மலையமான் பூவும் கையுமாக வந்தவன் அதை தேனருவியிடம் நீட்டினான். அவனின் கையில் இருந்து எப்பொழுதும் போல இரண்டாக நறுக்கி ஒன்றை தன் தலையில் வைத்துக் கொண்டவள், இன்னொன்றை எடுத்துக் கொண்டு இளாவிடம் சென்றாள்.
அவள் எப்பொழுதும் போல அவளின் அறையில் குறுங்கண் ஓரம் நின்ற வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கண்டு, அவளை நெருங்கி அவளிடம் கேட்காமலே அவளின் தலையில் பூவை சூடி விட்டு அவளை திருப்பினாள்.
சரியாக மலையமான் உள்ளே வந்தான். தன் தங்கையின் கண்களை தான் பார்த்தான்.
பூக்களை பிடிக்காத பெண்களும் இந்த பூமியில் இருப்பார்களா என்ன? அதற்கு இளா மட்டும் என்ன விதி விலக்கா? அவளின் கண்களில் மிக அரிதாக வந்துப் போனது ஒரு மெல்லிய உணர்வு. அதை வகைப்படுத்த தெரியவில்லை கணவன் மனைவி இருவருக்கும். ஆனால் அவளின் முகத்தில் தெரிந்த சின்ன அறிகுறியே இருவருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
“இவ்வளவு நாளா நான் நோட் பண்ணவே இல்லடி” என்றான் குற்ற உணர்வுடன்.. அவனை நெருங்கி கைப்பிடித்து ஆறுதல் கூற தோன்றிய மனதை கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தாள் தேனருவி. ஆனால் பார்வை என்னவோ அவனிடம் தான் வைத்து இருந்தாள்.
“அப்போ அவளின் வெறித்த பார்வை தான் அவளின் உணர்வுகளா?” சந்தேகம் கேட்டான் மனைவியிடம். இருவரும் தங்களின் தனி அறையில் இருந்தார்கள். இளாவுக்கு முன்னாடி விழிகளால் பேசியவர்கள் இங்கு வாய் விட்டு பேசினார்கள் தங்களின் கருத்துக்களை.
“ம்ம் அப்படி தான் போல. நாம அதை இன்னும் அதிகப்படுத்தணும்” என்றாள்.
“ஆனா எப்படி? எனக்கு ஒண்ணுமே புரியல.. எப்படி அவளை ரெக்கவர் பண்ணி கொண்டு வரப்போறனோ. அதுக்கு முதல்ல எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியல. அவளோட மாமியார் வேற சரகேட் மதர் மூலமா குழந்தை பெத்துக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்க.. நான் என்ன தான் பண்ண போறானோ” என்றவனை பார்க்க பாவமாக இருந்தது.
இது அவ்வளவு எளிது இல்லை என்று இருவருக்குமே தெரிந்து தான் இருந்தது. அதனால் தானோ என்னவோ பொய்யாக கூட சீக்கிரம் சரியாகிவிடும் என்று அவனுக்கு நம்பிக்கை தரவில்லை. எப்படியும் காலத்தாமதம் ஆகும் என்று தோன்றியது தேனருவிக்கு.
அவ கண்ணு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் வாழ்கிற வாழ்க்கையை பார்த்து அவளுக்குள் ஆசை முகிழ்க்கனும்.. அப்படி ஆசை வந்தால் மட்டுமே உணர்வுகள் அவளுக்குள் பெருக்கெடுக்கும் என்று கணித்தவள்,
“டாக்டர் கிட்ட போயிட்டு வரலாமா?” என்று கேட்டாள்.
“கடுப்பை கிளப்பாதடி.. அவளுக்கு எந்த நோயும் இல்ல” எகிறினான்.
“நாமால ஒரு அனுமானத்துக்கு வராம டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணோம்னா என்ன ஏதுன்னு பார்த்து சொல்லுவாங்க” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்” எரிந்து விழுந்தான்.
பெருமூச்சு விட்டவள், “இப்படி பிடிவாதம் பிடிச்சா ஒன்னும் பண்ண முடியாது. உங்க தங்கையை நீங்களே குறைவா நினைக்காதீங்க. முதல்ல அவளோட வாழ்க்கையை சீர் செய்ய என்ன செய்யனுமோ அதை செய்ய உங்களை நீங்க தயார் படுத்திக்கோங்க” என்றவளை கூர்ந்துப் பார்த்தான்.
“புரியல” என்றான்.
