“என்கிட்டே தன்மானம் மட்டும் தான் இருக்கு. ப்ளீஸ் அதையும் நீங்க பறிக்க பார்க்காதீங்க” என்று கையெடுத்து கும்பிட்டவள் வெளியே போய் விட்டாள்.
அவளின் பேச்சில் உறைந்து போய் விட்டான் சில கணங்கள். பின் பெருமையாக சிரித்துக் கொண்டவன் அவளை தொடர்ந்து வெளியே வந்தான். அவனுக்காக காத்திருக்காமல் பொடி நடையாக நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அவளின் பின்னோடு இவனும் நடந்தான் இடைவெளி விட்டு. அதற்குள் விதுல் பாதி தூரத்தில் வந்து இருந்தான். நடக்க முடியாமல் நடந்து வருபவளை தோளோடு தாங்கிக் கொண்டவனின் கண்களில் வேதனையும் வலியும் அதிகம் இருந்தது.
“அது மொத்தமும் சுயநலம் பிடிச்ச கும்பல் க்கா. அதுக்கிட்ட போய் இப்படி நீ எல்லாத்தையும் இழந்து நிக்கிற பாரு...” என்று அவன் சொல்லும் பொழுதே சட்டென்று அவனது கையை இறுகப் பற்றி பின்னாடி கண்ணை காண்பித்தாள். அப்பொழுது தான் சற்று இடைவெளி விட்டு பெருவளத்தான் வந்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.
“சாரிக்கா இந்நேரம் எல்லாவற்றையும் உளறிக் கொட்டி இருப்பேன்” என்று சுதாரித்துக் கொண்டவன்,
“ஆட்டோ பிடிக்கவா க்கா” என்று கேட்டான் அவள் நடக்க முடியாததை பார்த்து கேட்டான். அவள் மறுக்க,
“ஏன்க்கா இப்படி பிடிவாதம் பிடிக்கிற.. உன்னால நடக்கவே முடியல... ப்ளீஸ் இதுல என்ன பிடிவாதம் உனக்கு?” ஆற்றாமையுடன் கேட்டான்.
“நல்லா கேளு நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் கேட்க மாட்டிக்கிறா. நடந்து தான் வருவேன்னு அடம் பிடிக்கிறா...” என்று பெருவளத்தான் சற்றே கடுப்படித்தான்.
“அவ சொல்றான்னு நீங்களும் நடந்து வந்தீங்களா மாமா...” என்று வியந்துப் போனவன், “முதல்ல ஆட்டோ ஒன்னை பார்க்கிறேன். நீங்க அக்காவை பாருங்க” என்று விட்டு அருகில் எங்கேயோ ஓடி ஒரு ஆட்டோவை கண்டு பிடித்து கூட்டிட்டு வந்தான். முதலில் ஆதினி ஏற, அடுத்து விதுலை ஏறச்சொன்னவன் ஆட்டோவை எடுக்க சொன்னான்.
“மாமா நீங்க வரல” விடுல் கேட்க,
“உன் அக்காவோட தன்மானத்துக்கு நான் களங்கம் வர விடமாட்டேன்னு உன் அக்காக்கிட்ட சொல்லிடு விதுல்” என்றவன் அவர்களை கடந்து சாலையில் நடக்க ஆரம்பித்தான்.
போகும் அவனது முதுகை விழிகளில் நிரம்பிய நீரோடு ஏறெடுத்துப் பார்த்தாள் ஆதினி.
இனி ஆதினி இருக்கும் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டான் பெருவளத்தான். அதனால் தானே ஆதினி அந்த சொல்லை சொல்லியது.
நெஞ்சில் பெரும் கனல் பற்றி எரிந்தது. வீட்டுக்குள் நுழைந்தவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. தனக்கென்று ஒரு அறையை எடுத்துக் கொண்டு அதில் நுழைந்த கதவை சாத்திக் கொண்டாள்.
