“நத்திங்” என்றவள் பெருவளத்தானை நேரடியாக பார்க்க முடியாமல் தடுமாறியவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று,
“என்ன ஆச்சு... ஏன் சப்ளை சரிவர வரல...?” என்று கம்பீரமாகவே கேட்க முனைந்தாள். ஆனால் அதில் சிறு பிசிறு தெரிந்தது என்றாலும் கம்பீரமாக தான் குரல் வந்தது. ஆனால் பெருவளத்தானுக்கு அவளுடைய குரல் வளமும் நிமிர்வும் நன்கு தெரியுமே... அதனால் அவளிடம் ஏற்பட்ட இந்த சின்ன வித்யாசம் கூட நன்றாக புரிந்தது. தான் வந்தவுடன் அவளின் கண்கள் தன்னை உச்சந்தலை முதல் பாதம் வரை ஆராய்ந்ததும் அதை தொடர்ந்து தன் தோற்றத்தில் தென்பட்ட தோய்வில் அவள் கண்கள் கலங்கியதும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்.
“இந்த அளவு காதலை வச்சுக்கிட்டு எப்படிடி இத்தனை வருடமும் என்கிட்டே எட்டி இருக்க முடிஞ்சுது... ஆனா என்னால முடியலடி... ஒரு கணம் கூட உன்னை விட்டுட்டு தனிச்சு நிற்க முடியல... உன்னை அள்ளி எடுத்து என் நெஞ்சுக்குள்ள பூட்டி வச்சுட்டு யார் கேட்டாலும் குடுக்க மாட்டேன்னு முரண்டு பண்ணி உங்கிட்ட மட்டும் தணிந்து போகணும்னு தோணுதுடி” என்று உள்ளுக்குள் பொங்கிக்கொண்டு வந்த காதலை அப்படியே அணை போட்டு தடுத்து விட்டு,
“சாரி மேம். இனி இருக்காது.” என்றான் மரியாதையாக. ஏனெனில் அவள் இருந்த உயரம் அப்படி என்பதால் எல்லோரின் முன்னிலையிலும் மரியாதையாக நடந்துக் கொண்டான். அவளிடம் தலைந்துப் போகவே மனம் துடித்தது.
“கவனம் வேலை மேல இருக்கணும் மிஸ்டர் பெருவளத்தான்... நமக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கும் அதை எல்லாம் நம்ம வேலையில காண்பிக்கக் கூடாது..” என்று ஆதினி அறிவுறுத்த,
“சரிங்க மேடம்” என்றான் இரகசிய புன்னகையுடன். அவனுக்கு மட்டும் தானே தெரியும். எங்கே அடித்தால் எங்கே விழும் என்று.
இயல்பாக இருவரும் பார்த்துக் கொள்ள கூடாது என்று அவர்களுக்குள் சொல்லாமலே ஒரு கட்டுப்பாடு போட்டுக் கொண்டார்கள் ஒத்த மனதினர்.
அதனால் அந்த கட்டுப்பாட்டுடனே இருந்தார்கள் இருவரும். ஆனால் நீண்ட நாட்கள் ஆகவும் பெருவளத்தானுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மணல் சிமென்ட் சப்ளையை நிறுத்த சொல்லி விட்டான்.
எப்படியும் தன்ன கூப்பிடுவாள் என்று கணக்கு போட்டான். அது போலவே ஆதினியும் அவனை கூப்பிட்டாள். இதோ கூப்பிட்டு அவளின் எதிரில் அவளை கண்களால் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
என் மெலிவை பார்த்தவள் அவள் மெலிந்து போய் இருப்பதை மட்டும் எங்கனம் காண மறந்தாள் என்று ஆவேசம் கொண்டான்.
“என்னை விட நீ தான்டி ரொம்ப இளைத்து போய் இருக்க... சாப்பிடுவியா மாட்டியாடி. என்னோட ஒரு பிடிக்கு காண மாட்ட போலையே..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனது கவனத்தை கலைக்கும் வண்ணமாக,
“குட்... இந்த ஒருமுறை உங்களுக்கு எஸ்க்யூஸ் குடுக்கிறேன். நெக்ஸ்ட் டைம் இப்படி பெர்மிஷன் கேட்டு நிக்காதீங்க. ஏன்னா உங்களை வச்சு தான் ஒவ்வொரு நாளும் எல்லாரோட வேலையும் இருக்கு. சோ கேர்புல்லா இருங்க” எச்சரித்தாள்.
“எஸ் மேம்” என்றான் மீண்டும்.
“தட்ஸ் ஓகே...” என்றவள்,
“காபி ஸ்நேக்ஸ் சொல்லுங்க இஞ்சினியர்” என்று அருகில் நின்ற ஜூனியரிடம் சொன்னவள், “குடிச்சுட்டு போகலாம்” என்று அப்போது மட்டும் திரும்பி நின்று அவனிடம் சொன்னாள். அதற்கும் தலையை ஆட்டினான்.
மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் தடுமாற, “பில்டிங்கை சுத்தி பார்க்கலாமா மேடம்” என்று அனுமதி கேட்டான். அவளின் பொறுப்பில் அவளின் கவனிப்பில் அவளின் டிசைனில் உருவாகும் இடத்தை சுற்றிப் பார்க்க அவனின் மனம் விரும்பியது.
