Notifications
Clear all

அத்தியாயம் 14

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 1018
Topic starter  

வராளியின் பின் காலில் புடவையில் பற்றி எறிந்த தீயை தன் கையாலே அனைத்தான் உதயாதிபன்.

எல்லோரும் சுதாரிக்கும் முன்பே அவன் தீயை அனைத்து இருந்தான். தீ பற்றியதில் மிகவும் பயந்துப் போனவள் அவனின் மார்போடு ஒடுங்கி இருந்தாள். தீயை அனைத்து விட்டு அவளை சமாதனம் செய்தான் மேடையின் ஓரத்திலே. அங்கு அழகுக்காக ஸ்க்ரீன் போடப்பட்டு இருக்க, மேடையில் இருந்தவர்களுக்கு மட்டுமே அது தெரிந்தது.

அதனால் மற்ற யாருக்கும் தெரியவில்லை. இருக்கையில் இருந்து அமைச்சர் வேகமாய் எழுந்தது மட்டும் தான் தெரிந்து. அவளை அணைத்து சமாதனம் செய்தான். அவனது அணைப்பில் சிறிது நேரம் இருந்தவளுக்கு உடம்பு நடுநடுங்கி போனது பயத்தில்.

“ஒன்னும் இல்ல... சில்.. தீயை அணைச்சாச்சு.. டோன்ட் ஓரி” என்று அவளை தட்டிக்கொடுத்தவன் இரண்டு பட்டன் திறந்து இருந்த இடைவெளியில் அவனது சூடான மார்பில் அவளது முகம் பதிந்து இருப்பதை உணர்ந்தவனுக்கு என்னென்னவோ உணர்வுகள் கிளர்ந்து எழுந்தது.

ஆனால் அதை எல்லாம் அடக்கிக்கொண்டு அவளை சமாதனம் செய்ய, அதற்குள் அருகில் இருந்த ஆசிரியர்களும் அவளின் கூட இருந்த பெண்களும் வந்து அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

அவ்வளவு தான். அதன் பிறகு அவனை எங்கும் அவள் பார்க்கவில்லை. டிவியில் மட்டும் செய்தி சேனலில் தொழில்துறை அமைச்சர் அதை செய்தார். இதை செய்தார்... என அவனது வீர தீர செயல்கள் எல்லாம் வரும்.

அதை ஒரு பார்வை பார்ப்பாளே தவிர வேறு எதுவும் அவளுக்கு தோன்றவில்லை. இப்பொழுது வரை அவளுக்கு அவன் மீது எந்த எண்ணமும் தோன்றவில்லை என்பது தான் உண்மை.  

ஆயிரத்தில் ஒருத்தியாய் தன்னை மறந்து இருப்பார் என்று அவள் எண்ணி இருக்க தன்னை நினைவு வைத்து தன்னிடமே கேள்வி கேட்பவனை ஆச்சரியமாய் நிமிர்ந்து பார்த்தாள் வராளி.

“என்ன ஆச்சரியமா இருக்கா?” கேட்டான். அவள் தலையை ஆட்ட, “உனக்கு இன்னும் நிறைய ஆச்சரியம் இருக்கு...” என்று சிரித்தவன், “புடவை ஹெவியா இருக்கா? மாத்திகிறியா?” கேட்டான்.

“ம்ம்..” என்று தலையை ஆட்டினாள். “வீட்டுல என்ன போடுவ?” கேட்டான். “அது...”என்று தயங்கினாள். “தயங்காம சொல்லு” என்றான்.

“அண்ணாவோட சட்டை டீசெர்ட்.. என்னோட பாவாடை” என்றாள் தயக்கத்துடன். “ஓ...” என்றவன்,

“இங்க என்னோட டீசெர்ட், சேர்ட் இருக்கு போட்டுக்குறியா?” கண்களில் ஒரு சின்ன எதிர் பார்ப்புடன் கேட்டான். அவள் தயங்கினாள். முன்ன பின்ன தெரியாத ஒரு ஆளோட சட்டையை போடுவதா என்று இருந்தது. ஆனால் கழுத்தில் இருந்த தாலி அவன் வேறு யாரோ இல்லை. உன்னவன் என்று சொல்வது போல இருக்க தலையை ஆட்டினாள் சம்மதமாய்.

“அங்க ரூம் இருக்கு. அங்க போய் மாத்திக்க” என்றவன் அவனது விருப்பமான சட்டையை எடுத்துக் கொண்டவன் அவளுக்காக வாங்கி வைத்திருந்த உடைகளில் இருந்து மிருதுவான பாவாடை ஒன்றை எடுத்து கொடுத்தான்.

அதை வாங்கிக்கொண்டு அவன் காட்டிய அறைக்கு சென்று மாற்றினாள். ரெஸ்ட் ரூம் போயிட்டு தன்னை சுத்தமும் செய்துக் கொண்டு வெளியே வந்தாள். வந்தவளின் எழில் கோலத்தை கண்ணெடுக்காமல் பார்த்தான். அவனது பார்வையில் அவள் அசவுகாரியமாக உணர்ந்தாள்.

