அறைக்கு உள்ளே வந்த தமிழ் அவன் குளிப்பதற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க குளியல் அறை வாசலில் மார்பில் கைகளை கட்டியபடி தமிழை முறைத்து பார்த்தான் அகத்தியன். அவனது பார்வையில் நெஞ்சுக்குள் பக்கென்று ஆனது. ஆனாலும் அவனை நிமிர்ந்து பார்க்காமல்,
“குளிக்க எல்லாம் ரெடி பண்ணிட்டேங்க” என்று அவன் முன்பு வந்து நின்றாள்.
“துண்டை யாரு உங்கப்பன் வந்து எடுத்து வைப்பானா?” என்று முறைத்தான்.
“மறந்துட்டேன். இதோ எடுத்துட்டு வரேங்க” என்று மீண்டும் உள்ளே போய் கபோர்டில் இருந்து துண்டை எடுத்து அங்கிருந்த ஹேங்கரில் வைத்து விட்டு வெளியேவர,
“பெர்பியூம்..” என்று முறைத்தான்.
“சாரி இதோ எடுத்து வைக்கிறேன்” என்றவள் மீண்டும் கபோர்டில் இருந்த மென் யூஸ் பண்ணும் பாடி ஸ்ப்ரேயை எடுத்து வைத்தவள் வெளியே வர பார்க்க,
“நான் என்னடி சொன்னேன்?” என்று அவளை முறைத்தான்.
“எல்லாமே செஞ்சுட்டனேங்க” பாவமாய் அவனை பார்த்தாள்.
“மூடா இருக்குன்னு சொன்னேனே... ஏன் என் கூட படுக்க ஆசை இல்லையா? இல்ல வேற யாரையாவது வர சொல்றியா? அவ கூட படுக்கட்டுமா?” கொஞ்சமும் நாக்கில் நரம்பில்லாமல் அவன் பேசி வைக்க கண்களில் குளம் கட்டி விட்டது. திருமணம் ஆகி அடுத்த நாளே கணவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளில் பெண்ணவளின் நெஞ்சம் துடித்துப் போனது.
“ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? நீங்க என்ன சொன்னாலும் தான் நான் கேட்கிறேனே. ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றாள் பாவமாய்.
“நான் இப்படி பேச கூடாதுன்னா நான் சொல்றதை எல்லாம் செய்து பழகு... இப்போ வந்து என்னை குளிக்க வை” என்று உள்ளே போனான்.
அவனது அழைப்பில் மிரண்டு போனாலும் வேறு வழியில்லாது உள்ளே சென்றாள். அதன் பிறகு முழுதும் நனைந்து தான் வெளியே வந்தாள் தமிழ். மாற்று உடை எடுத்து வைக்காததால் வெறும் துண்டுடன் வெளியே வந்தவள் உடை எடுக்க போக,
அவளை திருப்பியவன்,
“போய் கட்டில்ல படு” என்றான். அவனது பேச்சில் திக்கென்று ஆனது. காலெல்லாம் வலி எடுத்தது. உடம்பில் கொஞ்சம் கூட திடம் இல்லை. உதடு எல்லாம் காந்தி எடுத்தது.
உணவில்லாமல் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையில் மறுபடியும் அகத்தியன் ஆரம்பிக்க,
“பசிக்கிதுங்க... சாப்பிட்டுட்டு வந்திடட்டுமா?”
“அப்போ என்னோட பசி உனக்கு பெருசா தெரியலையா?” என்று கட்டிலை காண்பித்தான்.
அகத்தியன் பேர்ன் ஆப் கோல்ட் ஸ்பூன். சோ அவனுக்கு யாருடைய உணர்வுகளையும் புரிந்துக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இருக்கவில்லை. அவனை தான் மற்றவர்கள் புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்துக் கொள்ள வேண்டும்.
அவனது மூடுக்கு தகுந்தபடி தான் பெற்றவர்களும் சரி மற்றவர்களும் சரி ஆடுவார்கள். அதனால் அவனுக்கு இயல்பிலே ஒரு முரட்டு தனம் இருந்தது. எதற்காகவும் அடங்கி போக மாட்டான். யாருக்காகவும் எதையும் விட்டு குடுக்கவும் மாட்டான்.
