அத்தியாயம் 3

 
Admin
(@ramya-devi)
Member Admin

அந்த பிரம்மாண்டமான பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகி இருந்தது நறுவேரலுக்கு. மிகப்பெரிய கனவுடன் தான் அந்த ஸ்கூலில் காலடி எடுத்து வைத்தாள்.

இது ஒன்னும் ஒன்னு ரெண்டு என கூட்டி லாபம் பார்க்கிற இடம் இல்லையே.. முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செய்யும் வேலை அல்லவா.. எனவே அவளுக்குள் சில கண்டிஷன்களை சிறு வயதில் இருந்தே எடுத்து இருந்தாள். எவ்வளவோ லாபம் பார்க்கும் வேலை இருந்த பொழுதும் அவளுக்கு அதில் எல்லாம் விருப்பமே இல்லை. சிறு வயதில் இருந்து டீச்சர் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசை பட்டாள். அதன் படியே ஆகவும் செய்தாள்.

பிள்ளைகளை ஆரம்பத்தில் இருந்து நல்ல முறையில் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு தான் டீச்சர் படிப்புக்கே படித்தாள்.

அவர்களின் உணவு முறையும் மாற்றி அமைக்க வேண்டும்.. உடல் ஆரோக்கியம் இருந்தால் தானே வருங்கால இளைஞர் சமுதாயம் நன்றாக இருக்கும்.. என பலவாறு சிந்தித்து செயல் பட்டவளை தான் கங்குவன் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி விட்டான்.

நறுவேரலால் இந்த அவமானத்தை கொஞ்சமும் தாங்கவே முடியவில்லை. கண்ணை மூடினாலே அவன் முன்பு மண்டி இட்டது தான் வந்தது.

பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கும் ஆசிரியரை மண்டி இட வைத்தது எவ்வளவு பெரிய அவமானத்தை தரும் என்று அவனுக்கு தெரிந்தே தான் அதை செய்தான். பின்ன மிகப்பெரும் பிசினெஸ் மேன் அல்லவா இந்த கங்குவன்.

தமிழ்நாடு முழுக்க இண்டர்நேஷனல் ஸ்கூலை நிறுவி அதில் பயிலும் முக்கால் வாசி மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய புண்ணியவான். பள்ளி நடத்துவதை பிசினசாக கொண்டவன். ஒரு சீட்டுக்கு டொனேஷன் மட்டும் பத்தில் இருந்து பதினைந்து லட்சம் வாங்குவான். ஒரு டெர்ம் பீஸ் மட்டும் மூன்றில் இருந்து நான்கு லட்சம் ஆகும். அப்போ வருடத்துக்கு ஆவரேஜாக அவன் ஒரு சீட்டுக்கு வாங்கும் தொகை இருபதில் இருந்து இருபத்தி ஐந்து லட்சம் வரை வாங்குவான்.

தமிழ் நாட்டிலே மிகவும் பெயர் போன ஸ்கூல். பெரிய பெரிய பிசினெஸ் மேன், ஆக்டர்ஸ், மினிஸ்டர் என எல்லோரும் இவனது ஸ்கூலில் தங்களது பிள்ளைகளை சேர்க்க போட்டி போட்டுக்கொண்டு இருப்பர்கள். உச்சத்தில் இருப்பவன் இந்த கங்குவன்.  

அப்படி பட்டவனை எதிர்த்து நின்று பேசினால் அவனுக்கு ஈகோ கிளாஷ் ஆகாதா? அதனால் அவளை மண்டியிட வைத்தான். அவனை பொறுத்த வரை இந்த வேரலை மிக மிக மென்மையாக கையாண்டு இருக்கிறான். இல்லை என்றால் அவன் நடவடிக்கையே வேற மாதிரி இருக்கும். அதையும் போக போக உணருவாள் வேரல்.

தன் அறையில் படுக்கையில் காலை குவித்து அதில் தலை சாய்ந்து இருந்தவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது.

அழுது அழுது அவளது விழிகளோடு முகமும் சிவந்துப் போய் இருந்தது. என்ன அழுதும் அவளின் விழிகளில் கண்ணீர் மற்றும் வற்றவே இல்லை.

முதல் முறை அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இதுவரை பெரிதாக எதற்கும் அழுததே இல்லை. அழ விட்டது இல்லை அவளின் பெற்றவர்கள்.

