அத்தியாயம் 4

 
Admin
(@ramya-devi)
Member Admin

மகனை நெருங்கவே முடியவில்லை அவனால். என்ன காசு இருந்து என்ன புண்ணியம். பெற்ற மகனை அள்ளி அணைத்து நெஞ்சில் போட்டுக்கொள்ள முடியவில்லை.

வேலைக்கரர்களின் கையில் பிள்ளையை ஒப்படைத்ததின் விளைவு. தகப்பனை நெருங்க விட மாட்டேங்குறான்..  

“டேய் அப்பாடா” என்று மகனை நெருங்கி வந்தான் கங்குவன்.

“ஹூ ஆர் யூ.. யூ ஆர் ஸ்ட்ரேஞ்சஸ்” என்றானே அந்த குட்டி சிறுவன்.. அந்த ஒற்றை வாசகத்தில் ஆறடி சிலை சடசடவென்று அப்படியே நொறுங்கிப் போனது.

எல்லோரையும் கண்ணீர் வடிக்க வைத்து துன்புறுத்தி பார்க்கும் அரக்கன் ஒடிந்துப் போனான். அவனது இதயத்தில் இருந்து  உதிரம் சொட்டியது.

யாரின் உணர்வுகளையும் கண்டு கொள்ளாமல், எனக்கு கீழ் வேலை செயும் அனைவரும் என் அடிமை என்பது போல அத்தனை மெத்தனமாக அதிகார திமிரில் மிதந்து இருப்பவன் தன் மகனை அடக்கி ஆள முடியாமல் தவித்து நின்றான்.

“அப்பா சொல்லுடா” என்று மகனை நெருங்கி வந்து அவனின் முதுகிலே அடி போட்டான்.

“இல்ல நீ ஸ்ட்ரேஞ்சர்” என்றான் விடா பிடியாக.

“அப்பா சொன்னா தான் அடிக்க மாட்டேன்.. இல்லன்னா அடி பின்னிடுவேன்டா” என்று மீண்டும் அவனை அடிக்க கையை ஓங்கினான்.

அவனின் மகன் கொஞ்சமும் அசராமல் அடிதானே நல்லா அடிச்சுக்கோ.. ஆனா உன்னை நான் அப்படி கூப்பிட மாட்டேன்.. என்று கொஞ்சமும் வளையாமல் நின்றான்.

மூன்று வயது சிறுவனுக்கு எங்கிருந்து இவ்வளவு பிடிவாதம் வந்தது என்று கங்குவனுக்கு மண்டை காய்ந்துப் போனது.

“அப்பா சொல்லுடா.. நான் உன் அப்பாடா” குரல் உடைந்துப் போகும் அளவுக்கு ஆகி விட்டான் கங்குவன்.

ஆனாலும் அவனின் மகன் கொஞ்சமும் அசரவே இல்லையே.. அப்படியே திமிர் தனமாக நின்றான். அதை பார்க்க பார்க்க இவனுக்கு பிரஷர் ஏற, ஓங்கி அறைய வந்தான்.

ஆனால் தன் வீரியத்தை பிள்ளை தாங்க மாட்டான் என்று அப்படியே கையை மடக்கிக் கொண்டவன்,

“மரியாதையா பேசி பழக தெரியாதாடா உனக்கு. இப்படி  தான் பிகேவ் பண்ணுவியா?” என்று காது கிழிய சத்தம் போட்டவனை கொஞ்சமும் அசராமல் பார்த்தான் அந்த விடசு.

அவனின் அதிகார தன்மைக்கும் போதைக்கும் அடிபணிவானா அவனின் மகன். நீ என்னவும் செய்துக் கொள். நான் உன்னை நெருங்கவே மாட்டேன். உன்னை நெருங்கவும் விட மாட்டேன் என்று முரண்டிக் கொண்டு இருந்தான். இரும்பு மனிதனையும் அசைத்துப் போட்டு விட்டான் குட்டி வாண்டு.

“உன்னால தான்டா எனக்கு கஸ்ட்டமே... உன்னை வேணும்னு தூக்கிட்டு வந்தேன் பத்தியா அது தான் செய்த தப்பு. உன்னை அனாதையா அப்படியே விட்டு இருந்து இருக்கணும். அப்ப தான் தெரியும் என் அருமை” என்றவன் அவனை அடிக்க வந்து பின் சுதாரித்து சுவற்றில் குத்திக் கொண்டவன் கேர் டேக்கரை கொன்று போடும் அளவுக்கு உறுத்துப் பார்த்தவன்,

“நாளைக்கு வருவேன் அவன் என்னை அப்பான்னு கூப்பிடு இருக்கணும். இல்லன்னு வை உன்னை உயிரடவே விட மாட்டேன்” எச்சரித்தவன் அந்த வீட்டுக்குள் இருந்த உயர்தர பாருக்குள் நுழைந்தான்.

அவனின் மனம் எரிச்சலாக எரிஞ்சு தள்ளியது. அதை அணைத்துக் கொள்ள அவனுக்கு மது வகைகள் தேவைப்பட, கண்ணை அசைத்தான்.

