அடுத்த நாள் காலையில் பாண்டியனின் பிடியிலிருந்து வெளியே வர முடியாமல் தடுமாறியவள், அப்படியே படுத்து இருந்தாள். ஏனெனில் இன்று அவள் இந்த வீட்டை விட்டும் பாண்டியனை விட்டும் வெளியே போக வேண்டும். அதனாலே அவனது கையனைப்பை விட்டு விலக மனமே வரவில்லை. அவனோடு இன்னும் ஒட்டிக்கொண்டு படுத்தாள்.
“என்னடி எழுந்திரிக்கலையா...?” அவளை இன்னும் வாகாக அணைத்துக்கொண்டே கேட்டான்.
“எழுந்திரிக்க தோணலைங்க..”
“அப்போ விடு வசதியா போச்சு...” என்று காலையிலேயே அவனது சேட்டையை தொடங்க, தன் காதலை எப்படி நிருபிக்க என்று தெரியாமல் தடுமாறியவள், அவன் நெருங்கும் முன்பு தானே அவனை நெருங்கி தன் காதலின் உச்சத்தை அவனுக்கு காண்பிக்க தொடங்கினாள்.
அவளது காதலில் திக்குமுக்காடி போனவன் முத்தத்தால் அவளை குளிப்பாட்டி துவட்டி விட்டான். அன்று அவன் கேட்காமலே அவனை குளிக்க வைத்து துவட்டி விட்டு, சட்டையை போட்டு அதன் பட்டனையும் போட்டுவிட்டவள், அவனுக்கு தலையும் வாரிவிட,
“என்னமோ ஆச்சுடி உனக்கு... இதையெல்லாம் நான் கேட்டா ரொம்ப பிகு பண்ணுவ... இப்போ நீயே செய்யிற... கொஞ்சம் இல்ல ரொம்ப தான் உன்கிட்ட மாற்றம் தெரியுது.. இதுக்கு தான் பெரியவங்க சொல்வாங்க போல, கல்யாணம் ஆனா கொஞ்ச நாளாவது மணமக்களை தனியா விடணும்னு..” என்றவன் அவளை கட்டி அனைத்து முத்தமழை பொழிந்தான்.
அவனது அணைப்பில் இன்னும் சிறிது நேரம் இருக்க மனம் விளைந்தது. ஆனால் பாண்டியன் அவளை தூக்கிக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட அதன் பிறகான நேரங்கள் அனைத்தும் அவனுடனே சென்றது...
அவனை கவனித்து அனுப்பியவள் தன் மகனை தூக்கி இடுப்பில் வைத்தவள் பாண்டியனுக்கு மதிய உணவை எடுத்து செல்லும் வரையிலும் கீழே இறக்கிவிடவில்லை.
இரண்டு நேர உணவினை ஊட்டிவிட்டவள் அவன் அருகில் படுத்து கண்ணீருடன் தாலாட்டு பாட்டு பாடி தூங்க வைத்தாள்.
“இந்த அம்மாவ மறந்துடாத கண்ணா... எனக்கு நீயும் உங்கப்பனையும் தவிர வேற எந்த உறவும் இல்ல...” என்று சொல்லி அவனது நெற்றியில் முத்தமிட்டாள் கண்ணீருடன்.
தூக்கத்திலும் தகப்பனை போலவே அவளின் அருகாமையை உணர்ந்தவன் இதழ்களில் சிரிப்புடன்,
“ம்மா...” என்று அவளது மார்பில் புதைந்துக்கொண்டு, அவளின் முந்தானையை இழுத்து இன்னும் முழுமையாக போர்த்திக்கொண்டன்.
அதில் அவளுக்கு வெடித்துக்கொண்டு அழுகை வர, கையை வைத்து மறைத்துக்கொண்டு கதறி தீர்த்தாள்.
அதன் பிறகு சிறிதும் நேரத்தை வீணாக்காமல் பாண்டியனுக்கு உணவு எடுத்து சென்றவள் அவனை சாப்பிட விட்டு, உடனடியாக வீடுக்கு போகணும் என்றாள்.
“இருடி என்ன அவசரம்...”
“என்ன அவசரமா...? யோவ் இரவு பூரா நீங்க பண்ணி வச்ச வேலையில உடம்பு ரொம்ப வலிக்குது... நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன்... அப்போ தான் இன்னைக்கு இரவு ஏதாவது கவனிக்க முடியும்..” முறைத்துக்கொண்டே சொன்னாள்.
அதில் சிரித்தவன், “சரி சரி கவனமா போ...” என்றான்.
“ம்ம்ம்...” என்றவள், கதவு வரை சென்றாள். பின் திரும்பி அவனை பார்த்தாள். தன் கண்களும் மனதும் நிறைய அவனது உருவத்தை தன் நெஞ்சில் நிறைத்துக்கொண்டவள், அவனருகில் வந்து குனிந்து நின்றவள் அவனது தலையை தன் உயரத்துக்கு நிமிர்தியவள் சற்று ஆவேசமாக அவனது இதழ்களை தனக்குள் சுருட்டிக்கொண்டாள்.
