"எங்கெங்கு நீ சென்ற போதும்…
என் நெஞ்சமே உன்னை தேடும்…"
பாடல் வரிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்க…
சங்கவையின் உடல் துடித்தது.. அவளின் ஆவியில் அப்பொழுது தான் உயிர் வந்து ஒட்டியது போல உயிர்த்து நின்றாள்.
மனம் நடுங்கியது கைகள் நடுங்கியது ஃபோனை எடுத்துப் பார்த்தாள். அதில் செஞ்சனின் புகைப்படம் மின்னியது. அவனின் தோளோடு அவள் இளைந்து நின்ற புகைப்படத்தை காணுகையிலே கண்களில் கண்ணீர் நிறைந்து போனது.
அவனுக்கான பிரத்தியேக அழைப்புக்காக வைத்திருந்த பாடல் தான்
"எங்கெங்கு நீ சென்ற போதும்… என் நெஞ்சமே உன்னை தேடும்…"
என்ற இந்த பாடல்..
அவளை விட்டு அவன் சென்ற பிறகு அவனுக்காக வைத்த பாடல் இது.. அதேபோல அவளது காலர் டியூனும் இதே தான்.
சங்கவைக்கு அழைப்பு விடுத்த செஞ்சனுக்கும் இதே பாடல் தான் அந்தப் புறமும் ஒலித்தது..
அந்தப் பாடலிலே பெண்ணவளின் உணர்வுகளை பரிபூரணமாக உணர்ந்து கொண்டவனுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. தன்னை எவ்வளவு தேடுகிறாள் என்பது அந்தப் பாடல் மிகத் தெளிவாக உணர்த்தி இருந்தது அவனுக்கு. அந்தப் பாடல் உணர்த்தவில்லை என்றாலும் அவளது தேடலை பற்றி அவன் அறியாதவனா என்ன. பிரிந்து இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் நிறைந்து கிடக்கிறது அல்லவா..
அவன் அறியாது போனால் தான் வியப்பு. சங்கவையை பற்றி அடி முதல் இறுதிவரை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவன் ஆயிற்றே…
அவள் வைத்த காலர் டியூனிலே தான் பேச வந்ததை முற்றிலுமாக மறந்து போனான் செஞ்சடையன்.
எவ்வளவு நாட்களுக்குப் பிறகான அழைப்பு மனமெல்லாம் ஒருங்கே பரவசம் ஆனது.. தேகத்தில் அப்பொழுதுதான் உயிர் வந்து சேர்ந்தார் போல உணர்ந்தாள் பெண்ணவள்.
விழிகளில் வழிந்த நீரை துடைக்க கூட இல்லாமல் எங்கே அழைப்பு நின்று விடுமோ என்று பாய்ந்து சென்று எடுத்து காதில் வைத்தாள்.
எடுத்து வைத்தாளே தவிர அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை ஆனந்தமா துக்கமா துயரமா வேதனையா காதலா சோகமா மனநிறைந்த மகிழ்ச்சியா என அவளால் தன் உணர்வுகளை வரையறுக்கவே முடியவில்லை. தொண்டை அடைத்துப் போனதுதான் மிச்சம்.
ஹலோ.. என்று செஞ்சனின் ஆழ்ந்த அழைப்பு செவியில் விழ, நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது அந்த குரல்.
அவளால் பதில் கொடுக்கவே முடியவில்லை. அந்தப் பக்கம் அவளது உணர்வுகளை புரிந்து கொண்டானோ என்னவோ அவனாளும் அந்த ஹலோவிற்கு பிறகு எதுவும் பேச முடியவில்லை நீண்ட மவுனம் இருவருக்குள்ளும் இடையே நிறைந்து இருந்தது..
மூச்சுவிடும் சத்தம் மட்டுமே இருவருக்கும் கேட்டது வெகு நேரம்.. அழைப்பை வைக்கவும் மனம் வரவில்லை.. பேசவும் இயலவில்லை.. சங்கவியின் வழிகளில் சத்தமில்லாமல் நீர் வழிந்து கொண்டே இருந்தது. ஒரு விசும்பல் கூட அவளிடம் இல்லை. ஆனாலும் விழிகளில் அருவி வழிந்து கொண்டே இருந்தது.
