Notifications
Clear all

அத்தியாயம் 46

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

“நான் அந்த நொடியை மறக்க நினைக்கிறேன். இரத்த வெள்ளத்துல உங்களை பார்த்த நொடி... கடவுளே அந்த நொடியில நான் செத்தேப் போனேன் மாமா.. இன்னொரு முறை அப்படி பண்ணாதீங்க” என்றவளை காதலுடன் பார்த்தவன்,

“நீயும் என்னை விட்டு நீங்கிப் போகாம என் கூட இருந்துப் பழகு... அப்படி பண்ணனும் யோசனை கூட வராதுடி” என்று அவளின் மடியில் இருந்தவன் அவளின் முகம் நோக்கி மேலே எழ, அவனுக்கு போக்கு காட்டி அப்படியே கழுத்தை பின்னோக்கி வளைத்துக் கொண்டாள். அதில் இன்னும் வசதியாகிப் போனவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து மீசை முடி குத்த முத்தம் கொடுத்தவன், அவள் மீது அப்படியே சரிய அவனது பாரம் தாங்காமல் மல்லாக்க விழுந்தாள்.

விழுந்தவளின் மீது முழுமையாக சரிந்தவன் அதன் பிறகு அவளை எதையும் யோசிக்க விடவே இல்லை. முழுமையாக அவளை ஆக்கிரமிப்பு செய்து தன் உணர்வுகளை அவளுக்குள் கொட்ட கண்களை மூடி அவன் கொடுக்கும் உணர்வுகளை வாங்கிக்கொண்டாள் முழுமையாக...

அவனது பற்களை கொண்டு அவளை காயம் செய்ய துடித்துப் போனாலும் தாங்கிக்கொண்டாள்.

“இவ்வளவு முரட்டு தனம் ஆகாது” என்று முறைத்தாள்.

“ரொம்ப ஆசைடி உன் மேல. எப்படி காட்டுறதுன்னு தெரியல” என்று அவன் அசடு வழிய,

“சமத்து தான் போங்க” என்று அவனை கொஞ்ச அவனது உயிர் தேடல் அவளிடம் நிறைவானது போல இருந்தது அவனுக்கு.

மெது மெதுவாக அவனது யாக்கையின் தேடல் ஆரம்பம் ஆக மாட்டேன் என்பது போல ஆதினி முரண்டு பிடிக்க, “எனக்கு உன்னோட பெர்மிஷன் தேவை இல்லடி” என்று அவள் மீது பாய்ந்தே விட்டான்.

கட்டி வைத்த காதலும் மோகமும் அன்றைக்கு அறுபட்ட நேசமும் ஒன்றாய் சேர ஆதினியை ஒருவழியாக்கினான் பெருவளத்தான்.

போதாமை போதாமை.. அவளை அள்ளி தன் மீது பூசிக் கொண்டாலும் அவளின் பால் போதாமையால் நிரம்பி இருந்தவனை கண்டு நெஞ்சம் உருகி வழிந்தது ஆதினிக்கு. அவனை இழுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டவள்,

அவனின் இதழ்களில் தன் உயிரை தொலைக்க அவளின் நெருக்கும் அன்பும் காதலும் மோகமும் இன்னும் இன்னும் வேணும் என்று அவனது மனம் முரண்டியது... தீரா காதல்... முடிவில்லா மோகம்... நீண்டு தொடரும் முத்தம்... கால வரையற்ற காமம்... கருக்கொண்ட அன்பு... என அவளுள் ஒவ்வொரு உணர்வாய் நிறைந்து தளும்பி வாழ பேராசை பிறந்தது...

இந்த ஒற்றை வாழ்க்கை போதாது அவளோடு கலந்து, கூடி, மகிழ்ந்து, உறவாடி வாழ என்று தோன்றியது..

முத்தங்களால் அவளை ஆராதித்துக் கொண்டே இருந்தான். போதாது என்று சொன்னவனின் வாயை அடைக்க முடியாமல் அவள் திணற, மாய கண்ணனாய் அவன் சிரித்து வைத்தான் அவள் படும் அவஸ்த்தையை கண்டு.

“சேட்டை... அவ்வளவும் சேட்டை” என்று கொஞ்சியவளிடம் காதல் கைக்கூடிய பேருவுவகை மிளிர்ந்தது...

“ரொம்ப வேதனை பட்டுட்ட இல்லடி...” என்று அவன் திடுதிப்பென்று கேட்க, புரியாமல் அவனை பார்த்தாள்.

