Notifications
Clear all

அத்தியாயம் 45

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 1 year ago
Posts: 992
Topic starter  

வீட்டுக்குள் நுழையும் பொழுதே விபத்து நடந்த அன்றைக்கு நடந்த சம்பவங்கள் மனதில் எழ பெருவளத்தான் இன்னும் மூர்கமானான்.

கோவம் கோவம் கட்டுக்கடங்காத கோவம் வந்தது. எல்லோரும் தன்னை ஏமாற்றியது போல உணர்ந்தான். அந்த மொத்த கோவமும் ஆதினியின் மீது வர “ஒழுங்கா சாப்பிட ஏதாவது செய்து வை” என்று அதிகாரமாக சொல்லி விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்.

நேற்று குளித்தது. இருந்த துக்கத்தில் பசி, தூக்கம், குளியல் என எதையும் செய்யவில்லை. மனம் முழுக்க ஆதினியின் நினைவு மட்டுமே இருந்தது. அதை எண்ணி ஒரு பக்கம் மகிழ்ச்சி தன் என்றாலும் ஆதினியின் மீது கட்டுக் கடங்காத கோவம் இருந்து. அதை விட தீவிரமான காதல் இருந்து.

அதை எல்லாம் காட்ட முதலில் குளித்து விட்டு வருவோம் என்று குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

அடுப்படியில் ஆதினி சமைத்துக் கொண்டு இருந்தாள் கடுப்புடன்.

“ரொம்ப தான் அதிகாரம் பண்றாரு. நாலு வருடம் கழிச்சு உண்மையை தெரிஞ்சுக்கிட்டு இப்போ வந்துட்டு ஓவரா சீன் போட்டுட்டு இருக்காரு. ஹும் ரெண்டு நிமிடம் கழிச்சு வந்து இருந்தா நான் வேற ஒருத்தரோட மனை...” முடிக்கும் முன்பே அவளின் வாயை முரட்டு கரம் பொத்தி இருந்தது.

இவள் பின்னால் திரும்பி பார்க்க பெருவளத்தான் தான் நின்று இருந்தான் கடுப்புடன். அவனது கையை தட்டிவிட்டு,

“என்ன முறைப்பு... அது தானே உண்மை. எவனுக்கோ தரை வார்த்துக் கொடுக்க முடிந்ததுல உங்களால” என்று அவள் கேட்க அவன் முறைத்துப் பார்த்தான்.

“இந்த முறைக்கிற வேலை எல்லாம் இங்க வேணாம். சாப்பிட்டுட்டு இடத்தை காலி பண்ணுங்க” என்றவள் அடுப்பு பக்கம் திரும்பிக் கொள்ள, அப்படியே அவளை பின் பக்கமாய் இருந்து இறுக அனைத்துக் கொண்டான்.

சாப்பாடாவது ஒன்னாவது.. போங்கடா எனக்கு என் ஆதினி வேணும் என்று அடுப்பை அணைத்தவன் அவளை அலேக்காக தூக்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் அதிரடியாய்.

அவனது இந்த அவதாரத்தை பார்த்து திகைத்தவள், “இறக்கி விடுங்க முதல்ல. எனக்கு வேலை இருக்கு. நான் ஆபிஸ் போகணும்.” என்று சொன்னவளை முறைத்துப் பார்த்தவன் அவளை அப்படியே படுக்கையில் போட்டவன் கொஞ்சமும் தாமதிக்காமல் அவளின் மீது பொத்தென்று விழுந்து வைத்தான்.

விழுந்த வேகத்திலே அவளை கொள்ளையிட ஆரம்பிக்க திகைத்துப் போனாள் ஆதினி.

“நோ... ப்ளீஸ். ம்ஹும்... பொறுக்கி விடுடா.” என்ற அவளின் முணகல்கள் எல்லாம் காற்றில் கரைந்துப் போனது.

மனதில் இட்ட பட்டியல்கள் எல்லாம் எங்கு காணமல் போனது என்று தெரியவில்லை. அவளின் மீது உள்ள காதல் முழுமையான காமமாகிப் போனது அவள் சொன்ன ஒரு வரியில்.

