ஆதி உடற்பயிச்சி செய்துக் கொண்டு இருக்க, “காபி வேணுமா?” வந்து கேட்டாள் மகரி.
“நீ போட்டியா?” என்று கேட்டான்.
“நான் ஏன் போடப்போறேன்.. வாணி போட்டா” என்று சொன்னவளின் பார்வை மொத்தமும் அவனின் வியர்வை வழியும் தேகத்தில் ஊர்ந்தது.
“ம்ம் பாடியை நல்லா தான் மெயின்டெயின் பண்றீங்க..” என்றவளிடம் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து பயிற்சி செய்ய,
“காபி குடிக்கலாம் இல்லையா?” கேட்டாள்.
“ம்ஹும்” என்று விட்டு அவன் தொடர,
“சரி போங்க” என்றவள் அந்த காபியை தான் எடுத்து பருகியவள், “ஆபிஸ் போகலையா?” கேட்டாள்.
“உங்க அண்ணன் ரெண்டு பேரும் விட மாட்டேங்குறாணுங்கலே” கடுப்படித்தான்.
“ம்கும் மூக்கு வழியா ரத்தம் வருது.. இதுல உங்களுக்கு ஆபிஸ் வேணுமாக்கும்” சிலுப்பிக் கொண்டவள்,
“காலையில என்ன ப்ரெட் டோஸ்ட்டா?” என்று கேட்டாள்.
“அதை நீ செய்ய போறியா என்ன?” நக்கலாகவே கேட்டான்.
“ம்ஹும் எனக்கு அதெல்லாம் வராதே. நான் எங்க டோஸ்ட் பண்ண, வாணிட்ட சொல்லி செய்து வைப்பேன் இல்லையா?” கேட்டவளை பார்த்து பெருமூச்சு விட்ட ஆதி,
“நோ நீட்..” என்றவன் அவளை இழுத்து தன் மீது போட்டு அவன் தண்டால் எடுத்தான்.
“அச்சோ ஓரே ஈரமா இருக்கு..” அவனின் வியர்வை அவள் மேனியில் பட்டு ஈரமாக அலறினாள்.
“அதனால என்ன.. போய் குளிச்கிக்கோ..” என்றவன் விடாமல் தண்டால் எடுத்தான்.
அவன் மீது ஒய்யாரமாக படுத்துக் கொண்டவள்,
“ஆமா இப்படி எல்லாம் வெயிட் தூக்குனா உடம்புக்கு எதுவும் ஆகாதா.. ஏற்கனவே உங்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம். இதுல இதை வேற இழுத்து வச்சுக்கிட்டா என்ன பண்றது..” கேட்டவளை இழுத்து தனக்கு கீழ் போட்டு அவள் மீது தன் முழு எடை படும் மாதிரி பரவி படர்ந்தவன்,
“என்னை பத்தி ரொம்ப தான் கவலை படுற.. என்ன விசயம். உன் பேமஸ் லவர் பாய் இதை பார்த்தா நெஞ்சு வெடிச்சு செத்துட மாட்டானா?” நக்கல் குரலில் கேட்டான்.
“ப்ச் அவன் தான் இங்க இல்லையே.. அதனால ஒன்னும் தவறு இல்ல..” சொன்னவள்,
அவன் தன் மீது இருப்பதை உணராமல், “ஆமா எப்படி உங்களுக்கு இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆச்சு.. நீங்க முன்னாடி நல்லா தானே இருந்தீங்க” என்று கேட்டவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“அதை பத்தி என்ன இப்போ விசாரணை. அதை விடு காலையில எழுந்து குளிச்சுட்டு சேரி கட்ட சொன்னனே.. கட்டல” என்று கேட்டான்.
“ஏதே சேரியா? அட போங்கப்பா சுடிதார் போட்டுறதே பெருசா இருக்கு. இதுல உங்களுக்கு சேரி வேற வேணுமாக்கும். ரொம்ப கம்பர்ட் த்ரீ போர்த் டீசேர்ட் தான்..” என்றாள்.
“அதுக்கு வாய்ப்பே இல்ல சேரி கட்டியே ஆகணும்” என்றவனின் பார்வை அவளின் மீது அத்துமீறி பாய,
“வேணவே வேணாம் ப்பா” என்றவள்,
“எழுந்திரிங்க மூச்சு முட்டுது” என்று சொல்லி அவனிடம் இருந்து எழுந்துக் கொண்டவளை அன்று மாலை நேரம் கடை தெருவுக்கு அழைத்துச் சென்று வேணும் வேணாங்குற அளவுக்கு சேரியாக வாங்கிக்குவித்தான்.
“எதுக்கு இவ்வளவு? எனக்கு கட்டவே தெரியாது” என்று அவள் மறுக்க,
“நான் கட்டி விடுறேன்.. நீ தினமும் சேரியா கட்டுற”
“எதுக்கு என் இடுப்பை பிடிச்சு கிள்ளவா?” முறைத்தாள்.
“அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்போ எடு” என்றவனின் முன்பு குவிந்து இருந்த புடவை குவியல்களில் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்.
“சார்..” என்ற குரலில், “சொல்லுங்க” என்று திரும்பியவன், அந்த கடை முதலாளில் வந்து நிற்க, லேசாக அதிர்ந்தான்.
“சார் புது கலக்ஷன் வந்தா எடுத்து சொல்ல சொல்லுவீங்க இல்லையா? எடுத்து வச்சு இருக்கேன். மூணு மாசமா அந்த கலெக்ஷன் எல்லாம் அப்படியே இருக்கு. எல்லாமே புது ரக புடவைகள், கலரும் அருமையா வந்து இருக்கு. எல்லா கஷ்டமரும் கேட்டுட்டே இருக்காங்க. நான் தான் உங்களுக்கு போக மீதியை எடுத்து போடலாம்னு தேக்கி வச்சு இருக்கேன்”
“குடோனுக்கு வாங்க சார்.. அங்க தான் புடவை ரக ரகமா அடுக்கி வச்சு இருக்கோம்” என்று சொல்லி அழைத்துப் போக,
“புடவையா? உங்களுக்கு எதுக்கு புடவை.. அதுவும் மாசம் மாசம் வாங்க வருவதா சொல்றாரு..” குறுக்கே கேள்வி கேட்டவளை அது இது என சமாளித்து வருவதற்குள் இவனுக்கு போதும் போதும் என்றாகிப் போனது.