“இளா வீட்டுக்காரரை இங்க வந்து தங்க சொல்லுங்க. ரெண்டு பேரும் பிரிஞ்சி இருந்தா இன்னும் இடைவெளி தான் விழும். முதல்ல அந்த இடைவெளியை குறைக்கணும். உங்க தங்கச்சி மட்டும் டாக்டர் பார்த்தா போதாது. உங்க ப்ரெண்டும், நீங்களுமே டாக்டர் பார்க்கணும். ஏன்னா அவரோட மனைவியை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு அவர் தெரிஞ்சுக்கணும். அதே போல உங்க தங்கச்சியை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு உங்களுக்கும் தெரியணும்”
“அதுக்கு நீங்களும் ஒத்துழைப்பு குடுக்கணும். அதே போல உங்க தங்கச்சியை முழுமையா புருஞ்சுக்க அவருக்கு கொஞ்சம் இல்ல நிறைய பொறுமை வேணும். காதலிச்சு கல்யாணம் பண்ண ஆணுக்கு எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனா அது நிறைவேரலன்றப்போ கோவாம் வரும். அந்த கோவாத்தை இளாக்கிட்ட காட்டுனா அவ இன்னும் உள்ளுக்குள் சுருண்டுப் போயிடுவா. சோ உங்க பிரெண்டையும் மனதளவில் தயார் செய்யணும். கூடவே நீங்களும். நீங்களும் உங்க தொழிலை எல்லாம் ஓரம் கட்டி வச்சுட்டு உங்க தங்கையோட நேரம் செலவிட்டு அவளை பேச தூண்டி விடுங்க. நீங்க எதிர்பார்க்கிற நல்ல மாற்றம் அவக்கிட்ட கண்டிப்பா வரும்” என்றவளின் பேச்சில் இருந்த தெளிவு மலையமானை வியக்க வைத்தது.
“இதெல்லாம் நடக்குமா?” அவனின் கண்களில் முதல் முறை பரவசத்தை கண்டாள் தேனருவி. நெஞ்சை என்னவோ செய்தது.
“இது தனக்கானது இல்லை” என்று தன் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டவள்,
“நீங்க ரெண்டு பேரும் முழு முயற்சி செய்தா கண்டுப்பா உங்க தங்கச்சி எல்லோரையும் போல இருப்பா.. அவளும் வாழ ஆரம்பித்து விடுவாள்” என்றவள்,
சொன்னபடி அவனை செயல்பட வைத்தாள். முதல் ஒரு மாதம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் போக போக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது இளவரசியிடம்.
குறிப்பாக அவளின் அறையில் முடங்கி விடுவதை விடுத்து கூடத்தில் வந்து அமர பழகினாள். பழக்கப் படுத்தினாள் தேனருவி.
அவள் அப்படி அமரும் பொழுது மலையமானின் கையை பிடித்துக் கொண்டு அமருவாள் தேனருவி. அவனின் தோளில் லேசாக சாய்வது, இரு கைகளும் கோர்த்துக் கொண்டு லேசாக நெட்டி எடுப்பது, நீவி விடுவது என இருவருமே ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி செய்துக் கொள்வார்கள்.
அதை எல்லாம் ஒரு பார்வை பார்த்துக் கொள்வாள் இளா.. அவளுக்குள்ளும் இது போல இருக்க தோன்றியதோ என்னவோ..
மலையமானும் சிறிது சிறிதாக தன் கூட்டில் இருந்து வெளியே வர ஆரம்பித்தான். அலுவலக நேரத்தை குறைத்துக் கொண்டான்.
அதிக நேரம் வீட்டிலே இருந்தான். அப்படி இருக்கும் பொழுது எல்லாம் மனைவியை அருகில் வைத்துக் கொண்டான்.
முன்பு சும்மாவே அவளின் இதழ்களை கொய்து எடுத்துக் கொண்டவன், இப்பொழுது நிறுத்தி நிதானமாக அவளை கையாண்டான்.
முதலில் அருவெறுப்பாக இருந்தாலும் தானும் மனம் இறங்கினால் தான் இளா மாறுவாள் என்று தானும் உடன்பட்டுப் போனாள் மன்னவனுடன்.
அவ்வப்பொழுது சில பல தாம்பத்திய இரகசியங்களை தெளித்து விட்டுப் போவாள் இளாவிடம். எதையும் உடைத்து சொல்வதை விட தூண்டி விட்டுப் போவதே நல்ல பலனை கொடுக்கும். இங்க தேனருவியும் அதை தான் செய்தாள்.
இளாவை மெல்ல மெல்ல திரி தூண்டி விட்டாள். அவளுக்கு நல்ல முன் உதாரணமாக வாழ்ந்துக் காட்டினாள் பெண்ணவள்.
ஆனால் அதில் அவளின் உள்மனம் படும் பாட்டை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டு மலையமானுடன் இயல்பாக பழகினாள். அந்த பழக்கம் எல்லாம் வெறும் பழக்கமாக இருந்தால் எப்பொழுதோ அழித்து விட்டு வேறு ஒரு வாழ்க்கைக்கு தயாராகி விடுவாள்.
ஆனால் அவனுடன் பழகும் பழக்கம் அவளின் உயிரை மெல்ல மெல்ல அல்லவா குடித்துக் கொண்டு இருக்கிறது. வெறும் நடிப்பு என்று சொல்லி அவளை அவளே ஏமாற்றிக் கொண்டு மலையமானுடன் மனம் ஒன்றிப் போகிறாள். அதை மலையமானுக்கும் காண்பிக்க வில்லை. அப்படியே தப்பி தவறி அவன் இதெல்லாம் உண்மை என்று அறிந்து விட்டால் அவனின் ஏளன பேச்சுக்களுக்கு ஆளாக வேண்டுமே. இருதலைகொள்ளி எறும்பாக வேதனை சுமந்து நின்றாள் தேனருவி.
