“ஆத்தாடி தொலைஞ்சேன்...” என்று கரை ஏற பார்க்க, அதற்கு அவன் விட்டால் தானே...! அவளது இடையை பற்றி இழுத்தவன் தன்னோடு சேர்த்து அனைத்து அருவி நீரில் மின்னிய அவளது இதழ்களை தன்னக்குள் இழுத்து சுவைக்க தொடங்கியவனின் கைகள் அவளை அணு அணுவாய் அளந்து பார்க்க தொடங்கியது.
அவனது தொடர் படையெடுப்பில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் விரும்பியே தொலைந்து போனாள். நீரில் ஒரு மோக களியாட்டம் போட, அந்த நீரே சூடாகி போனது.
பெண்ணவளின் வெட்கத்திலும் ஆணவனின் முரட்டு வேகத்திலும்...
எல்லையில்லா காதலில் இருவரும் திளைத்து இருந்தார்கள் அங்கு இருந்த நாட்களில். அவனே ஒரு ரசிகன். அதுவும் விதவிதமாய் அவளை ரசித்து கூடிக்கொண்டு இருக்கிறான்.
அதுவும் இந்த மலையில் யாருமற்ற தனிமையில் சொல்லவும் வேண்டுமா என்ன...? ஒரு முறை வெறும் காட்டு மல்லிக்கையில் தன்னவளை அலங்கரித்து பார்த்தான்.
அவனது ரசனையில் அவள் தான் செக்க சிவந்த வானமாய் மாறிபோனாள்.
“என்ன மாமா இது இப்படி படுத்துறீங்க... முதல்ல என்னோட உடுப்பை குடுங்க... இந்த பூவெல்லாம் எனக்கு என்னவோ போல இருக்கு...” சங்கடமாய் நெளிந்தாள்.
“ஹேய் இதுல உன்னை பார்க்கும் போது ஒரு பெரிய மலை பூவ பார்க்கிற மாதிரி இருக்குடி... பெரிய மலைப்பாவும் இருக்கு...” கண்சிமிட்டினான்.
“ப்ச் மாமா... குடுங்க மாமா... படுத்தாதீங்க...”
“இன்னைக்கு முழுசும் நீ உன்னோட பெயருக்கு ஏத்த மாதிரி தான் இருக்கணும்...”
“புரியல மாமா...” பாவமாய் பார்த்தாள்.
“உன் பேரு என்னடி...”
“என் பேரு பூம் பொழிலி மாதுமையாள்...”
“ம்ம்ம் அது தான் உன்னை அப்படி இருக்க சொன்னேன்...”
“யோவ் சத்தியமா ஒண்ணுமே புரியலய்யா...” அவளது விருந்த கூந்தலை வருடி விட்டவன் அவளின் காதோரம் ஒரு கொத்து பூவை சொருகியவன்,
“பூ நிறைந்த சோலை பெண்ணுன்னு அர்த்தம் உன்னோட பெயருக்கு... அது தான்டி உன்னை அப்படியே மாத்திட்டேன்...” என்று ரசித்தவன் அவளின் அங்கம் மறைத்த பூக்களை ஒவ்வொன்றாய் எடுக்க முயல, திகைத்து போனாள்.
“ஏங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க... ஒழுங்கா கையை எடுங்க... இல்ல அப்புறம் ரத்த காட்டேரிய பார்க்க வேண்டியது வரும். சொல்லிட்டேன்...” எச்சரித்தாள்.
“நீ சொல்றதும் சரி தான்டி... மன்னிச்சுக்கோ...” என்றவன் அருவியின் இடையில் இருந்த சின்ன குகைக்கு அவளை தூக்கிக்கொண்டு போனவன் அவளை அந்த தரையில் படுக்கவைத்து, தன் இதழ் கொண்டே அவளது மேனியை அலங்கரித்த பூக்களை எடுக்க அவன் செய்யும் ஒவ்வொரு வித்தையிலும் கதிகலங்கி போய் நின்றாள் பாவை.
“சரியான ஆளு தான்...” கோவ நாணத்துடன் புலம்பியவளின் இதழ்களை தன் வசமாக்கிக்கொண்டு அதற்கு சுகமான தண்டனையும் வழங்கினான்.
“எப்போ பாரு உதட்டை கடிச்சு காயம் பண்ணி வைக்கிறதே வேலையா போச்சு... லேசா காரம் பட்டா கூட எப்படி எரியுது தெரியுமா...? போய்யா நீ ரொம்ப மோசம்...” என்று சொன்னவளின் கன்னத்தில் எதையோ தடவ சட்டென்று திகைத்து பார்த்தாள்.
“என்னங்க இது...”
“பூவுல என்ன இருக்கும்...” அவனது கண்கள் நக்கலாக அவளை பார்த்தது...
“பூவுல என்ன இருக்கும் இதழ் இருக்கும்...”
“அடுத்து...”
“வேறென்ன தேனு...” சொல்லி முடிக்கும் முன்பே அவனை விழிகள் விரித்து லேசான பயத்துடன் பார்த்தாள்.
