“பரவயில்லை படு. நைட்டு முழுசும் கண் முழிச்சு படுச்ச இல்ல. கொஞ்ச நேரம் தூங்கு. இடம் வந்ததுக்கு பிறகு எழுப்பி விடுறேன்” என்று பெருவளத்தானே ஆதினியை தனது கையில் படுக்க வைத்தான்.
அதை யாரும் விகல்பமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் பெருவளத்தான் எல்லோரிடமும் பரிவாக தான் இருப்பான். அதனால் அவர்களை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் ஒருத்திக்கு மட்டும் நெஞ்சில் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது.
கண்கள் கலங்கிக் கொண்டு வர தன் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டவள் அவன் கையில் அமைதியாகி கண்களை மூடிக் கொண்டாள். அப்படியே தூக்கத்தில் அவனது புறமாக இன்னும் நெருங்கியவள் அவனின் நெஞ்சோடு தன் முகத்தை வைத்து படுத்துக் கொள்ள அவளின் தலையை தடவி விட்டவன் தன் நெஞ்சோடு அவளை சேர்த்துக் கொண்டான்.
அவனை பொறுத்தவரை அவள் இன்னும் சிறுபிள்ளை தான் என்கிற எண்ணம். ஆனால் ஆதினி அப்படி தான் உணர்கிறாளா என்று தெரியவில்லை.
அவன் நெஞ்சில் தன் முகத்தை வைத்துக் கொண்டவளுக்கு அவனின் ஆண் வாசம் முகத்தில் வீச ஆழ்ந்து சுவாசித்தாள். என்ன நிலை இது தன்னை தானே கடிந்துக் கொண்டவள் பட்டென்று அவனிடம் இருந்து நகர்ந்துக் கொண்டாள்.
அவள் நகரவும், தூக்கத்தில் தான் விலகுகிறாள் என்று எண்ணி, “ஒண்ணும் இல்ல குட்டி தூங்கு” என்று சொல்லி தன் மீது சாய்த்துக்கொண்டான் மீண்டும். அந்த கணம் எப்படி உணர்கிறாள் என்று அவளுக்கு மட்டுமே புரிந்தது.
அக்கா கணவனிடம் இப்படி நடந்துக் கொள்ள கூடாது என்று மனம் முண்டினாலும் அவளையும் அறியாது அவளது மனம் பெருவளத்தானையே நாடியது. ஒரு வழியாக இறங்க வேண்டிய இடம் வர சட்டென்று எழுந்துக் கொண்டாள். ஏதோ விடுதலை கிடைத்த உணர்வு.
இவ்வளவு நேரமும் அவனது வெற்று மார்பில் அல்லவா அவளது முகம் புதைந்து இருந்தது. அதை ஒரு மனம் தடுக்க, இன்னொரு மனம் ஆதரிக்க என கலவையான உணர்வில் திளைத்து இருந்தவளுக்கு வண்டி நிற்கவும் ஏதோ மிகப்பெரிய விடுதலை உணர்வு கிட்டியது போல உணர்ந்தாள்.
அதன் பிறகு அவனருகில் அவள் செல்லக்கூட இல்லை. விலகியே இருந்தாள். ஷாப்பிங் மால்... தேவையே இல்லாமல் நாள் பூராவும் சுற்றி திரியும் இடம். ஆளாளுக்கு கூட்டம் கூட்டமாய் வாங்கி குவிப்பது போல அந்த மாலை சுற்றி வந்தர்கள். ஆனால் அங்கு விற்கக்கூடிய விலைவாசிக்கு அருகில் கூட செல்ல இயலாது.
எல்லாமே பார்வைக்கு மட்டும் தான். மிடில் கிளாஸ் எல்லாம் பார்வையோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாதா மாதம் பட்ஜெட்டில் துண்டு தான் விழும்.
அப்படி பட்ட ஷாப்பிங் மாலில் குடும்பமாய் சுற்றி திரிந்தார்கள் தேவையே இல்லாமல். ஆதினுக்கு இதெல்லாம் தேவையா என்று இருந்தது. விட்டால் தூங்கி ரெஸ்ட் எடுத்து இருந்துருக்கலாம்... இப்படி தேவையே இல்லாமல் அலைய வைத்துக் கொண்டு இருந்தவர்களை பார்க்கும் பொழுது கடுப்பு தான் வந்தது.
ஒரு ப்ளோருக்கு மேல தாக்கு பிடிக்க முடியாமல், “நீங்க எல்லாம் சுத்தி பார்த்துட்டு வாங்க.. நான் இங்க அப்படியே இந்த சோபாவுல உட்கார்ந்து தூங்குறேன். டோன்ட் டிஸ்ட்டப் மீ” என்று சொன்னவள் அங்கு ஓய்வுக்காக போட்டு இருந்து மெத்திருக்கையில் அமர, அது அப்படியே அவளை உள்வாங்கிக் கொண்டது.
கைப்படியில் கையை ஊன்றியவள் கையில் தலையை வைத்து கவிழ்ந்துக் கொண்டாள். அவ்வளவு தான் அவளுக்கு தெரியும். அப்படியே தூங்கிப் போனாள். அவளை விட்டுவிட்டு அனைவரும் ஷாப்பிங் பண்ண, பெருவளத்தானுக்கு மனதே இல்லை. வயசு பிள்ளையை தனியே விட்டுட்டு வந்து இருக்கோமே என்று.
