளை கண்கள் இடுங்க பார்த்தவன்,
“என்னையே தவறுன்னு சொல்றீயா? உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்” அடிக்குரலில் அவன் கர்ஜிக்க,
“தவறை தவறுன்னு சொல்ல எதுக்கு சார் தைரியம்.. நேர்மையான மனசு இருந்தா போதும்..” என்றவள்,
“ஏற்கனவே உங்களால கால்மணி நேரம் கிளாஸ் எடுக்க முடியாம போயிடுச்சு.. இப்பவும் இங்க நின்னு என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.. சோ ப்ளீஸ் கேட்டவுட்” என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“வாட் எனக்கே கேட் அவுட்டா?” கண்கள் நொடியில் சிவந்துப் போனது அவனுக்கு.
“எஸ்... என் க்ளாஸ்ல நின்னு ஸ்டுடென்ட்டோட டைமை வேஸ்ட் பண்ணா எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது.. சோ வெளியே போங்கன்னு ரொம்ப நாசுக்கா சொல்றேன். உங்களை மாதிரி திமிர்ல சொல்லல” என்று அவள் அழுத்தம் திருத்தமாக சொல்ல,
கங்குவனின் முகம் அப்பட்டமாய் சிவந்துப் போனது முகத்துக்கு நேராக அவள் அவமானப்படுத்தியதில்.
“நான் இவ்வளவு பண்ணியும் உனக்கு இன்னும் கொழுப்பு அடங்கல இல்ல.. நான் யாருன்னு தெரியுமாடி உனக்கு?” அவனது குரலில் வெளிப்பட்ட ஆணவத்தை கண்டு பயமில்லாமல்,
“முதல்ல ஒரு ஸ்டாபை எப்படி மதிக்கணும்னு கத்துக்கோங்க. பிறகு உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்குறேன். இப்போ ப்ளீஸ் கெட்டவுட்” என்றாள் நிதானமான குரலில்.
“என்னம்மா நீ மறுபடியும் மறுபடியும் இப்படியே நடந்துக்குற” என்று பரிந்துக் கொண்டு வந்த ஹெச்எம்மை பார்த்த வேரல்.
“முதல்ல உங்க கரஸ்க்கு மத்தவங்கக்கிட்ட எப்படி பேசணும் நடந்துக்கணும்னு பேசிக் மேனர்சை சொல்லிக் குடுங்க ஹெச்எம் சார்.. பிறகு எனக்கு வந்து லெசன் எடுங்க” என்றவள்,
அங்கு நின்று இருந்த இருவரையும் கண்டுக் கொள்ளமல்,
“சாரி ஸ்டுடென்ட்ஸ் ஆபிஸ் வொர்க் பார்த்துட்டு வந்ததுல கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. ஓகே ஆள் ஆப் யூ டெக்கேன் அவர் புக்ஸ்” என்று அவள் பாடம் சொல்லிக் குடுக்க ஆரம்பித்து விட,
இவர்கள் தான் வெளியே வர வேண்டியது இருந்தது.
அதில் ஏகத்துக்கும் முகம் சிவந்துப் போன கங்குவன்,
“யார் இவ.. அப்படி என்ன இவளுக்கு மட்டும் இவ்வளவு தலைகனம்.. எல்லோரும் என்கிட்ட கைக்கட்டி வாய் பொத்தி நிற்கும் போது இவ மட்டும் ரொம்ப துள்ளுரா..” என்று ஹெச் எம்மிடம் எரிந்து விழுந்தான்.
“சார் அவங்க வேரல் பிசினெஸ் செர்மேனோட ஒரே பொண்ணு” என்றார் பச்சைப்பெருமாள்.
“சோ வாட்?” என்றான் அவன்.
“அது மட்டும் இல்ல சார். வேரலோட தாத்தா மினிஸ்டர், அம்மா மேயர்.. அண்ணன் ஏசிபி”
“அதனால தான் ரொம்ப ஆடிட்டு இருக்காளா” அவளின் பின்புலத்தை கேட்டு இவனுக்கு இன்னும் சுர்ரென்று வந்தது.
“எதுக்கும் அந்த பொண்ணுக்கிட்ட கவனமா இருங்க சார்.. ஸ்கூல்ல ஜாயின் பண்ணி ஒரு வாரம் கூட ஆகல. அதுக்குள்ள நம்மக்கு கெட்டவுட் சொல்லிடுச்சு” என்று அவர் எச்சரிக்க, தீப்பார்வை அவரை பார்த்து வீசினான்.
