அத்தியாயம் 12

 
Admin
(@ramya-devi)
Member Admin

ராசசிங்கன் நினைத்தால் ஒரே நொடியில் தங்களை இல்லாது செய்துவிடும் அளவுக்கு பவர் உள்ளவன். அரசியல், தொழில்துறை, ஊடகத்துறை என எல்லாவற்றிலும் முன்னிலையில் இருப்பவன். இவன் சொல்லும் கட்சி தான் ஆட்சிக்கு வரும். சொல்கிற சட்டம் தான் சட்ட புத்தகத்தில் கூட ஏறும். இவன் சொல்வது தான் அன்றைய செய்தியாக இருக்கும். அந்த அளவுக்கு இந்தியாவில் அசைக்க முடியா வலுவான ஆள்.

அவனின் பின்னாடி தான் அரசாங்கமே இருக்கிறது என்றால் மிகையில்லை. அப்படி பட்டவனை பேசக்கூடாத சொற்களை எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று தொண்டை வறண்டுப் போனது. இவர்களும் தொழில் துறையில் முன்னணியில் இருப்பவர்கள் தான். ஆனால் இவர்களது வட்டம் சற்றே குறுகல். ஆனால் ராசிங்கனின் வட்டம் மிகப்பெரியது.

கால் பதிக்காத துறையே இல்லை. வணிகம் சார்ந்த அத்தனையும் அவனது கையில் தான் அடக்கம். இந்த நேரம் இது செய்வான் என்று யாராலும் கணிக்கவே இயலாது. அவன் ஒரு இடத்தில் இறங்கி போகிறான் எனில் அதன் பின்னணியில் அவன் அடையக் கூடியது மிக பெரிதாக இருக்கும் என்ற எண்ணம் மற்ற அனைவருக்குமே இருந்தது.

அப்படி பட்ட ராசசிங்கன் தங்களை நாடி வந்ததில் பெரிதாக என்னவோ இருக்கிறது ஆனால் அது என்னது என்று மட்டும் தெரியவில்லையே தவிர, மற்றபடி காரண காரியம் வலுவாக இருக்கிறது என்கிற எண்ணம் மட்டும் வேல்முருகனின் இளைய தலைமுறையினருக்கு அத்துபடியாக புரிந்து இருந்தது. தங்களுக்குள் பார்வையை செலுத்திக் கொண்டு அதை உறுதிப் படுத்திக் கொண்டார்கள். கார்த்திக்கும் யுகேஷும்.

ராசசிங்கனின் கையில் வேல்முருகனின் குடும்பம் மொத்தமாக சிக்கி இருக்கிறது. குறிப்பாக ஏந்திழையாள். எவ்வளவு அவளை சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவளை சீரழிக்க விடாமல் விடமாட்டான்.

அதற்கு தாங்கள் மட்டும் தான் காரணம் என்று உணர்ந்த பெரியவர்களுக்கு பயமும் வேதனையும் நெஞ்சை கவ்வியது. இளைய தலைமுறையினருக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதே இப்பொழுது தான் தெரிய வந்து இருந்தது.

இதை எப்படி கையாள்வது என்று ஒன்றும் புரியவில்லை. வேல்முருகனுக்கே ஒன்னும் புரியாமல் தான் இருக்கிறார். இதில் இவர்களுக்கு எங்கே இருந்து ஆலோசனை சொல்ல.

மொத்தமாக கேட்டுக் கொண்டு இருந்த ஏந்திழையாளுக்கு உடலெல்லாம் ஆட்டம் கண்டது. ராசசிங்கனின் நெருப்பை கக்கும் விழிகள் வந்து போக குளிர் காய்ச்சல் இப்பொழுதே வந்து விடும் போல இருந்தது. மெலிதான அவளின் உடலும் மனமும் ஆணவனின் வன்மையான குணத்தில் என்ன ஆகுமோ...

