அதை காதலுடன் செய்ய அவள் இருக்கையில் அவனுக்கு வேறு என்ன வேண்டும்... இறுக்கி அணைத்துக்கொண்டவன் அவளின் தேகம் முழுவதும் தன் இதழ்களை பதிக்க, பொழிலிக்கு காற்றில் பறப்பது போல இருந்தது.
அவன் உதடுகள் செய்யும் லீலைகளில் சிக்கி சிதறிப்போனவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாம இம்சை செய்யும் அவனது இதழ்களை கடித்து வைத்தாள். அதில் கண்களில் மின்னல் வெட்டிபோனது பாண்டியனுக்கு.
தன் கரத்தை கொண்டு அவளுடம்பில் வண்ணம் தீட்ட இன்னும் சற்று வன்மையாக அவனது இதழ்களை கடித்து வைத்தாள். அந்த வலி தனக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்று எண்ணியவன் அவளை மேலும் மேலும் சீண்டிவிட, அவனை துவம்சம் செய்ய ஆரம்பித்தாள் பொழிலி.
அவனுக்கு இது தானே வேண்டும். அதனால் அவளை சீண்டிவிட்டு சீண்டிவிட்டு சுகம் கண்டான் இந்த காதல் வேந்தன்.
எல்லை கோடு தாண்டாமல் அவளை இம்சை செய்து கொள்ளையடித்தவனை கண்டு யோசனையானாள்.
“என்ன ஆச்சு. அய்யாவுக்கு இது மட்டும் போதுமா...?”
“போதாதே...” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே கொண்டு போய் விட்டவன், அவனுடைய இடத்தில் வந்து படுத்துக்கொண்டான்.
அவன் கட்டிய தாலி செயினோடு இவள் அது போலவே ஒரு தாலியை வாங்கி கோர்த்து அந்த பெண்ணிடம் கொடுத்து இருக்கிறாள் என்று யூகித்தான். அது தான் உண்மையும் கூட.
முதல் முதலாக அவன் அவளுக்கு வயல்வெளியில் போட்ட சங்கிலியோடு கோர்த்து இவன் கட்டிய தாலியை கோர்த்து கழுத்தில் அணிந்து இருக்கிறாள். எல்லாவற்றையும் யோசித்து பார்த்தவனின் கண்களில் வெறும் தரையில் தன் வேட்டியை மட்டும் விரித்து போட்டு அதில் துயில் கொண்டு இருந்தார் செவுனப்பன்.
அவரின் முகத்தில் உழைத்து களைத்ததர்க்கான சோர்வு அப்பட்டமாய் இருந்தது.
இதற்கு முன்பு ஒரு முறை இங்கு வந்து இருக்கிறான். அப்பொழுது இந்த இடம் இவ்வளவு சுத்தமாக இருந்தது இல்லை. ஆனால் இப்பொழுது எல்லா இடமும் அதிக சுத்தமாக இலை தளைகள் குப்பை கூளங்கள் எதுவும் மன்டாமல் இருந்தது.
அதற்கான காரணம் இவர்கள் இருவரும் தான் என்று அறிந்துக்கொண்டான். ஏனெனில் பொழிலியின் வேலை திறன் தான் அவனுக்கு நன்கு தெரியுமே... திருமணம் ஆகி வந்த அடுத்த நாளே வயலில் இறங்கி நாத்து நாட்டாளே... அதை எப்படி அவனால் மறக்க முடியும்.
அப்பொழுதே அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனெனில் முதல் முறை பார்த்த பொழுது வயலில் தான் இருந்தாள். ஆனால் அடுத்த நாள் அவளது நாகரிக தோற்றத்தை கண்டு நெற்றி சுருக்கினான்.
அதோடு பெண்கேட்டு செல்லும் பொழுதும் ஆத்தாமார்கள் இருவரும் பாண்டியனிடம் வந்து,
“நீ சொன்ன பொண்ணுக்கும் நாங்க பார்த்த பொண்ணுக்கும் ஏதோ வித்யாசம் இருக்குய்யா... பார்த்து முடிவு பண்ணு..” என்று சொல்லி இருந்தார்கள்.
பாண்டியன் தான் அதெல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லி இருந்தான். திருமணத்தன்று அந்த பெண்ணுக்கு பதிலாக பொழிலியே இருக்க அவன் அதன் பிறகு அதை பற்றி வேறு எதுவும் யோசிக்கவில்லை.
பொழிலியின் மீது வைத்த காதல் அவனை யோசிக்க விடவில்லை. அது எவ்வளவு பெரிய தவறு என்று இந்த ஒருவார பிரிவு அவனுக்கு உணர்த்தி இருந்தது.
“உன் மேல வச்ச காதல்ல என்னையே மறந்து சுற்றம் மறந்து எல்லாமே மறந்து போய் உன்னை மட்டுமே நினைக்க வச்சுட்டடி. இப்படி அணுஅணுவா எனக்குள்ள இருக்குற உன் நெஞ்சுல நான் மட்டும் நிறைந்து இருப்பனா..? என் மேல மட்டும் உனக்கு உரிமை உணர்வு வராதா...? ஏதேதோ எண்ணியவனுக்கு இதழ்களில் புன்னகை ஒன்று உதித்தது...
அப்படியே தூங்கிப்போனான். காலையில் எழுந்து பார்த்தவனுக்கு தென்னந்தோப்பில் கீழே விழுந்த மட்டைகளை எடுத்து ஓரமாக போட்டுக்கொண்டு இருந்த செவுனப்பன் தான் கண்ணில் பட்டார்.