“இல்ல சார்.. நான்” என்று அவர் ஏதோ சொல்ல வர,
“ஸ்டாப்பிட் மேன்.. அவ புகழை என்கிட்டே பாடாம, அவளுக்கு ஒழுங்கா அட்வைஸ் பண்ணி என்கிட்டே எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் குடுங்க. அதை விட்டுட்டு அவ பேக்ரவுண்ட் கதையை சொல்லி என்னை எரிச்சல் பண்ணாதீங்க” என்றவன் வேக எட்டுடன் போய் விட்டான்.
அவனுக்கு அவளுடைய பின்புலம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை போல.. அவன் தான் தலைகனத்தில் ஆடுகிறானே.. பிறகு எப்படி இதெல்லாம் மண்டைக்கு ஏறும்..
கங்குவனுக்கு கெட்டவுட் சொன்னதில் எழுந்த உற்சாகத்துடன் மீதி இருந்த அனைத்து வகுப்புகளையும் முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள்.
அந்த நேரம் பியூன் வந்து அவளை ஆபிசில் அழைப்பதாக சொல்ல,
“நினைச்சேன்” என்று முணகியபடி வந்து நின்றாள்.
“மேடம் இந்த டாக்குமென்ட்டை செக் பண்ண சொல்லி சார் சொன்னாங்க.. இது அப்கம்மிங் இயரோட டீட்டைல்ஸ்” என்று ஒரு பைலை கொண்டு வந்து குடுக்க,
மீற முடியாமல் தன் ஹேண்ட்பேகை கழற்றி வைத்து விட்டு அவர் சொன்னதை செய்ய தொடங்கினாள்.
இவளுக்காக வெளியில் காத்து நின்ற இளமாறன் தாத்தா இவளை தேடி ஆபிஸ்க்கு வந்து விட்டார்.
அங்கு நின்றுக் கொண்டே அவள் வேலை பார்த்துக் கொண்டு இருப்பது தெரிய நெற்றி சுருக்கினார்.
“இங்க என்னம்மா பண்ற?” ஆளுமை நிறைந்த குரலில் அவர் கேட்க,
“தாத்தா நீங்க எதுக்கு இங்க வந்தீங்க” என்று அதிர்ந்தவள் வேகமாய் தன் கையில் உள்ளதை மேசையில் வைத்து மூடி விட்டு அவரிடம் சென்றாள்.
அக்கவுண்டன்டிடம் ஏதோ கேட்கும் சாக்கோடு ஆபிஸ் ரூம் வந்து இருந்தவன் அவள் நின்றுக் கொண்டே வேலை செய்யும் அழகை அடிக்கண்களால் பார்த்து இரசித்தான் கங்குவன்.
அவளுக்கு ஒரு இருக்கை கூட போடாமல் நின்றுக் கொண்டே வேலை செய்ய வைத்தான். போனா போகுதே என்று மேசை மட்டும் தந்து இருந்தான்.
அவள் முகத்தில் அத்தனை களைப்பு தெரிந்தது. காலையில் இருந்து நின்றுக் கொண்டே இருக்கிறாள். காலெல்லாம் பயங்கர வலி.
கால் மாற்றி கால் நின்றுக் கொண்டு இருக்கிறாள். எப்பொழுதும் வகுப்பின் இறுதியில் சிறிது நேரம் அமருவாள். இவள் போகும் வகுப்புகளுக்கோ சேர் எதுவும் போடாமல் பழிவாங்கினான் கங்குவன்.
இவ்வளவு தானா நீ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்ட வேரல் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் இடும் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
இதோ இப்பொழுதும் அப்படி தான். நின்றுக் கொண்டே அவள் வேலை செய்ய அவளின் தாத்தா வந்து விட்டார். நின்றுக் கொண்டே வேலை செய்யும் பேத்தியை புருவம் சுருக்கிப் பார்த்தார். கூடவே அவரின் கட்சி தொண்டர்கள் வேறு சிலர் வந்து இருக்க,
கங்குவன் நெற்றியை நீவி விட்டுக் கொண்டு அவர்களை வரவேற்க வேண்டி இருந்தது. ஆனாலும் அவளுக்கு இறக்கம் காட்டவே இல்லை அவன்.





