ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் சட்டென்று எழ அவளை எழ விடாமல் அவனது முரட்டு கரங்கள் அவளை சுற்றி இருந்தது... தூக்கத்திலும் அவளை விடாமல் பற்றி இருந்தவனின் அன்பில் கண்கள் கலங்கியவள், எம்பி அவனது நெற்றியில் முத்தமிட்டாள்.
அதில் நெளிந்தவன் தூக்கத்திலே அவளை இன்னும் தன்னோடு இறுக அனைத்துக்கொண்டான். அதில் இன்னும் கண்கள் கலங்கிப்போனவள்,
“உன்னை கிழித்து உனக்குள்ளே நான் உயிரோடு புதையணும்னு மாமா.. உன்னோட நான் வாழ்ற என் வாழ்க்கை எனக்குள் அசையாமல் அந்த நொடிகள் அப்படியே உயிர் பெற்று வாழும்...” என்றவள் அவனது நெஞ்சில் படுத்துக்கொண்டாள்.
“உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும்...
உன்னை பார்த்து பார்த்து வாழ நகக்கண்ணில் பார்வை வேண்டும்...
உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை...
உன்னோடு என் சொந்தம் ஈரேழு ஜென்மங்கள்...
உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சுவர்கங்கள்...”
‘இந்த வரம் எனக்கு இன்னும் இரண்டு நாளுக்கு மேல் நீடிக்காது மாமா... உன்னோட நான் வாழ்ந்த நாட்கள் மட்டும் தான் நான் உயிர்ப்புடன் இருந்த நாள்... மத்ததெல்லாம் வாழாமல் வீணா போன நாட்கள் தான்...’
‘உன் மூச்சு காத்து என் மேல பட்டாலே என் என்னை இழந்து விடுகிறேன் மாமா... உன்னை என்னால மறக்கவே முடியாது.. என்னோட ஒவ்வொரு அணுவிலும் உயிர்ப்புடன் நீ இருப்ப... என்னோட வயிற்றுல நம்ம குழந்தை இருக்கு...’ அதை தொட்டு தடவியவள்,
‘நான் போனதுக்கு பிறகு நீ என்னை முழுசா மறக்கணும் மாமா... அது தான் என்னோட ஆசை... உன் நினைவுல கூட நான் இருக்க கூடாது... எனக்கு பதிலா ஒருத்தவங்க வருவாங்க... என்கிட்டே காண்பிச்ச அதே அன்பை அதை விடவும் நீ அவங்க கிட்ட அன்பைக் காட்டணும்... இனி உன் வாழ்க்கை அவங்களோட தான்... இனி இந்த பொழிலி உன் வாழ்க்கையிலேயே கிடையாது...’ நினைக்கும் பொழுதே அவளுக்கு மூச்சை அடைத்துக்கொண்டு வந்தது.
அவளுக்கு எப்பொழுது இருபத்தி எட்டு நாட்களுக்குள் மாதாந்திர சுழற்ச்சி வந்துவிடும். ஆனால் முப்பத்தி எட்டு நாட்கள் ஆன பின்பும் வராமல் போக அவளுக்கு அது குழந்தை என்று உறுதியானது...
அதோடு தன் நாடி துடிப்பை அவள் பரிசோதித்து பார்க்கும் பொழுது அறிந்த உண்மை அவளை கண்கலங்க செய்தது... ஆசையுடன் தன்னவனின் நெற்றியில் இதழ் பதித்தவள், அவனிடமிருந்து எழுந்து குருங்கண்ணோரம் சென்று நின்றாள்.
மலையில் பொழிந்த மழையில் குளிர் அதிகம் எடுக்க முந்தானையை இழுத்து போத்திக்கொண்டவள், தூரத்தில் தெரிந்த காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
தான் செய்த செயல்கள் எல்லாம் கண் முன் எழ வேதனை கொண்டாள். எப்படி எப்படியெல்லாம் காதல் செய்த பாண்டியனை திரும்பி பார்த்தாள். இன்று வரையிலும் ஏன் எதற்கு என்று ஒற்றை கேள்வி கூட கேட்கவில்லை அவளது குடும்பத்தார்களை பற்றி...
திருமணம் முடிந்த கையோடு சென்றவர்கள் தான். மறுவீட்டு விருந்துக்கு அழைப்பு விடுக்க வில்லை. கறி விருந்துக்கு மாமனார் அழைக்கும் பொழுது கூட அவர்கள் வரவில்லை. ஏன் கோயில் திருவிழாவுக்கு கூட அழைத்து இருந்தார்கள். அதற்க்கும் வரவில்லை...
இது அத்தனை நடந்தும் பாண்டியன் அவளிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை... அவன் கேள்வி கேட்டு இருந்தால் இவளிடம் எந்த பதிலும் இருந்து இருக்காது தான். ஆனால் அவன் அதெல்லாம் ஒரு பெரிய விசயமாக கண்டு கொண்டதே இல்லை.
மாறாக அவன் தன்னை உள்ளங்கையில் தாங்காத குறையாக தாங்கிக்கொண்டு இருக்கிறான். எங்கு சென்றாலும் அவனும் பின்னோடே வருவான்... கொற்கயனுக்கும் இவனுக்கும் பெரிதாக எந்த வித்யாசமும் இருந்தது இல்லை...
