அத்தியாயம் 29

 
Admin
(@ramya-devi)
Member Admin

“உன்கிட்ட டர்க்ஸ் இருக்கு” என்று ராசசிங்கன் சொல்ல, “என்கிட்டே ஏது.. என்கிட்டே எதுவும் இல்லையே” என்று அவள் விழிக்க,

“இது தான்” என்று சொல்லி அவளின் மார்பை காட்ட அதிர்ந்துப் போனாள்.

“வாட்?” என்று அவள் அதிர,

“ம்ம்ம்” என்று அவளை அப்படியே படுக்கையில் தள்ளி அவள் மீது ஜம்மென்று படுத்துக் கொண்டான். அவளின் புடவையை விலக்கி அவளின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவன் “உன் வாசம் நூறு கொக்கினுக்கு சமம்டி” என்று மூச்சை இழுத்து பிடித்துக் தனக்குள் சில நொடிகளை வைத்துக் கொண்டு பிறகு வெளி விட்டான்.. அப்படியே சில முறை செய்தவன் அதன் பிறகு தூங்கிப் போனான்.

அவனை சுமந்து இருந்தவளுக்கு ஒவ்வாத தன்மை எதுவும் இல்லை தான். ஆனால் ஒரு ஆடவன் மிக உரிமையாக அவளை இழுத்துக் கொள்வது கண்டு தனக்குள் குறுகிப் போனாள்.

விடியும் வரை அப்படியே தான் இருந்தாள். அவள் கொஞ்சம் விலகினாலும் அவளை விடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டான். அப்படி இழுக்கும் பொழுது முன்பை விட அதிகமாக அவளை இறுக்கிக் கொண்டான். அதற்கு பயந்தே அவள் அவனை விட்டு விலகவே இல்லை.

ராசசிங்கன் வந்து ஒரு நாள் ஆன பொழுதும் இன்னும் தாத்தா அவளுக்கு அழைக்கவே இல்லை. ‘ஏன்? இங்க என்ன நடந்தாலும் என்னை சுற்றி என்ன நடந்தாலும் உடனடியாக அவருக்கு தகவல் போய் விடுமே பிறகு ஏன் இன்னும் தாத்தா எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை’ என்று யோசித்தாள் ஏந்திழையாள்.

சரி நாமலே பேசுவோம் என்று எண்ணி அவள் தாத்தாவுக்கு போனை போட்டாள்.

“எப்படி தங்கம் இருக்க?” என்று எடுத்த உடனே கேட்டார். ஆனால் அவரின் பேச்சில் எந்த குதூகலமும் இருக்கவில்லை.

“ம்ம் நல்லா இருக்கேன் தாத்தா” என்றவளுக்கு வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரே ராசசிங்கனை வரவை அறிந்து எதாவது கேட்பார் என்று எண்ணி தான் அழைத்தாள்.

ஆனால் அவர் அவனை பற்றி எதுவுமே பேசவில்லை. கேட்கவும் இல்லை. தானாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று எண்ணியவள் வீட்டில் இருந்த மற்றவர்களின் நலனை விசாரித்து விட்டு வைத்து விட்டாள்.

“என்ன உன் வீட்டு ஆட்களின் நலனை எல்லாம் விசாரிச்சு முடிச்சுட்டியா?” நக்கலுடன் அவளின் எதிரில் வந்து அமர்ந்துக் கொண்டே கேட்டான் ராசசிங்கன்.

“ஆமா இங்க என்கிட்டே ஒன்னு சொல்லிட்டு அங்க என்ன கலவரம் செய்து வச்சு இருக்கீங்கன்னு தெரியல. அது தன் விசாரிச்சேன்” என்று முறைத்தாள்.

“நம்பு ம்மா நம்பிக்கை தான் வாழ்க்கை” என்று ஏளனம் செய்தவன்,

“போய் சூடா காபி எடுத்துட்டு வா” என்றான்.

“ஹலோ நான் ஒன்னும் வேலைக்காரி இல்ல.. மைன்டிட்”

“எனக்கு நீ வேலைக்காரி தான்டி... போ போய் சொன்னதை செய்... இல்லன்னா காலையிலையே வாங்கிக் கட்டிக்காத”
 என்று கட்டிய கணவன் போல அவளை ஏவல் செய்தான். அதில் பத்திக் கொண்டு வந்தது.

“சரியான இம்சைக்கிட்ட மாட்டிக்கிட்டேன்” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்து போய் காபி எப்படி போடுவது என்று கேட்டு அவனுக்காக முதல் முறையாக சமைக்க ஆரம்பித்தாள்.

காபியோடு மட்டும் அவனது ஏவல் நின்றுப் போகவில்லை. சமையலில் ஆரம்பித்து அவனுக்கான அனைத்து வேலையும் அவளையே செய்ய வைத்தான் சிங்கன். முதல் முறையாக அதிக வேலை செய்ததில் மிகவும் களைத்துப் போனாள் பெண்ணவள்.

அவளது வீட்டில் அனைத்துக்கும் பணியாட்கள் இருப்பார்கள். விரல் அசைத்தாலே ஓடி வருவார்கள். இவள் குடித்து வைத்த காபி கப்பை கூட நகர்த்தி வைக்க கூட ஆட்கள் இருக்க ராசசிங்கன் சொன்ன வேலையெல்லாம் இவள் செய்து முடிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

தட்டு தடுமாறி சொதப்பி வைத்தாள். எதையும் முழுதாக முடிக்க தெரியவில்லை. பாவமாக அவனிடம் வந்து நின்றாள்.

