அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

“எப்போ பாரு அவளை கொட்டிட்டே இருக்க. இப்படியே பண்ணிட்டு இருடா. என் தங்கச்சிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்” என்று சபேஷ் சுரேஷை முறைத்தான்.

“அப்போ எனக்கு விடுதலையா மச்சான்” என்று அவனின் தோளில் கையை போட்டு ஆசையாக கேட்டவனை அனைவரும் முறைத்துப் பார்க்க,

“எஸ்கேப்” என்று ஓடப்பார்த்தான். ஆனால் அதற்குள் அனைவரும் சேர்ந்து அவனை ரவுண்ட் கட்ட எங்கிருந்து ஓடுவது.

அத்தனை ஆர்ப்பாட்டத்தையும் பார்த்து சின்னதாக புன்னகை புரிந்துக் கொண்டு அமைதியாக இருந்தாள் ஏந்திழையாள். என்னவோ முன்பு போல மனம் விட்டு அவளால் சிரிக்க முடியவில்லை. எங்கிருந்து சிரிக்க இயலும்.

யார் என்று தெரியாத ஒருவன் தன்னை விபச்சாரியாக ட்ரீட் செய்து அனுபவமாக சொல்ல சொன்ன விசயங்கள் எல்லாம் எங்கிருந்து மறப்பது. வேதனை தொண்டையை அடைத்தது.

ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க வெகுவாக சிரமம் கொண்டாள்.

“படத்துக்கே போகலாம் மாமா” என்று இவள் சுரேஷிடம் சொல்ல அதன் பிறகு ஒரே மனதாக அனைவரும் படத்துக்கு சென்றார்கள்.

பெண்களை நடுவில் விட்டு ஆண்கள் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டார்கள். அது எப்பொழுதும் நடக்கும் நிகழ்வு என்பதால் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.

இடையில் ஏந்திழையாளுக்கு ரெஸ்ட்ரூம் போக வேண்டும் போல் இருக்க கார்த்தியை அழைத்துக் கொண்டு போனாள். கேண்டீன் போகலாம் என்று சொல்லி அனைவருக்கும் உண்பதற்கு வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

அதை தொடர்ந்து ஷாப்பிங், கேம்ஸ் என எங்கும் அவளை தனித்து விடவே இல்லை யாரும். குறிப்பாக அவளின் இரு அண்ணிகளும் அண்ணன்களும். அத்தை பிள்ளைகளை பற்றி சொல்லவே வேண்டாம். அவளுடனே இருந்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் அவளுடனே இருந்தார்கள்.

ஏந்திழையாளுக்கே ஒருமாதிரி ஆகிப்போனது. பாவம் இவர்களையும் படுத்தி எடுக்கிறோம் என்று அறிந்து கொஞ்சம் கொஞ்சம் தனியே செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவர்கள் விட வேண்டுமே...

ம்ஹும் அவளின் கையை பற்றிக் கொண்டு அவளை எங்குமே தனியாக அனுப்பவே இல்லை. அது ஒரு வகையில் அவளுக்கு இதத்தை கொடுத்தது என்றே சொல்லலாம்.

அந்த நேரம் தான் திலோவின் அண்ணனுக்கு திருமண ஏற்பாடு நடைபெற ஆரம்பித்தது. இருவீட்டு பெரியவர்களும் பேசி கலந்து ஆலோசித்து மணமக்களும் மனம் விட்டு பேசி ஒருவருக்கு ஒருவர் நன்றாக பிடித்துப் போய் விட திருமண நிகழ்வுகள் ஆரம்பம் ஆனது.

அதற்கு அச்சாரமாக திருமண உறுதி நிகழ்ச்சி நடக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அதற்கு உடை எடுக்க அனைவரும் அன்றைக்கு காலையில் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள்.

ஏந்திழையாளையும் கிளம்ப சொல்ல அவளோ “நான் வரல நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்று மறுத்தாள்.

திலோ எதுவும் சொல்லாமல் அவளை ஒரு பார்வை மட்டும் பார்த்தாள்.

“இப்படி எதுவும் பேசாம பார்வையாலே என்னை மெல்ட் பண்ண வச்சுடுற அண்ணி” என்று அவளிடம் முறைத்தவள், பின் சிரித்து,

“வர்றேன் நீ உடனே முகத்தை தூக்கி வச்சுக்காத” என்றாள். அவளின் சம்மதம் கேட்ட பிறகே திலோ சிரித்தாள்.

“என் மேல அந்த பயம் இருக்கணும்” என்று சொன்ன திலோ,

“ஒழுங்கா சேலை கட்டிட்டு வா... பொண்ணு வீட்டுல கொஞ்சம் இதெல்லாம் எதிர் பார்ப்பாங்க போல” என்றாள்.

“போ அண்ணி வர்றதே பெருசு... இதுல புடவையா..? அதுக்கு வாய்ப்பே இல்லை.”

“ப்ளீஸ்டி இப்ப தான் எங்க அண்ணனுக்கு தோணி துவங்கி ஒரு பொண்ணு கிடைச்சி இருக்கு. அதுல மண்ணள்ளிப் போட்டுடாதடி உனக்கு புண்ணியமா போகும்” என்று அவளை கட்டாயப்படுத்தி புடவை உடுத்த வைத்தாள்.

எல்லா புடவைக்கும் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் தான் தைத்து இருந்தாள். ஒன்று கூட கை வைத்தது இல்லை. “இப்போ இதை எப்படி போட்டுட்டு போறது...” என்று சங்கடப்பட்டாள்.

