அத்தியாயம் 41

 
Admin
(@ramya-devi)
Member Admin

பார்ப்பவர்களின் கண்களை பறித்து விடுவது போல அந்த அளவுக்கு சொலி சொலி என்று சொலித்தது. இரவில் மின்னும் விண்மீன் போல மின்னியது.

அவளின் வனப்பு அதில் அதிகம் கூடி தெரிந்தது... திருமணத்துக்கு கூடி இருந்தவர்கள் எல்லோரும் ஏந்திழையாளையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அதில் அவளுக்கு கூச்சம் அதிகம் எழுந்தது. ஆனாலும் தடுமாறாமல் ஒரளவு சமாளித்துக் கொண்டு மேடையில் அமர்ந்து இருந்த ராசசிங்கனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

அவளின் மனம் எதிலும் தடுமாறவில்லை. குனிந்த தலையை நிமிர்த்தவும் இல்லை.

“நிமிர்ந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லும்மா” என்று பெரியவர் ஒருவர் சொல்ல தலையை நிமிர்த்தி அனைவரையும் பார்த்து “வணக்கம்” என்று இரு கைக்கூப்பி சொன்னாள்.

சொன்னவளின் கண்களில் அவளது ஒட்டு மொத்த குடும்பமும் விழுந்தது. ஒருத்தரின் முகத்தில் கூட மகிழ்ச்சி இல்லை. அனைவரின் முகமும் இறுகிப் போய் இருந்தது. தேவகியின் கண்களில் கண்ணீர்.

ஏந்திழையாளின் திருமணத்துக்கு என்று வீட்டில் ஒரு ஏற்பாடு கூட செய்யாத நிலையில் தன் திருமணத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்று கருத்தில் கொண்டவ ராசசிங்கன் வேல்முருகனின் வீட்டுக்கு தன் ஆட்களை வர செய்து வீட்டில் அனைத்து வேலையையும் செய்ய பணித்தான்.

வேல்முருகன் சங்கடமாக அவனிடம் பேச,

“இருக்கட்டும்...” என்று ஒரு சொல்லில் முடித்துக் கொண்டவன் தன் கையால் ஏந்திழையாளின் முகூர்த்த புடவையை கொண்டு வந்து கொடுத்தான்.

“பிரிச்சு பாரு” என்றான்.

“இல்ல இருக்கட்டும்” என்று இழையாள் அதில் ஆர்வம் காட்டாமல் இருக்க புருவம் நெரித்து அவளை ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான். அதிலே அலறியடித்துக் கொண்டு புடவையை விரித்துப் பார்த்தாள்.

பார்த்தவளின் விழிகளை அதிலிருந்து நகர்த்தவே முடியவில்லை. அந்த அளவுக்கு பட்டிலும் வைரத்திலும் மின்னியது புடவை. அடர் சிவப்பு நிறத்தில் இருந்தது புடவை. அதில் மின்னிய தங்க இழைகள் இன்னும் வெகு கவர்ச்சியாக இருந்தது.

அதை தொட்டுப் பார்த்தாள். இது போல ஒரு புடவையை இதுவரை அவள் பார்த்ததே இல்லை. இவளுக்கு புடவை ரகங்கள் எல்லாம் ஓரளவு நன்றாக பரிச்சியம் தான். ஆனால் அவள் பார்த்த வகைகளில் இது போல ஒரு புடவையை பார்த்ததே இல்லை என்பதால் பெரிதும் வியந்துப் போனாள்.

அதை தொடர்ந்து ரிஷப்ஷன் புடவையும் இருந்தது. அதுவும் சிவப்பு புடவை தான். ஆனால் அது மெல்லிய உயர்வகை ஜார்ஜெட் பேஷன் புடவை. அதில் பதித்து இருந்த கற்கள் அனைத்தும் வைரங்கள். வைரங்களை சுற்றி சின்ன ஸ்ப்ரிங் வேலை பாட்டில் தங்க கம்பிகள் கொண்டு அமைத்து இருந்தார்கள். அத்தனையும் ஆரி ஒர்க்கில் மிளிர்ந்தது.

