Notifications
Clear all

அத்தியாயம் 58

 
Admin
(@ramya-devi)
Member Admin

அதிரலை ஒரு கணம் நிமிர்ந்துப் பார்த்த தீரன்,

“நான் யாருன்னு உனக்கு தெரியாமலே போகட்டும்..” சொன்னவன் கீழே படுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டான் பிள்ளையை. அவனது சொல்லில் அதிரலுக்கு மனம் பிசைந்தது.

‘ஏன் இப்படி எல்லாம் பேசுறாரு.. திடிர்னு இவருக்கு என்ன ஆச்சு? இந்த மகனுக்காக என்ன ஆட்டமெல்லாம் ஆடினார்.. எவ்வளவு வேதனை படுத்தினார் என்னை. ஆனா இப்போ அப்பான்றதை கூட அவனுக்கு உணர்த்தாமல் விடுறாரே..’ மனதுக்குள் கேட்டவளுக்கு அவனிடம் இதே கேள்வியை கேட்க துணிவு வரவில்லை.

ஆனால் மனமெல்லாம் லேசாக வலித்தது. ஒரு வேலை இந்த மகன் அவருக்கு வேணாமோ.. அதனால தான் எங்களை ஊருக்கு அனுப்பி விடுறாரோ.. அவருக்கே அவர் மகன் வேணான்னா அவனுக்கும் அவனுடைய அப்பா வேண்டாம்.. இறுக்கமாக எண்ணிக் கொண்டாள்.

“டீ ஆறுது” என்றாள்.

“ம்ம்” என்றவன் எழுந்துக் கொண்டு பிள்ளையை மடியில் வைத்துக் கொண்டு அவள் நீட்டிய கப்பை வாங்கிக் கொண்டான்.

ஆற அமர அந்த டீயை ரசித்துக் குடித்தவன் பகல் மொத்தமும் பிள்ளையுடனே விளையாண்டுக் கொண்டு இருந்தான். அதிரலை கொஞ்சமும் சட்டை செய்யவே இல்லை அந்த நாள் முழுக்க..

பிள்ளை வேண்டாம் என்கிற எந்த உணர்வும் அவனது முகத்தில் கொஞ்சமும் தெரியவே இல்லை. பிறகு ஏன் அவனை விலக்கி வைக்கணும்.. காரணம் தெரியாமல் அவள் தலையை பிடித்துக் கொண்டாள்.

இரவு பிள்ளை தூக்கத்துக்கு கண்களை கசக்க, தீரன் அவளை பார்த்தான். என்னவோ மகனையும் அவனையும் பிரிக்க அவளால் முடியவில்லை. எனவே,

“நீங்க வேணா இன்னைக்கு தம்பியோடவே படுத்துக்கோங்க..” என்றாள்.

எதுவும் சொல்லாமல் அவளின் அறைக்குள் நுழைய,

“இல்ல அது வந்து நீங்க உங்க அறைக்கு தம்பியை கூட்டிட்டு போங்கன்னு சொல்ல வந்தேன்” என்றாள் பதறிப் போய்.

“ஐ நோ” என்றவன்,

“உன் கூடையும் நேரம் செலவு செய்யனும்னு சொன்னனே” கேள்வியாக அவளை பார்க்க, தலையை குனிந்துக் கொண்டவள் அவனின் பின்னாடி தானும் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

ஏன் அவனோடு உள்ளே செல்கிறோம் என்று அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் அவளால் போகாமல் இருக்க முடியவில்லை.

அவளின் நெஞ்சு படபடவென்று துடித்தது. என்டா இது புதுசா இந்த உணர்வு.. கடிந்துக் கொண்டவள் விளக்கை அணைத்து விட்டு அவள் வர, அவளிடம் பிளைட் டிக்கெட்டை நீட்டினான்.

உணவு எடுத்து வரும் பொழுது டிக்கெட்டும் வந்தது.. அதை இப்பொழுது அவளிடம் நீட்டினான்.

வாங்கியவள் அதை ஒரு பார்வை கூட பார்க்காமல் மேசை மீது வைத்து விட்டு படுக்கையில் வந்து மகனின் அருகில் படுத்தாள். அவளின் பின்னோடு இவனும் வந்து படுத்தான்.

பிள்ளைக்கு தாலாட்டு பாடி, கதை சொல்லி தூங்கவைக்க, அவளின் இடையில் ஒரு பாரம் வந்து விழுந்தது.

அதிரலின் மீது கையையும் காலையும் போட்டுக் கொண்டவன், அவளின் முதுகில் அழுத்தமாக முகத்தை புதைத்துக் கொண்டான் தீத்திரள் தீரன்.

--

அடுத்த நாள் காலையில் பரபரப்பாக கிளம்பிக் கொண்டு இருந்தாள் அதிரல்.. கூடவே பிள்ளையையும் கிளப்பிக் கொண்டு இருந்தவள் திரும்பி படுக்கையை பார்த்தாள். தீத்திரள் தீரன் தூங்கிக் கொ ண்டு இருந்தான்.

