எபிலாக்

 
Admin
(@ramya-devi)
Member Admin

“நீங்க முதல் அமைச்சருங்க... நீங்க போய் என் காலை பிடிச்சுக்கிட்டு” என்று அவள் தன் காலை இழுத்துக் கொள்ள,

“ப்ச் அதனால என்னடி... நீ எப்பவும் எனக்கு என்னோட பொண்டாட்டி. உனக்கு முதல்ல நான் புருசன். அதுக்கு பிறகு தான் நான் உனக்கு முதல்அமைச்சர் புரியுதா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் விரல்களுக்கு பதமாக நெட்டி எடுத்து விட்டான்.

அவனை வா என்பது போல தலையை ஆட்டி அவள் அழைத்தாள். “நோ... உன் காயம் முதல்ல ஆறட்டும் அதுக்கு பிறகு தான் மத்தது எல்லாம்” என்றான். ஏனெனில் முதல்முறை காயம் பட்டபொழுது அவள் பேசவே எவ்வளவு வேதனை பட்டால் என்று அவன் அறிந்தானே. இப்பொழுது அந்த வலி குறைந்து விட்டது என்றாலும் கொஞ்சம் வலி இருக்கத்தானே செய்யும் அதனால் அவளை பேசவே அவன் விடவில்லை. அவளை நெருங்கவும் இல்லை. நெற்றியில் கன்னத்தில் முத்தம் கொடுப்பதோடு சரி.

இதழ்களில் கூட அவன் முத்தம் குடுக்கவில்லை. இதழ்களை அசைத்தாலே அவளுக்கு வலித்தது. அதை அவள் வெளியே சொல்லவில்லை என்றாலும் உணர்ந்துக் கொண்டான்.

“ப்ச் முதலமைச்சர் ஆனதுக்கு ஒரு ட்ரீட் கூட நான் இன்னும் உங்களுக்கு குடுக்கல” என்று சிணுங்கினாள்.

“ட்ரீட் தானே... நான் நல்லா பெரிய ட்ரீட்டா அடுத்த வாரம் வாங்கிக்கிறேன். இப்போ கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுடி கண்ணம்மா... எவ்வளவு இரத்தம் சிந்தி இருந்த தெரியுமா? அந்த புடவை முழுக்க உன் உதிரம் தான்..” என்று வேதனை பட்டான்.

“ப்ச் அது தான் முடிஞ்சி போச்சே.. மறுபடியும் அதையே பேசணுமா? தம்பி பாருங்க உங்க முகத்தையே பார்க்கிறான்” என்று அவனின் கவனத்தை திசை திருப்பினாள்.

அவனுக்கு அது புரிந்தது. அவளுக்காக தன்னை மாற்றிக் கொண்டவன் அவளின் போக்கில் போனான். மகனை அள்ளி கொஞ்சியவன் பசிக்கு அழ அவளுக்கு உதவி செய்து அவனது பசியை போக்கினான்.

பின் குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்து ஏப்பம் வரவைத்து அதன் பிறகே படுக்கையில் கிடத்தினான் உதயாதிபன்.

அவனது செயலை எல்லாம் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்த வராளிக்கு கணவன் மீது காதல் அதிகரித்தது. அவன் அன்றைக்கு உணர்ந்த காதலை அவள் இப்பொழுது அவன் மீது உணர்ந்துக் கொண்டு இருந்தாள்.

அதை விழிகளால் அவனிடம் காட்ட அவனோ அவளை எட்டி நின்றே பதில் காதல் செய்தான். “ரொம்ப தான்” என்று சலித்துக் கொண்டாலும் தன் மீது அவன் கொள்ளும் அக்கரையில் மனம் நனைய தான் செய்தது.

அப்படி இப்படி என்று மேலும் ஒரு மாதம் கடந்தது. அவளின் நெற்றி காயமும் முழுமையாக ஆறிப்போனது. அன்றைய நாளில் மிகவும் பரபரப்பாக இருந்தான் உதயாதிபன்.

“என்னங்க ஆச்சு? ஏன் இவ்வளவு பரபரப்பு.. சொன்னா நானும் ஏதாவது செய்வேன் இல்லையா?” புடவையின் முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு அவனின் பின்னாடி வந்தாள்.

