அவமானமாக இருக்க முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாள் மகரி. எல்லாம் கொஞ்ச நேரம் தான்.
“கால் வலிக்கிறது.. ஷேர் வேணும்” உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.
“மேடம் சார் ரூமுக்கு போயிட்டாங்க” என்று பணியாள் எட்டிப்பார்த்து சொல்ல,
“இத முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்” முறைத்தவள், வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தாள்.
ஆனால் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்த உருவத்தை பார்த்து ஆணி அடித்தது போல அப்படியே நின்று விட்டாள் மகரி.
“அடிப்பாவி இப்படி கோர்த்து விட்டுட்டியே..” அந்த பணிப்பெண்ணை இன்னும் முறைத்தவள்,
“தண்ணி தாகமா இருந்தது அது தான் குடிச்சுட்டு போகலாம்னு வந்தேன்” என்றவள் அவனின் முறைப்பில் நேராக கிச்சன் சென்று தண்ணீரை பிடித்து குடித்து விட்டு மீண்டும் வெளியே போய் நின்றுக் கொண்டாள்.
“ஜஸ்ட் மிஸ்.. இல்ல அந்த அரக்கன் கிட்ட கொத்தா மாட்டி இருப்பேன்” என்றவளுக்கு மிகவும் போரடித்தது. சுக்கு நூறாய் நொறுங்கிப் போய் இருந்த போனை பார்த்து உச்சுக் கொட்டியவள்,
“போன் இருந்தா கூட அதை நோண்டிக்கிட்டே இருந்து இருப்பேன். அரை மணி நேரம் என்ன ஒரு மணி நேரம் கூட நிக்கலாம்” யோசித்தவள், கேட்டில் நின்று இருந்த செக்யூரிட்டி போனை வாங்கினாள்.
அது பட்டான் போனாக இருக்க,
“ஏன் மேன் ஒரு டச் போன் வாங்க மாட்டியா.. இன்னும் இந்த பட்டன் போன்ல குடித்தனம் நடத்திக்கிட்டு இருக்க.. அது சரி உன் முதலாளி குடுக்குற காசுக்கு இந்த பட்டன் போனே அதிகம் தான்” பேச்சு வாக்கில் ஆதியை மட்டம் தட்டியவள் திரும்ப ஆதி நின்று இருந்தான்.
அதில் ஜெர்க் ஆகியவள்,
“இப்படி பின்னுக்கு பின்னுக்கு வந்து நின்னா எப்படி.. கொஞ்சம் கேப் குடுங்க சார்” நக்கல் பண்ணியவள், எம்பி அவனின் சட்டை பையில் இருந்த போனை எடுத்துக் கொண்டு,
“போர் அடிக்கிது.. நான் ஹாபனவர் வெளில நிற்கணும்னா எனக்கு இந்த போன் வேணும்..” சொல்லியவள் அவனை சட்டை செய்யாமல் வாசலில் போய் நின்றுக் கொண்டு அவனது போனை ஓபன் செய்து நேரா இன்ஸ்ட்டா சென்றாள்.
அதில் கவிதைகளாக வர,
“ஹைய்யோ சரியான போர் ப்பா” வாய் விட்டு சொன்னவள், அவளின் ஐடியை போட்டு திறந்துக் கொண்டு போக எல்லாமே காமெடி வீடியோவாக வர, அதை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ஆதித்யனுக்கு தான் உள்ளுக்குள் பொங்கிக்கொண்டு இருந்தது.
அதுவும் வரிசை பற்கள் தெரிய அவள் சிரித்துக் கொண்டு இருக்க பார்க்க பார்க்க இவனுக்கு தன்னை அடக்க முடியாமல்,
“உன் பனிஷ்மென்ட் முடிஞ்சிடுச்சு உள்ள வா” என்றான் ஒரு மாதிரி குரலில்.