“ம்ம்” என்றவள் அவனுடன் ஒரு ஜூனியரை அனுப்பி வைத்தாள். “சாருக்கு ஹெல்மெட் ஒன்னை குடுத்து கூட்டிட்டு போங்க” என்று எச்சரித்தவளின் அக்கறையில் மனம் தேனாய் தித்தித்தது...
முதல் தளம் சுற்றி பார்க்கும் பொழுதே காபியும் ஸ்நேக்சும் வந்து விட அவனுக்கு தன் கரத்தால் எடுத்துக் கொடுத்தவளை சுற்றி இருந்த அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள்.
“மேம் நாங்களே பண்றோம். நீங்க ஏன்?” என்று அவர்கள் பதறிப்போக,
“நோ ப்ராப்ளம். யூ கேரியான்” என்று தங்களின் இருவருக்கு மட்டும் எடுத்துக் கொண்டவள் ஒன்றை எடுத்து பெருவளத்தானுக்கு கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
அவளின் உபசரிப்பை கண்டு உள்ளுக்குள் நெகிழ்ந்தவன் அவள் கரம் பட்டு வந்த காபியை ஆழ்ந்து ருசித்தான். அவனுக்கு பிடித்த ஆனியன் பக்கோடா ப்ளஸ் பெப்பர் ஸ்நேக்ஸ் வாங்கி இருப்பதை பார்த்து இன்னும் நெகிழ்ந்தான். அவளை உரிமையுடன் அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் கண்கள் அவனது சொல் பேச்சை கேட்காமல் ஆதினியையே சுற்றி வந்தது.
“வெளில போகும் பொழுது நீட்டா வாங்க” என்று எங்கோ பார்த்துக் கொண்டு ஆதினி சொல்ல குனிந்து தன் உடையை பார்த்தான்.
குறை சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் இவள் ஏன் இப்படி சொல்கிறாள் என்று புரியவில்லை.
“ஏன்” என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்தான்.
பதில் எதுவும் சொல்லாமல், “டுயிட். தட்ஸ் ஓவர்” என்று அதிகாரமாக சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.
“அதே போல நீயும் கொஞ்சம் சாப்பிடு. ஊதுனாவே உடைந்து விடும் அளவுக்கு இருக்க” என்றான். அதில் முறைத்துப் பார்த்தவள், “ஓகே உங்க மீட்டிங் முடிஞ்சுது” என்று விட்டு அவள் தன் வேலையை பார்க்க, அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து நிதானமாக தனக்கு கொடுத்ததை சுவைத்து ரசித்து உண்டவன் மீதம் இருந்த தளத்தையும் சுற்றி பார்த்து தன்னவளின் திறமையினை மெச்சிக் கொண்டவன் ஒரு தலை அசைப்புடன் கிளம்பிவிட்டான். இவன் வெளியே வரவும் கனிகா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவளை இங்கே கண்டு புருவம் சுறுக்கினான். “இங்க என்ன பண்றீங்க?” வந்ததும் வராததுமாக கேட்டவளை பொறுமையுடன் பார்த்தவன், “க்ளைன்ட்டை மீட் பண்ண வந்தேன்” என்றான்.
“ஓ உங்க கிளைன்ட் ஆதினி இல்லையா...?” நக்கலுடன் கேட்டவளை கண்டு கோவம் வந்தாலும் கண்களை மூடி பொறுமையை கைக்குள் கொண்டு வந்தவன்,
“இல்லை இந்த பில்டிங் சீப் இஞ்சினியர் மிஸ் ஆதினியை பார்க்க வந்தேன்” என்றான் அழுத்தமாக.
“நான் சொன்னதுக்கும் நீங்க சொன்னதுக்கும் வித்யாசம் ஏதுவுமில்லையே. சோ இவ்வளவு நடந்தும் உங்களுக்கு ஒரு மனைவி இருந்தும் நீங்க அவளை தேடி வந்து இருக்கீங்கன்னா உங்களுக்கு கல்யாணம் எதுக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி எதுக்கு” என்று ஆவேசமாக கேட்டவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“அதுக்கு நீ தான் பதில் சொல்லணும்” என்று விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு அவன் போய் விட்டான். அதில் பெரும் அவமானத்தை உணர்ந்தவள் ஆதினியை பார்த்து நாக்கை பிடுங்கிற மாதிரி எல்லோரின் முன்னிலையிலும் அவமானப்படுத்த திட்டம் போட்டவள், அவளை தேடிப்போக கேட்டின் முன்னாடியே அவளை மறித்து அப்படியே வெளியே அனுப்பப்பட்டாள்.
வேறு வழியின்றி “நான் ஆதினியோட அக்கா” என்று கனிகா சொல்ல,
“சாரி நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை. வேலை நேரத்துல எங்க மேடம் யாரையும் அனாவசியமா மீட் பண்றதை விரும்ப மாட்டாங்க... சோ நீங்க ஆபிஸ்லையோ இல்ல அவங்க வீட்லையா மீட் பண்ணலாம்” என்றனர்.
அசிங்க பட்ட கோனி😆😆😆😆
பத்தல பத்தல .....ஐ want more🤩🤩🤩🤩🤩