எவ்வளவு நாட்களுக்கான ஏக்கமல்லவா இது ..
ஏதாவது ஒரு நாள் ஒரு நேரத்தில் ஒரு நொடியில் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னிடம் பேசி விட மாட்டானா என்று காத்திருந்த அவளது காத்திருப்புகள் எல்லாமே உடைந்து சிதறிய தருணம் அல்லவா இது..
அதை அனுபவிக்க நினைக்கையில் அழுகை தான் வந்தது. அவளால் அவனது அழைப்பை மகிழுற அனுபவிக்க முடியவில்லை. கண்களை கண்ணீர் நிறைந்துக் கொண்டது.
துக்கத்திலும் அழுகை வரும் அதிக மகிழ்ச்சியிலும் அழுகை வரும் என்ற வாக்கியத்துக்கு சிறந்த உதாரணம் இதோ இந்த நொடிதான்..
நீண்ட மௌனங்களுக்குப் பிறகு செஞ்சன் மீண்டும் ஹலோ என்றான்.. அவனது ஆளுமையான குரல் அவளது செவியை வந்து மோதியது. அதில் அவளது தேகம் இன்னும் சிலிர்த்து போனது. அதையும் தாண்டி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தியவள்,
ஹலோ… என்று பதிலுறை கொடுத்தாள்.
இந்த முறை உறைந்து போனது செஞ்சன்.. அவளின் மென்மையான குரலில் தன் மனதை வசியம் செய்தது போல இழந்து நின்றான்..
அவனிடமிருந்து எந்த சத்தமும் வராமல் போக இவள் மீண்டும் ஹலோ என்றாள்.
அதில் தன்னை சுதாரித்துக் கொண்டவன் மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளுக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மிகப்பெரும் தடுமாற்றம் இருவரும் இடையே..
காதலித்த தருணங்களில் காதலாக பேசுவது கோபமாக பேசுவது மென்மையாக பேசுவது கடிந்து பேசுவது சிரித்து பேசுவது முறைத்து பேசுவது என எவ்வளவோ பேச்சுகள் இருவரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் இந்த தருணத்தில் ஹலோவை தவிர இருவரிடமும் வேறு வார்த்தைகளே இல்லை. ஆனால் கடந்து போன வாழ்க்கையில் பரிமாறிக் கொள்ள, கேட்டுக்கொள்ள எவ்வளோ நிகழ்வுகளும் எவ்வளவோ சொற்களும் அவர்களுக்குள் புதைந்து போய் கிடக்கிறது.
அதைத் தோண்டி துருவ அவர்களால் இயலவில்லை. ஆனாலும் தோண்டி எடுத்து ஆகும் நிலையில் இருந்தால் செஞ்சேன்.
அடைத்த தொண்டையை செருமிக்கொண்டு அம்மா அங்கு வந்திருக்காங்களா? மொட்டையாக கேட்டான்.
அவனது பேச்சில் இருந்த விலகல் தன்மையை உணர்ந்தவளுக்கு கண்களில் இருந்து இன்னும் கண்ணீர் வந்தது. அதன் சத்தம் அவன் அறியாமல் பார்த்துக் கொண்டவள்
ஆமாம் என்றாள்.
உன்னை ஏதும் கடிந்து பேசிட்டாங்களா? அவளின் நலனை முதலில் விசாரித்தான்.
இல்ல அதெல்லாம் எதுவும் இல்லை.. என்றவளுக்கு தன் நலன் நாடும் அவனின் காதலை கண்டு மனம் சிறகடித்தது.
உன்ன ஏதும் பிளாக்மெயில் பண்ணாங்களா.. என்று கேட்டான்.
இல்ல அதெல்லாம் எதுவும் இல்லை என்றாள்.
அதன் பிறகு தான் சமாதானம் அடைந்தான் செஞ்சன்.
பிறகு மீண்டும் மௌனம் இருவரிடையே..
அதை உடைத்து
கல்யாணத்தை பத்தி பேசினாங்களா? கேட்டான் எதை அவளிடம் பேச கூடாது பகிரக்கூடாது என்று எண்ணி இருந்தாலும் அதையே அவளிடம் பேச வேண்டும் சூழ்நிலையை அறவே வெறுத்துப் போனான்.