ஒற்றை கண்ணை அடித்து அவள் மீது படர்ந்தவன் அவளது கன்னத்தில் இருந்த தேனை ருசி பார்க்க விளைய மூச்சே நின்றது போல இருந்தது...
“மலை தேன்டி...” என்றான் அவளைது ஆழ்ந்த திகைப்பை கண்டு.
“ஹாங்...” அவளிடமிருந்து வெறும் காற்று மட்டும் தான் வந்தது... அவனது ஒவ்வொரு செயலும் அவளுக்கு ஆழ்ந்த மயக்கத்தை கொடுத்தது... அதையும் மீறி தான் அவள் அவனிடம் வாயாடுவது.
அவளின் வாயாடலை ரசித்துக்கொண்டே ‘இன்னும் நீ என்ன செய்தால் என்னிடம் மயங்குவாய்’ என்று அவனும் ஒவ்வொன்றாய் செய்துக்கொண்டு இருக்கிறான்...
அவனது இந்த முயற்சியில் அவள் தான் தன் வாய் சொற்களை மறந்து முழு திகைப்பில் ஆழ்ந்தாள்.
“அம்மணி எதுவும் இதுக்கு எதுவும் கவுண்டர் குடுக்கலையா...?” கேட்டவனின் இதழ்கள் அவளது கன்னத்தில் ஊறியது...
அவன் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு உணர்விலும் அவள் வெடித்து சிதறினாள். அவனின் இதழ்கள் இன்னும் முன்னேறி அவளது இதழ்களில் சங்கமிக்க கண்ணாடி வளையல்கள் அணிந்து இருந்த கரம் பிடிப்புக்காக பாறை தரையில் அங்கும் இங்கும் அலைய, அதை உணர்ந்தவன் தன் முதுகில் அவனது கரங்களை எடுத்து போட,
கூர்ந்த நகங்கள் அவனது முதுகை பதம் பார்த்தது... அதிலே தெரிந்தது அவனது ஆளுமை அவளிடம் எப்படி இருந்தது என்று... அவர்களில் கூடலில் அந்த தரையெல்லாம் பூக்களும் அவளின் கண்ணாடி வளையல்களுமாய் சிதறி இருக்க அவனது மார்பில் கண்களை மூடி இருந்தாள்.
நெஞ்சுக்குள் பல பூகம்பங்கள் நிகழ்ந்துக்கொண்டு இருந்தது... அதன் பதிப்பை வெளியே தெரிய விடாமல் காத்து நின்றவள் அவனுக்கு தன் முழு ஒத்துழைப்பையும் கொடுத்தாள்.
கிளம்பும் அன்று அவனை விட்டு கொஞ்சமும் விலகவே இல்லை அவள். அவனே வியந்து போனான்.
“நீ தானான்னு சந்தேகமா இருக்குடி... ப்பா என்ன ஒத்துழைப்பு... அப்படியே இந்த கையை கொஞ்சம் அழுத்தி விடு...” என்று அவன் அவளை சீண்டிவிட, கொஞ்சமும் பிகு இல்லாமல் அவனுக்கு கையோடு சேர்த்து காலையும் அமுக்கி விட்டாள்.
“என்னடி...” என்றான்.
“ஏன் நீங்க என் காலை பிடிக்கலையா...? அது போல தான் இதுவும்...” என்றாள்.
“ஹேய் அது கூடல்லடி... ஆனா இது...”
“காதல்..” என்று தனக்குள் முணகியவள் அவனுக்கு கேட்பது போல,
“வேற என்ன இவ்வளவு நாளா எனக்கு நீங்க சேவகம் பண்ணீங்க... இப்போ நான் பண்றேன்... அவ்வளவு தான்... ரொம்ப பொங்க வேண்டாம்...” என்று படாமல் பேசுபவளை போல பேசினாள்.
ஆனால் அதிலும் காதல் தான் இருக்கிறது என்று கண்டுக்கொண்டான் பசும்பூண் பாண்டியன். கிளம்பும் அன்று மழை பொழிய தொடங்க, பாண்டியனுக்கு இன்னும் வசதியாய் போனது...
“கிளம்பலாங்க கொற்கையன் நம்மள தேடுவான்...” என்று பொழியும் மழையை பார்த்துக்கொண்டே கூறினாள்.
“போகலாம்டி... இனி எப்பவும் கொற்கையன் உன் இடுப்புல தான் இருக்க போறான்... இந்த நாள்ல மட்டும் தான் நான் முழுசா உன்னை என்கிட்டே வச்சுக்க முடியும். அவனை ஊர்ல போய் கொஞ்சிக்கோ... இப்போ கொஞ்சம் என்னை கவனிடி...” என்றவன் தனக்குள் அவளை இழுத்துக்கொண்டான். மழையோடு மழையாக அருவியில் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி படுக்கையில் விழும் பொழுது பாண்டியனுக்கு மறுபடியும் அவள் தேவைப்பட்டாள்.
அவனது தேவை அறிந்து மெல்லிய புன்னகையுடன் அவனோடு உடன் ஒத்து போய் அவனுக்குள்ளே உட்பட்டாள்.
- Nice