நறுவேரலின் அப்பா முரளி பெரிய பிசினெஸ் மேன், தாத்தா இளமாறன் மினிஸ்டர், அம்மா மாளவிகா மேயர், அண்ணன் இளந்திரையனோ அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ் அப்படிபட்டவளின் பின்புலம் தெரியாமல் அவளை அவமானப் படுத்தி விட்டான்.

ஸ்கூல் முடித்து வந்ததில் இருந்து இன்னும் வெளியே வராமல் இருக்கும் மகளை எண்ணி கவலை கொண்ட அவளின் பாட்டி,

“கண்ணு” என்று வெளியே இருந்து அழைத்தார்.

சட்டென்று அழுகையை துடைத்துக் கொண்டு,

“அஞ்சு நிமிடம் ஆச்சி.. இதோ வரேன்.. தலை வலிக்குது ஸ்டாங்கா ஒரு டீ போட்டு வைங்க வந்துடுறேன்” குரலை சரி செய்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

ஷவரில் நின்றவளுக்கு இன்னும் கண்ணீர் நின்றபாடில்லை. அது பாட்டுக்க வந்துக் கொண்டே இருந்தது.

“ப்ச் ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங் நறு.. இந்த அழுகை வேண்டாம்..” தனக்குள் சொல்லிக் கொண்டு குளித்து முடித்தவள் வெளியே வந்தாள்.

சிம்பிளாக த்ரீ போர்த் பேண்ட்டும், குட்டி டீசெர்ட்டும் போட்டுக் ஈர்க்கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு கீழே வந்தாள்.

“என்ன கண்ணு இந்நேரத்துக்கு தலை குளிச்சு இருக்க.. முடி வேற அடர்த்தியா நீளமா இருக்கு எப்படி காயும்” சொல்லிக் கொண்டே அவளுக்கு டீயை நீட்டினார் பவித்ரா.

ஹேர் ட்ரையரை எடுத்துக் கொண்டு வந்தவர், அவளை மடியில் சாய்த்துக் கொண்டு முடியை காய வைக்க ஆரம்பித்தவர்,

“ஆமா ஏங்கண்ணு கண்ணும் முகமும் இப்படி சிவந்துப் போய் இருக்கு.. என் தங்கத்துக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

“வர்ற வழியில ஒரு ஆக்சிடென்ட் ஆச்சி.. அதை பார்த்துட்டேன்.. அது தான்” என்று சொல்லும் பொழுதே மீண்டும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அவளுக்கு.

“ச்சோ.. வேணாண்டா தங்கம்.. வேணாண்டா அழாத.. ஆச்சி தெரியாம கேட்டுட்டேன்” அவளின் முகத்தை துடைத்து விட்டு மீண்டும் மடியில் படுக்க வைத்துக் கொண்டு முடியை காய வைக்க, அவரின் கணவன் இளமாறனும் மகன் முரளியும் உள்ளே நுழைந்தார்கள்.

“டேய் கண்ணா” என்று அழைத்துக் கொண்டு வந்த இளமாறன்,

“இந்தா இதுல உனக்கு பிடிச்ச ஆந்திரா ஸ்பெஷல் ஸ்பைசி செக்கலு இருக்குடா” என்று பேத்தியிடம் நீட்டினார்.

“ஆந்திரா போயிட்டு வந்துட்டீங்களா தாத்தா” தன் சோகத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு ஆவலாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

“ஆமாம்டா.. அப்பா வந்து ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணிக்கிட்டான்” என்றார்.

“ப்பா” என்று தந்தையின் முகம் பார்த்தாள் சின்ன சிரிப்புடன். அவளின் முகத்தை பார்த்த முரளி,

“என்னடா ஆச்சு முகம் ஏன் என்னவோ போல இருக்கு.. அழுதியாடா.. என் பிள்ளைக்கு அழ எல்லாம் தெரியுமா?” பதறிப்போய் அவர் கேட்க,

“ஸ்கூல் விட்டு வர்ற வழியில ஒரு ஆக்சிடென்ட் ப்பா.. நேருக்கு நேர் பார்த்துட்டேன்.. அதுதான்” என்று அவள் கண்கள் கலங்க சொல்ல,

“ப்ச் கண்ணா இதுக்கு தான் கார் எடுத்துட்டு போன்னு சொன்னேன். கேட்டியா? இப்படியா கண்டதையும் பார்த்துட்டு வந்து அழறது” மென்மையாக கடிந்துக் கொண்ட முரளி,

“நாளையில இருந்து நோ ஸ்கூட்டி, ஒன்லி கார் தான். ட்ரைவர் போடுறேன்” என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டு, தன் கையாலே மகளுக்கு ஊட்டி விட்டார்.