ம்ம்…
வேற எதுவும் சொன்னாங்களா? விசாரித்தான்.
அது… என்று தயங்கினாள்.
வெளிப்படையா சொல்லு… என்றான் அவன்.
இல்ல உங்கள கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைக்கிறதா முடிவு பண்ணி இருக்காங்க என்றாள்.
அதுக்கு நீ என்ன சொன்ன? என்றான்.
அவள் என்ன சொல்லியிருப்பாள் என்று அவனுக்கு தெரியும். இருந்தாலும் அவளது வாய்மொழியாலே கேட்டு தன் காதலை இன்னும் கர்வ படுத்திக்கொள்ளவே கேட்டான்.
எனக்கு உங்கள கட்டாயப்படுத்தறதுல எந்த விருப்பமும் இல்லை என்று சொல்லிட்டேன். அதேபோல உங்களுக்கு விருப்பம் இல்லனா இந்த கல்யாணத்தை நான் எப்பவும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் என்றாள்.
அவள் அப்படி சொன்ன உடனே செஞ்சன் தன் மீசையை கர்வமாக முறுக்கி கொண்டான்.
சரி என்று வைத்து விட்டான். அவ்வளவுதான் இருவரிடையே நிகழ்ந்த பேச்சு வார்த்தை. அதில் சிறிதே ஏமாற்றம் அடைந்தாள் சங்கவை.
இவ்வளவு நாட்கள் கழித்து செஞ்சன் பேசியதே அரிது. இதில் இன்னும் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் மட்டத்தனம். தன்னையே குட்டிக் கொண்டவள் அன்று இரவு ஊருக்கு கிளம்புவதற்காக துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அதன் பிறகு யாரும் கல்யாணத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. சஞ்சனின் அம்மாவும் பரவாசும் அவளது வீட்டிலே இருந்தார்கள். இரவு நெருங்கியவுடன்,
நான் ஊருக்கு போறேன்… என்று சொல்லி அவள் கிளம்ப போக, அவளை எல்லோருமே தடுத்து நிறுத்தி விட்டார்கள்.
இல்ல நாளைக்கு ஒரு நாள் இருந்துட்டு நீ போ.. என்று எல்லோரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி அவளை இருக்க வைத்து விட்டார்கள்.
அடுத்த நாள் காலை மஞ்சள் நீராட்டு விழா என்பதால் அன்றைக்கும் ஊரே பரபரப்பாக இயங்க ஆரம்பித்தது. அதிகாலையில் எழுந்த சங்கவைக்கு இரவெல்லாம் பொட்டு கூட தூக்கமே இருக்கவில்லை. தன் அலைபேசியை எடுத்து அதில் சேர்த்து வைத்திருந்த செஞ்சனின் புகைப்படங்களை வீடியோக்களை எல்லாம் மீண்டும் பார்க்கத் தொடங்கினாள். எத்தனை முறை பார்த்தாள் என்று அவளுக்கே தெரியாது. விடிய விடிய அலைபேசியில் அவனது முகத்தை மட்டுமே பார்த்தாள் என்பது மட்டும் உண்மை.
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு இளஞ் சிவப்பு வண்ணத்தில் மிருதுவான நூல் புடவை எடுத்து கட்டிக் கொண்டவளுக்கு ஏனோ மனதில் ஒரு பரபரப்பு..
இது என்ன புதுவிதமான உணர்வு தன்னிடமே கேட்டுக் கொண்டவள் கோலமாவு எடுத்துக் கொண்டு வெளியே வந்த நேரம் கதவு படபடவென்று தட்ட ஆரம்பித்தது.
அந்த அதிகாலைப் பொழுதில் அவ்வளவு சத்தமாக கதவை யார் தட்டுவது என்று அதிர்ந்து போனாள். இன்னும் யாருமே எழுந்து கொள்ளவில்லை அதனாலே அவளுக்கு பயம் வந்தது.
இவளுக்கு தூக்கம் வராத காரணத்தால் எழுந்து குளித்துவிட்டு கோலம் போடலாம் என்று வெளியே வந்தாள். அந்த நேரம் பார்த்து இப்படி கதவு தட்டப்படவும் பயந்து தான் போனாள்.