“ப்ச் ஒரு முக்கியமான வேலைடி.. கண்டிப்பா போயே ஆகணும்.. அதுக்கு தான் கிளம்புறேன்” என்று பையை தயார் செய்துக் கொண்டே அவன் சொல்ல, “சரி இங்கிட்டு வாங்க... நான் ரெடி பண்றேன். நீங்க மத்த வேலையை பாருங்க..” என்றாள்.

“அப்போ நான் போறேன்றதுல உனக்கு வருத்தம் இல்லையாடி” என்று கடுப்படித்தான்.“அது இருக்கு நிறைய.,.” என்று சொன்னவள்,

“பக்கத்துல இருந்தாலும் அப்படியே பாஞ்சிடுவீங்களாக்கும் அதுக்கு நீங்க ஊருக்கு போறதே பெட்டர்” நொடித்துக் கொண்டவள் அவனது துணிகளை அடுக்கி வைத்தாள்.

“ரொம்ப தான்டி கொழுப்பு கூடி போயிடுச்சு... வச்சுக்குறேன் உன்னை” என்றான் பல்லைக் கடித்து.

“ஹலோ நீங்க கட்டிக்கிட்ட பொண்டாட்டி நானு.. என்னவோ உங்க ஆசை நாயகி மாதிரி என்னை வச்சுக்கப் போறேன்னு சொல்றீங்க” முகத்தை தூக்கி வைத்தவளை பின்னோடு இறுக்கிக் கட்டியவன் ஆவேசமாய் அவளின் முதுகில் முகம் புதைத்து கடித்து வைத்தான்.

“இது தானே வேணான்னு சொல்றது” என்று சிணுங்கியவளை பேச விடாமல் அவளின் வாயை அடித்தவன் கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் அவளை பாத்ரூமில் தள்ளி அவளின் புடவையை பிடித்து இழுத்தான். “அச்சோ வேணாங்க” என்று அவள் அலற அலற அவளிடம் சேட்டை செய்தவன்,

“வாய் வாய்...” என்று அவளின் வாயை கடித்து வைத்தவன், கொஞ்சமும் தன் வன்மையை குறைத்துக் கொள்ளாமல் அவளிடம் தன் முழு ஆளுமையை காட்டினான். “ப்ளீஸ் ங்க...” கெஞ்சியவளின் கெஞ்சல்கள் எல்லாம் அவனின் இதழ்களுக்குள்ளே மடிந்துப் போனது.

“ஒரு முதல் அமைச்சர் மாதிரியா நடந்துக்குறீங்க? பொறுக்கி பொறுக்கி” என்று அவனை அடித்து தன் வேதனையை குறைத்துக் கொண்டவளை வளைத்துப் பிடித்தவன் அப்படியே படுக்கையில் தூக்கிக் கொண்டு போய் போட்டவன் அவள் மீது இறுக்கமாக பரவி படர்ந்தான்.

அவனது வன்மையிலும் திண்மையிலும் மிரண்டுப் போனவள், “தேவையில்லாம சீண்டி விட்டுட்டேன் போலையே” என்று காலம் கடந்து நொந்துப் போனாள்.

“இவ்வளவு நாள் தள்ளி இருந்ததுக்கு எல்லாம் இதுக்கு தானா?” சிணுங்கினாள். “சிங்கம் பதுங்கி பாய்முனு நீ கேள்வி பட்டது இல்லையாடி” கேட்டவன் அவளின் மார்பில் முகம் புதைத்தான்.

“ப்ச் இப்படி பதுங்கி பாயும்னு நான் நினைச்சி பார்க்கல” என்று அவனது பின்னந்தலை பிடரியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“மேடம் இதை எல்லாம் யோசித்து இருக்கணும். என்னை குற்றம் சொன்னா எப்படி?” என்று இதழ் கடித்து சிரித்தவன்,

அவளின் உடம்பில் தன் இதழ்களால் ஊர்வலம் போனான். அவனது இதழ்களும் மீசையும் பற்களும் செய்யும் மாயத்தில் கிறங்கிப் போனவள் தன்னோடு அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