முன்பே சொன்னது தான் பணத்திலே புழங்குவதால் அவனுக்கு மனித உணர்வுகளை பற்றி எந்த அக்கறையும் கிடையாது. அதற்கு பெரிதாக நேரம் ஒதுக்குவதும் இல்லை. உணர்வுகள் எல்லாம் அவனை பொறுத்த வரை வெறும் துச்சம் மட்டும் தான். அது அவன் ஏந்திழையாளிடம் நடந்துக் கொள்வதிலே நன்கு புரிந்து இருக்கும்.

இனிமேலும் அவளை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அந்த அளவுக்கு இழிவுப் படுத்துவான் என்பதில் கொஞ்சம் கூட ஐயமில்லை. அதை ஏந்திழையாளும் நன்கு புரிந்து வைத்துக் கொண்டாள் அவனோடான இரண்டாவது சந்திப்பிலே.

எப்படி அவனை எதிர்கொள்வது என்று பயந்துப் போனாள். ஒரு சொல் தந்தை மற்றும் மாமனிடம் எதுவும் கேட்கவில்லை ஏன் அவனை பகைத்துக் கொண்டீர்கள் என்று. நேரம் செல்ல செல்ல ராசசிங்கன் கொடுத்த கெடு நெருங்க நெருங்க பயம் அடி வயிற்ரை கவ்விக் கொண்டது.

என்ன எண்ணியும் அவளால் அந்த பயத்தை போக்கிக் கொள்ளவே இயலவில்லை.

அங்கே அவர்களுடன் உட்கார மனமில்லாமல்,

“இன்னைக்கு நீங்க யாரும் வெளியே போக வேணாம்.. ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

அவளின் பயம் கண்டதோடு ராசசிங்கனின் மீதுள்ள பயத்தினாலும் யாரும் வெளியே போகல என்று அவளுக்கு வாக்கு கொடுத்தார்கள்.

அதன் பிறகே அவள் நிம்மதியாக தன் அறைக்கு சென்றாள். போன உடனே நேராக குளியல் அறைக்குள் நுழைந்து காலையில் இருந்து நடந்த சம்பவங்கள் அவளை பெரிதாக அலைக்கழித்துக் கொண்டு இருக்க பாத்டப்பில் அப்படியே படுத்து விட்டாள்.

கண்களை மூடி நிதானமாக இருக்க முயன்றாள். ஆனால் கண்களை மூடினாலே ராசசிங்கனின் முகம் வந்து அவளை பயமுறுத்த பட்டென்று கண்களை திறந்துக் கொண்டாள்.

“ப்ளீஸ் எனக்கு இந்த பய உணர்வு வேணாம். நான் கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கணும் காட்...” என்று வேண்டிக் கொண்டவள் நீரின் வெதுவெதுப்பில் அப்படியே கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள்.

எவ்வளவு நேரம் ஆனதோ அவளுக்கு தெரியவே இல்லை. நிம்மதியாக தண்ணீரில் ஊறியபடியே தூங்கிப் போனாள். தூங்கிப் போனவளின் மீது ஏதோ ஒரு பாரம் படர்வது போல இருக்க அவளால் கண்களை திறக்கவே முடியவில்லை.

“என்ன இது...” என்று முணகினாளே தவிர அவளால் அசைய கூட முடியவில்லை. அவளின் படர்ந்த பாரம் இருக்க இருக்க அதிகமாகிக் கொண்டே போனது. அதோடு அவளின் கழுத்தோரம் ஏதோ உரசி செல்வது போல இருக்க தட்டி விட பார்த்தாள். அவளால் முடியவே இல்லை.

அவளின் உடலில் தொடக்கூடாத பாகத்தை எல்லாம் அழுத்தமான முரட்டு கைகள் தொட்டு தடவி அழுத்தி விடுவது போல இருக்க மூச்சடைத்துக் கொண்டு வந்தது.

“ம்மா” என்று அவள் அலறப்போக அவளின் செவ்விதழ்களை வன்மையாக முரட்டு இதழ்கள் கவ்விக் கொண்டன...

“எனக்கு என்ன ஆகுது... ப்ளீஸ் லீவ் மீ... ஐ ஹேட் திஸ்...” என்ற பொழுதே அவள் காலையில் கட்டி இருந்த சேலை அவளை விட்டு நழுவிப் போனது.