அழகாக அடுக்கி வைக்க, சரியாக கலந்து கொடுக்க என இருவர் வேலைக்கு எப்பொழுதும் அங்கு இருப்பார்கள். இவனது கண்ணசைவு பார்த்து ஓடி வந்து அவனுக்கு விருப்பமானதை செய்துக் கொடுக்க, மூச்சு முட்ட குடித்தவன் தள்ளாடியபடியே எழுந்து தன் மகன் இருந்த அறைக்கு சென்றான்.

“டேய் பொடியா... என்னையவே மதிக்க மாட்டிக்கிறல்ல.. நான் யாரு எப்பேர்பட்ட ஆள் தெரியுமா? என்னையவே சீண்டி பார்க்குறியா? என் கண்ணசைவுக்கு பத்தாயிரம் பேர் காத்துக்குட்டு இருக்காங்க.. ஆனா நீ என்னை கால் தூசிக்கு கூட மதிக்காம என்னை அப்பான்னு கூப்பிடாம வீம்புக்கு நின்னுக்கிட்டு இருக்க.. நான் உனக்கு எதுலடா குறை வச்சேன். ஏன்டா என்னை உன்கிட்ட விடவே மாட்டிக்கிற” குடி போதையில் திக்கி திக்கி மகனிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

கண்கள் சிவக்க லேசாக அவனது கண்கள் கலங்கி இருந்தது போதையில்.

அதை துடைத்துப் போட்டு விட்டு,

“டேய்” என்று இன்னமும் என்னென்னவோ பேசியவனை பார்த்த குட்டி பாதி தூக்கத்தில் வந்து அலும்பு பண்ணும் அப்பனை முறைத்துப் பார்த்தான்.

ஆனால் வாய் திறந்து தகப்பனிடம் எதுவும் பேசவில்லை. “உன் வாய்க்கு தான்டா உன்னை அடிக்கிறேன். நாளைக்கு அப்பா வருவேன். என்னை வாய் நிறையா அப்பான்னு கூப்பிடனும்” என்று உளறியபடி அவனது காலடியிலே படுத்து விட்டான் சிறிது நேரம்.

தகப்பனை பார்த்துக் கொண்டே இருந்தவன் அவனையும் அறியாமல் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

பாதி இரவில் எழுந்த கங்குவன் மகனை ஏக்கமாய் பார்த்து விட்டு தள்ளாடியபடியே அவனது அறைக்கு போய் விட்டான்.

அடுத்த நாள் காலையில் குடித்த சுவடு இல்லாமல் அத்தனை பிரெஷ்ஷாக வந்தவன் மகனை எட்டி கூட பார்க்காமல் பிசினெஸ் காலில் பிசியாக அபப்டியே கிளம்பி விட்டான்.

போகும் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த அவனின் மகன் வீட்டில் இருந்த பொருள்களை உடைக்க ஆரம்பித்து விட்டான்.

இதுதான் தினமும் இந்த வீட்டில் நடக்கும்.. எப்பொழுது எல்லாம் சரியாகுமோ என்று தெரியாமல் வேலையாட்கள் சின்னவனை பைத்தியம் என்று திட்டி தீர்த்துக் கொண்டே வேலையை பார்த்தார்கள்.

அதை எல்லாம் காதிலே வாங்கிக்கொள்ளாமல் ஒரு பொம்மையை கட்டி பிடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

அடுத்த நாள் காலையில் ஸ்கூலுக்கு போக கொஞ்சமும் விருப்பம் இல்லை நறுவேரலுக்கு. ஆனால் போகவில்லை என்றால் வீட்டில் இருக்கும் அவளின் அன்பான உறவுகள் கேள்வி கேட்டே அவளை ஒருவழியாக்கி விடுவார்கள். எனவே கடப்பாறையை முழுங்கிய உணர்வோடு ஸ்கூலுக்கு கிளம்பினாள்.

அவளின் தாத்தா காரில் அவளை சென்று விட,

“இதெல்லாம் வேணாமே தாத்தா” என்று அவள் சொல்ல,

“அதெல்லாம் பேசக்கூடாது கண்ணா.. இனி நானே ஈவ்னிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று கிளம்பிவிட்டார்.

பெருமூச்சு விட்டு உள்ளே வந்தவளுக்கு ஆபிஸ்ரூம் போய் கையெழுத்து போட்டு விட்டு கரஸ்பாண்டன்ட் ரூமை கடக்கும் வேளை அவளுள் அத்தனை போராட்டம் நிகழ்ந்தது.

“நோ எதையும் யோசிக்கக் கூடாதுன்னு தானே வீட்டில் இருந்து கிளம்பி வரும் பொழுதே உறுதி எடுத்து இருந்த.. இப்போ என்ன ஆச்சு? ஏன் அதை பத்தி நினைச்சு தடுமாறிப் போற” தனக்குள் உழன்றுக் கொண்டே கங்குவனின் அறையை கடந்து ஸ்டாப் ரூமுக்குள் நுழைந்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 22, 2026 12:44 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top