யாரது என்று கேட்டுக் கொண்டு ஒரு கையில் கோலமாவுடன் இன்னொரு கையில் கதவைப் பிடித்துக் கொண்டு திறந்துவிட, எதிரே செஞ்சன் ஆறடி உயரத்தில், இரவு தொலைந்த தூக்கத்தோடு, கண்கள் சிவந்து, உடை சற்றே நழுங்கி, தலைமுடி கலைந்து நிற்பதை கண்டவுடன் இவளுக்கு மூச்சே அடைத்துப் போனது.
தன் கண்கள் காட்டும் செய்தி உண்மைதானா என்று நம்ப முடியாமல் விழிகள் முழுவதும் அவனது உருவத்தை மட்டும் நிறைத்துக் கொண்டாள்.
தன்னைப் பார்த்து சிலையாக நின்றவளை மேலிருந்து கீழாக அழுத்தமாக பார்த்தான். அவனது பார்வையில் சட்டென்று குறுகுறுப்பு தோன்ற தன் பார்வையை விளக்கிக் கொண்டாள்.
வழிவிடும் எண்ணம் இல்லையா? அழுத்தமான குரலில் அவன் கேட்க சட்டென்று ஓரமாய் நகர்ந்து நின்றாள். அவளைத் தாண்டி உள்ளே வந்தான் செஞ்சன்.
அவன் இப்படி தன் வீட்டுக்கு தன்னை தேடி வருவான் என்று எண்ணி இறாதவளுக்கு அவனது வருகை அவளின் காதல் மனதில் ஆணிவேராய் உள் இறங்கியது.
வென் கப் காபி ப்ளீஸ்… என்றான். நடு கூடத்தில் போடப்பட்ட இருக்கையில் கால் மீது கால் போட்டு அமர்ந்து விட்டான். அவன் அமர்ந்த தோரணை என்னவோ திருமணமாகி மாமனார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையின் முறுக்கோடு இருப்பது போல இருந்தது.
இதோ என்று எடுத்த கோலமாவை மீண்டும் வைத்துவிட்டு அடுப்படிக்கு விரைந்தாள்.
ஆனால் அவளால் அடுப்பை பற்ற வைக்கவே முடியவில்லை. கைகள் எல்லாம் நடுங்கியது. தேகத்தில் அப்படி ஒரு நடுக்கம் வந்தது..
நீண்ட நேரம் ஆகியும் அவளால் அடுப்பை பற்ற வைக்கவே முடியவில்லை. லைட்டரை அடித்துக் கொண்டே இருந்தாள். அடுப்பு வேறெங்கோ லைட்டர் வேற எங்கோ இருக்க எப்படி அடுப்பு பற்றும்.
வெகு நேரம் லைட்டர்ஸ் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்க செஞ்சன் எழுந்து அடுப்படியின் உள்ளே நுழைந்தான். அவனது வருகை அவளது செவியில் பதிய மொத்த தேகமும் இன்னும் நடுநடுவென்று நடுங்கிப் போனது….
டேய்! இப்படியா முக்கியமான இடத்தில் வந்து தொடரும் போடறது😳😳😳😳😳
அவனே இப்ப தான் மலையிரங்கி வந்து இருக்கான்....
Plz plz இன்னொரு ud தாங்க டா 😁😁😁😁
உன் குரல் கேட்டு
உள்ளுக்குள் பூகம்பம்
உன் மௌனம் கூட
உறுத்துகிறது....
உறங்காமல் விழித்திருக்கிறேன்
உள்ளம் தவித்திருக்கிறேன்....
வாசலில் நிற்கிறாய்
வார்த்தைகள் ஏதும் இல்லை....
வழி மறைத்து உனை
விழி அகலாமல் பார்க்கிறேன்...
கல்யாணம் பேச வந்தாயோ
காரணம் சொல்ல
வந்தாயோ....
காத்திருப்பின் முடியோ
கண்கள் கலங்கி நிற்கவா
கவலையோ கலக்கமோ
கண்ணீரின் தொடக்கமோ...
என்னடா இது.... தைய தக்கான்னு குதிச்சு கல்யாணத்தை நிறுத்த சொல்லுவான்னு பார்த்தா சட்டமா பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை மாதிரி காபி கேட்கிறான் 😯😯😯😯