அதை எதிர்பார்க்காதவன் இன்பத்தில் திளைத்தான். தன் உயரத்துக்கு அவளை தூக்கி அவளுக்கு இன்னும் வாகு செய்து கொடுக்க, கண்களின் ஓரம் நீர் துளி அரும்பியது...
கேவலும் வெடிக்க இருந்த நேரம் சட்டென்று அவனை விட்டு விலகி வெளியே ஓடி வந்துவிட்டாள். பாண்டியனுக்கு அது வெட்கமாய் பட, தலையை கோதிக்கொண்டு சிரித்தான்.
தன் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து மாற போகிறது என்று அறியாமல்...
அவனை விட்டு விலகி வந்தவள் நேரே மலைச்சாமியை சென்று பார்த்து, ஏற்கனவே அவளது வீட்டை வாங்குவதற்கு தயாராய் இருந்த பக்கத்து வீட்டு ஆளிடம் உடனடியாக இருந்த வீட்டை விற்று பணத்தை வாங்கிக்கொண்டு நகை கடைக்கு சென்றவள் தடிமனான சங்கிலியும் தாலியும் வாங்கியவள் இரண்டையும் கோர்த்து பைகளில் வைத்தவள், தன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை ரவிக்கையின் உள்ளே தெரியாதவாறு மறைத்துக்கொண்டவள், டாக்டர் சுபஸ்ரீ சந்திக்க வர சொன்ன இடத்திற்கு வந்து காத்திருந்தாள்.
இவள் வந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவளும் வந்துவிட, அவளிடம் கையில் இருந்த பொருளை கொடுத்துவிட்டு,
“நீங்க செஞ்ச உதவிக்கெல்லாம் ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர்... இந்த உதவிய என்னைக்கும் நான் மறக்க மாட்டேன். மறுபடியும் உங்க வாழ்க்கையிலையும் சரி கண்ணுலையும் சரி படமாட்டேன்... ரொம்ப நன்றிங்க...” என்று கை எடுத்து கும்பிட்டுவிட்டு அவளின் நலத்தையும் விசாரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாள் இவ்விடத்திற்கு.
அதையெல்லாம் எண்ணி பார்த்தவளுக்கு மனது மிகவும் பாரமாய் இருந்தது... நெஞ்சு முழுசும் நிரம்பி இருந்தவனை எப்படியாப்பட்ட வார்த்தை சொல்லி அனுப்பி விட்டு இருக்கேன் என்று எண்ணி எண்ணி காய்ந்த சருகாகினாள்.
அங்கு ஊருக்கு வந்த பாண்டியன் தன் வீட்டுக்கு வராமல் ஆலைக்கு சென்றவன் அங்கேயே இருந்தான். பொழிலி சொன்ன வார்த்தைகள் எல்லாம் மனதினுள் இருந்து அவனை வதைக்க ஆறடி உயரமும் ஆட்டம் கண்டு போனது.
அதுவும் அசிங்கமா இருக்குன்னு அவள் சொன்ன சொல் உச்சி முதல் பாதம் வரை அவனை வெட்டி சாய்த்து இருந்தது... கட்டாந்தரையில் வெறுமென படுத்து இருந்தவனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.
அதை எடுக்கவே இல்லை... போக போக தொடர்ந்து அழைப்பு வந்துக்கொண்டே இருந்தது... போனை அனைத்து போட்டவன் விட்டத்தையே பார்த்துகொண்டு இருந்தான். விழிகள் மின்னியதோ அந்த திடமான மனிதனுக்கும்...
கண்கள் சிவக்க சிவக்க அடுத்த நாள் காலையில் வந்தவனுக்கு அவனது மகன் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பது தெரிய வர, அடித்து பிடித்துக்கொண்டு அங்கு ஓடினான்...
வீட்டின் ஒட்டு மொத்த ஆட்களும் அங்கு தான் இருந்தார்கள். அவனை அப்படி பார்க்கையில் அனைவருக்கும் நெஞ்சில் இருந்த உதிர நாளங்கள் வெடித்து சிதறியது. அவர்களை ஏறெடுத்து பார்க்க முடியாமல் அவர்களுக்கு எதிரே இருந்த அறையை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
அங்கு பல ஒயார்களுக்கு மத்தியில் அந்த சின்ன குருத்து படுக்கையில் கிடப்பதை கண்டு தந்தையாய் இதயம் துடித்து பதறி போனது.
“டேய் கண்ணா...” என்று அவனது கால் பாதத்தை தொட போக, அருகில் இருந்த செவிலி,
“சார் அவனை தொடாதீங்க... அவனுக்கு இன்னும் கான்சியஸ் திரும்பல...” என்றார்.
“என் மகனுக்கு என்ன ஆச்சுங்க... ஏன் இப்படி... நல்லா தானே இருந்தான்..” கேட்கும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வந்தது...
“இப்பவும் நல்லா தான் இருக்காங்க... நீங்க எதா இருந்தாலும் மருத்துவரை கேட்டுக்கோங்க...” என்றார்.
வெளியே வந்தவன் வேகமாய் மருத்துவரை பார்க்க சென்றான்.
Yennachu





