Notifications
Clear all

அத்தியாயம் 33

 
Admin
(@ramya-devi)
Member Admin

“மாமா ப்ளீஸ்” என்று அவள் மாமா போடும் போதெல்லாம் அவனுள் மிகப்பெரும் பிரளையம் வெடிப்பது போல உணர்ந்தவன் அதை அப்படியே பெண்ணவளிடம் காட்ட தவித்து திண்டாடிப் போனாள் அவனது வேகத்தை கண்டு.

அதுவும் விடாமல் அவளை நாடும் கணவனின் தேவையை தீர்த்து வைத்தாலும் அவனது ஆசை மட்டும் குறையவே இல்லை. வராளியின் தேகம் மன்னவனின் கை வண்ணத்திலும் இதழ்களின் வண்ணத்திலும் கன்றிப் போனது.

ஏதோ தேர் வந்த வீதியாய் அவளின் நிலை இருக்கக்கண்டு துடித்துப் போனான் உதயதிபன். “சாரிடி... உன்னை பார்த்த உடனே இத்தனை நாளா அடக்கி வச்சிருந்த எல்லா உணர்வுகளும் வெளியே வந்துட்டது போல...” என்று அவளின் காயங்களுக்கு மருந்துப் போட பார்க்க,

“என்னை மட்டும் சொல்றீங்க... உங்களையும் கொஞ்சம் குனிஞ்சு பாருங்க” சொன்னவள் வெட்கத்துடன் விழிகளை மூடிக் கொண்டாள். “சரிக்கு சமாமா தான் விழுப்புண் வாங்கி இருக்கோம் போலடி” நக்கல் செய்தான் உதயாதிபன்.

“ப்ச் கிண்டல் பண்றீங்களே” சிணுங்கியவள் அவனின் பூரண கவனிப்பில் இருந்தாள் அடுத்து வந்த ஒரு வாரமும். அவளை தேடி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்துக் கொண்டு இருந்தார்கள் வராளியின் குடும்பத்தார்கள்.

உதயாதிபனை பற்றி அவனது வீட்டில் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அது எபோழுதும் நடக்கும் ஒன்றுதான் என்பதால் அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இடை தேர்தல் வருகிறது என்று அறிவிப்பு வந்தது. இந்த நேரத்தில் தன் குடும்பத்தை பற்றி வெளியே சொல்லலாம் என்று எண்ணி இருந்தவன் உயிர் நண்பன் குகன் மூலம் தன் திருமணம் செய்தியை வதந்தி போல வெளியே விட்டு இருந்தான் அன்று காலையில்.

அதுவரை உதயாதிபனை தேடாதவர்கள் இந்த செய்தியை பார்த்த பிறகு அவன் எங்கே என்று எல்லா இடமும் தேடினார்கள். பெரிய பெரிய ஹோட்டல்ஸ், ரெசார்ட், ரெசிடென்சி என ஒரு இடம் விடாமல் அத்தனை இடமும் தேடினார்கள். ஆனால் அவன் தான் குக்கிராமத்தில் இருக்கிறானே... எப்படி கண்டு பிடிக்க முடியும்.

பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் உதயாதிபனின் மாளிகையை சுற்றி வளைத்து நின்றார்கள். யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை அவர்களால். வெளியே தலை காட்ட முடியவில்லை. அதையெல்லாம் இன்னொரு இரகசிய போன் வழியாக லைவ் டெலிகாஸ்ட் பண்ணினான் குகன். தன் மனையாளுக்கு தெரியாமல் அதை பார்த்து இரசித்தவன் இதழ்களில் வன்ம புன்னகை எழுந்தது. 

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியாமல் வராளி மன்னவனின் நெஞ்சில் சொகுசு பூனையாக சுருண்டுக் கொண்டாள். மகன் தாயிடம் சுருண்டுக் கொள்ள, தாயோ அவளின் கணவனின் மீது சுருண்டுக் கொள்ள இருவரையும் எந்த சிரமும் இன்றி தாங்கினான்.

உதயாதிபன் இரவோடு இரவாக தன் பெர்சனல் பிஏ மூலம் சில ஏற்பாடு செய்து இருந்தான். அதன் படி இருவரது கல்யாண புகைப்படங்களையும் நெட்டில் விட சொல்லி இருந்தான். அதோடு பத்திரிகைகளுக்கும் டிவி சேனலுக்கும் அவனது பிஏவே புகைப்படங்களை கொடுக்க சொல்லி, மனைவியை மட்டும் அறிமுகம் செய்து இருந்தான்.

அடுத்த நாள் வெளியே வந்த செய்திதாளில் உதயாதிபன் வராளியின் திருமணப் புகைப்படம் ஒரு பக்கத்துக்கு குறையாமல் வந்து இருந்தது. அதோடு அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் எக்ஸ்க்ளூசிவாக இவர்களது திருமணப் புகைப்படம் வந்தது. அதை கேட்டும் பார்த்தும் இரு பக்கத்து ஆட்களும் உதயாதிபனையும் வராளியையும் முனைப்போடு வளை வீசி தேடத் தொடங்கினார்கள். ஆனால் இருவரும் சிக்கவே இல்லை.