“நோ... ப்ளீஸ்” என்று அவள் மேலும் கத்தி கதற முரட்டு தனமான சிரிப்பு அவளின் காதில் கேட்டது. “ப்ளீஸ்.. சிங்கன் என்னை விட்டுடு.. திசிஸ் நாட் குட்.. உனக்கு என்ன வேண்டும்னு சொல்லு நான் எடுத்து குடுக்குறேன். அதுக்கு பதிலா என்னை விட்டுடு. உனக்கு எங்க சொத்துதானே வேணும். வா ஏங்க தாத்தா கிட்ட கேட்டு வாங்கி தரேன். அதுக்கு பதிலா என்னை ஒன்னும் செய்திடாத” என்று அவனிடம் கைக்கூப்பி கெஞ்சி கேட்க அவளின் மேலாடையும் அவனது வசம் ஆனது. பதறிப் போனவள் கண்களை திறக்காமலே அவனை கையெடுத்து கும்பிட்ட கையால் தன்னை மறைத்துக் கொண்டு கத்தி கதறினாள்.

விழியோரம் கண்ணீர் ஆரென பெருகி ஓடியது. அவனை எதுவுமே செய்ய முடியாமல் போன தன் நிலையை என்னை குமுறிப் போனாள். “ப்ளீஸ் ப்ளீஸ்...” என்று விடாமல் அவளது வாய் அவனிடம் கெஞ்சிக் கொண்டே இருக்க எங்கோ பலமான இடிக்கும் சத்தம் கேட்டது.

மிக மிக சிரமப்பட்டு விழிகளை திறந்தவள் எதிரே இருந்தவனை பார்த்தாள். எதிரில் வெறும் சுவர் மட்டும் தான் இருந்தது.

“எங்க ஆளக்காணோம்” என்று அவள் திகைக்க, கதவு படீர் படீர் என்று தட்டும் சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று ஒரு கணம் ஓட்டிப் பார்த்தவளுக்கு தான் கனவு கண்டு இருக்கோம் என்று புரிய அப்படியே ஓய்ந்துப் போனாள்.

கனவே இவ்வளவு பயங்கரமா இருக்கே. ஒரு வேலை அந்த அரக்கன் ராசசிங்கனிடம் மாட்டி இருந்தால் தன் நிலை...

“அம்மாடி நினைச்சுப் பார்க்கவே முடியலையே” என்று தடுமாறி எழுந்தவள் ஈரமான புடவை அவளின் காலை ஒட்டிக் கொண்டு இருக்க சிரமப்பட்டு பாத் டப்பை விட்டு வெளியே வந்து கதவை திறந்தாள்.

வெளியே அவளின் மொத்த குடும்பமும் நின்று இருந்தது பதட்டத்துடன்.

“என்னமா ஆச்சு... ஏன் கதவை திறக்க இவ்வளவு நேரம்” என்று எல்லோரும் பதற்றமாக,

“அப்படியே தூங்கிட்டேன் ம்மா.. வேற ஒன்னும் இல்லை” என்று அவள் சொல்ல,

“உண்மையை தான் சொல்றியா பாப்பா” என்று பாட்டி இருவரும் கேட்டார்கள். என்னவோ உள்ளுக்குள் அவர்களுக்கு அச்சம் இருந்தது. அதனாலே இந்த பதட்டம் அவர்களை தோற்றி இருந்தது. அதை உணர்ந்தவளாய்,

“உண்மையா தான் பாட்டி... ரொம்ப டையர்டா இருக்கவும் அப்படியே பாத் டப்புல தூங்கிட்டேன். நான் பிரெஷ் ஆகிட்டு வரேன். நீங்க எல்லோரும் போங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டு நிதானமாக குளிக்க ஆரம்பித்தாள்.

நீண்ட நேரம் தண்ணீரிலே இருக்கவும் அவளுக்கு என்னவோ போல் வந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு குளித்து வெளியே வந்தாள்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 19, 2026 3:32 pm
Sowmya reacted
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top