புடவை எவ்வளவுக்கு எவ்வளவு மிருதுவாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக வைரங்களும் தங்கமும் சேர்ந்து போதுமான கணத்தை கொடுத்தது.

“அழகா இருக்கு” என்று சொன்னாள்.

“ம்ம் உனக்கு நல்லா இருக்கும்” என்றவன் போய் விட்டான்.

“இந்தியாவின் மிகப்பெரிய பிசினெஸ் சர்க்கிள் இரண்டும் கை கோர்த்து சங்கமிக்கும் திருமண விழா...” என்று ஊடகங்கள் பெரிது படுத்திக் கொண்டு இருந்தது ராசசிங்கன் மற்றும் ஏந்திழையாள் திருமணத்தை.

அதனால் பொது மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு கிளம்பி இருந்தது. ஊடகங்களுக்கு திருமணத்தில் அனுமதி வழங்கவில்லை. அதனால் கதிரே சில போட்டோக்களை அபிஷியலாக வெளியிட்டான் இரு குடும்பத்தின் சார்பாகவும்.

ரிஷப்ஷனுக்கு ரெடியாகும் பெண்ணவளுக்கு வீட்டில் உள்ள பரம்பரை நகைகளை யாரும் எடுத்து கொடுக்க முன் வரவே இல்லை. அதை பற்றி அவர்கள் சிந்திக்கவும் இல்லை. ஆண்களுக்கு எண்ணம் இருந்தாலும் மனம் வரவில்லை. அதனால் நகையை பற்றி அவர்கள் எந்த பேச்சும் எடுக்கவில்லை.

எளிமையான நகையில் மேடையில் அமர்வாள் என்று எதிர்பார்த்து இருக்க அவளோ முழு அலங்காரத்துடன் உயர்வகை வைரத்தில் மிதந்ததை கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்லை சுந்தரமும் அவரை சேர்ந்தவர்களும்.

ஏந்திழையாள் அவர்களுக்கு பகை இல்லை. ஆனால் அவளை வைத்து ராசசிங்கனை அவமானப் படுத்த எண்ணினார்கள் போலும்.

அதை உணர்ந்துக் கொண்டவளின் நெஞ்சில் விரக்தியின் சாயல் படிந்தது.

“அப்போ நான் உங்களுக்கு வெறும் பகடை காய் மட்டும் தானா? என் மேல குறைந்த பட்ச அன்பு கூட இல்லையா’?” என்ற கேள்வி எழுந்ததை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.

தன் அண்ணன்களையும் அத்தை மக்களையும் பார்த்தாள். அவர்களும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். வேதனை நெஞ்சை கவ்வியது. இவர்களுக்காக தானே இத்தனையும் என்ற எண்ணம் எழ ஏனோ கண்கள் கலங்கியது.

இமைகளை சிமிட்டி அதை அடக்கிக் கொண்டவள் புன்னகை முகமாக தன் வதனத்தை வைத்துக் கொண்டாள். தன் அருகில் இருக்கும் ராசசிங்கனுக்காக.

“எஸ்... அவனுக்காக மட்டும்” என்று பெருமூச்சு விட்டாள்.

அவ்வளவு பெரிய சபையில் அவளது நகைகளையும் உடைகளையும் மட்டுமே கணித்து எடைப்போட மிகப் பெரிய க்ரூப் வரும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுக்கு மட்டுமில்லை. அவளது குடும்பத்துக்குமே தெரியும்.

அப்படி இருந்தும் புடவை நகை என்று எதை பற்றியும் அக்கறை இல்லாமல் எனக்கென்ன என்று இருக்கும் தாய் தந்தை மற்றும் சொந்தங்கள் அனைத்தையும் கண்டு மனம் வெதும்பிப் போனது.

நகை மேல் ஆசை இல்லை தான். ஆனால் திருமணம் என்று வருகையில் அதுவும் ஒரு காரணியாக இங்கு பார்க்கப் படுகிறதே... அதை தவிர்க்கவே முடியாதே..!