“இல்ல உன் கண்ணு முன்னாடியே உங்க அக்கா கூட நான் குடும்பம் நடத்தி இருக்கேன்ல” என்று அவனது குரல் உள்ளே போக,

“கடந்து போன எதையும் நம்மளால சரி செய்ய முடியாதுன்னு தெரியாதா மாமா. போனது போகட்டும் அதை பற்றி பேசி நமக்கு என்ன ஆக போகுது சொல்லுங்க.. இப்ப அவளும் நல்லா இருக்கா. நாமளும் நல்லா இருக்கோம் அவ்வளவு தான். அதோட விட்டுட்டு நாம அடுத்த கட்டத்துக்கு போகணும்” என்று சொன்னவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

“இந்த பாசிட்டிவ் வைப் தான்டி உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடுச்சதே... லவ் யூ குட்டி, லவ் யூ சோ மச் கண்ணம்மா” என்று அவளை தனக்குள் சுருட்டிக் கொண்டான் பெருவளத்தான்.

அப்படியே அந்த நாள் அவர்களின் காதலிலும் மோகத்திலும் கழிந்தது. பசிக்கூட மறந்து ஒருவரின் ஒருவர் இதழ் முத்தங்களிலே தங்களின் பசியை போக்கிக்கொண்டு தூங்கி களைத்துப் போனார்கள்.

தன்னை முழுமையாக கலைத்து இருந்தவனை கண்டு நேசம் பொங்க முத்தமிட்டு விட்டு எழுந்து குளிக்க சென்றாள்.

குளித்து விட்டு மாற்று உடை இல்லாமல் வெறும் துண்டுடன் இருந்தவளை மீண்டும் படுக்கையில் தள்ளி அவளின் துண்டுக்கு விடுதலை கோத்து விட்டு அவளை வாரி சுருட்டிக் கொள்ள தன் மீது இருந்தவனை தள்ளி விடப் பார்த்தாள்.

“ரொம்ப டையர்டா இருக்கு மாமா. பசிக்கிது போய் தயிர் சோறு கிண்டுங்க. சாப்பிட்டுட்டு நான் கொஞ்ச நேரம் தூங்கனும்” என்று சிணுங்கியவளை வேண்டுமென்றே சீண்டி விட்டு தன் தேவையை தீர்த்துக் கொண்ட பிறகே அடுப்படிக்குப் போனான்.

“அச்சோ குளிக்காம போறீங்களே...” இவள் பதற,

“எப்படியும் மறுபடியும் அழுக்காக தானே போறேன்” என்று கண்ணடித்து விட்டு போனவனை முறைத்துப் பார்த்தாள்.

வெறும் துண்டுடன் எவ்வளவு நேரம் இருப்பது என்று சுற்றி முற்றி பார்க்க, அவளின் தோளில் ஒரு சேலை வந்து விழுந்தது.

என்ன என்று பார்க்க அது அன்றைக்கு அவன் எடுத்துக் கொடுத்த சேலை தான். “உனக்காக எடுத்ததுடி அதை வேற யாருக்கும் குடுக்க மனது வரல்” என்று உயிர் உருக சொன்னவனை பார்த்தவள்,

“அதெல்லாம் சரி தான். ஆனா இதுக்கு ப்ளவுஸ் இல்லையே” என்று கேட்டவளை முறைத்துப் பார்த்தவன்,

“ப்ளவுஸ் இருக்கு. தச்சும் வச்சுட்டேன். ஆனா இப்படி உணர்வே இல்லாம கேட்டதுக்கு தண்டனையா இன்னுக்கு உனக்கு இந்த சேலை மட்டும் தான். மத்தது எதுவும் இல்லை..” என்று இரசனையாக சொன்னவனின் முகத்திலே அந்த புடவையை விட்டு எறிந்தவள்,

“எனக்கு இதுவும் தேவையில்லை. இதையும் சேர்த்து நீங்களே வச்சுக்கோங்க” முறைத்து விட்டு நகர்ந்தவளை பிடித்து இழுத்தவன், அந்த சேலையை அவளுக்கு கட்டி விட்ட பிறகே சற்று எட்டி நின்றான்.

ஆதினியின் முகத்தில் இருந்த நாணம் அவனை நகர விடாமல் செய்ததில் மீண்டும் அவளிடம் ஒன்றிப்போனான். உச்சி வேளை வந்த பிறகும் கூட இருவரும் பிரியக் காணோம்.

