இந்த பிரக்னன்சி டைம்ல மூட் மாறிக்கிட்டே இருக்கும். இது இயற்கை தான். இதை விட அதிகமாகவே மூட் ஸ்விங் ஆகும். ஆனால் பெருவளத்தானின் மீது கனிகா கொண்ட எண்ணங்கள் எல்லாம் அநியாயத்திலும் அநியாயம். அதை யாரும் மாற்ற முயலவில்லை என்பது தான் கொடுமை.
அப்பொழுதே இவளை கவுன்சலிங் கூட்டிக்கொண்டு போய் இருந்தால் பெருவளத்தானின் மீது இருந்த வெறுப்பு குறைந்து இருக்குமோ என்னவோ. அவள் எல்லாவற்றையும் மனதினுள் போட்டு புதைத்து வைத்திருந்ததால் வெளியே எதுவும் தெரியவில்லை. அதுவும் ஒரு காரணமாய் போனது. ஆதினியும் வேலைக்கு போக ஆரம்பித்து இருந்ததால் அதிக நேரம் வீட்டில் இருக்க முடியவில்லை.
எப்பொழுதுமே சைட் ஓர்க், டிசைன் என அவளுக்கு வேலைக்கு மேல் வேலை இருந்த வண்ணமாகவே இருந்தது.
போக வர அவளுக்கு தனி பயன்பாட்டுக்கு கம்பெனியில் இருந்தே கார் கொடுத்து இருந்தார்கள். அதனால் அவள் வீட்டில் இருக்கும் நேரம் மிக மிக குறைவு. ஒருவேளை அவள் வீட்டில் இருந்து இருந்தாள் கனிகாவிடம் தென்பட்ட மாற்றங்களை ஆரம்பத்திலே கணித்து சரி செய்து இருப்பாளோ என்னவோ.
யாரும் அறியமுடியாத அளவுக்கு கனிகா உள்ளுக்குள்ளே அதிக அளவு வெறுப்பை வளர்த்துக் கொண்டாள் பெருவளத்தானின் மீது. அவளின் வெளிப்படையான வெறுப்பை பெருவளத்தான் உணர்ந்தாலும் இது இந்த நேரத்தில் இயல்பு என ஒதுக்கி வைத்து விட்டு அவளின் ஆரோக்கியத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான்.
வெளியே எங்கும் போகலாமா என்று கேட்டால், “இந்த சமயத்துல போய் அலைய வைக்க பார்க்குறீங்க.. அப்போ இந்த குழந்தையை நான் சுமக்குறது உங்களுக்கு பிடிக்கல இல்லையா...? அதனால தானே அதை எப்படியாவது கலைக்க பார்க்குறீங்க” என்று அபாண்டமாக அவன் மீது பழியை சுமத்தினாள்.
அவன் கேட்டது, அவளுக்கு வீட்டுக்குள்ளயே இருக்க ஒரு மாதிரி இருக்குமே அப்படியே காத்தாட கொஞ்சம் வெளியே போயிட்டு வந்தா மனதுக்கு ரிலாக்சாக இருக்குமே என்பதற்காக தான். ஆனால் அதை கூட இவ்வளவு வக்கிரமாக சித்தரித்து பேசியவளின் பேச்சை சீரணிக்க முடியாமல் கலங்கிப் போய் விட்டான் பெருவளத்தான்.
அவனும் எவ்வளவு தான் தாங்குவான்... அவனுக்கும் இயல்பான ஆசா பாசம் எல்லாம் உண்டு தானே. அதையும் ஒதுக்கி வைத்து விட்டு அவளுக்காக இறங்கி வந்து சாதரணமாக பேச கூட கனிகா தயங்கினாள். வெறும் தயக்கம் என்றால் கூட எப்படியாவது பெருவளத்தான் சமாளித்து விடுவான். ஆனால் கனிகா பேசினாலே இலக்கரமும் மனதை புண்படுத்தும் விதமாக சொற்களை அள்ளி வீசுவதுமாக இருக்க ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் தாங்கவே முடியவில்லை.
ஒரு ஆண் அடைக்கலம் ஆவது இரண்டே இடத்தில் தான். ஒன்று தாயிடம், இன்னொன்று மனைவியிடம். பெருவளத்தானுக்கு இரண்டு பேரிடமுமே அடைக்கலம் ஆக முடியவில்லை. கனிகாவிடம் ஏளனம் மட்டுமே மிஞ்சும். வாணியிடம் அடைக்கலம் ஆனால் அவர் மிகவும் பயந்துப் போய் விடுவார் எனவே அவரை கலவரப்படுத்த எண்ணாமல் எல்லாவற்றையும் தனக்குள் போட்டு புதைத்து விட்டான்.
