அங்கு பசும்பூண் பாண்டியன் வெற்று மார்போடு கண்களில் அனல் பறக்க கட்டுக்கடங்கா ஆத்திரத்தோடும் அளவு கொள்ளா கோவத்தோடும் நின்றுக்கொண்டு இருந்தான் அவளது குரலை கேட்டு..
அதை பார்த்த பெண்ணவளுக்கு தொண்டை குழியில் ஜீவன் போவது போல இருந்தது. விழிகள் அவனை முற்றும் முழுதும் ஆராய்ந்து பார்த்தது ஒரு நொடியில்.
‘அப்போ என் உள் உணர்வு பொய் சொல்லவில்லை...’ என்று எண்ணியபோழுதே,
“என்ன கண்ணு மசமசன்னு நிக்கிறவ... இலைய விரிச்சி போடு... அய்யாரு எம்புட்டு நேரம் தான் நிப்பாக...” என்று செவுனப்பன் குரல் கொடுக்க,
சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டவள், “இதோ ய்யா...” என்றவள் குனிந்த தலையுடன் இலையை விரித்து அதில் தான் செய்துவைத்த பதார்த்தங்களை வரிசையாக வைத்தாள்.
பாண்டியன் தன் கண்களை அவளை விட்டு அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்சம் கூட அகட்டவே இல்லை. என்ன ஒண்ணு அவளைப் பார்த்த பார்வையில் அம்புட்டு கொலை வெறி மட்டும் இருந்தது...
மத்தபடி அவன் பார்வை பாச பார்வை தான்.
“அய்யாரு நிக்கிறிகளே... இலைக்கு நேரா அமருங்க..” செவுனப்பன் சொல்ல, பாண்டியனின் புத்திக்கு அது சிறிது கூட எட்டவில்லை.
“அய்யாரு....” அவர் மீண்டும் அழைக்க அப்பொழுதும் அவனிடம் சின்ன அசைவு கூட இல்லாமல் போகவும் அவனை தொடப்போனார். ஆனால் என்ன நினைத்தாரோ சட்டேன்று கைகளை இழுத்துக்கொண்டார்.
அதை பார்த்தவளின் விழிகளில் நீர் நிறைந்து போனது.
பாண்டியன் கோவமாய் ஏதோ பேச வர, சட்டென்று குரலை உசத்தி,
“அய்யா உள்ள சொம்புல தண்ணீ வச்சு இருக்கேன். அதை எடுத்துட்டு வாங்க. மறந்துட்டேன்...” என்று பொழிலி சொல்லவும்,
“என்ன கண்ணு நீ. முதல்ல தண்ணிய தானே வைக்கணும்...” என்று சொல்லிக்கொண்டே அவர் உள்ளே செல்ல, அவன் வேகமாய் அவளிடம் விரைந்தான்.
“என்னடி உன் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்குற...? என்னை பார்த்தா பைத்தியக்காரன் போல தெரியுதா...? ரொம்ப சுலபமா ஏமாத்திட்டு வந்திடலாம்னு நினைச்சியா...? உனக்கு அவ்வளவு திமிராடி..? இங்க யாரை ஏமாத்தலாம்னு வந்து இருக்க...?” அவளுக்கு மட்டும் கேட்குமாறு கர்ஜித்தான்.
“ஆமாங்க அய்யாரு இப்போ தான் இங்க வந்து ஒரு ரெண்டு மாசம் ஆக போகுது. அதனால எங்களுக்கு உங்களை தெரியாதுங்க... ஆனா மலைச்சாமி மாமாவுக்கு எங்களை நல்லா தெரியுமுங்க. அய்யாவும் அவுகளும் சிநேகிதக்காரவுக...” என்று சம்மந்தமில்லாமல் பேசியவளை கண்டு அவ்வளவு ஆத்திரம் வந்தது.
“ஏய் என்னடி திமிரா...? நான் என்ன சொல்றேன். நீ என்னடி பேசிக்கிட்டு இருக்குறவ...?” எகிறினான்.
“அய்யாரு ஏன் இப்படி பேசுறீகன்னு எனக்கு விளங்கலையே...?” என்று பாண்டியனை இதற்கு முன்பு பார்த்தே இராதவள் போல பேசினாள் பூம்பொழிலி மாதுமையாள்.
ஆம் இவள் தான் பூம்பொழிலி மாதுமையாள்.
அவள் பேச பேச ஆத்திரம் உச்ச நிலையிக்கு செல்ல அதை எப்படி காட்டுவது என்று தெரியாமல் ஒரு கணம் தவித்தவன் வேகமாய் அங்கு இருந்த சாப்பாட்டை தட்டிவிட போக, அவனை விட வேகமாக அவனது கரத்தை பிடித்துக்கொண்டாள்.
“கோவத்துல உணவை வீண் பண்ண கூடாது...” என்றாள்.
