“நான் உன்கிட்ட முன்னாடி ஒன்னு சொன்னனே நினைவு இருக்கா?” என்று அவன் அடிக்குரலில் கேட்க தூக்கிவாரிப் போட்டது இவளுக்கு.
அதை எப்படி அவளால் அவ்வளவு எளிதாக மறந்துப் போய் இருக்க முடியும்.. அவளின் காதோரம் முன் பின் தெரியாத பெண் என்று கூட இல்லாமல் அப்படியே கொச்சையாக பேசி வைத்து இருந்தானே... நினைக்கவே நெஞ்செல்லாம் கலங்கிப் போனது.
விழிகள் கசிய அவனை அச்சத்துடன் பார்த்தாள் ஏந்திழையாள்.
“என்ன நினைவு வந்திடுச்சா?” என்று நக்கலாக கேட்டவன் தலைக்கு மேலே இருந்த கேமராவை தன் செல்போன் கொண்டு அடித்து உடைத்தான். அதை கலவரத்துடன் பார்த்தவள்,
“நோ ப்ளீஸ்...” என்று அவள் கூனி குறுகி அமர அவளின் முந்தானையை பிடித்து புடவையை உருவி எடுக்க தன் நெஞ்சோடு மாராப்பை இறுக்கிக் கொண்டவள்,
“ப்ளீஸ் உங்களை நான் என்ன பண்ணுனேன்.. ஏன் இப்படி என்னை சித்ரவதை பண்றீங்க.. உங்க அளவுக்கு எல்லாம் நாங்க கிடையாது.. எங்களை விட்டுடுங்க” என்று கெஞ்சியவளை ஆத்திரமாக முறைத்தவன்,
“என்ன பண்ணுனியாவா? ஏன் என்கிட்ட இவ்வளவு பேசுறியே... நீ உன் நொண்ணநுங்க எதுவும் சொல்லலையா? இல்ல அவனுங்க தான் உன்கிட்ட எதுவும் கேட்கலையா..? எதுவும் சொல்லலியா...?” என்று ஏளனமாக கேட்டான்.
“இல்ல நான் எதுவும் சொல்லல. அவங்களும் எதுவும் சொல்லல... குறிப்பா நமக்குள்ள நடந்தது எதுவும் யாருக்கும் தெரியாது. ப்ளீஸ்... உங்களை கையெடுத்து கும்பிடுறேன் என்னை விட்டுட்டுங்க” என்று சொன்னவளை மேலிருந்து கீழ்வரை மிதப்பாக ஒரு பார்வை இட்டவன்,
“உன்னை அன்னைக்கு சீண்டியதற்கு பதிலுக்கு பதிலாக அவனுங்க என்னை ரொம்ப அதிகமா சீண்டி விட்டுட்டானுங்க... அதுக்கு அவனுங்க அனுபவிக்கணும் இல்லையா...?” என்று கேட்டு அரக்கத்தனமாய் சொன்னவனை பார்த்து இன்னும் பயந்துப் போனாள் பெண்ணவள்.
ராசசிங்கனின் முழக்கத்தில் அடி நெஞ்சுவரை பயம் பிடித்துக் கொண்டது ஏந்திழையாளுக்கு.
“ப்ளீஸ் அவங்க என்ன செய்தாலும் எனக்காக மன்னிச்சு விட்டுட்டுடுங்க... உங்களை கையெடுத்து குடும்பிடுறேன். என்னையும் எங்க குடும்பத்தையும் விட்டுட்டுங்க. உங்க வழிக்கே வரமாட்டோம்” என்று சொன்னவளை திமிராக பார்த்தவன்,
“அதை என் மேல மோதுறதுக்கு முன்னாடியே யோசித்து இருக்கணும். இப்போ டூ லேட்” என்று உதட்டை பிதுக்கினான்.
“ப்ளீஸ் ப்ளீஸ் சார்.. நாங்க கனவுல உங்களுக்கு துரோகம் நினைக்க மாட்டோம். எங்களை விட்டுடுங்களேன் ப்ளீஸ்” என்று மேலும் கெஞ்சியவளை இளக்காரமாக பார்த்தவன் அவளுக்கு இணையாக இவனும் ஒரு காலை மடக்கு இன்னொரு காலை குத்த வைத்து அமர்ந்தவன்,
“சரி உன் குடும்பத்தை விட்டுடுறேன்.. ஆனா நீ நான் சொல்றதை எல்லாம் கேட்கணும் ஓகே யா” என்று கேட்டான்.
“சார்” என்று அவள் அதிர,
“ஏற்கனவே உன் அண்ணனுங்க மேல கொலை காண்டுல இருக்கேன். இப்போ நீ ஒத்துக்கலன்னா உன் குடும்பத்தை ஒருவழி பண்ணிடுவேன்” என்று அப்பட்டமாய் மிரட்டினான்.
“நாங்க என்ன பண்ணினோம் சார். ஏன் இப்படி எங்களுக்கு கட்டம் கட்டுறீங்க” என்று வேதனையுடன் கேட்டாள்.
“உனக்கு ப்ரொடெக்ஷன் குடுக்குறேன்னு சொல்லி என்னை ரொம்ப பிசியா வச்கிக்கிட்டானுங்களே அதுக்கு நான் பதிலுக்கு குடுக்க வேணாம்” என்று விகாரமாய் சொன்னவனை கண்டு இன்னும் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.