நேற்றைக்கு இரவு நடந்த விசயங்களை எண்ணி பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வந்தவள், அந்த வீட்டை விட்டு வெளியே போக பார்க்க,

“கிளம்பியாச்சா?” தூங்கி எழுந்த சோம்பேறி தனத்துடன் கேட்டான் தீரன். திரும்பி பார்த்தாள் அவனை.

எப்பொழுதும் போல வெறும் உடம்புடன் சின்ன பாக்ஸர் மாட்டும் போட்டு இருந்தான்.

கருமம்.. கருமம்.. முணகியவள்,

“ஆமாம்” என்றவள் வெடுக்கென்று பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு கிளம்ப,

“ப்ளைட் டிக்கெட் மத்தியம் தானே போட்டு இருந்தது. நீ இப்ப கிளம்புற?” அலட்டிக் கொள்ளாமல் கேட்டான். அதாவது நீ எதுல போனாலும் எனக்கு ஒன்னும் இல்லை. ஒப்புக்கு கேட்கிறேன் என்பது போல அவனது விசாரனை இருந்தது. அதில் பல்லைக் கடித்தவள்,

“எனக்கும் சரி என் மகனுக்கு சரி யாருடைய தயவும் தேவை இல்ல சார்.. எங்களுக்கு ட்ரைனே போதும்” என்றவள் பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டாள். போகும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவன்,

“ரொம்ப தான்டி ரோஷம் வருது உனக்கு” சொல்லிக் கொண்டவன் மீண்டும் அவள் இருந்த அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தான்.

நேற்றிலிருந்து அவனது போன் அடித்துக் கொண்டே இருந்தது. வீட்டு ஆட்கள் தான் மாத்தி மாத்தி அழைத்துக்  கொண்டே இருந்தார்கள். ஆனால் எடுக்கவே இல்லை இவன்.

மீண்டும் வந்து படுத்தவனுக்கு பெண்ணவளின் வாசம் வர,

“ம்ம்” என்று அவள் யூஸ் பண்ண தலையணையை எடுத்து கட்டிக் கொண்டான். நேற்றிரவு அவளை கட்டிக் கொண்டு படுத்த சுகம் கிடைக்காமல் போனது. அந்த தலையணையை தூக்கி எறிந்தான். ஆனால் வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த தலையணையை எடுத்து கட்டிக் கொண்டவன் ஆழமாக சுவாசித்தான். அந்த அறை எங்கும் பெண்ணவளின் வாசம் நிறைந்து இருந்தது. கூடவே அவன் மகனின் பால் வாசனையும் நிரம்பி இருக்க, இன்னும் இன்னும் ஆழ்ந்து சுவாசித்தான்.

படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ள மனமே இல்லை அவனுக்கு. அப்படியே இருந்த நேரம் காலிங் பெல் அடித்தது.

“திரும்பி வந்துட்டாளா? இருக்காதே அவ ரோஷத்துக்கு பிறந்த மூத்த மகளாச்சே..” சின்ன சிரிப்புடன் சொல்லிக் கொண்டவன் வெளியே வந்து கதவை திறந்தான்.

அங்கே அவனது தாய் நின்றுக் கொண்டு இருந்தார். அவரோடு அவனது மொத்த குடும்பமும் நின்று இருந்தார்கள். ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அந்த அறைக்குள்ளே நுழைய,

“தீரா ஏன் ப்பா இப்படி பண்ற? நேத்துல இருந்து உனக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்கோம்.. நீ எடுக்கவே மாட்டிக்கிற? அதுவும் இல்லாம இப்பல்லாம் நீ வீட்டுக்கு ஒழுங்கா வர மாட்டிக்கிற” என்றவரை ஒரு கணம் பார்த்தவன்,

“இப்போ எதுக்காக என்னை தேடுறீங்க? என்ன காரியம் ஆகணும்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“என்ன தீரா அம்மா கிட்ட இப்படி பேசுற? காரியத்துக்காக தான் உன்கிட்ட நான் பேசுறன்னா?” அவருக்கு கண்கள் கலங்கிப் போனது.

அதை கண்டுக் கொள்ளாதவன்,

“சொல்லுங்க.. இவ்வளவு தூரம் என்னை தேடி வந்து இருக்கீங்ன்கனா கண்டிப்பா ஏதாவது இருக்குமே..” சோபாவில் கால் மேல் கால் போட்டு அவன் தோரணையாக அமர்ந்தபடி கேட்டான்.

அவனது தோரணையில் தேவகிக்கு விக்கிக் கொண்டு வந்தது. விழிகள் எல்லாம் கலங்கிப் போனது.

Loading spinner

Quote
Topic starter Posted : November 26, 2026 6:33 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top