“இன்னைக்கு எல்லா மாப்பிள்ளையும் வர்ற நாளு. இப்போ போய் அசந்து தூங்கிட்டு இருக்கீங்க. போங்க போய் மார்கெட் போயிட்டு வரும் பொழுது பூவு ஏழு முலம் வாங்கிட்டு வாங்க. அப்படியே மீன் காரனை வீட்டுக்கு வர சொல்லுங்க. நைட்டே மீன் குழம்பு வச்சுட்டா நாளைக்கு சாப்பிட நல்லா இருக்கும்” என்று தன் கணவனை வெளியே அனுப்பினார் பரபரப்புடன்.
வீட்டில் இப்பொழுது இரண்டு பேர் வேலைக்கு இருந்தார்கள். அதனால் குமுதாவுக்கு எந்த வேலையும் இல்லை. ஆதினி தான் ஏற்பாடு செய்தாள்.
“எதுக்குடி இதெல்லாம் நாங்க மூணு பேரு தானே. நான் செஞ்சுக்க மாட்டனா?” என்று சொன்னாலும் அவள் கேட்கவில்லை.
“எம்மாடி எங்க மாப்பிள்ளைங்களுக்கு ஸ்வீட் காரம் எல்லாம் போட்டு எடுத்துடுங்க. நைட்டுக்கு சன்ன மசாலா, ரொட்டி, இடியாப்பம் தேங்காய் பால் எடுத்து வச்சிடுங்க, விதுலுக்கு அப்படியே முறுகலா தோசை ஊத்திடுங்க. மீன் குழம்புக்கு எல்லாம் அரைச்சு வச்சிடுங்க” என்றவர்,
“இந்த கூடத்துல இருக்குற இருக்கையை எல்லாம் ஓரமா எடுத்து போடுங்க. அப்போ தான் விசாலமா உட்கார்ந்து படுத்து பேச அவங்களுக்கு வசதியா இருக்கும்” என்று ஒவ்வொரு வேலையாக அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தார். வாரத்தில் ஐந்து நாளும் அவர்களுக்கு பெரிதாக வேலை எதுவும் இருக்காது.
ஆனால் அதற்கு நேர்மாறாக வாரம் இறுதி இரண்டு நாளும் வேலை புழிந்து எடுத்து விடும். அக்கா தங்கை மூவரும் உதவி செய்வார்கள். இருந்தும் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.
இரு வீட்டு பெரியவர்களும் சனிக்கிழமை மத்தியத்துக்கு மேல் வந்து விட்டு ஞாயிறு இரவு உணவுக்கு பிறகு தான் கிளம்புவார்கள்.
அதனால் பெருவளத்தான் ஆதினியின் வீட்டுக்கு மேலே இதே போல நான்கு அறைக்கொண்ட படுக்கை அறையை கட்டி விட்டான். அதற்கு மேலே மொட்டை மாடி. அந்த மொட்டை மாடிக்கு வர சொல்லி தான் ஆதினியை ப்ளீஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறான் பெருவளத்தான்.
அனைவரும் மாலை ஆறுமணிக்கு வந்து விட்டார்கள் ஆதினியின் வீட்டுக்கு. கனிகாவுக்கும் சரி பெருவளத்தானுக்கு சரி எந்த தயக்கமும் இல்லை. அவளை செல்வத்தின் மனைவியாகவே பார்த்தான். அதே போல கனிகாவும் அவனை ஆதினியின் கணவனாகவே பார்த்தாள். அவள் ஆரம்பத்தில் இருந்தே அப்படி தான் பார்க்கிறாள் என்று தெரிந்த பெருவளத்தானுக்கு நெஞ்சம் கனத்துப் போனது.
“எனக்கு இது முன்னாடியே தெரிந்து இருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது கனிகா” என்று அவன் வருந்த,
“இதெல்லாம் நம்ம வாழ்கையில் நடக்கனும்னு இருந்து இருக்கு மாமா. விடுங்க.” என்றாள்.
“ஆனாலும் உன்னை தாழ்த்திக்கிட்டு எங்களை சேர்த்து வைக்கணும்னு நினைச்ச பாரு. உன் நல்ல மனதுக்கு நீ செல்வத்தோட நூறு வருடம் மகிழ்ச்சியா வாழுவ” என்று மனதார வாழ்த்தினான்.
“என்ன சகல கம்மியா சொல்ற” என்று வம்பு வளர்த்தான் செல்வம்.