“பசிக்கிதுன்னு எப்ப சொன்னேன் மாமா” என்று சிணுங்கியவளை கையோடு கூட்டிக்கொண்டு அடுப்படிக்கு சென்றவன் அங்கு தயாராக இருந்த சூடான உணவை அவளிடம் கொடுத்து சாப்பிட வைக்க, அவனுக்கும் ஊட்டி விட்டுக் கொண்டே இருவரும் சாப்பிட்டு எழுந்தார்கள்.

அந்த நேரம் லேண்ட் லைன் போன் அடிக்க எடுத்துப் பேசினான் பெருவளத்தான்.

“ஏன் சகல.. போதுமா நேரம் இல்ல இன்னும் நேரம் வேணுமா...? நேத்துல இருந்து உங்க செல்லுக்கு, ஆதினி செல்லுக்கு, லேண்ட் லைனுக்குன்னு மாத்தி மாத்தி போன் போட்டுட்டு இருக்கோம்” என்று அழாத குறையாக சொன்னான் பிரபு.

“சாரி சகல... கொஞ்சம் பிசி” என்றான் புன்னகையுடன்.

“உங்க பிசியில போட்டு ரெண்டு அடி அடிக்க... ரெண்டு பேரும் முறைச்சுட்டு போனீங்களே சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்கன்னு நினைச்சு கால் மேல கால் போட்டா இப்படி பண்றீங்களே...” என்றான் தாங்களாக.

“டேய் உன் பாசத்துல தீயை வைக்க” என்று பிரபுவிடம் இருந்து போனை வாங்கியவன்,

“சகல சொன்னா அவன் கேட்காம போன் போட்டுட்டான். இப்போதைக்கு சோறு முக்கியம் இல்லன்னு சொன்னா கேட்க மாட்டிக்கிறான்” என்று செல்வம் கலாய்க்க,

“சும்மா மாமாவை வாராதீங்க” கனிகா சண்டைக்கு வந்தாள்.

“அடேயப்பா இங்க சப்போட்டுக்கு நிக்கிறதை பாரு” என்று அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்,

“சகல இன்னைக்காவது பூட்டிய அறைக்கதவு திறக்குமா திறக்காத” என்று சிரித்தான்.

“அட போங்க சகல... அதுக்குள்ள என்ன அவசரம்... அப்படியே அப்பா அம்மாவை அங்கேயே வச்சுக்க சொல்லுங்க மாமனார் மாமியாரிடம்” என்று வெட்கமே இல்லாமல் சொன்னவனின் முதுகிலே இரண்டடி போட்டாள் ஆதினி.

“சரியான வெட்கம் கெட்ட மனிதரா இருக்காரு” முணகிக்கொண்டாள்.

“வயித்தெரிச்சலை கிளப்பாம ஒழுங்கா வா சகல... குழந்தை பிறந்து இருக்குன்னு இங்க இவ பக்கத்துலையே விட மாட்டிக்கிறா” என்று நொந்துக் கொண்டான் செல்வம்.

“உங்களுக்கு சமத்து போதல சகல” என்று பெருவளத்தான் வாரி விட,

“அப்போ நானும் மாமனார் மாமியார்கிட்ட சொல்லி என்னோட அப்பா அம்மாவையும் இங்கேயே இருக்க வச்சிட்டு வீட்டுக்கு கிளம்புறேன். கதவு திறக்க நாங்களும் ஒரு வாரம் ஆக்குவோம்” என்றான் கெத்தாக.

“நாங்கலாம் ஒரு மாசம் ஆகும்” என்று பெருவளத்தான் செல்வத்தை சீண்டி விட,

“அப்போ நான் ஆறு மாதம்...” என்றான் செல்வம்.

“அப்போ நான் ஒரு வருசம்” ஆகும் என்றான் இவன்.

“அப்போ நான் மட்டும் என்ன இளிச்ச வாயா... நான் கதவை திறக்க ரெண்டு வருசம் ஆகும்” என்றான் பிரபு.

“அதுக்கு முதல்ல மூணு பேரும் வாயை மூடணும்” என்று இந்த பக்கம் ஆதினியும், அந்த பக்கம் கனிகாவும் சஞ்சுவும் இடுப்பில் கை வைத்து முறைக்க, போன் லைன் எப்பவோ கட்டாகிப் போனது. ஆண்கள் எப்பொழுதும் ஆண்கள் என மூவரும் நிரூபித்தார்கள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top