எப்போ எந்த நிமிடம் அவன் மேல் ஈர்ப்பு வந்ததோ தெரியவில்லை. காதல் பிறந்து தொலைத்து விட்டது. அது அவளின் உயிரை மெல்ல மெல்ல குடிக்கவும் தொடங்கி விட்டது.
மலையமான் இடை வளைத்து அவளின் இதழ்களில் முத்தமிடும் போதெல்லாம் அவளின் உணர்வுகள் எல்லாம் கரை உடைந்த அலையாகிப் போகிறதை கண்டு உள்ளுக்குள் மிகவும் பயந்துப் போனாள். லேசாக மலையமான் கண்டு பிடித்து விட்டால் கூட அவனின் நஞ்சு தடவிய பேச்சை கொட்ட தொடங்கி விடுவான்.
“அப்போ நீ இப்படி என்கிட்டே நடந்துக்குறது எல்லாம் உன் சுகத்துகாக்க தான் இல்லையா?” என்று அவன் ஒரே ஒரு கேள்வி கேட்டு விட்டால் கூட அவளின் மொத்த உயிரும் மரணித்து விடும்.
அவனின் அந்த பேச்சை கேட்க அவளின் இதயத்துக்கு கொஞ்சமும் சக்தி இல்லை. மிகவும் பலவீனமாக தன்னை உணர்ந்தாள். மலையமான் நெருங்கி வந்து அவளை தொட்டு தடவி சிருங்காரமாய் மென்மையாக காதல் லீலைகள் புரியும் பொழுது எல்லாம் பெண்ணவள் உள்ளுக்குள் தீக்குளித்தாள்.
முன்பும் தீக்குளிக்கும் உணர்வு தான். ஆனால் அது அருவெறுப்பின் உச்ச நிலை. இதோ காதலின் உச்ச நிலை. தன்னை கேவலமாக பேசியவனின் மீதே காதல் வந்து விட்டதே என்று எண்ணி தனக்குள் குமைந்துப் போகிறாள். யாரும் அறியா வண்ணம் கண்ணீரில் குளிக்கிறாள். இனி தேனருவி நிலை யாதோ.
அன்றைக்கும் அப்படி தான் எதற்காகவோ இவள் செல்பில் தலையை விட்டுக் கொண்டு இருந்த நேரம்,
“ஹேய் பொண்டாட்டி” என்று மலையமானின் குரல் கேட்க,
“மணி பன்னிரண்டு தானே ஆகுது.. இதென்ன இந்த நேரம் வந்து இருக்காரு. உன் கிட்ட எதுவும் சொன்னாரா இளா?” யோசனையுடன் மணியை பார்த்தவள் இளாவிடம் கேட்டாள்.
அவளோ இல்லை என்பது போல தலையை ஆட்டினாள்.
“எத்தனை முறை சொல்லறேன்.. வாயை திறந்து பேசுன்னு” உரிமையாய் அதட்டியவள்,
திரும்பி அறை வாசலை பார்த்தாள். மலையமான் வந்துக் கொண்டு இருந்தான்.
“என்னங்க.. இந்தே நேரம் வந்து இருக்கீங்க?” கேட்டுக் கொண்டே அறையின் வாசலுக்கு வந்து விட்டாள்.
வந்தவளை அறைக்கு வெளியே இழுத்து சுவர் மறைவில் நிறுத்தியவன் “உன் ஞாபகமாவே இருந்ததுடி. ஒரு வேலையும் ஓடல. அது தான் உன்னை பார்க்கலாம்னு ஓடி வந்துட்டேன்” என்றவன் அவளின் இடையோடு சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டவன்,
“இதென்ன உன் லிப்ஸ் இப்படி சிவந்துப் போய் இருக்கிறது.. ரொம்ப முரட்டு தனமா கடிச்சிட்டனோ” கேட்டவன்,
“ஆனாலும் இந்த லிப்சை காயம் செய்யாம என்னால இருக்க முடியலடி” சொல்லிக் கொண்டே அவளின் ஈர இதழ்களை தனக்குள் மிக மிருதுவாக கவ்விக் கொண்டவன் அவளின் இடையில் இருந்த புடவையை இழுத்து விட்டு தன் முரட்டு கரத்தால் அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொள்ள அதிர்ந்துப் போனாள்.
அவளின் அதிர்வை கண்டுக் கொள்ளாமல் அவளின் இதழ்களில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு மூழ்கிப் போனான். இதழ்களை விடவே மனம் இல்லாதவனாய் கவ்வி சுவைத்து மெல்ல கடித்து என அவன் காட்டும் உணர்வுகளில் பெண்ணவளுக்குள் சிலீரென்று ஐஸ் கட்டிகள் உருள ஆரம்பித்தது.