அவனது வளர்ப்பு அந்த மாதிரி. ஆணாதிக்கம் அதிகம் கொண்டவன். அவன் இருக்கும் இடத்தில் அவனது ஆதிக்கம் தான் இருக்க வேண்டும் என்று பிடிவாதத்தில் இருப்பவன். மாமனார் வீட்டிலும் அப்படி தான் எதிர் பார்த்தான். ஆனால் அவனது மாமியார் கண்டபடி பேச இன்றைக்கு முழுக்க அவரின் மகளை விடக்கூடாது என்று சிறை செய்து விட்டான்.
“நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது...” என்கிற மனநிலை தான் அவனுக்கு. அவனை அதிகாரம் செய்ய எவராலும் முடியாது.
அதே போல தன்னை அதிகாரம் செய்ய நினைக்கும் யாரையும் அவன் சும்மா விட மாட்டான். வந்த உடனே தன் அதிக்காரத்தை செயலில் காட்டி விட்டான் அகத்தியன்.
அதனாலே செல்லப்பா வாயை மூடிக் கொண்டார். ஆனால் தயாளனுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது.
“எங்க வீட்டுல இருந்துட்டு எங்களையே அதிகாரம் செய்யிறியா?” என்று மல்லுக்கு நின்றான்.
“டேய் வெண்ண நான் இருக்குறவரை இங்க என் சத்தம் மட்டும் தான் இருக்கணும். அதை விட்டுட்டு சத்தம் போடணும்னு நினைச்ச என் காட்சை வச்சு உன்னை சத்தம் போடாம செய்ய எனக்கு ஒரு நொடி போகாது” மிரட்டியவன்,
“என்ன மமானாரே... உன் பிள்ளைக்கு ஒன்னத்தையும் சொல்லி குடுக்கலையா? முதல்ல என்ன பத்தி சொல்லி வை. அப்படியே சீக்கிரமா அமைச்சர் பதவிக்கு ஏற்பாடு செய்யு. இல்லன்னா உன் பதவியையும் உன் மகன் பதவியையும் நான் பிடுங்கிக்குவேன்” என்று மிரட்டிய பிறகே அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தான் அகத்தியன்.
“டேய்...” தயாளன் எகிற,
அவனை சுற்றி வளைத்து விட்டார்கள் காட்ஸ் அறை நொடியில்.
“தம்பி நான் உன்னை மாதிரி நேத்திக்கு பேஞ்ச மழையில முளைச்ச காலான் இல்ல... பல வருடம் மண்ணுக்குள்ள வைரமா இருந்து வெளியே அடர்ந்த விருட்சமா வளர்ந்து இருக்கேன். அதனால ஓரமா போ” என்று அவனை ஓரம் கட்டி விட்டு அந்த வீட்டில் தன் ஆட்சியை செலுத்த ஆரம்பித்தான்.
“அவனுக்கு தான் அரண்மனை மாதிரி ஆயிரம் வீடு இருக்கே. எதுக்கு நம்மவீட்டுல வந்து இருக்கான். ஒழுங்கா அவனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க” என்று தந்தையிடம் மல்லுக் கட்டினான்.
“நான் என்னடா கனவா கண்டேன். அவன் இப்படி நம்ம வீட்டுல வீட்டோட மாப்பிள்ளையா இருப்பான்னு.. எங்கையோ நம்ம தமிழை பார்த்து இருக்கான். கல்யாணம் பண்ணனும்னு வந்தான். நானும் சரி பெரிய அரச குடும்பத்தை சேர்ந்தவனாச்சே நம்ம அரசியல் வாழ்க்கைக்கு தேவை படுவானேன்னு கட்டி வச்சேன். ஆனா அவன் வந்த உடனே நமக்கு ஆப்பு அடிக்கிறான்” என்று செல்லப்பா நொந்து போனார்.
“உன்னை எல்லாம்...” என்று தகப்பனை திட்ட வந்தவன்,
“த்தூ” என்று துப்பிவிட்டு கரைவேட்டி பளபளக்க காரில் ஏறி வெளியே போய் விட்டான்.
அப்படி உள்ளே நுழையும் பொழுதே அந்த வீட்டில் இருப்பவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய பிறகே நுழைந்தான் அகத்தியன்.