அந்த வகையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் ராசசிங்கனின் மீது ஒரு நூலிழை உயர்வு பிறந்தது. அது கூட அவனது கௌரவத்தை காப்பாத்த தான் என்று தோன்றியது என்றாலும் தன்னை அவன் எங்குமே விட்டுக் குடுக்கவே இல்லையே, தன் மதிப்பை எங்கும் தரம் தாழ்த்த விடவே இல்லையே என்று அந்த மதிப்பு அவன் மீது கூடியது.

இரவு வரவேற்பு முடிய அவள் மண்டபத்தில் உள்ள அறைக்கு போக பார்க்க,

“அவசியம் இல்லை” என்று சொல்லி தன்னுடைய வீட்டுக்கு அவளை அழைத்து சென்றுவிட்டான்.

வீட்டினர் அனைவரும் முகத்தை சுளிக்க,

“நீங்களும் வரலாம்” என்று வேல்முருகனிடம் மட்டும் சொன்னான்.

வேறு யாரையும் அவன் கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை.

“நான் வரேன் ராசசிங்கன்” என்று பேத்தியோடு அமர்ந்துக் கொண்டார் அவர்.

அவரும் எவ்வளவோ குடும்பத்தோடு போராடி பார்த்து விட்டார். ஆனால் அவர்களின் மனம் மாறாத வேலையில் இவர் மட்டும் என்ன செய்து விட முடியும். அதனால் அவர்களை அப்படியே விட்டுவிட்டு பேத்திக்கு துணையாக போய் விட்டார்.

“எல்லாம் இவரு குடுக்குற இடம்... இல்லன்னா இந்த பய நம்ம முன்னாடி எல்லாம் நிற்க முடியுமா?” என்று கண்ணன் கொதித்துப் போனார். அவரை போலவே மற்ற இரு மாமன்களும் கொதித்துப் போனார்கள்.

யுகேஷ் தன் காரில் ராசசிங்கனை தொடர்ந்துப் போக பார்க்க கண்ணன் அவனை தடுத்து நிறுத்தி விட்டார்.

“நம்மளை மதிக்காத யாரும் நமக்கு வேணாம்” என்று ஒரே போடாக போட்டு விட்டு அவர்களுக்கு என்று அருகே இருந்த பைவ் ஸ்டார் ஹோட்டல் அறைக்கு போய் விட்டார்.

அவரை தொடர்ந்து அனைவரும் போய் விட கார்த்திக் வருண் மட்டும் தனித்து நின்று இருந்தார்கள்.

“நம்ம இழைக்கு திருமணம். ஆனா யாருமே மகிழ்ச்சியா இருக்க முடியல... அவ கல்யாணத்துக்கு என்னல்லாம் செய்யனும்னு யோசிச்சு வச்சு இருந்தம் ல” என்று வருண் ஆதங்கப் பட,

“விட்டு தள்ளு” என்ற கார்த்திக் யுகேஷை தேடினான்.

“ஏங்க இருக்கான் அவன்?” என்று கேட்க,

“பாவம் மாமா அவன் ரொம்ப வேதனையில இருக்கான்” என்று வருண் சொல்ல,

“பக்கத்துல எங்கும் பார் இருக்கான்னு பாரு.. நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்” என்று பெருமூச்சு விட்டு தன் தம்பியை தேடி போனான்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 10, 2026 11:43 am
(@gowri)
Reputable Member

சிங்கனை பிடிக்கலனா அவனை நேரா எதிர்த்து நின்னு போராடனும்......

அதை விட்டு இழை குடும்பம் ஏன் இப்படி இருக்காங்க?????

முதலில் எல்லாம் இவங்க பண்றது சரின்னு ஒரு பிம்பம் இருந்தது.....

ஆன இப்ப இழையும் சேர்ந்து அவாய்ட் பண்றது எந்த விதத்தில் நியாயம்?????

இவங்க சொல்றதை, நினைத்தை செய்தா தான் அவளை கொண்டாடுவாங்களா??????

இல்லைனா இப்படி தான் யாரோனு நடந்துப்பாங்கால.??????

அவளை யாரும் நம்பவும் இல்ல.....கூட நிற்கவும் இல்ல.....

என்ன குடும்பம் இது🤨🤨🤨🤨🤨

Loading spinner

ReplyQuote
Posted : April 14, 2026 1:28 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top