இருவரும் மிக மிக உல்லாசமாக இருந்தார்கள். உதயாதிபனின் பிஏவை பிடித்து விசாரிக்க, “எனக்கு எதுவும் தெரியாது மேம்... எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல...” என்று பம்மி பதுங்கிக் கொண்டான்.

“அப்புறம் இன்னைக்கு என்ன சமையல்...?” என்று அவனின் வெற்று தோளில் தொங்கினாள் வராளி. “அம்மணிக்கு எது விருப்பமோ அது...” என்று அவளின் மூக்கோடு மூக்கு வைத்து உரசியவன் இரகசியமாய் அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் வைத்தான்.

“கன்னத்துல பள்ளமே விழுந்திடுச்சு” என்று அவனை வாரினாள். “பரவாயில்ல நான் சிமென்ட் வச்சு பூசி மேடாக்கிக்கிறேன்” என்று கமென்ட் செய்தவன் அவளை தூக்கி அடுப்பு மேடையில் அமரவைத்து அவளின் காலுக்கு இடையில் நின்றுக் கொண்டான்.

“ரொம்ப தெளிவு தான் அமைச்சர் சார்” சிரித்தவள், அவன் வெட்டி வைத்து இருந்த கேரட்டை தன் வாயில் வைத்து அவனை ஒற்றை புருவமேற்றி வேணுமா என்று கேட்டாள் பார்வையிலே.

“இப்படி உசுப்பேத்தி தான்டி காலையில சாப்பிட வேண்டிய சாப்பாடு மத்திய நேரம் ஆகியிருக்கு. சும்மா என்னை உசுப்பேத்தி விடாம இருடி. அப்புறம் நைட்டுக்கு கூட சாப்பாடு வயித்துக்கு கிடைக்காது”

“அடயேப்பா ரொம்ப தான். போங்களேன்... எனக்கென்ன வந்தது” என்று உதட்டை சுளித்தவளின் வாயில் இருந்த கேரட்டை தன் வாயில் எடுத்துக் கொண்டவன் அவளின் உதடுகளை மேலும் சிவப்பாக்கி விட்டே நகர்ந்தான்.

“மோசம் ப்பா நீங்க...” “இன்னும் எதிர் பார்க்கிறேன்டி” கண்ணடித்தான். “அதுக்கு நம்ம பெர்பாமன்ஸ் தூக்கலா இருக்கணும் அமைச்சர் சார்” அவனது காலை வாரி விட்டாள்.

“ஓ... அப்போ பெர்பாமன்ஸ் சரியில்லன்னு சொல்ற?” என்று கேட்டபடி அவளின் அருகில் மிக நெருக்கமாக வந்து நின்றான். அவனது நெருக்கத்தில் உள்ளுக்குள் பயமும் பதட்டமும் கூச்சமும் வெட்கமும் எழுந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அவனின் கண்களை பார்த்து,

“அதை நான் வாய் மொழியா வேற சொல்லணுமாக்கும்” அவனை இன்னும் உசுப்பேத்தி விட்டாள். அதை கேட்டு அவனது முகத்தில் இரசனையான புன்னகை எழுந்தது.

“அச்சோ பாவம் என் அம்மணியை ரொம்ப தவிக்க விட்டுட்டேன் போலையே...” என்று அவளின் காதோரம் சரிந்து வந்தவன் தன் மீசை முடி உரச, அவளின் காதில் எதையோ சொல்ல குப்பென்று சிவந்துப் போனது வராளியின் முகம்.

“ச்சீ... பேட் பாய்” என்று அவனின் நெஞ்சிலடித்தவள் அவனது முகத்தை பார்க்க முடியாமள் அவனது நெஞ்சிலே முகம் புதைத்துக் கொண்டாள். “மோசம் மோசம்” என்று அவனிடம் சாய்ந்துக் கொண்டே அவனது கை புஜத்தில் அடித்தாள்.

“அம்மணி தானே சொன்னீங்க” என்று விசில் அடித்தான். “இதுல விசில் வேறயாக்கும்” என்று அவனது வாயை பொத்தினாள். அவளின் உள்ளங்கையில் முத்தம் வைத்தவன் அவளை அப்படியே தூக்கி வைத்துக் கொண்டான்.

“சார் சமைக்கலையா?” என்று கலகலவென்று சிரித்தாள். அவளின் சிரிப்பை ஆழ்ந்து இரசித்தவன், “என் உணவா நீ இருக்கும் பொழுது எனக்கு எதுக்குடி தனி உணவு” கேட்டவனின் குரலில் இருந்த அழுத்தம் அவளின் முதுகு தண்டில் மின்னலை வெட்டிப்போனது.

“ரொம்ப உசுப்பேத்திட்டமோ” என்று கலவரம் கொண்டாள். அதுதான் உண்மை. பெண்ணவள் பாவமே என்று தன் முரட்டு தனங்களை எல்லாம் மூட்டை கட்டி வச்சவன் அவளே அவனை உசுப்பி விடவும் அவளை இனி விடுவானா அவன்.

புயலாய் அவளை சுழற்றி எடுத்தான். அவனது வேகத்தில் திகைத்தாள். எடுத்த உடனே அவள் அணிந்து இருந்த சட்டை பட்டன்களை அவிழ்க்க பொறுமை இல்லாமல் இரு பக்கமும் பிடித்து இழுத்தான்.

Loading spinner

Quote
Topic starter Posted : March 15, 2026 10:25 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top