அத்தியாயம் 17

 
Admin
(@ramya-devi)
Member Admin

“ச்சீ இந்த ஹெபிட்டும் இருக்கா” என்று முணகியவள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு வீடு போய் சேர்ந்தால் என்ன என்று தோன்ற முன்பை விட அதி தீவிரமாக வெளியே போகும் வழியை தேடினாள்.

ஒரு இடம் கூட தென்படவில்லை. ராசக்கதவோ அழுந்த சாற்றி இருக்க வேறு வழி தான் தேடனும் என்று பார்த்தவளின் கண்களில் பெரிய கண்ணாடி கதவு தென்பட்டது.

“இதை உடைச்சு வெளியே போயிடலாம்” என்று அருகே இருந்த பித்தளை கூஜாவை எடுத்து ஒரே போடு போட்டு அதை உடைத்தவள் கைக்கால்களை கீறிக் கொண்டு வெளியே குதித்தாள்.

அப்பாடா எப்படியோ இந்த இடத்தை விட்டு ஓடினா போதும் சாமி என்று அங்கிருந்து வெளியே ஓட ஆரம்பித்தாள். காம்பவுண்ட் சுவரையும் தாண்டி அவள் ஓடி ஓடி களைத்துப் போனாள்.

இங்கிருந்து அவளின் வீடு வெகு தூரம்... எடுத்து பேச போன் இல்லாமல் அப்படியே ஓடிக்கொண்டே இருந்தாள். நடு இரவு வேற... யார் கண்ணில் பட்டாலும் தன் கற்புக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்து இருளில் மறைந்து மறைந்து போனாள். அவளின் காரை எடுக்கும் நிலை தற்பொழுது இல்லையே அதனால் நடந்தே சென்றாள்.

ஒரு மணி நேரம் ஓடி இருப்பாள். அவளின் எதிரில் ஒரு கார் வந்து நின்றது. பக்கென்று இருந்தது. ஆனாலும் தைரியம் ராசசிங்கனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்று.

இது வேற ஒரு பிரச்சனை என்று எண்ணி அதை எதிர்கொள்ள தயாராக இருந்தாள்.

கதவை திறந்துக் கொண்டு இறங்கியவனை புருவம் சுறுங்கப் பார்த்தாள்.

“மேடம் கார்ல ஏறுங்க” என்றான் வந்தவன்.

“நீ யாரு நான் ஏன் உன் கார்ல ஏறணும். வழியை மறைக்காம தள்ளி போங்க” என்று காரை சுற்றிக் கொண்டு போக பின்னால் சீட்டில் இருந்த ஒரு உருவம் அவளின் கையை பிடித்து இழுத்து காரின் உள்ளே போட்டது.

காரின் உள்ளே வந்து விழுந்தவள் நச்சென்று ராசசிங்கன் மீது வந்து விழுந்தாள்.

அவனால் கண்களை திறக்கவே முடியவில்லை. ஆனாலும் அவளை அவன் உணர்ந்துக் கொண்டான்.

“ஏன்டி எவ்வளவு தைரியம் இருந்தா நான் அசந்த நேரம் கண்ணாடி கதவை உடைச்சுட்டு கிளம்பி இருப்ப” என்று வாய் குழற குழற பேசினான்.

அவனை அங்கு எதிர் பார்க்காதவள் திகைத்துப் போனாள்.

“மறுபடியும் இவன் கிட்டயேவா” என்று அதிர்ந்தவள் அப்பொழுது தான் அவனது பிடியில் அவனது மேல் சாய்ந்துக் கொண்டு இருப்பதே உணர்ந்தாள்.

சட்டென்று அவனது பிடியில் இருந்து நழுவ பார்க்க ம்ஹும் அவளால் முடியவில்லை. மொத்தமும் அவன் மீதே சாய்ந்து இருந்தாள்.

அவளின் இடையோடு கை விட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவளின் வியர்வை வாசத்தை நுகர்ந்தவன்,

“ஓடி ஓடி ரொம்ப வேர்த்து போயிடுச்சு போல” என்று சொன்னவன் தன் முகத்தை அவளின் கழுத்தில் வைத்து தேய்த்தான். புது விதமாக அவன் செய்யும் இம்சை தாங்காது தவித்துப் போனவள்,

“நான் இனி தப்பிச்சு போக மாட்டேன்... விடுங்க.. ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சினாள்.

“இனி தப்பிச்சு போக மாட்ட சரி, ஆனா இப்போ தப்பிச்சு போயிட்டியே அதுக்கு தண்டனை குடுக்க வேணாம்” என்று குழரியவனின் கைகள் மெல்ல தளர்ந்துப் போனது. போதையின் வீரியம் அவனது உடலை வலுவிழக்க செய்தது.

ஆனால் அவனது உணர்வுகளும் எண்ணங்களும் விழிப்புடனே இருந்தது.

அவனது கை தளரவும் சட்டென்று அவனது கையை தள்ளி விட்டுட்டு அவனுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டாள் வேறு வழியில்லாது.

“காரை ஓரமா நிறுத்துங்க டிரைவர்... நான் வீட்டுக்கு போகணும்” என்று கதிரிடம் சொன்னாள்.

