aththiyaayam 31

 
Admin
(@ramya-devi)
Member Admin

“என்னை எதுக்காக கூட்டிட்டுப் போறீங்க?” என்று கேட்டவளுக்கு எந்த பதிலையும் கொடுக்காமல் கார் ஓட்டிக் கொண்டு இருந்தான் ராசசிங்கன்.

திரும்பி அவனை பார்த்தாள். கோட் சூட்டில் பக்கா பிசினெஸ் மேனாக இருந்தான். ஆண்மை மிளிரும் தோற்றம். கற்றை மீசை அவனது ஆண்மைக்கு இன்னும் வலு சேர்த்தது போல இருந்தது.

ஆனால் முகத்தில் அளவுக்கு அதிகமான அழுத்தம் நிறைந்து இருந்தது.

“பேசுனா பதில் பேசினா தானே அடுத்த பேச்சு பேச முடியும். நீ என்ன பேசுவது.. நான் என்ன கேட்பது என்று இருந்தால் என்ன செய்வது” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

ராசசிங்கன் எதையும் கண்டுக் கொள்ளவே இல்லை. அவளின் தோற்றத்தை மட்டும் ஒரு முறை நன்கு அலசிக் கொண்டான். எந்த குறையும் இல்லை. ஆனால் அவனது மனம் சற்றே முரண்ட,

“கழுத்துல கொஞ்சம் பெரிய டைமண்ட் செட்டா போட்டுக்க... கழுத்து ரொம்ப எம்ப்ட்டியா இருக்கு” என்றான்.

“அவசரத்துல அதையெல்லாம் எடுத்துட்டு வரல” என்றாள் இவள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை நகை கடைக்கு திருப்பினான். நகை கடைக்கு வண்டியை விட்டவன் அவனே அவள் கட்டி இருந்த பிங்க் கலர் டிஷ்யூ பேன்சி சேரிக்கு தகுந்த மாதிரி லைட் பிங்க் கலரில் இருந்த வைர நகையை தேர்ந்தெடுத்தான்.

அதில் பதித்து இருந்த வைரம் அனைத்தும் அதிக மதிப்புக் கொண்டவை. அதன் விலையை பார்த்ததுமே இவளுக்கு ஒரு மாதிரி ஆனது.

இந்த வைரமெல்லாம் அவள் எப்பொழுதும் பயன்படுத்துவது தான் என்றாலும் எந்த விலையும் இல்லாது ராசசிங்கனிடம் இருந்து வாங்குவது ஒரு மாதிரி இருந்தது.

“இல்ல இதெல்லாம் வேணாமே” என்று அவள் நகையின் மதிப்பை பார்த்து தயங்க,

“யூஸ் பண்ணிட்டு ரிட்டேன் பண்ணிடு. ஓசியில எல்லாம் மங்களம் பாட முடியாது” என்றான்.

அவன் அப்படி சொல்லவும் சுருக்கென்று ஆனது. “அப்படி ஒன்னும் இந்த நகையை நான் போட்டுக்க வேணாம்” என்று மனம் முரண்டினாலும் அவனுக்காக அவள் போட்டுக் கொண்டாள்.

தோடும் அதே வடிவில் எடுத்துக் கொடுத்தான். இணையாக போட்டா தான் அழகாக இருக்கும் என்று அவளும் வாங்கி அணிந்துக் கொண்டாள். திருப்பி கொடுப்பது தானே என்று வாங்கிக் கொண்டாள்.

புடவைக்கும் அவள் விட்டு இருந்த ப்ரீ ஹேர்க்கும் அந்த டைமண்ட் செட் அவ்வளவு அழகாக பொருந்தி இருந்தது. பில் பே பண்ணி விட்டு அவளை திரும்பி பார்த்தான். “நாட் பேட்” சொல்லிக் கொண்டவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இவர்கள் இருவரும் போய் சேருவதற்கு முன்பே கதிர் முன்னாடியே போய் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து இருந்தான்.

டீ பேக்டரி ஓனரும் வந்து இருந்தார். ராசசிங்கன் ஏந்திழையாளோடு அவருக்கு வணக்கம் சொல்லி அவருக்கு எதிரில் அமர்ந்தான்.

“ஹலோ மிஸ்டர் ராசசிங்கன் வாங்க” என்று அவர் நேர்த்தியாக அவனை வரவேற்றார்.

“ஹலோ மிஸ்டர் தர்மன்... ஹவ் டு யுவர் ஹெல்த் அண்ட் ஆர் யூ ஓகே?” என்று அவரது நலனை பற்றி விசாரித்தான்.

“யா ஐ ஆம் ஓகே மிஸ்டர் சிங்கன்.. நாட் பேட்..” என்று சொன்னவர் சிறிது நேரம் பொதுப்படையாக பேச ஆரம்பித்து பின் மிகுந்த தயக்கத்துக்கு பிறகு,

“இந்த பேக்டரி வாங்க நீங்க எவ்வளவு விருப்பப் படுறீங்கன்னு எனக்கு புரியுது... ஆனா இந்த கம்பெனியை நான் பரம்பரை பரம்பரையா இருக்கிறவங்களுக்கு குடுக்க தான் விருப்பப்படுறேன்.. நீங்க என் விருப்பத்தை மதிக்கணும் மிஸ்டர் சிங்கன்” என்றார் தன்மையாக.