இனி என்னெல்லாம் செய்ய போறானோ தெரியல.. நினைச்சது நினைச்சபடி அவனுக்கு நடந்தே ஆகணும். ஏதோ ஒரு உறவினர் கல்யாணத்துக்கு அவளின் தாத்தா பாட்டியோடு அவள் போய் இருந்த நேரம் இவனின் கண்ணில் அவள் விழ அவளின் அழகை பார்த்தவன்,
“இவ தான் வேணும்னு” அடுத்த ஒரு மாதத்தில் ஊரே மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு செம்ம கிராண்டாக நடத்தி விட்டான் கல்யாணத்தை.
அவன் ஒரு பார்வை பார்த்தாலே போதும் அவன் விரும்பியது எல்லாம் அவன் காலடியில் வந்து கிடக்கும். இந்த திருமணம் கூட அவனது விருப்பம் தான். தமிழுக்கு அவன் யாரென்று கூட தெரியாது.
இதில் தமிழின் விருப்பத்தை யாருமே காது குடுத்து கேட்கவில்லை. தாத்தா பாட்டி அவளை பொறுப்புடனும் பணிவுடனும் பண்பாடை சொல்லி வளர்த்ததால் அவள் குணம் தங்கமாய் மின்னியது. தன் மருமகளின் குணம் அறிந்து தாத்தாவும் பாட்டியும் பேத்தியை அவர்களிடமே வைத்துக் கொண்டார்கள்.
ஏதாவது முக்கிய நிகழ்ச்சி என்றால் மட்டுமே தாமரையோடு தமிழை செல்ல விடுவார்கள். இல்லை என்றால் ம்ஹும் தான். அதுவும் அந்த நிகழ்ச்ச்சியில் இவர்களும் போனால் மட்டுமே தமிழுக்கு அனுமதி தருவார்கள்.
தாமரைக்கு மகளை அவர்கள் வளர்ப்பதில் விருப்பம் இல்லை தான். ஆனால் தன்னுடைய உல்லாசத்துக்கும் சுதந்திரத்துக்கும் தடையாய் பிள்ளை வளர்ப்பு இருக்குமே என்று விட்டுவிட்டார்.
அதை பயன்படுத்திக் கொண்டு பேத்தியை குணத்தில் வைரமாய் மினுக்க வைத்தார்கள். ஆனால் அந்த வைரத்தை பற்றி தெரியாமல் காதில் போட்டு மிதிக்க காத்திருந்தான் அகத்தியன்.
தன்னை காயப்படுத்தும், கட்டாயப்படுத்தும் கணவனின் செயலுக்கு மௌனமாய் கட்டிலில் வந்து படுத்தாள் தமிழ். அவளது காதில் பாட்டியின் பத்தாம் பசலி தனமான வார்த்தைகள் எதிரொலித்தது.
“கண்ணு கொஞ்சம் வலிக்கும். அதுக்காக கத்தாத... போக போக சரியா போகும். உன் புருசன் இருக்குற பவுசுக்கு எங்கெங்கு வாய் வைப்பாரோ தெரியல. அதனால அவர் கேட்கிறதை குடுத்து உன் முந்தானையில முடிஞ்சு வச்சுக்க. இப்ப விட்டுட்டா பிறகு பிடிக்கவே முடியாது” என்று அவர் அவர் காலத்து அறிவுரையை வழங்க அதையும் ஏற்றுக் கொண்டு அகத்தியனுக்கு அவன் கேட்க கேட்க எல்லாவற்றையும் கொடுத்தாள்.
அவளுக்கு என்று சில விருப்பங்கள் இருக்கு என்பதை மறந்து போனாள் போல... தன் விருப்பத்தை வாய் விட்டு சொல்ல வெட்கம் வந்து தடுத்தது. ஆனால் பசி வெட்கம் பார்க்காதே. வாய் விட்டு அவனிடம் கேட்டுவிட்டாள். ஆனால் அவன் அதை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.
மதிக்காமல் அவளின் மீது பரவி படர்ந்தான் அகத்தியன்.
முதல் முறை பெண்கள் உடலுறவு கொள்ளும் பொழுதே உடலெல்லாம் அவ்வளவு வலி எடுக்கும். இதில் அன்றைக்கு தான் கல்யாணம் வேறு ஆகி இருந்தது. தமிழ்நாடே திரும்பி பார்த்த கல்யாணம் வேறு. கூட்டத்துக்கு சொல்லவா வேண்டும்.