“எங்க பாஸ் சொன்னா தான் உங்களை விடுவேன் மேடம்” என்று அவன் இறுக்கமாக சொல்ல,

“நீ என்னடா என்னை விடுறது என்று சொல்லி கதவை திறக்கப் பார்த்தாள். ம்ஹும் திறக்கவே முடியவில்லை. செண்டர் லாக் போட்டு இருந்தான் கதிர்.

“டேய் ஏன்டா இப்படி பண்றீங்க? பெண் பாவம் உங்களை சும்மா விடாது” என்று கத்தினாள்.

கதிர் கொஞ்சம் கூட கண்டுக் கொள்ளவே இல்லை. தலையை திருப்பி பின்னாடி பார்க்கவும் இல்லை. சாலையை பார்த்து மிக நிதானமாக காரை ஓட்டிக் கொண்டு இருந்தான்.

“ப்ச்...” என்று தன் நிலையை நொந்தவளுக்கு கண்ணீர் கன்னத்தில் இறங்கியது. அந்த நேரம் அவளது நெஞ்சில் ஒரு பாரம் ஏற குனிந்துப் பார்த்தாள். அவளின் மார்பில் ராசசிங்கன் தலையை சாய்த்து இருந்தான்.

“இவன் தொல்லை தாங்க முடியல...” பட்டென்று அவனது தலையை அந்த பக்கம் தள்ளி விட்டாள். அந்த பக்கம் போய் விழுந்தான். கொஞ்சமே கொஞ்ச நேரம் தான் அந்த பக்கம் கிடந்து இருப்பான். மீண்டும் அவளது நெஞ்சிலே வந்து விழுந்தான்.

“ப்ச்” என்று எரிச்சல் ஆனவள் அவனை மீண்டும் தள்ளிவிட, ராசசிங்கன் அவளின் இடுப்பை சுற்றி தன் கைகளை போட்டு இருக்க பிடித்துக் கொண்டு வாகாக அவளின் நெஞ்சில் புதைந்துக் கொண்டான்.

ஏந்திழையாளுக்கு மூச்சு முட்டிப் போனது.

“ஹைய்யோ இதென்ன இம்சை” என்று கலவரம் ஆனவள் அவனது கைகளை எடுத்து விடப் பார்த்தாள். ம்ஹும் அவனை அசைக்க கூட முடியவில்லை. அவ்வளவு போதையிலும் அவன் பிடி உடும்பு பிடியாய் இருந்தது. அவனது முகம் இன்னும் நன்றாக அவளின் மார்போடு உரச “ம்மா..” என்று கண்களை மூடிக் கொண்டாள்.

அவளும் எவ்வளவு தான் பொறுத்துப் போவது. வயதுக்குரிய அத்தனை மாற்றங்களும் அவளிடையே அவனது தொடுகை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. எவ்வளவு தடுக்க நினைத்தும் முடியாமல் கிளர்ந்துக் கொண்டே இருந்தால் அவளும் என்ன தான் செய்வது.

அவனை தடுக்க பார்த்தும் முடியவில்லை. தன் உணர்வுகளை அடக்கப் பார்த்தும் முடியவில்லை. பிறகு வேற என்ன செய்வது. முற்றும் முழுதுமாக தனக்குள் ஏற்ப்படும் உணர்வுகளை எந்த கட்டுப் படும் இல்லாமல் உணர ஆரம்பித்தாள். அதில் அவளது கண்கள் அப்பட்டமாய் சிவந்துப் போனது.

ஒரு பக்கம் இப்படி முறையில்லாத உணர்வுகளின் வெடிப்பு நிலையை கண்டு காரி துப்பிக் கொண்டாள். ஆனாலும் அதையும் மீறி அவளுள் ஒரு பூகம்பம் நிகழ்கிறதே... பருவ வயது ஏன் வந்தது என்று எண்ணி நொந்துப் போனாள்.

அப்படியே ராசசிங்கனால் ஏற்படுத்தப்படும் தன் உணர்வுகளுடன் போராடிக் கொண்டே, இன்னொரு பக்கம் ராசசிங்கன் தன் மார்பில் விழுந்து கிடந்து கீழே சரிவதும் மேலே வருவதுமான உரசலில் ஏற்படும் பருவ உணர்வுகளால் சிதைந்துக் கொண்டே வந்தாள்.

முன்பு இருந்த அதே கெஸ்ட்ஹவுஸ்க்கு கார் வந்து நின்றது.

“இன்னொரு முறை தப்பிக்க பார்க்காதீங்க மேடம்” என்று அழுந்த சொல்லிவிட்டு கார் கதவை திறந்து விட்டான் கதிர்.

அதில் எரிச்சல் ஆனவள் எழுந்து போக பார்க்க ராசசிங்கன் விட வேண்டுமே..

“பாஸ் மேடம் வீட்டுக்கு தான் வந்து இருக்காங்க.. லீவ் ஹர்...” என்றான்.

“ம்ம்” என்றானே தவிர அவன் அவளை விடவே இல்லை.

“ஐ திங்.. பாஸ்க்கு போதை தெளிஞ்சா தான் போக முடியும்னு நினைக்கிறேன்” என்றான்.

“வாட்?” என்று அதிர்ந்துப் போனாள். அதுவரை இவனது பிடியிலா “நோ” என்று அலறினாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:37 pm
Sowmya reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top