“உங்க விருப்பம் ஒன்னும் தவறானது இல்லையே மிஸ்டர் தர்மன்.. உங்க விருப்பத்தை நான் மதிக்கிறேன்” என்று வெளியே பெருந்தனமையாக சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள் பெரும் ஆத்திரம் அவனை சூழ்ந்து இருந்தது. இது ஒன்னும் அவனுக்கு புதிது இல்லை. நிறைய நிறுவனங்களை வாங்க வரும் பொழுது எல்லாம் இப்படி ஒரு விண்ணப்பம் முன் வைக்கப் படும்.

அதை தவிர்க்கவே முடியாது இவனால். ஆனால் அதையும் மீறி ஏதாவது ஒன்றை செய்து அந்த நிறுவனங்களை எல்லாம் வாங்கி விடுவான் என்பது வேறு ஒரு கதை.

ஆனாலும் இந்த சொல்லாடல் மட்டும் அவனை துரத்திக் கொண்டே தான் இருக்கிறது... இதை கேட்டு கேட்டு காதெல்லாம் வலி தான். ஆனால் அதை விட ஆத்திரமும் கோவமும் அதிகம் எழும்.

‘ஒருவனின் வளர்ச்சியை பார்க்காமல் அதென்ன எப்பொழுதும் ஒருவனின் பிறப்பையே பார்ப்பது. இவங்க என்ன எனக்கு பொண்ணா கட்டி குடுக்கப் போறாங்க. என் பூர்விகம் பூகம்பத்தை எல்லாம் பார்க்கிரானுங்க. ஆப்ட்ரால் பிசினெஸ் தானே.. இதுக்கு இப்படி சில கோரிக்கைகள்... டேமிட்...’ என்று கதிரிடம் கருவிக் கொள்வான்.

இப்பொழுதும் அதே கோரிக்கை... எப்பொழுதும் எழும் சினம் இப்பொழுதும் எழுந்தது. கதிர் பயத்துடன் ராசசிங்கனை பார்த்தான்.

அவனது கண்கள் அளவுக்கு அதிகமாக நிதானமாக இருப்பதை பார்த்து இன்னும் கலவரம் சூழ்ந்தது கதிருக்கு. ‘அய்யோ வெளிப்படையா கோவத்தை காட்டினால் கூட பரவாயில்லை. இதென்ன இப்படி இவ்வளவு அழுத்தமா இருக்கிறாரு’ என்று தவித்துப் போனான்.

“இவங்க மிஸ் ஏந்திழையாள்.. வேல் க்ரூப்ஸ் கம்பெனியோட ஒன் ஆப் த ஷேர் ஹோல்டர்” என்று தர்மனுக்கு தன்னுடன் வந்தவளை அறிமுகம் செய்து வைத்தான் ராசசிங்கன்.

“வாட்?” என்று அதிர்ந்துப் போனவர் அதன் பிறகு ஏந்திழையாளை ஊன்றிப் பார்த்தார். ராசசிங்கன் அலட்டிக் கொள்ளவே இல்லை. அதுவரை கொஞ்சம் அலட்சியமாக அவளை பார்த்து இருந்த தர்மன், வேல் க்ரூப்ஸ் என்று சொன்ன உடனே அவரது தோரணையில் ஒரு மாற்றம் வந்தது. அதை ஊன்றி பார்த்துக் கொண்டே,

“இவரு மிஸ்டர் தர்மன். இந்த பேக்ட்ரியோட ஓனர்” என்று அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் தர்மனையே பார்த்து இருந்தான்.

அவனது பார்வையை உணர்ந்தாலும் ஏந்திழையாளின் மீது இருந்த வியப்பை குறைக்காமல் ராசசிங்கனை பார்த்தவர்,

“இவங்களை எப்படி உங்களுக்கு தெரியும் மிஸ்டர்” என்று வியந்து போய் கேட்டார்.

“இவ என்னோட பியான்சி மிஸ்டர்” என்று சொல்லிக் கொண்டே அவளின் கையை இறுகப் பற்றிக் கொண்டான். அதை கேட்டு இருவருமே ஒரு சேர அதிர்ந்துப் போனார்கள். அதிகம் அதிர்ந்தது ஏந்திழையாள் தான். அதுவும் அவன் மிக உரிமையாக கையை பற்றியது. மிகவும் இயல்பாக தன்னுடைய காதலை என்று அறிமுகம் செய்து வைத்தது எல்லாமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிர்ச்சி நிறைவுற்று சுயம் அடைந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளது முறைப்பை பார்த்த தர்மன் யோசனையாக ராசசிங்கனை பார்த்தார்.

“நாங்க ரொம்ப சீக்ரெட்டா வச்சு இருந்தோம். அதை உங்க கிட்ட ரிவில் பண்ணவும் மேடமுக்கு கோவம் வந்திடுச்சு. அது தான்” என்று சிரித்தான். ஆனால் அதற்கு நேர் மாறாக அவளின் கையை பற்றி கசக்கி வைத்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : April 9, 2026 8:56 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top