நாட்கள் ஆக ஆக கனிகாவிடம் வெளிப்படையாகவே சில பல மாற்றங்கள் தென்பட்டது. வீட்டில் இருந்த எல்லோருக்குமே அது தென்பட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை அதை சரி செய்ய. ஆதினிக்கு வேலை பளுவில் எதுவும் தெரியாமல் போனது.
அவளுக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தால் ஒருவேளை எல்லாவற்றையும் சரி செய்து இருப்பாளோ என்னவோ. விதி அந்த குடும்பத்தை தன் விருப்பத்துக்கு ஏற்றார் போல மாற்றி அமைக்கப் பார்த்தது. அதற்கு காலநேரமும் சரியாக அமைந்து போனது தான் கொடுமை.
மாதங்கள் உருண்டோடியது அப்படியே... பெருவளத்தானுக்கும் கணிகாவுக்கும் சுமுகமான உறவே அற்றுப் போய் அவன் வீட்டுக்குள் நுழைந்தாலே இவள் எழுந்து அறைக்குள் போய் முடங்கிக்கொள்வது என வழக்கமாகிப் போனது. அதை பார்க்கும் பொழுது எல்லாம் நெஞ்சை கவ்விக் கொண்டு வந்தது அவனுக்கு.
தன்னை வெறுக்கும் அளவுக்கு தன் மனைவி போய் விட்டாளா என்று விரக்தி தான் வந்தது. தன்னையும் வெறுக்க இந்த உலகில் ஆள் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிந்துக் கொண்டான்.
அதையும் மீறி அவளுக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை கொடுக்க அறைக்குள் நுழைய கனிகாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவன் எதையோ சொல்ல வர முகத்தில் அடித்தது போல எதையோ சொல்லி விட்டாள் கனிகா. ஆறடி மனிதன் சர்வமும் ஒடுங்கிப் போனான்.
வீட்டில் அனைவருமே இருந்தார்கள். ஆதினியை தவிர... சஞ்சுவும் அவளது கணவனும் வந்து இருந்தார்கள். விதுல் மாமனார் மாமியார் என அனைவரும் இருக்க கனிகா முகத்துக்கு நேராக சொன்ன ஒரு வார்த்தையில் கூனி குறுகிப் போனான்.
சிவந்த விழிகளுடன் அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் உள்ளம் குமுறிப் போய் அந்த வீட்டி விட்டு வெளியே போய் விட்டான். எல்லோருக்கும் கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது.
“உங்க அக்கா ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறா” என்று பிரபு கூட பெருவளத்தானுக்காக இரக்கப் பட்டான். ஆனால் கனிகாவுக்கு அந்த இரக்கம் கொஞ்சம் கூட இல்லை. அதோடு அந்த வீட்டில் இருந்த யாரும் அவளை எதுவும் சொல்லாதது தான் இன்னும் கொடுமை.
இருந்த மன நிலைக்கு வீட்டுக்கு போக முடியாமல் கடைக்கு வந்தான். தனி அறை என்பதால் அவனது முகம் கன்றி சிவந்துப் போய் இருப்பதை யாரும் அறியவில்லை. கண்கள் ரத்தமென சிவந்து போய் இருந்தது.
அந்த நேரம் ஆதினி அவனது கடைக்கு வந்தாள். அவள் கொடுத்த யோசனையில் உருவாகி இருந்த பார்க்கிங் ஏரியாவில் தன் காரை நிறுத்தி விட்டு வர,
“டோக்கன் வாங்கணும் மேடம்” என்று அங்கு இருந்த ஊழியர்கள் அவளை வம்பிழுக்க,
“டோக்கன் தானே வாங்கிட்டா போச்சு...” என்று சிரித்தவள்,
“எப்படி மூவ் ஆகுது” என்று அவர்களிடம் அங்கு நடக்கும் நிலவரத்தை பற்றி கேட்டுக் கொண்டவள் கடைக்கு உள்ளே வர, வரும் பொழுதே கடையில் இருந்த அனைவரும் அவளுக்கு வணக்கத்தை வைத்து அவளின் நலனை விசாரிக்க, அனைவருக்கும் மெல்லிய புன்னகையுடன் பதிலுக்கு சில சொற்கள் பேசிவிட்டு பெருவளத்தான் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
அவன் தலை குனிந்து அமர்ந்து இருப்பதை பார்த்து, இவள் தொண்டையை செறும தலையை நிமிர்த்தி பார்த்தான். அவனது முகம் ஒரு மாதிரி இருக்க அதோடு கண்கள் அதிகமாக சிவந்துப் போய் இருக்க பக்கென்று ஆனது ஆதினிக்கு.