அவன் குரலின் பேதம் புரியாமல் “இல்ல இல்ல பனிஷ்மென்ட் முடிச்சுட்டே வரேன்” என்றவளை முறைத்தவனுக்கு அவள் மீது தீராத மையல் ஏற்பட்டது. அதை அவளிடம் கொட்டி தீர்க்க பார்க்க, அவளோ வரமாட்டேன் என்று வாசலிலே நின்றாள்.
“பரவாயில்ல” என்றவனை கண்டுக் கொள்ளாமல் பக்கவாட்டு சுவற்றில் சாய்ந்துக் கொண்டு ஒரு காலை சுவற்றில் பதித்து போனை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
இவனுக்கு தான் தவிப்பாக போனது. “உள்ளவாடி” அடிக்குரலில் அவன் சொல்ல, திடுக்கிட்டுப் போனவள் அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவனின் கண்கள் சிவந்துப் போய் இருந்தது.
“ஐயோ கோவம் வந்திடுச்சோ” முணகியவள்,
“சரி உள்ளே போறேன்” என்று சொல்லியவளுக்கு மனம் ஆறவே இல்லை.
“முன்ன உள்ள போறேன்னு சொன்னப்ப விடல, இப்போ வேணான்னு வெளியில நிக்கிறேன். இப்ப போன்னு உயிரை வாங்குறாரு.. என்ன தான் இவரு நினைச்சுக்கிட்டு இருக்காரோ” வாய்க்குள் திட்டிக் கொண்டே உள்ளே வந்து கூடத்தில் அமர்ந்தாள்.
இவனும் பின்னோடு வந்து அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான்.
போனை பார்த்து பார்த்து நன்றாக சிரித்துக் கொண்டு இருந்தவளுக்கு அசவுகாரியமாக இருக்க நெளிந்தாள். பின் மீண்டும் போனை பார்த்தாள்.
ஆனால் அந்த அசவுகரியம் தொடர்ந்துக் கொண்டே இருக்க, “என்னடா இது இம்சை” என்று எதார்த்தமாக நிமிர, அவளையே ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஆதி கண்ணில் பட, திகைத்துப் போனாள்.
“என்ன ஆச்சு? ஏன் இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கீங்க? உங்க எதுக்க கொஞ்ச நேரம் உட்கார முடியுதா?” கேட்டவள் அவனுக்கு முதுகு காட்டி அமருவது போல பாசாங்கு செய்து பக்கவாட்டில் திரும்பிக் கொண்டாள்.
அப்பொழுதும் அவனது துளைக்கும் பார்வை அவளை தொடர, அவளால் நிம்மதியாக போனை பார்க்க முடியாவில்லை.
“ஐயோ உங்களால ரோதனையா போச்சு” அலறியவள்,
“என்ன தான் வேணும். ஏன் இப்படி பார்க்குறீங்க?” கேட்டாள்.
“நீ தான் வேணும்” என்றான் மொட்டையாக.
“ஹாங்..” என்று முழித்தவள்,
“அதெல்லாம் முடியாது.. நான் உங்க நண்பனோட தங்கச்சி.. சோ உங்களுக்கும் தங்கச்சி தான். அதனால இனி தங்கச்சியா என்னை மெயின்டெயின் பண்ணுங்க” என்றவளை முறைத்துப் பார்த்தவன்,
எழுந்து போய் விட்டான் கடுப்பாக.
“ஹப்பாடா இம்சையை சரிகட்டியாச்சு” என்று சிறிது நேரம் போனில் மூழ்கியவள், அது போரடிக்கவே எழுந்து அவனிடம் சென்றாள்.
அவன் அலுவலக பைல் பார்த்துக் கொண்டு இருக்க,
“எனக்கு இப்படி வீட்டுல இருக்க ரொம்ப போர் அடிக்கிது..” என்றாள்.
“இப்ப தானேடி மூணு மணி நேரம் வெளில போயிட்டு வந்த அதுக்குள்ள என்ன?” முறைத்தான்.
“அதெல்லாம் தெரியாது.. எனக்கு ரொம்ப போர் அடிக்கிது.. வாங்க விளையாடலாம்” என்றவளை இன்னும் முறைத்துப் பார்த்தவன்,
“ஏன்டி உனக்கு வேலை இல்லன்னா என்னையும் வேலை செய்ய விட மாட்டியா? போ போய் புது பட கேசட் வாங்கி வச்சு இருக்கேன். போட்டு பாரு” என்றான்.