அதற்கு அவன் காதில் கேட்க கூடாத பேச்செல்லாம் பேசி அவளை வேதனை படுத்தி துன்புறுத்தினான்.

விழிகளில் கண்ணீர் மல்க நின்றவளை மேலிருந்து கீழா ஒரு பார்வை பார்த்தவன்,

“ஒரு வேலை கூட செய்ய துப்பு இல்லை.. ஆனா மேக்கப் மட்டும் ஒரு வண்டி அப்பிக்கிற” என்று ஏசினான்.

“எனக்கு வேலை செய்ய எங்க வீட்டுல ஆயிரம் பேர் இருக்காங்க. எனக்கு இது நாள் வரை வேலை செய்ய அவசியம் வரல...” என்றாள் கண்ணீரை துடைத்துக் கொண்டே.

“இனி பழகிக்க” என்று முடித்துக் கொண்டவன் தன் போனில் மூழ்கிப் போனான்.

அவனை வெறித்துப் பார்த்தவள் மன வேதனையுடன் போய் விட்டாள். அதன் பிறகு அவன் குத்தல் பேச்சு எதுவும் வரவில்லை. ஆனால் அவனை மீறி அங்கு எதுவும் செய்ய இயலவில்லை.

அவுட்டிங் போகலாம் என்றால் கூட கூட வந்தான்.

“வாக்கிங் தான் போறேன்” என்றாள் சிடுசிடுப்பாக. அவன் வெறுமென ஒரு பார்வை மட்டும் தான் பார்த்தான். வாயை மூடிக் கொண்டவள் அவன் கூட வருவதை சட்டை செய்யாமல் தன் மனம் போன போக்கில் போக ஆரம்பித்தாள்.

மெல்லிய குளிர் உடலை ஊடுருவி சென்றது... கதகதப்பாக இருக்கட்டும் என்று அவள் சால்வையை போத்திக் கொண்டு வந்து இருந்தாள். ஆனால் அவளோடு கூட வந்த ஜந்து அதை பிடுங்கிக் கொண்டதில் வெறும் புடவையோடு மட்டுமே வாக்கிங் போக வேண்டி வந்தது.

அவள் இருந்த புலுங்கலான மன நிலைக்கு அந்த குளிர் அவளுக்கு ஒரு இதத்தை கொடுக்க மனம் ஒன்றிப் போய் நடந்தாள். வழியோரம் சின்ன சின்ன பூக்கள் பூத்து இருக்கக் கண்டு அதை பார்வையாலே வருடிக் கொண்டு சென்றாள்.

அதென்னவோ பனிப்பூவோடு ஒரு மாருதம் தவழுகையில் அதை உணர்ந்து ரசிக்காமல் அவளால் இருக்க முடிவதில்லை. குளிருக்கு இதமாக அவளின் கையோடு ஒரு முரட்டு கை உரசி சென்றது. அதை நீண்ட நேரம் கழித்தே உணர்ந்தவள் திடுக்கிட்டுப் போனாள்.

சும்மாவே கண்டதையும் பேசி அவளை வதைத்து எடுப்பான். இப்பொழுது அவனது கையோடு கை கோர்த்த நிலையில் இதை எப்படி எடுப்பானோ என்று அவள் தட்டு தடுமாறி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

ராசசிங்கனின் பார்வையும் அவளிடம் தான் இருந்தது. இவளுக்கு பக்கென்று ஆனது. தவித்துப் போய் தன் கையை விலக்கப் பார்த்தாள்..

ஆனால் முடியவில்லை. முன்பை விட அதிகமாக இருக்குப் பிடித்தான். அதிலே தெரிந்துப் போனது இனி அவனாக விட்டால் மட்டுமே தன் கைக்கு விடுதலை என்று.

பெருமூச்சு விட்டவள் மீண்டும் பூக்களின் மீது பார்வையை பதித்தாள்.

“கீழே குனிஞ்சு பார்த்தா இந்த பூக்கள் மட்டுமே தெரியும். கொஞ்சம் நிமிர்ந்து தலையை உயர்த்தி பாரு... பெரிய மலையும் அதை மூடி இருக்கும் பனி அடர்ந்த மேகமும் தெரியும்...” என்று இருந்து இருந்தவாக்கில் அவன் சொல்ல

“நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?” என்கிற தோரணையில் பார்த்து வைத்த ஏந்திழையாள் அதன் பிறகு அவன் சொன்னது போல மலையையும் அதை தொட்டு தவழ்ந்து விளையாடிக் கொண்டு இருந்த முகிலையும் பார்க்க ஆரம்பித்தாள்.

இதமான நடைபயணம்... இது நாள் வரை அவள் மட்டுமே பயணித்த சாலையில் இன்று அவனோடு ஒரு நடை... அவனை பற்றிய பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை என்றாலும் இரு இதம் தோன்றியது அந்த நிமிடத்தில். அவளின் பார்வை மிக ரகசியமாக அவனின் மீது படிந்தது.

Loading spinner

Quote
Topic starter Posted : March 30, 2026 12:53 pm
Sowmya reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top