“உனக்கென்ன சகல நீ விரும்புரவை மகிழ்ச்சியா என் மச்சினிச்சியோட வாழுவ” என்று பெருவளத்தான் சொல்ல அவனை தோளோடு அணைத்துக் கொண்டான் செல்வம்.
“நீயும் ஆதினியும் இருக்கிற வரை எங்க மகிழ்ச்சிக்கு என்ன குறை வரப் போகுது” என்று இருவரையும் பெருமை படுத்தினான் அவன்.
“டேய் என்னையும் சேர்த்துக் கோங்கடா” என்று பிரபுவும் அவர்களோடு சேர, இப்படி மூன்று பேரும் ஒத்துமையாக இருந்தார்கள். விதுலையும் அவர்களோடு கூட சேர்த்துக் கொள்ள மகிழ்ச்சிக்கு அளவேது...
ஆதினியின் வீட்டுக்கு வந்ததில் இருந்து பெருவளத்தான் சைகையில் மாடியை காண்பித்துக் கொண்டே இருந்தான். “நோன்னா நோ தான்” என்று சொன்ன ஆதினி அதன் பிறகு அவனை பார்ப்பதை தவிர்த்து விட்டாள்.
“அப்படி என்ன தான் சகல இருக்கும் மொட்டை மாடியில” என்று செல்வம் காதை கடிக்க,
“அவ மடியில படுத்துக்கிட்டு நிலா பார்க்கிறதே தனி சுகம் தான் சகல.. அதோட இல்லாம” என்று விவஸ்த்தை இல்லாமல் பெருவளத்தான் விவரிக்க அவனது முதுகில் கேரட் வந்து விழுந்தது நச்சென்று..
“இதுக்கு மேல சொன்னேன் அடுத்து பரங்கி காய் தான் வந்து விழும் சகல. அதனால நான் வாயை மூடிக்கிறேன்” என்றான் அவன்.
“அப்போ நானும் இன்னைக்கு நிலா பார்க்க போறேன்” என்று சொன்னான் பிரபு.
“முதல் உன் பிள்ளைக்கு டையப்பர் மாத்துடா” என்று கடுப்படித்த செல்வம் கனிகாவை பார்வையாலே தேடினான்.
“உச்சக் கட்ட அவமானம்” என்ற பிரபு தன் பிள்ளையின் டயப்பரை எடுத்து செல்வம் முகத்தின் மீதே வீசி ஏறிய ஒரே ரகளை தான்.
அடுத்த நாள் இரு வீட்டு சம்மந்திங்களும் வந்து விட இன்னும் குதூகலமாய் இருந்தது. போதாதற்கு மூன்று பேரின் பிள்ளைகளின் சத்தமும் வீட்டை நிறைக்க இதல்லவா வாழ்வு என்று எல்லோரின் மனதும் நிறைந்துப் போனது.
அன்றைக்கு தங்களின் பிள்ளைகளை அவரவர் அப்பா அம்மாவிடம் கொடுத்து விட்டு தங்களின் அறைகளில் தஞ்சம் ஆனார்கள். அதில் ஒரு இணை மட்டும் மொட்டை மாடிக்கு நழுவிச் சென்றார்கள்.
வேறு யார் ஆதினியும் பெருவளத்தனும் தான். அவளின் மடியில் படுத்துக் கொண்டு வானத்தில் விரிந்து இருந்த விண்மீன்களை எண்ணிக்கொண்டு இருந்தான்.
ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் அவளின் யாக்கையில் ஒவ்வொரு இடத்திலும் அவனது இதழ்கள் அழுத்தமாக படிந்தது...!
“இதுக்கு தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன்” என்றவளின் சிணுங்கள்கள் எல்லாம் அவனது இதழ்களிலே முடிந்துப் போனது.
குளிர் நிறைந்த வெற்று தரையில் பெண்ணவளின் முந்தானையை பாயாக போட்டவன் அவளின் மீது ஆடையாக படிந்துப் போனான்.
வன்மையான கூடலில் அவளது தேயம்(தேகம்) சற்றே நடுங்கி தான் போனது.
“இவ்வளவு வன்மையாவா தேடுவீங்க. எங்காவது மார்க் விழட்டும். அப்புறம் இருக்கு”
“அதுல தான்டி மாமாவோட வீரமே இருக்கு” என்று அவளின் கழுத்தில் கடித்து வைத்தான்.