“தனியாவா.. அதெல்லாம் முடியாது நீங்களும் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம்” என்றாள்.
“ஏன்டி உயிரை வாங்குற.. ஒரு பைல் பார்க்க விடுறியா? நீ என்னை பார்த்துக்க வந்த மாதிரி தெரியல. உன்னை பார்த்துக்க தான் இங்க என் கிட்ட உன்னை அனுப்பி விட்ட மாதிரி இருக்கு” கடுப்படித்தான்.
“நீங்க எப்படி வேணாலும் வச்சுக்கோங்க. எனக்கு இப்ப போர் அடிக்கிது.. நீங்க வாங்க” என்றாள்.
“அப்போ லிப் கிஸ் ஒன்னு குடு. வரேன்” என்றான் அதிகாரமாய்.
“ஏதே லிப் கிஸ்ஸா.. அதெல்லாம் குடுக்க முடியாது.. என் கற்பு போயிடும்” என்றவளை முறைத்தவன்,
“உன் கற்பு என்ன உன் வாயிலையா இருக்கு.. கிஸ் பண்ண உடனே போறதுக்கு” கடுப்படித்தான்.
“பின்ன இல்லையா? என் லிப் கிஸ் எல்லாம் என் வேல்ட் பேமஸ் லவ்வருக்கு மட்டும் தான். உங்களுக்கு எல்லாம் குடுக்க முடியாது” என்றதில் பல்லை கடித்தவன்,
“எப்ப பாரு வேல்ட் பேமஸ் லவ்வர் வேல்ட் பேமஸ் லவ்வருன்டே இருக்க.. அவன் உனக்கு என்னடி குடுத்தான். என்னவோ உலகத்துலையே இல்லாத லாவராட்டாம் ரொம்ப தான் தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுற..” சினம் கொப்பளிக்க கேட்டவனை அசுசையாக பார்த்தவள்,
“உங்களுக்கு எப்படி தெரியும் அவனோட அருமை பெருமை எல்லாம்.. அவன் ஒரு நாள் அவ்வளவு ஹேன்சமா மேன்லியா ரொம்ப ஆளுமையுடன் என் இடுப்பை வளைச்சு தோளை தொட்டு, என் கன்னத்தை ஏந்தி முரட்டு தனமா என் லிப்சை அப்படியே கடிச்சு..” அவள் இரசித்து கண்ணை மூடி சொல்ல,
இவனுக்கு நெருப்பில் நிற்பத்து போல இருந்தது... பட்டென்று எழுந்து போய் விட்டான்.
அவன் போகும் அரவம் கேட்க, “ஹேய் நில்லுங்க முழுசா கேட்டுட்டு போங்க” என்று சொன்னவளை திரும்பி முறைத்தவன் விறுவிறுவென்று அவனின் அறைக்குப் போய் விட்டான்.
“ப்ச் இப்படி பாதியில போனா எப்படி..” கேட்டவள் தானும் அவன் பின்னாடியே போய் விட்ட கதையை மீண்டும் தொடர, கடுப்புடன் அவளை பார்த்தவன், அதற்கு மேல் முடியாமல் அவளின் இடுப்பை வளைத்து பிடித்து கதை கதையாக கவிதையாக பேசிக் கொண்டு இருக்கும் சிவப்பு நிற இதழ்களை இரக்கமில்லாமல் கவ்வி சுவைக்க ஆரம்பித்து விட்டான் ஆதித்யன்.
அவனது முரட்டு பிடியில் விழிகள் பெரிதாக அதிர்ந்துப் போனவள், ஒரு கணம் உறைந்துப் போய் விட்டாள். அவளின் உறைதலை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டவன் இன்னும் ஆழமாக அவளின் இதழ்களுக்குள் குடித்தனம் நடத்த தொடங்கினான்.