“என்ன ஆச்சு...? ஏன் உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து அவனது நெற்றியை தொட்டுப் பார்த்தாள். அவள் தன்னை நெருங்கி வந்து அக்கறையாக கேட்கவும் அதற்கு மேல் முடியாமல் அவளின் இடையை வளைத்து அவளின் வயிற்றில் தன் முகத்தை அழுத்தாமாக புதைத்துக் கொண்டான்.
அவனது இந்த செயலை எதிர் பார்க்காதவள் திகைத்துப் போனாள்.
“என்ன ஆச்சுங்க...? ஏன் இப்படி என்னவோ போல இருக்கீங்க. உடம்புக்கு என்ன செய்யிது... இன்னும் கை வலிக்குதா?” என்று விபத்து நடந்த பொழுது ஏற்பட்ட வலி அவ்வப்பொழுது அவனுக்கு இருந்துக் கொண்டு தான் இருந்தது. எனவே ஆதினி அப்படி கேட்டாள்.
அதற்கு இல்லை என்பது போல அவன் தலையை ஆட்டினான். ஆனாலும் அவளை விடவே இல்லை. சைட்டுக்கு போகும் பொழுது எப்பொழுதும் பேன்ட் டாப் தான் போடுவாள். ஆனால் அலுவலகம் செல்வதாக இருந்தால் எப்பொழுதும் புடவை தான்.
இன்று அலுவலகம் செல்லும் நாள். எனவே புடவை கட்டி இருந்தாள். அது அவனுக்கு தோதாக போனதோ என்னவோ அவளின் உடை விலகிய வயிற்றில் அவன் மீசை முடி குத்தி கிழிக்க, மூச்சுக் காற்று முட்டி மொத, இதழ்கள் அழுந்தி பதிய, அவளின் வயிறு இரண்டு இன்ஞ் உள் வாங்க என தன் முகத்தை பதித்து இருந்தான். அவனது இந்த செயலில் தன் வயிற்றை மேலும் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள் ஆதினி.
அதனால் அவன் இன்னும் தன்னோடு அவளை நெருக்கி அவளது வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான். அதில் இன்னும் இவள் ஜெர்க்கானாள்.
ஒன்றும் சொல்லாமல் இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும். அவனை நிமிர்த்தலாம் என்றால் அவன் அசையவே மறுக்க அவனை கலைக்க இவளுக்கு மனமே வரவில்லை.
- So sad....வாழ்க்கையில் தப்பான desicion எடுத்துட்ட da நீ......
- அந்த குடும்பமே சரியான maanaketta குடும்பம்......
- என்ன அப்பா அம்மா....கொஞ்சம் கூடவா கண்டிக்க கூடாது????
- இவன் ஏன் இப்படி மானம் கெட்டு இங்க இருக்கணும்.....விசாகன் கிட்ட போலாம் இல்ல...
இன்னொரு epi தாங்களேன் ரைட்டர் 😁
- So sad....வாழ்க்கையில் தப்பான desicion எடுத்துட்ட da நீ......
- அந்த குடும்பமே சரியான maanaketta குடும்பம்......
- என்ன அப்பா அம்மா....கொஞ்சம் கூடவா கண்டிக்க கூடாது????
- இவன் ஏன் இப்படி மானம் கெட்டு இங்க இருக்கணும்.....விசாகன் கிட்ட போலாம் இல்ல...
அது தான் அவன் பிரச்சனையே.. அந்த குடும்பத்தை அவன் அவ்வளவு நேசிக்கிறான்.
அவங்களை அவனால் வெறுக்கவே முடியல..
அப்பா அம்மாவுக்கும் பணம் முக்கியமா போயிடுச்சு.. அதனால தானே அவனை விழுந்து விழுந்து கவனிச்சாங்க'