இவளும் தன்னை தேடி இருக்கிறாள் என்று அறிந்த உடன் உடைத்துக் கொண்டு பொங்கிப் பெருகியது காதலோடு கூடிய காமம். தன்னை அடக்க முடியாமல் அடக்கி வைத்த உணர்வுகள் எல்லாம் வெடித்துக் கொண்டு கிளம்ப அலையில் சிக்கிய துரும்பாய் ஆனால் ஆதினி.

மூச்சு முட்ட முத்தம் வைத்து அவளை நோகாமல் நோகடித்து தனக்குள் சுருட்டிக் கொண்டவன் அவளை சுகமாக இம்சை செய்து வதைத்து எடுக்க, மூச்சு முட்டிப் போனாள்.

“ஏன் இவ்வளவு போர்ஸ்” என்று அவள் அவனின் காதோடு கேட்க,

“எனக்கு இந்த வேகமே பத்தலடி. நீ எனக்குள்ள உள்ள வந்திடேன்” என்று கேட்டவனின் காதலில் சுகமாக தன்னை தொலைத்தவள் அவனை கொண்டாட கண்கள் மின்னியது அவனுக்கு.

“ஹேய்” என்று அவன் கூச்சல் போட,

“இப்படி கத்துனா எதுவும் கிடையாது” என்று தன் சேலையை எடுத்துப் போர்த்திக் கொள்ள,

“நோடி. ஐ லவ் திஸ் மொமன்ட்..” என்று அவளின் கையில் பிள்ளையாகிப் போனான். முகம் சிவக்க அவனை கொஞ்ச,

“இன்னும் கொஞ்சம் கொஞ்சேன்” என்று அவன் கேட்க அவனின் முகத்தோடு தன் முகத்தை வைத்து அழுத்தியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது. அதே போல பெருவளத்தானுக்கும் உணர்வு மிகுதியில் காதலின் அழுத்தத்தில் கண்ணீர் சுரந்தது.

“உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்டி.. உன் முகத்தை பார்ப்பது கூட குற்றம்னு என்னை நானே தண்டிச்கிக்கிட்டேன் தெரியுமா? ஆனா என்னையும் மீறி உன்கிட்ட தான் என் கால்கள் வந்து நிற்கும். கல்யாணம் ஆன புதிதில் கூட நான் உங்க வீட்டுக்கு வரும் பொழுது உன்கிட்ட தான் அதிக நேரம் இருந்து இருக்கேன். நீ சொல்லாமலே உன்னக்கு பிடித்த இனிப்புக்களை என் கை வாங்கும். அது ஏன்னு எல்லாம் யோசிக்கவே இல்லடி. ஆனா இப்போ எனக்கு தோணுது. இந்த மஞ்சள் கயிறு மேஜிக் தான் இது எல்லாத்துக்கும் காரணம்னு” என்று சொன்னவனை முறைத்துப் பார்த்தாள்.

அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,

“அன்னைக்கு இதே அறையில் உன்கிட்ட அத்துமீறுனேன் பாரு அப்போ எனக்கு மின்சாரம் தாக்கிய மாதிரி ஒரு உணர்வு. என் எல்லா தேடலும் உன்கிட்ட வந்து முடியிற மாதிரி ஒரு உணர்வு. அதனால் தான் அன்னைக்கு உன்கிட்ட ரொம்ப அதிகமா உரிமை எடுத்துக்கிட்டேன் போலடி” என்றவனுக்கு முகம் சிவுசிவு என்று மாற,

“அன்னைக்கு நான் தொட்டதுனால தானே நீ லாரியில மோதப்போன” என்று அவளின் பின் பக்க கூந்தலை பற்றி இழுத்து தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்து கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

“அதுக்காக ஒன்னும் நான் போய் சேர நினைக்கல.. முத்தம் குடுக்குறதும் குடுத்துட்டு சட்டுன்னு தலையில அடிச்கிக்கிட்டீங்களே அப்போ நீங்க உங்க மனசுல என்ன நினைச்சு எவ்வளவு அருவேருத்துப் போய் இருப்பீங்கன்னு தான் போய் சேரலாம்னு முடிவு பண்ணினேன்” என்றவளை முறைத்துப் பார்த்தான்.