“மண்ணாங்கட்டி உங்க வீரத்தை காட்டுறேன்னு சொல்லி நான் தான் எல்லோருக்கும் காட்சி பொருளா நிக்கணும் நாளைக்கு. அதனால எந்த மார்க்கும் என் உடம்புல இருக்க கூடாது” என்று அவள் சொல்ல,
“நீ என்னடி சொல்றது.. நான் அப்படி தான் பண்ணுவேன்” என்று அவளின் ஒவ்வொரு இடத்தையும் இவன் தன் பற்களால் காயம் செய்து வைக்க அது அப்படியே இரத்தம் கட்டிப் போய் சிவந்துப் போனது.
அடுத்த நாள் காலையில் யாரையும் எதிர்க் கொள்ள முடியாமல் இவள் சுடிதாரைப் போட பார்க்க,
“நோ வே மிச்செஸ் பெருவளத்தான்.. புடவை தான் கட்டணும்” என்று அவளை அழிச்சாட்டியம் செய்து வைத்தான்.
“மானத்தை வாங்காதீங்க மாமா” என்று உடைகளை அவனிடம் இருந்து வாங்கப் பார்த்தாள். அவன் விட்டால் தானே..
“புடவை கட்டுடி. செம்ம கிக்கா இருக்கும்” என்றவனின் முதுகிலே மொத்தி எடுத்தவள் வேறு வழியின்றி புடவையை கட்ட, அதையும் கட்ட விடாமல் அவளை இன்னும் வதைத்து எடுக்க,
“நேரமானா இன்னும் கேலி பேசுவாங்க மாமா” என்றவளின் கெஞ்சல்கள் எல்லாம் காற்றில் வரைந்த ஓவியமாய் ஆனது.. அவளை அணுஅணுவாக புசித்த பிறகே அவளுக்கு விடுதலைக் கொடுத்தான்.
“எவ்வளவு கொடுத்தாலும் உங்களுக்கு மட்டும் பத்தவே பத்தாது மாமா” அலுத்துக் கொண்டவள் அவனுக்கு முதுகு காட்டி புடவையை கட்ட,
“இந்த பக்கம் திரும்புறது” என்று உல்லாசமாய் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே பெருவளத்தான் கேட்க,
“எதுக்கு மறுபடியும் ஆரம்பிக்கவா...? ஒன்னும் வேணாம். நான் இப்படி நின்னே கட்டிக்கிறேன்” என்று முறைத்தாள்.
“முன்னாடி கண்ணாடி இருக்குன்றதையே அப்பப்போ மேடம் மறந்து போயிடுறீங்க” என்று சிரித்தான். இவளுக்கு பக்கென்று ஆனது. நிமிர்ந்துப் பார்க்க கண்ணாடி வழியாக அவளை தான் கண்ணெடுக்காமல் சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.
அவன் மீது தலையணையை தூக்கிப் போட்டவள்,
“ஒழுங்கா கண்ணை மூடுங்க முதல்ல” அதட்டினாள்.
“அதெல்லாம் முடியாதுடி. முடிஞ்சா...” என்று அவளின் காதோரம் என்னத்தையோ சொல்ல உதடுக் கடித்து அவனை இரண்டு அடி அடித்து தாங்க முடியாத அவஸ்த்தையுடன் அவனின் இதழ்களை நறுக்கென்று கடித்து வைத்தாள்.
அதை விரும்பியே ஏற்றான் பெருவளத்தான். கூடவே தானும் அவளை வன்மையாக கையாண்டான்.
மத்திய உணவுக்கு பிறகு அனைவரும் கூடத்தில் அவரவர் இணையோடு பிள்ளைகளோடு அப்பா அம்மாவோடு அமர்ந்து லேட்டஸ்ட் படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது ஆதினியின் தோளில் பெருவளத்தான் சாய அவனை தாங்கிக்கொண்டே மடியில் அவனது பிள்ளையை வைத்து இருந்தாள். ஒரே நேரம் இருவரின் தலையையும் கோதிக் கொடுத்துக் கொண்டே அவள் படம் பார்க்க, அவளின் காதோரம் அழுத்தமாக முத்தம் வைத்து,
“தோதாக தோள் சாய்ந்துவிட்டேன்டி” என்றான்.
“நானும் தான் மாமா” என்று அவனது தலையில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள் ஆதினி...!
இனி எல்லாம் மகிழ்ச்சியே...!
குறைவில்லா நேசமும், பெருகிய அன்பும், இடைவிடாத காதலும், குன்றாத மோகமும் அவர்களை சுத்தி எப்பொழுதுமே இருக்கும் என்பது திண்ணம். எனவே நாமும் இந்த மகிழ்ச்சியோடு இவர்களிடம் இருந்து விடை பெறுவோம்..!
அனைவரும் வளமுடன் வாழ்க...!
நன்றி...!
வணக்கம்..!