அவன் இவளது மடியில் இருப்பான்... இவன் தோளை உரசிக்கொண்டு அருகில் இருப்பான் அவ்வளவு தான்.
‘உங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சி நான் எப்படி இருக்க போறேன்னு எனக்கு தெரியல... நான் போனதுக்கு பிறகு ஒரு ஏமாற்று காரியா தான் உங்களுக்கு தெரிவேன்.. நல்ல நிலையில நாம சேர்ந்து இருக்க கூடாதான்னு நான் நினைக்காத நாள் இல்ல மாமா...’
‘இந்த ஏமாற்று காரி உங்களை அவ மனசு பூரா நிறைச்சி வச்சு இருக்கா... அது தெரியுமான்னு இல்ல தெரியவருமான்னும் எனக்கு தெரியாது... ஆனா இனி உங்க பார்வை என் மேல நல்ல அபிப்ராயத்தோட விழாது. அதை நினைக்கும் பொழுது நெஞ்செல்லாம் தீ பிடிச்சது போல இருக்கு மாமா...’
‘இனி நீங்களே என் முன்னால வந்து நின்னாலும் நான் உங்களை ஏத்துக்க முடியாது... என் ரகசியம் அது என்னோடவே போகட்டும். அது உங்களுக்கு தெரிஞ்சா அதை விட அசிங்கமா வேற எதையும் நீங்க நினைக்க மாட்டீங்க. அதனால உங்க மனசுல நான் ஏமாற்று காரியவே இருக்கேன் மாமா... தப்பி தவறி கூட அசிங்கம் நிறைஞ்சவளா நான் இருக்க விரும்பல...’ என்று கண்ணீருடன் மனதோடு பேசியவள் அதன் பிறகு அவனை நெருங்கவே இல்லை.
ஆனால் அவன் அப்படி விடுவானா... கண் விழித்தவன் தன்னருகில் அவள் இல்லாமல் போக எழுந்து பார்த்தான். முந்தானையை போர்த்திக்கொண்டு குறுங்கண்ணோரம் நின்றுக்கொண்டு இருந்தாள்.
அவளின் இந்த தோற்றம் அவனை மயக்க, எழுந்து அவளின் பின்னோடு சென்று கட்டிக்கொண்டான்.
அப்படியே அவளது கழுத்தில் புதைந்து துயில் கொள்ள, தன் வேதனையை விழுங்கிக்கொண்டு அவனை தாங்கினாள்.
“ம்ம்ம் படுக்கைக்கு போகலாம் டி...” என்றவன் அவளது பதிலை கேட்காமல் அவளை தூக்கிக்கொண்டு படுக்கையில் சென்று விட்டவன் அவள் மீது படர்ந்தான்.
“என்னடி மாயம் பண்ணி வச்ச... எப்போ பாரு உன்னை தொட்டுக்கிட்டே இருக்கணும் போலவே தோணுதுடி... கருவாச்சி மயக்கி மடியில போட்டுக்கிட்டடி இந்த பாண்டியனையே... பெரிய ஆளு தான்..” என்றவன் அவளது காதில் சில ஆசைகளை சொல்ல, வெட்கத்துடன் மாட்டேன் என்றாள்.
“ம்ஹும் நான் உன்னை விட மாட்டேன்டி..” என்று அவள் மீது பாய்ந்தான். அவனது இந்த அதிரடி முரட்டு தனத்தை அடக்கும் வழி தன்னிடம் தான் இருக்கிறது என்று அறிந்து அவனை குளிர குளிர கவனித்தாள்.
அவனே வியந்து தான் போனாள். “ஹேய், என்னடி ஆச்சு உனக்கு... செம்மையா கவனிக்கிறடி மச்சானை..” என்று புலம்பினான். அவனது புலம்பல்களை கண்ணீருடன் ஏற்றுக்கொண்டவள் அவனுக்கு தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.
மனதில் அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்து இருந்தது பாண்டியனுக்கு... என்றைக்கும் இல்லாத கூடலை தன்னவள் தனக்கு பரிசளித்ததில் பரவசமானான். வாழ்வில் எல்லாமே கிடைத்து விட்டது போல இருந்தான். நல்ல குழந்தை, ஆசையாக அன்பாக இருக்கும் மனைவி கூட்டு குடும்பம், சொத்து, உடல் ஆரோக்கியம். இதை விட வேற என்ன வேண்டும் மனிதனுக்கு...
ஒவ்வொரு நொடியும் தன்னவளை கொண்டாடி தீர்த்தான். அந்த நாளை அங்கே கழித்துவிட்டு மறுநாள் உதயத்திலே வீட்டிக்கு கிளம்பினார்கள்.
அருவிக்கரையில் நீண்ட தொரு தேன்நிலவை முடித்துவிட்டு இல்லம் திரும்பினார்கள் பசும்பூண் பாண்டியனும் பூம்பொழிலி மாதுமையாலும்.
இத்தனை நாள் காணாத மகனை அள்ளி வாரி எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள் அவனது கோவத்தையும் தாங்கிக்கொண்டாள்.
இவ்வளவு நாளும் கொற்கையனை கண்ணும் கருத்துமாக இடுப்பிலிருந்து இறக்காமல் பார்த்துக்கொண்டவள் சட்டென்று காணாமல் போனவுடன் அந்த சிறுபாலகனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
Nice