“எல்லா நொன்னையும் எனக்கு தெரியும்டி...” கடுப்படித்தவன், அவளை வளைத்து பிடிக்க பார்க்க, அவனது பிடியிலிருந்து நழுவிய படி,
“அய்யா...” என்று உள் நோக்கி குரல் கொடுத்தாள். அதில் இன்னும் சினம் மூண்ட பாண்டியன் சாப்பிடாமல் வெளியே செல்ல பார்க்க,
வேகமாய் அவனது வழியை மறைத்துக்கொண்டு,
“கட்டல்(கஷ்டம்) பட்டு சமைச்சி இருக்கேன்... சாப்பிட்டுட்டு பொறவு எங்க வேணாலும் போங்க...” என்றாள்.
“அதை சொல்ல நீ யாருடி...”
“ம்ம் உங்க சமையல் காரம்மா...” என்றாள் கடுப்புடன்.
“ஏய்...” என்றான் கோவமாக.
“அய்யா வாரதுக்குள்ள வந்து அமருங்க... அவுகளுக்கு இது பத்தி எதுவும் தெரியாது..” கண்களிலே கெஞ்சியவளை கண்டு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
“ஹ உங்கப்பன் வளர்த்த நீயே இப்படி இருக்க... இதுல உங்கப்பன் மட்டும் ரொம்ப சரியா இருப்பாராக்கும்... ஏமாத்துக்காரிடி நீங்க எல்லாம்... உங்களை எல்லாம் நம்பவே கூடாது.” என்றான். அந்த சொல் அவளை உயிரோடு தைக்க, கண்களை மூடிக்கொண்டாள் வேதனை தாங்காமல். விழிகளில் நீர் நிறைந்து தளும்ப,
அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்தவன் தன் மாமனார் வரும் அரவம் கேட்க, சட்டென்று தொண்டையை செருமினான்.
அதில் கலைந்தவள் வேகமாய் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு சிரித்த முகத்துடன் அவனுக்கு பரிமாறுவது போல பாவனை செய்ய, பாண்டியனின் விழிகள் அவளது ஒவ்வொரு செயலையும் நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தது.
“செம்மையா நடிக்கிரடி... நடிப்புல பட்டம் வாங்கி இருக்கியோ..” அவளுக்கு மட்டும் கேட்பது போல குத்தி பேசினான். அதில் இன்னும் உயிர்வதை துன்பத்தை அடைந்தவள் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.
அவள் பரிமாற பரிமாற அவன் பாட்டுக்கு சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். தந்தைக்கும் தனக்கும் சேர்த்தே இரவு நேர உணவை செய்து இருந்தாள். ஆனால் பாண்டியன் எதையும் யோசிக்காமல் இந்த ஒரு வார காலத்தில் எடுக்காத பசி உணர்வு இப்பொழுது இந்த நொடியில் எடுக்க பானையில் இருந்த சோறு முழுவதும் காலியாகிக்கொண்டு இருந்தது.
செவுனப்பனுக்கே கொஞ்சம் பகிர் என்று இருந்தது. அவரது விழியிலே அது தெரிய,
“அய்யா வெத்தலை கொடியில இருந்து கொஞ்சம் வெத்தலையும், பாக்கு வெட்டிக்கிட்டு இருக்குற தாவுக்கு போய் கொஞ்சம் பாக்கும் எடுத்துக்கிட்டு வாரீகளா...?” கேட்க,
“சரி கண்ணு...” என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போனார்.
பாண்டியன் நிமிர்ந்து ஒரு பார்வை மட்டும் பார்த்தான். அவ்வளவு தான் அதன் பிறகு சோற்றிலே முழு கவனத்தையும் வைத்தான். அதை கண்டவளுக்கு கண்களில் கண்ணீர் வர, சட்டென்று எழுந்து செல்ல பார்த்தாள்.
“நான் இப்போ சாப்பிடணுமா..? வேண்டாமா...?” கர்ஜனையாக வார்த்தை அவனிடமிருந்து வர, அவளின் உடம்பு தூக்கிவாரிப்போட்டது பயத்தில்.
சட்டென்று அப்படியே அமர்ந்துவிட்டாள். அவளையும் அறியாமல் அவனது இலையில் தீர்ந்து போன வகைகளை எல்லாம் அவளது கரம் வைத்துக்கொண்டே இருந்தது.
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை...” முணகியவன் சோறு முழுவதும் தீர்ந்த பிறகே எழுந்து சென்றான். எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு திரும்பிய பொழுது பாண்டியன் நெடுமரமாய் அவளின் பின் புறம் நின்றான்.
அதில் ஜெர்க்கானவள் அவனை விட்டு விலகி நடக்க பார்க்க, சுண்டி அவளை தன்னிடம் இழுக்க, பாறை போன்ற அவனது நெஞ்சில் வந்து மோதினாள்.
“என்ன பண்றீங்க விடுங்க. அய்யா வந்துட போறாக...” நழுவியவளை இறுக்கி அணைத்தவன், இத்தனை நாள் அவளின் வாசம் தேடி அலைந்து ஏமாற்றம் மிஞ்சியதால் அவளின் வாசனை தேடி அவளிடமே சரிந்தான்.
Nice