அதோடு கிணற்று மேட்டில் ஒரு பக்கம் வெந்நீர் போட்டு இருந்தார். காலை ஆளாக வேலைக்கு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய வேலையை பிரித்து கொடுத்துக்கொண்டு இருந்தார்.
அவர்களோடு தானும் இறங்கி வேலைப்பார்க்க தொடங்கிய சமயம்,
“அய்யா வந்து கஞ்சி குடிச்சுட்டு கடைக்கு போயிட்டு வாங்க...” பொழிலி வெளியில் வந்து குரல் கொடுக்க,
“இந்தா வாறன் கண்ணு...” என்று கைக்கால்களை வயல்களுக்கு பாய்ந்துக்கொண்டு இருந்த வாய்காலில் வந்த நீரில் அலம்பியவர் வேகநடை போட்டு வந்தார்.
அப்பொழுது தான் எழுந்தவன் போல கட்டிலில் எழுந்து அமர்ந்தான்.
“வணக்கமுங்க அய்யாரு...” துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்தார்.
“தம்பி சொல்லுங்கன்னு எத்தனை முறை சொல்றது உங்களுக்கு... தம்பின்னு சொன்னா தான் இனி இங்க சாப்பிடுவேன். இல்லன்னா நான் ரோட்டு கடையில போய் ஏதாவது சாப்பிட்டுக்குறேன்.” என்றான் கரகறாக.
“அய்யோ என்ன தம்பி இதுக்கு போய் பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு... இப்ப என்ன நான் உங்களை தம்பின்னு சொல்லணும் அவ்வளவு தானே... இனிமே தம்பின்ற சொல்லுக்கு எதிர் பதமா எதுவும் சொல்லமாட்டேனுங்க...” என்றவர் தொடர்ந்து,
“உங்களுக்கு வெண்ணி தண்ணி போட்டு இருக்கேன். குளிச்சுட்டு வாங்க தம்பி தே தண்ணி பருகலாம்...” என்றார் அன்பாக.
“சரிங்க...” என்றவன் பல்லைவிலக்கி முகத்தை கழுவிக்கொண்டவன் வர, பொழிலி அவன் படுத்து இருந்த கட்டிலை நிமிர்த்தி வைத்துவிட்டு, போர்வையையும் தலையணையையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
செவுனப்பன் கேழ்வரகு கூழை குடித்துக்கொண்டு இருக்க, அவனுக்கு மட்டும் தே தண்ணீரை கொடுத்தாள்.
“எனக்கும் கூழு குடுக்கலாமே...” என்று மாமனாரின் முன்பு பணிவு காட்டி கேட்டான் பாண்டியன்.
“இல்லங்க ஐயா நீங்க தே தண்ணி குடிச்சு பழகி இருப்பீங்கலேன்னு தான் போட சொன்னேன்...” என்றார்.
“நாளையில இருந்து எனக்கும் சேர்த்தே கரைச்சிடு..” என்று ஒரு பார்வை அவளை பார்த்துவிட்டு குடிக்க தொடங்கினான். அவனது பேச்சை கேட்ட செவுனப்பன் தான் திகைத்து போனார்.
ஏதோ ஏற்பாடு செய்ய போறேன்னு சொல்லிட்டு இதென்ன இப்போ இப்படி பேசுறாரு என்று குழம்பி போனார். அந்த நேரம் ஒரு மகிழுந்து அதி வேகத்துடன் அந்த தோப்பின் உள்ளே நுழைந்தது.
உள்ளே வந்து அந்த குடிசையின் முன்பு சர்ரென்று நிற்க, அந்த வேகத்தில் செவுனப்பன் திண்ணையின் விளிம்பில் தொங்க போட்டு இருந்த கால்களை வேகமாய் தூக்கி மேலே வைத்துக்கொள்ள, பாண்டியனுக்கு சிரிப்பில் உதடுகள் துடித்தது.
தன் தந்தையை பார்த்து அவன் சிரிப்பதை கண்டவள் தன் ஆடவனை முறைத்து பார்த்தாள். அவளது முறைப்பில் இன்னும் இதழ்கள் சிரிப்பில் வளைய உதட்டை கடித்து அடக்கிக்கொண்டு அவளின் சினம் மிகுந்த கண்களை சீண்டலுடன் பார்த்தான்.
அதை கண்டு கொண்டவள் சிலுப்பிக்கொண்டு புதிதாக வந்த வண்டியை பார்த்தாள். அப்படி பார்த்தவளின் கண்களில் கலவரம் வந்து ஒட்டிக்கொண்டது.
திரும்பி தன் கணவனை பார்த்தாள். அவன் கன்னத்தில் தன் நாக்கை வைத்து நெண்டி நக்கல் பண்ண கெஞ்சலாய் அவனை பார்த்தாள்.
தன்னவள் போட்டுக்கொடுத்த தே தண்ணியை கடைசி சொட்டுவரை ரசித்து குடித்தவன் மிக நிதானமாக எழுந்து வந்து வந்தவர்களை வரவேற்றான்.
“வாங்க ஆத்தாங்களா... தாத்தா எப்படி இருக்காரு...” என்றபடியே அவனிடம் தாவிய தன் மகனை தூக்கிக்கொண்டே அவர்களை கை பிடித்து காரிலிருந்து கீழே இறக்கிவிட்டான்.
Nice