“தனியா ட்ரைவர் எல்லாம் போட வேண்டாம் தம்பி.. நான் கட்சி ஆபிஸ் போகும் பொழுது பாப்பாவை ட்ராப் பண்ணிடுறேன்..” என்றார் இளமாறன்.

“உங்களுக்கு அலைச்சலா இருக்குமே ப்பா”

“பாப்பாவை கொண்டு போய் விடுறதை விட என்னை என்ன வேலை.. அலைச்சல் எல்லாம் எதுவும் இல்லை. நான் பார்த்துக்குறேன். பாப்பா முகத்தை பாரு எப்படி சிவந்துப் போய் இருக்குன்னு” என்று அவளின் தலையை வாஞ்சையாக தடவி விட்டவர், அடுத்த நாளில் இருந்து அவரே அவளை கொண்டு போய் ஸ்கூலில் ட்ராப் செய்து பிக்கப்பும் செய்துக் கொண்டார்.

இரவு எட்டு மணிக்கு தான் மாளவிக்காவும் இளந்திரையனும் வீட்டுக்கு வந்தார்கள்.

“சாரி இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம்” என்று வந்த மாளவிக்காவை அமர வைத்து உணவு பரிமாறினார் ஆச்சி.

“அது இருக்க தான் செய்யும் மாலா.. அதுக்காக உன்னை வருத்திக்காத” சின்ன கண்டிப்புடன் அவர் சொல்ல,

“ஆச்சி அம்மாவை எதுவும் சொல்லாதீங்க.. ஒரு பொறம்போக்கு இடத்தில் செய்த ஆக்கிரமிப்பை அகற்றி கிளியர் பண்ண நேரம் ஆகிடுச்சு.. அம்மா கூட தான் நானும் இருந்தேன்” என்று சாப்பிட அமர்ந்தான்.

அவனுக்கு வேண்டியதை பரிமாறிய ஆச்சி, அவனது போலீஸ் கட் ஹேர் ஸ்டைலை தடவி விட்டவர்,

“அதுக்கு சொல்லலடா சின்னவானே உங்க அம்மாவுக்கு ஏற்கனவே முட்டி வலி.. இவ்வளவு நேரம் நின்னா அப்புறம் கால் வீங்கிக்கும் இல்லையா? அவளும் எவ்வளவு தான் ஓடுவா அதுக்கு சொன்னேன்” என்றார்.

“புரியுது அத்தை.. இனி இந்த மாதிரி லேட் பண்ணாம வந்திடுறேன்.. நீங்க சாப்பிட்டு மாத்திரை போட்டீங்களா? மாமா சாப்பிட்டாரா..” என்று விசாரித்துக் கொண்டார்.

“எல்லாம் ஆச்சு.. உன் மக தான் சரியில்ல.. சாப்பிட்டுட்டு போய் என்னன்னு பாரு. அக்சிடேண்டை பார்த்துட்டு ஒழுங்கா சாப்பிட கூட மென்னுக்கிட்டே இருந்தா.. இதுல அவளுக்கு மஞ்சள் கலந்து பால் வச்சு இருக்கேன். குடிக்க வை” என்று சொன்னார்.

“நான் பார்த்துட்டு வந்து சாப்பிடுறேன்” என்று பாதியிலே எழுந்துக் கொண்டான் இளந்திரையன்.

“டேய் பாப்பா” என்று உப்பரிகையில் நின்று இருந்தவளுடன் பேச ஆரம்பித்து விட்டான் திரையன். அதன் பிறகு அவளை தூங்க வைத்த பிறகே கீழே இறங்கினான்.

அவனுக்கு அவனின் தங்கை என்றாள் அத்தனை பிரியம். அவளின் கணகளில் இருந்து கண்ணீர் வரவே விட மாட்டான். விளையாட்டுக்கு கூட அவளை அழ வைத்தது கிடையாது அவன்.

இங்கே இப்படி இருக்க, தன் வீட்டுக்கு திரும்பிய கங்குவன் வீடு  இருந்த இருப்பை பார்த்து இன்னும் டென்ஷன் ஆகி விட்டான்.

வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் சிதறி மூளைக்கு ஒன்றாய் உடைந்து வேற கிடக்க,

“மேனேஜர்” என்று ஒரே ஒரு சத்தம் தான். அந்த சத்தத்துக்கு அந்த மாட மாளிகையே நடுங்கிப் போனது.

அடித்து பிடித்துக் கொண்டு வந்த மேனேஜர்,

“சாரி சார்... இப்ப தான் செர்வென்ட் எல்லாத்தையும் கிளீன் பண்ணி வச்சாங்க.. ஆனா அதுக்குள்ள உங்க சன் எல்லாத்தையும் கீழ போட்டு உடைச்சுட்டாங்க” என்றார் பயத்துடன்.

“அதுக்காக இதை எல்லாம் அப்படியே போட்டு வச்சு இருப்பீங்களா? சென்ஸ் இல்ல.. அவன் வெளில வந்தா இதுல எல்லாம் கிழிச்சுக்க மாட்டனா? இந்த இத்துப் போன பதிலை சொல்றதுக்கு தான் உங்களை வேலைக்கு வச்சு இருக்கனா?” கண்கள் சிவக்க கத்தியவன்,

“டு மினிட்ஸ் தான் டைம். அதுக்குள்ள இதை எல்லாம் கிளியர் பண்ணி வைக்கிறீங்க.. இல்லன்னா நான் என்ன பண்ணுவேன்னு தெரியும் தானே” என்று கர்ஜித்தவன் ஷூ காலில் அத்தனையும் போட்டு மிதித்து விட்டு வேக எட்டுடன் தன் மகன் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

மிகப்பெரிய ஆடம்பர பங்களா.. சுற்றிலும் இரண்டு ஏக்கர் நிலத்தில் தோட்டம் போட்டு அத்தனை நேர்த்தியாக இருந்தது சுற்று சூழல்.

வீடும் அப்படி தான் தரையை தவிர எல்லாமே குறை சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாக இருந்தது. தரையையும் அப்படி தான். என்ன ஒன்று அவனின் மகன் உடைத்துப் போட்ட பொருள்களால் தரையின் அழகை காண முடியவில்லை. மற்றபடி பக்கா மேல்தட்டு வர்கத்தில் பணச்செழுமையிலும் ஆடம்பரத்திலும் குளித்து இருந்தது வீடு.

மகன் இருந்த அறைக்கதவை திறந்து உள்ளே நுழைகையிலே அவன் மீது வந்து விழுந்தது ஒரு கரடி பொம்மை. கேட்ச் பிடித்தவன் மகன் இருந்த இடத்தை தேடி விழிகளை அலைய விட்டான்.

சோபாவுக்கு பின் புறம் குட்டி உருவமாய் நின்றுக் கொண்டிருந்தான்.

“போ.. நீ உள்ள வராத.. என் கூட பேசாத” மூணு வயசு பிள்ளை தகப்பனை பார்த்து மழலையில் கோவப்பட்டான்.

அதுவரை கங்குவன் கொண்ட அகங்காரம், பணச்செளுமை, ஆடம்பரம் எல்லாம் விட்டொழிந்து அவனின் மகன் முன்பு ஒன்றுமே இல்லாதவன் போல நின்றான்.

அவனும் அவனின் மகனும் தவிர அந்த வீட்டில் யாருமில்லை. அவர்களுக்கு என்று யாருமில்லை. தனித்து வாழும் இருவருக்கும் இடையில் பெரும் பாலம் ஒன்று தொங்கிக்கொண்டு இருக்கிறது.

மகனை நெருங்கவே முடியவில்லை அவனால். என்ன காசு இருந்து என்ன புண்ணியம். பெற்ற மகனை அள்ளி அணைத்து நெஞ்சில் போட்டுக்கொள்ள முடியவில்லை.

வேலைக்கரர்களின் கையில் பிள்ளையை ஒப்படைத்ததின் விளைவு. தகப்பனை நெருங்க விட மாட்டேங்குறான்..  

Loading spinner

Quote
Topic starter Posted : August 21, 2026 10:30 am
(@suganyarangasamy)
New Member

Nice update mam...

Didn't expect kankuvan as a father..

 

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2026 2:39 pm
(@kalaivani-ganesh)
New Member

Hi Mam, 

 

Im newly joined online site here... But previously i read your all. Novels in Amazon kkndle application but certainly removed all your novels from amazon. Please let me know where i can read all your novels and latest edition 

Loading spinner

ReplyQuote
Posted : August 21, 2026 8:00 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top