அவளின் மேனியில் அவன் இதழ் தொட இடம் என்று எதுவுமே இல்லை. வன்மையாக அவளை நெருங்க தவித்துப் போனாள். “போதுமே... எங்கயோ போகணும்னு சொன்னீங்களே” என்று அவனது வேலையை நினைவுப் படுத்த,

“அதை நான் பார்த்துக்குறேன்டி” என்றவன் அவளில் முழுமையாக மூழ்கினான். அவளிடம் அவ்வளவு வன்மையை காட்டியவன் எல்லாம் முடிந்த பிறகு அவளை தூக்கி தன் மார்பில் போட்டுக் கொண்டு,

“எதுக்குடி இவ்வளவு சீண்டுன?” என்று அவனால் அவள் மேனியில் ஏற்பட்ட காயங்களை வருடி விட்டுக் கொண்டே கேட்டான். அவனது கையை தட்டி விட்டவள்,

“ரொம்ப தான் கருணை... செய்யிறதும் செஞ்சுட்டு அக்கறையை பாருங்க” நொடித்தவள், “கிளம்புங்க நேரம் ஆகிடப் போகுது”

“கிளம்பலாம்” என்றான்.

“வாட்?” என்று அவள் அவனை பார்க்க,

“கி..ள..ம்..ப..லா..ம்..” என்று மீண்டும் அவன் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் விழிகள் அகன்று விரிந்தது அவளுக்கு.

“நீங்க இப்ப என்ன சொன்னீங்க?”

“நாம கிளம்பலாம்” என்று கண்ணடித்தான்.

“எங்க? அப்போ இவ்வளவு நேரமும் என்னை போட்டு பாடா படுத்துனது எல்லாம் சும்மா தானா.. யூ சீட்” என்று அவனின் நெஞ்சிலே அடித்தாள்.

“ஹாஹா சும்மா உன்னை சீண்டி பார்த்தேன்டி... கண்ணுக்குள்ள தண்ணி வச்சுக்கிட்டு நான் கிளம்ப ஹெல்ப் பண்ணியே.. அச்சோ கண்ணம்மா லவ் யூடி” என்று அவளை தூக்கி கொஞ்சியவன் அவளை தன் முத்தங்களால் அர்ச்சித்தான்.

“பிராடு பிராடு” என்று அவனை அடித்து தன் கோவத்தை காட்டியவள்,

“நம்ம ஓட்டு வீட்டுக்கா?” ஆசையாக கேட்டாள்.

“ம்ம்ம் ரொம்ப பீஸ்புல்லானா இடம் இல்லையா...? போய் ஒரு வாரம் நிலாவோட மட்டும்” என்று கண்ணடித்தான்.

“நீ மாமனுக்கு ட்ரீட் தரணும்னு சொன்னியே அங்க வந்து குடு.. சும்மா சப்பையா குடுத்தா எல்லாம் வாங்க மாட்டேன்” என்று அவளின் வாசம் பிடித்தவன்,

“இந்த முறை வேற மாதிரி” என்றான். “எப்படி உங்க சட்டை கூட இல்லமால” என்று முறைத்தாள்.

“நல்ல ஐடியா தான்...” என்று சிரிக்க அவனது நெஞ்சிலே அடி போட்டவள், தன் முகத்தை அவனது நெஞ்சிலே மறைத்துக் கொண்டாள்.

“சோ க்யூட்டி” அவளை கொஞ்சியவன், அவளின் வயிற்றில் கையை வைத்தான்.

“உங்க பொண்ணு பத்திரமாக இருக்கா” என்றாள்.

“ம்ம்ம்... இந்த முறை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன்டி”

“அதை நீங்க சொல்லி தான் நான் நம்பனுமாங்க” என்றவளின் விழிகளில் நீர் நிறைந்து இருந்தது.

“ப்ச் அழற நேரமாடி இது” என்று கேட்டான்.

“வாழ்க்கையை ரொம்ப நிறைவா மாத்தி குடுத்திட்டீங்க.. எந்த குறையும் இல்ல.. நிறைவான வாழ்க்கை மாமா... உங்க கூட இருக்கிற இந்த நொடி அப்படி இருக்கு... என் உணர்வுகளை முழுமையா சொல்ல முடியலங்க” என்று அன்பின் மிகுதில் நெகிழ்ந்து நின்றாள்.