ஆனால் ஒத்துக்கொண்ட பிறகு பின் வாங்க முடியாதே என்று எண்ணியவள்,

அதோடு அவனையும் தான் இவ்வளவு நாளா எங்கும் பார்க்கவே இல்லை. இவ்வளவு நாள் பார்க்கதவனையா இன்று ஒரு நாள் சந்திக்க போகிறோம்... அதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணியவள்,

ப்ளாக் கலர் ஸ்லீவ் லெஸ் ப்ளவுஸ், ஆஷ் கலர் மற்றும் ப்ளாக் கலரும் சேர்ந்தது போல புடவையும் அணிந்து இருந்தவள், அதற்கு தோதாக ப்ளாக் வித் ஆஷ் கலர் ஜுவல்லரியை அணிந்துக் கொண்டாள்.

பிரீஹெர் போட்டு பறந்து விரிந்த முதுகை மறைத்தவள், முகத்துக்கு மெலிதான ஒப்பனையோடு கிளம்பி விட்டாள்.

சிம்பிள் மேக்கப் தான். உடையும் கூட ரொம்ப சிம்பிள் தான். ஆனால் அவளது வனப்புக்கும் தோற்றத்துக்கும் அது அவ்வளவு அழகாக இருந்தது...

பார்ப்பவர்களின் கண்களை ஒரு கணமாவது திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு அவளின் நளினம் இருந்தது.

கிளம்பி கீழே வந்தவளை வீட்டு ஆட்களே வியந்துப் போய் பார்த்தார்கள்.

“அழகா இருக்க கண்ணு... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. இத்தனை நாள் இந்த பொழிவை எங்க கண்ணு மறச்சி வச்ச... உன்னை இப்படி பார்க்க தான் நாங்க ஆசை பட்டோம்” என்று அவள் கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தார் பாட்டி.

அனைவரும் அதையே சொல்ல இவளுக்கு பெரும் கூச்சமாகிப் போனது. ஏந்திழையாள் வருகிறாள் என்றவுடன் ஏற்கனவே இருந்த காட்ஸை விட அதிக அளவு இறக்கினார்கள் தந்தை மார்களும் அண்ணன் மார்களும்.

“வரலன்னு சொன்னீங்க” என்று தன் கணவனிடம் கேட்டாள் திலோ...

“ம்ம் சொன்னேன் தான். ஆனா அவ இருக்கிற நிலையில எப்படி வராம இருக்க முடியும். அது தான் இன்னும் கண்ணுக்கு தெரியாத பலரை அங்கும் இங்குமாய் யுகேஷ்கிட்ட போட சொல்லி சொல்லி இருக்கேன்” என்று சொன்னவன் யுகேஷிடம் எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டான்.

கார்த்தியும் முழு மூச்சில் தங்கைக்கு முழு பாதுகாப்புக் கொடுத்தான். ஆனால்  என்ன பாதுகாப்பு போட்டாலும் காற்றின் வேகத்தோடு இருப்பவனுக்கு அணைப்போட முடியுமா...?

யாரும் இல்லாத இடமாக பார்த்து ஏந்திழையாளை மடக்கிய ராசசிங்கன் அவளின் இதழ்களோடு அழுத்தமாக தன் இதழ்களை வலுக்கட்டாயமாக புதைத்தவன் அவளின் மேனியில் தன் முகத்தை அழுந்த புதைத்துக் கொண்டான்  அரக்கனாய். அதோடு அவளின் உடைகளையும் மெலிதாக கலைத்து வைக்க விக்கித்து நின்றாள் பெண்ணவள்.

குடும்பமாக கிளம்பி அனைவரும் உடை எடுக்க சென்றார்கள். ஏந்திழையாளின் வீட்டில் பெண்கள் மட்டும் கிளம்பினார்கள். அவர்களுக்கு துணையாக இளைய ஆண்கள் உடன் வந்தார்கள். பெரிய ஆண்கள் அனைவரும் அலுவலகத்துக்கு போய் விட்டார்கள் மகன்களிடம் எச்சரிக்கை சொல்லிவிட்டு.

திலோவின் வீட்டில் இருந்து அவளது அப்பா அம்மா அண்ணன் மூவர் மட்டும் தான் வந்தார்கள். அவளின் அத்தைமார்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதால் மற்ற சொந்தங்கள் எதுவும் வரவில்லை. அதை பற்றி திலோ வீட்டில் வருத்தம் கொள்ளவும் இல்லை. திலோவை கொடுத்த சம்மந்தி வீட்டார்கள் தான் அந்த குறையே இல்லாமல் அனைவரும் வந்து சிறப்பித்து விட்டார்களே. இதைவிட வேறு என்ன வேணுமாம்.

திலோவின் அம்மா ஏந்திழையாளின் வீட்டு ஆட்களை விழுந்து விழுந்து கவனித்தார்.

“எங்களை பார்த்தது போதும் சம்மந்தி போய் பொண்ணு வீட்டை கொஞ்சம் கவனிங்க” என்று சொன்ன பிறகும் கூட அவர் நகராமல் இருந்தார்.

இப்பொழுது என்று இல்லை திலோ திருமணம் ஆகும் முன்பிலிருந்து கூட இவர் இப்படி தான். அதனால் ஏந்திழையாளின் வீட்டு பெண்கள் தான் திலோ அண்ணன் கட்டிக்க இருக்கும் வீட்டை கவனிக்க வேண்டி ஆனது.

அவர்களின் இந்த பாங்கு அங்கு இருந்த அனைவருக்கும் பிடித்துப் போனது.

“உங்க வீட்டுல இருக்கிற பெண்களை எங்க வீட்டு சொந்தங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு பேசி முடிக்கலாம் ம்மா” என்று இரு பாட்டி மார்களிடமும் பெருமை பட்டுக் கொண்டார்கள் மணப்பெண்ணின் குடும்பத்தார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 15, 2026 10:47 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top