அதனால் “ஆதினி மட்டும் அங்க தனியா இருக்கா... நானும் போய் அங்க இருக்கேன். நீங்க ஷாப்பிங் பண்ணிட்டு வந்திடுங்க. பிறகு எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டுட்டு மூவி பார்த்துட்டு வந்திடலாம்” என்று சொன்னவன் கீழே போக,
குமுதா தன் மூத்த மகளிடம் கண்ணை காட்ட,
“ஏங்க கார்ட் குடுத்துட்டு போங்க” என்று சொல்ல, எடுத்துக் கொடுத்தவன் கீழே போய் விட்டான். அதன் பிறகு குடும்பம் எல்லாம் பர்சேஸில் இறங்கி விட இங்கே இவனுக்கு பேங்கில் இருந்து மெசேஜ் மேல மெசேஜாக வந்துக் கொண்டு இருந்தது. அவனது இந்த மாதத்து மொத்த சேவிங்கசையும் காலி செய்து புண்ணியத்தை கட்டிக் கொண்டாள் கனிகா.
அவளுக்கு மட்டும் எடுக்காமல் வீட்டில் இருந்த அத்தனை பேருக்கும் அந்த கார்ட் மூலமாக பில் பே பண்ணியவள் ஆதனிக்கும் பெருவளத்தானுக்கும் ஒரு பொருள் கூட வாங்கவில்லை.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு மெசேஜ் டோன் வந்த வண்ணமாகவே இருக்க எரிச்சல் ஆனவள் “யார்ரா அது...” கடுப்புடன் நிமிர்ந்து அருகில் பார்த்தாள். அவளின் அருகில் ஒருத்தன் அமர்ந்து இருப்பதை பார்த்த பெருவளத்தான்,
“கொஞ்சம் அங்க தள்ளி உட்காருங்க ப்ரோ... திசிஸ் மை சீட்” என்று தன்மையாகவே சொன்னான் என்றாலும் அதில் அதிகாரமே தூக்கலாக இருந்தது. அவனது முரட்டு தோற்றத்தை பார்த்து அந்த ஸ்பைக் மண்டையனுக்கு பீதியாக சட்டென்று எழுந்துக் கொண்டான்.
அதன் பிறகு ஆதியின் அருகில் போய் உட்கார்ந்துக் கொண்டான் பெருவளத்தான்.
தன் அருகில் அமர்ந்து இருந்த பெருவளத்தானை பார்த்தவள் எரிச்சலாகி,
“உங்களை யாரு வாட்ச்மேன் வேலை பார்க்க சொன்னா.. கிளம்புங்க... தூங்குறவளை தொந்தரவு பண்ணிக்கிட்டு” கடுப்படித்தாள்.
“நீ தூங்கு குட்டி நான் சும்மா தான் உட்கார்ந்து இருக்கேன்” என்றவனின் போனில் மறுபடியும் மெசேஜ் டோன் வர அவனது போனை பிடுங்கி பார்த்தாள்.
ஒவ்வொரு மெசேஜும் ஏழாயிரம் எட்டாயிரம் பத்தாயிரம் என்று கணக்கு காட்ட கண்ணை கட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.
“நீங்க எல்லாம் பெரிய மனுசன் தானா...? ஒண்ணு சொல் புத்தி இருக்கணும். இல்லையா சுய புத்தியாவது இருக்கணும். ரெண்டு இல்லன்னா எப்படி. இப்படியா கட்டல்(கஸ்ட்ட) பட்டு சம்பாதிச்ச காசை கரியாக்குவது” என்று திட்டினாள்.
“மாதத்துக்கு ஒரு முறை தானே... விடேன்” என்றான்.
“எதை விட சொல்றீங்க... நீங்க இரும்பு கம்பி தூக்கி, அதுல கையை காலை கிழிச்கிக்கிட்டு, சிமென்ட் புழுதியில கண்ணை கசக்கிக்கிட்டு, மணல்ல உருண்டு புரண்டு சம்பாதிக்கிற காசை எல்லாம் இப்படி தூக்கி குடுக்க உங்களுக்கு வேணா மகிழ்ச்சியா இருக்கலாம் ஆனா எனக்கு வேதனையா இருக்கு. இங்க வாங்குற பொருள் எல்லாம் இதே தரத்தோட வெளியில வெறும் ஆயிரத்துக்குள்ள வாங்கிடலாம் தெரியுமா?” என்று சொன்னவளை வியப்புடன் பார்த்தான் பெருவளத்தான்.
“நல்லா பேசுற ஆதினி...” என்று சொன்னவனை கடுப்புடன் பார்த்தவள்,
“நீயெல்லாம் திருந்தாத கேஸ். நான் என்ன சொல்றேன். இந்த மக்கு என்னத்த சொல்லுது பாரு” என்று வாய்க்குள் முணகி விட்டு சோபாவில் பின்னாடி சரிந்து படுத்து விட்டாள்.
“ஆமா இண்டர்வியூல என்ன கேள்வி கேட்டாங்க?” ஆர்வத்துடன் கேட்டான்.