அதன் பிறகு வெளியே வரவே இல்லை. யாரும் அவளது கதவை தட்டி சாப்பிட வரச் சொல்லவில்லை. விதுல் மட்டும் இரவு பதினோரு மணிக்கு கையில் ஒரு பார்சலோடு அவளின் அறைக்குள் உள்ளே நுழைந்து அவளுக்கு ஊட்டி விட்டுட்டு தங்களின் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டான்.
அவனை நெருங்கவும் வீட்டு ஆட்கள் பயந்து தான் போனார்கள். ஏனெனில் அவன் வீட்டுக்குள் நுழையும் பொழுதே தீவிழியால் அனைவரையும் பொசுக்கி இருந்தான். அதுவும் கனிகாவை அவன் பார்த்த பார்வையில் இருந்த அருவெறுப்பு, வெறுப்பு, கோவம், ச்சீ என்கிற உணர்வு இருந்ததை பார்த்து கனிகா தங்களின் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். அவளை தொடர்ந்து குமுதாவும் நுழைந்துக் கொண்டார்.
வைகுந்தன் விதுலின் அறைக்குள் நுழைய பார்க்க அடித்து கதவை சாத்தி தாழிட்டு விட்டான்.
“டேய் உன் அப்பாடா நானு” என்று அவர் கதவை தட்ட,
“நீ பண்ணுன வேலைக்கு அப்பாவா மட்டும் இல்லாம இருந்து இருந்தா உன்னை இந்நேரம் தோளை உரிச்சி தொங்க விட்டு இருந்து இருப்பேன். போய்யா நீயெல்லாம் பெரிய மனுசன்ட்டு பேச வந்துட்ட... உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம என் அக்காவை அடிக்க எப்படி தான் மனது வந்துச்சோ.
அன்னைக்கு என் அக்கா மட்டும் நீங்க கேட்டதை செய்யாம போய் இருந்து இருந்தா குடும்ப மானமே ஊர் முன்னாடி போய் இருக்கும். நீங்க நல்லா இருக்கணும். நீங்க பெத்த மூத்த பிள்ளை நல்லா இருக்கணும்னு அவ தியாகியா முன்னாடி வந்து நின்னால்ல அதுக்கு நீங்க நல்ல பலனை குடுத்துடீங்க. போதும் சாமி. இனியாரும் அப்பன் ஆத்தான்னு பின்னாடி வாங்க. வெட்டி போலி போடுறேன்” என்று அறையின் உள்ளே இருந்து அவன் கத்த,
சர்வமும் அடங்கிப் போய் விட்டார் வைகுந்தன். விதுல் சொன்னது அத்தனையும் உண்மை தானே... அவசரப் பட்டுட்டமோ ஆதினியை நம்பி இருக்கணுமோ, அவள் பக்கத்து நியாத்தை கேட்டு இருக்கணுமோ என்றார் காலம் கடந்து தவித்தார்.
அதே குற்ற குறுகுறுப்பு குமுதாவுக்கும் இருந்தது. கணிகாவினருகில் படுத்து இருந்தவருக்கு மனம் பொலும் பொலும் என்று அடித்துக் கொண்டது. அவரால் நிம்மதியாக தூங்க முடியாமல் வெளியே வந்தார். வந்த நேரம் தான் விதுல் தன் தகப்பனிடம் பேசிக்கொண்டு இருந்தது கேட்டது. அப்படியே அமர்ந்து விட்டார்.
ஒரு பிள்ளைக்கு நல்லது பண்ணிட்டு இன்னொரு பிள்ளைக்கு துரோகம் பண்ணிட்டமோ என்று குமைந்துப் போனார். ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து விட்ட கதையாகிப் போய்விட்டதே என்று வருந்தினர்.
கணவனும் மனைவியும் ஆதினியின் மூடிய கதவை பார்த்தபடி இரவு தூக்கத்தை தொலைத்து அமர்ந்து இருந்தார்கள். தவறு செய்தபிறகு இனி வருந்தி எந்த பலனும் இல்லையே...