“லூசாடி நீ நான் ஏன்டி உன்னை அப்படி நினைக்கப் போறேன்”

“அப்புறம் சார் எதுக்கு தலையில அடிச்கிக்கிட்டீங்கலாம்?” கடுப்புடன் கேட்டாள்.

“அடியேய் நான் தலையில அடிச்சுக்கிட்டது உன்னை நினைச்சு இல்லை. சின்ன பிள்ளைக்கிட்ட போய் இப்படி நடந்துக்கிட்டமேன்னு தான். குறிப்பா என்னை தான் என் நடத்தையை எண்ணி தான் தலையில அடிச்சுக்கிட்டேன். சத்தியமா உன் மேல எனக்கு அப்படி ஒரு தவறான எண்ணம் வரவே இல்லடி. உன் மனதை நான் கலைத்து விட்டனேன்னு தான்” என்று சொன்னவனை பார்த்தவளுக்கு இன்னும் கோவம் தீர்ந்த பாடில்லை.

“அதுக்காக உங்க உயிரை பணையம் வச்சு என்னை காப்பத்தணுமா?”

“அதனால தானே நீ என்னை மாமான்னு கூப்பிட்ட” என்று புருவம் தூக்கி கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.

“கல்யாணம் ஆகி எல்லோரும் மாமான்னு கூப்பிட்டாங்கடி. ஆனா நீ ம்ஹும் ஒரு முறை கூட கூப்பிட்டது இல்லை. உன் வாயில இருந்து அது வரும்னு இவ்வளவு நாளும் எதிர்பார்த்தேன். ஆனா அழுத்தம்டி நீ கூப்பிடவே இல்லை. ஆனா அன்னைக்கு விபத்தின் போது மட்டும் இந்த உலகமே அதிர நீ மாமா மாமான்னு கூப்பிட்டது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.” என்றான் அவள் மீது கொண்ட பேராசையுடன்.

“போதும்... எதுக்காக உங்க உயிரை பணையம் வச்சிங்க? செத்து போயிட்டேன் தெரியுமா?” விழிகள் கலங்க கேட்டவளை ஆழமாக பார்த்தவன்,

“நீ போய் லாரியில மோதும் போது தான்டி உன் மேல எனக்கு இருந்தது காதல்னே புரிந்தது. உன் இடத்துல வேறு யார் இருந்தாலும் இந்த காரியத்தை செய்து இருப்பானனான்னு எனக்கு இப்பொழுது வரை சந்தேகம் தான். ஆனால் உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கவே முடியாதுடி. நீ என்னோட் ஒரு பாதின்னு அந்த கணம் புருஞ்சுக்கிட்டேன். அடிபட்டு அவ்வளவு காயம்... அவ்வளவு வலி ஆனாலும் நீ சொன்ன மாமா ன்ற வார்தையில எல்லாமே மறந்துப் போச்சுடி. என் வாழ்கையில மறக்க முடியாத தருணம்னா அது இது தான்” என்றவனை தன் நெஞ்சோடு கட்டிக் கொண்டாள்.

“நான் அந்த நொடியை மறக்க நினைக்கிறேன். இரத்த வெள்ளத்துல உங்களை பார்த்த நொடி... கடவுளே அந்த நொடியில நான் செத்தேப் போனேன் மாமா.. இன்னொரு முறை அப்படி பண்ணாதீங்க” என்றவளை காதலுடன் பார்த்தவன்,

“நீயும் என்னை விட்டு நீங்கிப் போகாம என் கூட இருந்துப் பழகு... அப்படி பண்ணனும் யோசனை கூட வராதுடி” என்று அவளின் மடியில் இருந்தவன் அவளின் முகம் நோக்கி மேலே எழ, அவனுக்கு போக்கு காட்டி அப்படியே கழுத்தை பின்னோக்கி வளைத்துக் கொண்டாள். அதில் இன்னும் வசதியாகிப் போனவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து மீசை முடி குத்த முத்தம் கொடுத்தவன், அவள் மீது அப்படியே சரிய அவனது பாரம் தாங்காமல் மல்லாக்க விழுந்தாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top