ராசா சிம்மனின் பார்வை தங்கள் பெண் மீது விழவும் உடனடியாக அவனது பார்வையில் இருந்து ஏந்திழையாளை அகற்ற முடிவு செய்தவர்கள் அவளை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்ப பார்த்தார்கள். ஆனால் அதற்கு ஒரு பதினைந்து நாள் ஆகும் நிலை ஏற்பட அது வரை ராச சிம்மனுக்கு தங்கள் தங்கையின் நினைவு வரக்கூடாது என்று எண்ணியே வீட்டு பெரியவர்களின் கவனத்தை கவராமல்,
அண்ணன் தம்பிகளான கார்த்திக், சுரேஷ், யுகேஷ், நடாஷ், பிரகாஷ் மற்றும் அத்தை பசங்களான வருண், சபேஷ் என ஏழு பேரும் தங்களுக்குள் பேசி வைத்து ஏழு புது சிம்மை யார் யார் மூலமோ வாங்கி வைத்து ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் ஒவ்வொரு டிப்பார்மெண்டை ராசசிம்மனின் நிறுவனத்துக்கு ரெய்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அது எதுவும் தங்களின் குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் லவ் பிரதர்ஸ். ஏன் ஏந்திழையாளுக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.
ஏழு துறை.. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக ராசசிம்மனை பிசியாகவே வைத்து இருந்தார்கள் இந்த பிரதர்ஸ் கேங். ஆரம்பத்தில் எதையும் லிங்க் செய்யாதவன் தொடந்து ஐடி டிப்பார்ட்மென்டில் ஆரம்பித்து பப்ளிக் டிப்பார்மென்ட் வரை ரெய்டுக்கு வரவும் அதன் பின்னணியை நோண்ட ஆரம்பித்து விட்டான்.
எங்கெங்கு பணத்தை கொட்டி கொடுக்க முடியுமோ அங்கு எல்லாம் பணத்தை கொட்டி தகவல்களை வாங்கியவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. அனைத்து துறைகளுக்கும் தகவல் போனது எல்லாமே புது சிம் கார்டில் இருந்து தான்.
இரண்டு நிமிடம் மட்டுமே அது உபயோகத்தில் இருந்தது. அதன் பிறகு அது ஆக்டிவேட்டே ஆகவில்லை. அந்த சிம்மை போட்டு இருந்த போன்கள் கூட எல்லாமே பழைய அலைபேசி. அதை எடுத்து பார்க்கையில் அனைத்தும் பொது மக்களிடம் இருந்து தொலைந்து போன கைபேசியாகவே இருந்தது.
அதை வைத்து எதையும் கண்டு பிடிக்கவே முடியவில்லை சிம்மனால். பேசிய இடங்கள் கூட எல்லாமே வேற வேற இடங்கள்.
யார் இந்த வேலையை செய்தது என்று பதினைந்து நாட்களுக்கு மேலான பொழுதும் கூட கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதுவே அவனை மிருகமாக்கி இருந்தது.
என் கண்ணுக்குள்ளயே கை வைத்து குடையிற அளவுக்கு யாருக்கு இந்த ஊர்ல அவ்வளவு தைரியம் இருக்கு... என்று கண் மண் தெரியாமல் ஆத்திரம் வந்தது.
போன் வந்த இடத்தை எல்லாம் ஒரு நூலில் பிணைத்து வைத்து பார்த்தவனுக்கு பளிச்சென்று உண்மை புலப்பட்டது. எஸ் டிப்பார்ட்மென்துக்கு போன் செய்து இருந்த அத்தனை இடங்களிலும் அருகில் இருந்தது என்னவோ ஏந்திழையாளின் நிறுவனம் மட்டும் தான்.
அதை கண்டு ஏளனமாக சிரித்தவன் எதையும் தடுக்கவில்லை. தொடர்ந்து அவனது அலுவலகத்தில் ரெய்டுக்கு மேல ரெய்ட்... கொஞ்சம் கூட அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை. கூடவே ஏந்திழையாளை நாடு கடத்துவது தெரியவர தன் பவரை யூஸ் பண்ணி அவளுக்கு பாஸ்போர்ட் ரினிவேல் கிடைக்காத மாதிரி மட்டும் பார்த்துக் கொண்டான். இவ்வளவு நடந்தும் ராசசிங்கன் எதுக்கும் ரியாக்ட் பண்ணாமல் இருக்கும் பொழுதே தாங்கள் சுதாரித்து இருக்கணும் என்று இப்பொழுது வேதனை கொண்டார்கள் பிரதர்ஸ் க்ரூப்.
காலம் கடந்து போய் விட்டதே.. இனி என்ன செய்ய முடியும். அதை எல்லாம் கேட்ட ஏந்திழையாளுக்கு தன் மேல் அண்ணன் தம்பிகள் கொண்டுள்ள பாசம் புரிய,
“என் மேல உள்ள பாசத்துல அப்படி எல்லாம் பண்ணிட்டாங்க சார்.. இனி அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க.. ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க” என்று கெஞ்சினாள்.
“ஹாங்... விடுறதுக்கா உன்னை கட்டம் கட்டி தூக்கி இருக்கேன்.. உன்னை அணு அணுவா...” என்று முடிக்காமல் வில்லனாக அவன் சிரிக்க அடி நெஞ்சு வரை உலர்ந்துப் போனது.