அடுத்த நாள் காலையில் ஆதினி எட்டு மணிக்கு கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். அவள் வரும் வரை பெற்றவர்கள் இருவரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. கனிகாவுக்கு அதுவே பெரும் கோவமாக உருமாறியது.
தப்பு செய்தது அவ. அதுக்கு தக்க தண்டனை குடுத்தாச்சு. அப்புறம் எதுக்கு ஏதோ இடி விழுந்த வீட்டுல இருக்குறவங்க மாதிரி தலையில கையை வைத்துக்கிட்டு இப்படி உட்கார்ந்து இருக்கணும்... காலையில வேலை இல்லையா..? என்று கடுப்பாக இருந்தது.
மாசமாக இருப்பதால் வயிறு கபகபவென்று பசித்தது. ஆனால் அதை பற்றி யாரும் கவலை படுவது போல தெரியவில்லை. எனவே தன் கணவனுக்கு போனை போட்டு உணவை ஆர்டர் பண்ண சொல்லி சொல்ல,
“ஏன் அத்தை சமைக்கலையா?”
“எங்க இந்த மகராணியை அடிச்சிட்டாங்கலாம். அதனால ஏதோ துக்கம் விழுந்த வீடு மாதிரி இருக்காங்க எல்லாரும்” என்றவளின் பேச்சில் பெருவளத்தானுக்கு முதல் முறையாக கனிகாவின் மீது அதிக அளவு வெறுப்பு துளிர்த்தது.
கூடப் பிறந்த தங்கச்சி குற்று உயிரும் குலை உயிருமா அடிபட்டு மருத்துவமனைக்கு போயிட்டு வந்து இருக்கா. அவளை பற்றி கொஞ்சம் கூட கவலை படாம, ஏன் அவளின் நலனை கூட கேட்காமல் தன்னை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்பவளின் மீது ச்சீ என்ற அருவெறுப்பு தான் வந்தது.
அவள் போன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே வெளியே வந்த ஆதினி யாரையும் சட்டை செய்யாமல் தன் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டாள். இரவோடு இரவாக அவளின் காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டான் பெருவளத்தான். ஆதினியை எதற்கும் அலையவைக்க கூடாது என்று எண்ணினான் போல.
அவளை தடுக்க வந்த பெற்றவர்களை ஒரு பொருட்டாக கூட கருதாமல் அவள் பாட்டுக்கு போய் விட்டாள். அவளின் இந்த உதாசீனத்தில் முகம் கருத்துப் போனார்கள் இருவரும்.
“இது தேவையா உங்களுக்கு... அவ தான் திமிர் பிடிச்சி அலையிறா... நீங்க அவளுக்கு இன்னும் சலங்கை கட்டி விடாதீங்க. பிறகு அவ இன்னும் ஆடுவா... அது மட்டும் இல்லாம சஞ்சு புருசனையும் வளைச்சி போட பார்ப்பா” என்று சொல்லும் முன்பே குமுதா அவளை ஓங்கி அறைந்து இருந்தார்.
“நீ மாசமா இருக்கியேன்னு தான் உன்னக்காக நேத்திக்கு மௌனமா நின்னேன். அதே மாதிரியே எப்பொழுதும் நிர்ப்பேன்னு நினைக்காத. ச்சீ அவ கால் தூசிக்கு நீ சமானம் ஆவியாடி... ஆதினி எங்க... நீ எங்க... ச்சீ போடி” என்று கண்களில் வழிந்த கண்ணீருடன் அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டார்.
Intha கோனி ஏதோ 420 வேலை பார்த்து இருக்கும் போல கல்யாணத்துக்கு முன்னால் 🤔🤔🤔🤔🤔
அது ருத்தானுக்கும் தெரியாது போலவே.....
அது தான் விதுவை ஆதினி பேச விடல....