அவளை தன் நெஞ்சோடு இறுக அணைத்தவன்,

“உலகமே காலடியில்

கரைந்ததே ஓர் நொடியில்...

உன்னருகே நான் இருந்தால்...

தினம் உன்னருகே நான் இருந்தால்...” என்று சொன்னான்.

அவள் உடல் சிலிர்க்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எந்தன் உயிரே எந்தன் உயிரே...

கண்கள் முழுவதும் உந்தன் கனவே...” மேலும் அவன் பாட அவளின் உயிர் உறைந்துப் போனது.

“லவ் யூ ங்க”

“நானும் என் உயிரை விட மேலாக அதிகமா உன்னை காதலிக்கிறேன்டி.. உன் காதல் ஒன்னு போதும் கண்ணம்மா நான் உயிர் வாழ... நீ கொடுக்கும் நெற்றி முத்தத்தில் என் உயிர் சிலிர்த்து நிற்கும்டி” அவளை கொண்டாடி சிலாகித்தவன்,

“நீ என்னோட உயிரழகுடி... என்னோட தேவதை பெண். இந்த உயிரழகு என்னருகில் இருந்தால் வேற எதுவுமே வேணாம்... உன் வெளி அழகை பார்த்து வசீகரிக்கலடி நான். உன் உயிர் அழகை பார்த்து உன் கிட்ட வீழ்ந்துப் போனேன் கண்ணம்மா” அவளின் விழிகளை பார்த்து தன் உயிர் காதலை சொன்னான்.

அவனின் காதல் உயிரழகி அவனிடமே...

அன்றிரவே யார் கண்ணுக்கும் தெரியாமல் தன் காட்ஸ் எல்லாரையும் ஏமாற்றி விட்டு தன் தாத்தாவிடமும் பிஏவிடம் மட்டும் சொன்னவன் அந்த ஓட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான் மனைவி மகனோடு.

“இந்த மாதிரி அடிக்கடி வரணும்ங்க.. நம்ம ரூம் அப்புறம் இந்த வீடு ரொம்ப பிடித்து இருக்கு” கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு பயணத்தை ரசித்த படி வந்தாள்.

இடையிடையே முகத்தில் கவசம் போட்டுக் கொண்டு தன்னவளுக்காக காபி, டீ, ஸ்நேக்ஸ் என எல்லாம் வாங்கிக் குடுத்து சவுகாரியமாக அழைத்து வந்தான்.

வந்த உடனே அவள் கட்டியிருந்த ஆறு முழ புடவைக்கு விடுதலை கொடுத்தவன் தன் சட்டையை கழட்டி அவளிடம் வீசினான்.

கணவனின் ஆசைக்கு முற்றுப் போடாதவள் அவனின் சட்டையிலே உலா வந்தாள் அங்கிருக்கும் வரை. அதில் அவனது கண்களில் மின்னல் வர நொடி நொடியும் தன் முத்தத்தால் விரக தாபத்தால் அவளை திணறடித்தான் உதயாதிபன்.

“போதுமே” என்று அவள் சிணுங்க,

“முடியாதுடி எனக்கு இன்னும் வேணும்” என்று கேட்டு வாங்கிக் கொண்டான் அவளின் முத்தங்களை. பிள்ளையை இவன் பார்த்துக் கொண்டு அவளை நன்றாக ஓய்வெடுக்க விட்டான். அதற்கு தனி மதிப்பு போட்டு அவளின் காதலை சொட்டு விடாமால் வாங்கிக் கொண்டான்.

“ம்ம்ம் விவரம் தான்” என்று சொன்னவள் அவன் மனம் போல அவனை குளிர்வித்தாள். தானும் அவனது முரட்டு காதலை வாங்கிக் கொண்டாள் வராளி... உதயாதிபனின் வராளி.

இனி எல்லாம் சுகமே...!

இதோடு நாமும் இவர்களிடம் இருந்து விடைபெறுவோம்...!

நன்றி...!

அனைவரும் வளமுடன் வாழ்க...!

Loading spinner

Quote
Topic starter Posted : March 15, 2026 10:34 am
Sowmya reacted
(@sowmya)
Active Member

Romba azhagana kadhai sis...🤩🤩🤩

Loading spinner

ReplyQuote
Posted : March 22, 2026 4:05 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top