“காலையில ரொம்ப சீக்கிரமா எழுப்பி விட்டுட்டாங்களா?” அக்கறையாக கேட்டான். “ம்ம்” என்று தலையை ஆட்டினாள்.

“தூங்குறியா?” என்று கேட்டான். அதற்கும் தலையை ஆட்டினாள். அவள் தலையாட்டும் அழகை இரசித்தவன், “சாப்பிட்டுட்டு தூங்கு” என்றவன் கிட்சேனுக்கு கால் பண்ணி இருவருக்கும் உணவை எடுத்து வர சொன்னான்.

அவன் முன்னாடி சாப்பிட ரொம்ப தயக்கமாக இருந்தது. மிகவும் நாசுக்காக அவள் சாப்பிடுவதை பார்த்து, “இனிமே எல்லா நாளும் எல்லா நேரமும் என்னோட தான் நீ சாப்பிட்டு ஆகணும். அதனால இந்த கூச்சத்தை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இயல்பா சாப்பிடு” என்றான் இதமாய். அதற்கும் தலையை ஆட்டினாள். ஆனால் அவளால் இயல்பாக உண்ண முடியவில்லை. கூச்சமும் நாசுக்கும் அவளை ஆட்கொண்டது.

“ஊட்டி விடவா?” என்று கேட்டான். “ஹாங்” என்று அதிர்ந்துப் போனாள். “இல்ல எல்லா கல்யாணத்துலையும் மணமக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டுறது தானே வழக்கம். அதான் கேட்டேன்” என்றான் சீண்டலாய். அதை கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் நிறைந்துப் போனது.

“ஹேய் ரிலாக்ஸ் மா” என்று அவன் அவளிடம் நெருங்க, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்...” என்றாள்.

“எதுக்கு பயம்... அது தான் நான் இருக்கேன்ல... உனக்கு எதுவும் ஆகாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். நீ இந்த அறையை விட்டு எங்கும் போக வேண்டாம். இந்த அறையில என்னை மீறி யாரும் வரவும் மாட்டாங்க” என்றவன்,

“ஒருவேளை என்னை பார்த்து உனக்கு பயமா இருக்கா?” கேட்டான். உடனே அவளது தலை இல்லை என்று ஆடியது. “கொஞ்சம் கூடவா என் மேல உனக்கு பயம் இல்ல...”

“ம்ஹும்..” என்றாள். அதில் உதயாதிபனின் உள்ளம் நிறைந்துப் போக, முதல் வாயை அவளுக்கு எடுத்து ஊட்டி விட்டான். வராளி திகைத்துப் போய் அவனை பார்த்தாள். “சாப்பிடு” என்றான்.

“இல்ல நானே..” என்று அவள் தடுமாற, “நான் ஊட்டி விடுறேன் நீ சாப்பிடு” என்றான் சற்றே அழுத்தமாக. அதில் தன்னையும் அறியாமல் வாயை பிளந்தால் குருவி குஞ்சாய்.

தாய் குருவி தன் குஞ்சுகளுக்கு ஊட்டும் லாவகத்தோடு அவளுக்கு பார்த்து பார்த்து ஊட்டி விட்டான். அவனது இந்த பரிமானத்தில் கண்கள் விரிந்தது வியப்பில் அவளுக்கு.

இரண்டு வாயை ஊட்டி விடலாம் என்று தான் எண்ணினான். ஆனால் அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டதில் மொத்த உணவையும் அவளுக்கு அவனே ஊட்டி விட்டான். “கொஞ்ச நேரம் உட்காரு... படம் போட்டு விடுறேன். பாரு. பிறகு தூங்கு” என்றவன் அவளுக்கு வசதி செய்து கொடுத்து விட்டு,

“கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அதை பார்க்கிறேன்” என்று அவனது இன்னொரு அறையில் நுழைந்துக் கொண்டான். “ம்ம்ம்” என்று சொன்னவள் படுக்கையில் ஏறி அமர்ந்துக் கொண்டு மடியில் தலையணையை வைத்து கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு டிவியை ஆவேன பார்த்தாள்.

புதிதாக ரிலீஸ் ஆன படம். அவளுக்கு பிடித்த மாதிரி வகையில் இருக்க அவளையும் மீறி அவள் படத்தோடு ஒன்றிப் போனாள். பாதி பார்த்து இருப்பாள் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அப்படியே கவிழ்ந்து விட்டாள். அவளின் மடியிலே அவள் படுத்துக் கொள்ள, அந்த நேரம் வெளியே வந்தவன் அவள் தூங்கும் அழகை பார்த்து சிரித்து விட்டு அவளை நேராக படுக்க வைத்தான்.

பின் அவளை சற்று தள்ளி நின்று பார்த்து இரசித்தவன் வேலை இருக்க தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டான். அவனும் அன்று மிக சீக்கிரமாக எழுந்து இருந்ததால் அவனுக்கும் தூக்கம் சொக்கியது. கட்டுப் படுத்த பார்த்தும் முடியாமல் கண்கள் இரண்டும் எரிய ஆரம்பிக்க அவனும் அவளுக்கு அருகில் வந்து படுத்துக் கொண்டான்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top