சாரை சாரையாக உயர் தட்டு மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா துறையினர், பக்கத்து நாட்டு பிரபலங்கள் என எல்லோரும் அணிவகுத்து வர மணமகள் சோர்ந்து போனாள்.
ஆனால் அகத்தியன் கொஞ்சம் கூட சோர்வுறவே இல்லை. அவனது ஜிம்பாடிக்கு அது தாங்கும். ஆனால் பெண்ணவள் பூஞ்சை தேகம் கொண்டவள். மிகவும் தளர்ந்துப் போனாள்.
அதோடு மறுவீட்டு அழைப்பு, போட்டோ சூட் என அவளை மேலும் அலைக்கழித்தார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உடை, ஒவ்வொரு அலங்காரம் என போட்டு பாடாய் படுத்து விட்டார்கள்.
சரி இரவு வந்தாவது ஓய்வு எடுக்கலாம் என்று இருந்த நேரம் அவளை அந்நேரத்துக்கு குளிக்க வைத்து முதலிரவுக்கு தயார் செய்ய மிகவும் வதங்கிப் போனாள்.
அங்கே அகத்தியனோ அவளை பேசக் கூடா விடாமல்,
“உன்னை பார்த்ததுல இருந்தே இதே எண்ணம் தான்” என்று சொல்லி அவளை படுக்கையில் படுக்க சொன்னவன் விளக்கை கூட அணைக்காமல் அவளை தனக்குள் எடுத்துக் கொண்டான்.
“புடவை எல்லாம் ரிமூவ் பண்ணு” என்று அவளையே வேலை வாங்கியவன், அவளை கொஞ்சமும் நெகிழ விடவில்லை.
“விளக்கு” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே அவளின் இதழ்களில் தன் இதழ்களை புதைத்து விட்டான். முதலிரவில் தமிழ் கண்டது அனைத்தும் வலிகள் மட்டும் தான்.
அதுவும் அவன் தாலியை வேறு கழட்ட சொல்லி சொல்ல உள்ளுக்குள் வேதனை கொண்டாள். அதை காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு இலகுவாக தன்னை கொடுத்து விட்டு இருந்து விட்டாள். திருமணத்தில் ஒழுங்காக கூட உண்ணவில்லை.
இதோ இப்பொழுதும் அவளின் பசியை பற்றியும் உடல் வேதனை பற்றியும் கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் தன் உடல் பசியை மட்டும் அவளிடம் தீர்த்துக் கொண்டு இருக்கிறான்.
அவள் மீது இருந்த ஒற்றை துண்டுக்கு விடுதலை கொடுத்து விட்டு தன்னை அவள் உடையாக உடுக்க செய்தவன் அடுத்த நாள் காலை வரை அவளை வெளியே விடவே இல்லை.
தாமரைக்கு ஏகத்துக்கும் கடுப்பாய் போனது. தான் சொன்னதால் மட்டுமே அவன் இந்த அளவுக்கு செய்கிறான் என்று புரிந்துக் கொண்டவருக்கு சினம் அதிகமாய் வந்தது.
ஆனால் அகத்தியனிடம் யாருடைய கோவமும் செல்லாதே. அவன் என்ன நினைக்கிறானோ அதை தான் செய்வான். நீ செய்யாதே என்று ஒரு காரியத்தை சொன்னால் அதை தான் அவன் செய்து முடிப்பான்.
அகங்காரத்திலும் ஆணவத்திலும் ஊறி போய் இருக்கும் மனிதன் அவன். அவனை எப்படி சரி செய்து தன் வழிக்கு கொண்டுவருவாளோ தமிழ்.
அந்த அகத்தியனை ஆட்டி படைப்பது தமிழ் தானே.. இங்கும் எங்கும் தமிழ் தோற்காது என்று நம்புவோம்...
கோடி பேர் தமிழை புதைக்க நினைத்தாலும் அத்தனையும் தூசு போல தட்டி விட்டுட்டு வீறு கொண்டு எழுந்து வளையா செங்கோல் வைத்து ஆட்சி செய்யும் செந்தமிழ், பூந்தமிழ், தேன்தமிழ்...
தொடரும்...
படித்து விட்டு கருத்துக்களை பகிருந்து கொள்ளுங்கள் தோழமைகளே...