அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

அறையின் இருட்டில் அனுவின் உடைகள் காணாமல் போக உள்ளுக்குள் பெரும் பயத்துடன் அவனது செயல்களுக்கு உடன்தையாகி போனாள்.

விடியும் வரை அவன் அவளை விடாமல் சற்ற வன்மத்துடன் நடந்துக்கொள்ள அனுவால் கொஞ்சமும் தாங்க முடியாமல் போனது. அதும் அவனது முரட்டு தனம் அவளுக்கு வேதனையை கொடுக்க கண்நீருடனே அவனது ஆசைக்கு உடன்பட்டு போனாள்.

தன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று எண்ணி பார்த்திராதவளுக்கு பிரகாஷின் செயல்கள் அருவெருப்பையும் வன்மத்தையும் விதைத்தது.

அனுவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காத பிரகாஷை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாய் விதைந்து போனது. அவள் இப்போ வரை என்ன நினைக்கிறாள் என்று தெள்ள தெளிவாக புரிந்து வைத்து இருந்தான் பிரகாஷ்.

அவனிடம் அனுவின் வேலை எடுபடாது என்று பாவம் அவளுக்கு புரியவில்லை.

==

அனுவை அவளது அறையில் விட்டுட்டு திரும்பும் போது பிறைசூடன் அவனது அறையின் வாசலில் இருக்கைகளையும் கட்டிக்கொண்டு ஏளனமாக ஆராவை பார்த்தான்.

அவனது பார்வையில் தெரிந்த இளக்காரம் அவளை வெட்டி போடா கூசி குறுகி போனாள்.

ஏனெனில் அனுபவம் வாய்ந்த சுமங்கலிகள் மட்டுமே மணப்பெண்ணை தயார் செய்து முதலிரவு அறைக்கு அழைத்து சென்று சில அறிவுரைகள் சொல்லி பயந்து கிடக்கும் பெண்ணுக்கு கொஞ்சமாய் தையிரியம் வழங்குவார்கள்.

ஆனால் இங்கு கன்னி கழியாத அனுவை விட சிறிய பெண் அவளுக்கு அறிவுரை வழங்கி அறைக்குள் அனுப்பி விடவும் பிறைசூடனுக்கு அந்த செயல் அவ்வளவு வன்மத்தை கிளப்பி இருந்தது அனுவின் மீது.

எப்படி எல்லாம் பழிவாங்குகிறாள் இவளை. ஆராவுக்கு அனுவை உள்ளே அனுப்பும் பொது கண்கள் கலங்கியது தான். தன்னை அவள் படுத்தும் பாட்டை எண்ணி. ஆனால் அனுவிற்கு ஆராவை விட்டாள் வேறு யாரும் இல்லை என்பதால் பல்லை கடித்துக்கொண்டு அவள் அந்த செயலை செய்தாள்.

அதை தான் பிறைசூடன் தன் விழி மொழியால் ஆராவுக்கு உணர்த்திக்கொண்டு இருந்தான். ஆனா இவள் அவளுக்காக தான் வாழ வேண்டிய வாழ்க்கையை விட்டு கொடுத்துவிட்டு தனியாய் நிற்ப்பதை கண்டு உள்ளம் வெந்து போனது.

அனு வேறு உள்ளே போகும் போது தன்னை நக்கலாய் பார்த்து வைத்ததை ஆராவால் தாங்க முடியவில்லை. அது போதாது என்று பிரைசூடனும் நக்கலாக பார்க்க அப்படியே பூமியில் புதைந்து போய்விடலாம் போல இருந்தது.

அவனை ஏறெடுத்தும் பாராமல் அவனை தாண்டி செல்லும் வேலை அவளது காதோரம்

“ரொம்ப அனுபவம் வாய்ந்தவள் போல அனுவுக்கு அறிவுரை சொல்லி முதலிரவு அறைக்குள்ள அனுப்பி வச்சு இருக்க. எத்தனை பிள்ளை பெத்துகிட்ட.” என்று நக்கலாய் அவன் கேட்க சிவந்து கண்ணீர் வழியும் கண்களால் அவனை ஏறெடுத்து பார்த்தாள்.

அதில் கொஞ்சமும் இளகாமல் “எனக்கும் உன் அனுபவத்தை சொல்லேன்” என்று மேலும் அவளை குத்தி கிழிக்க அந்த நொடி செத்து போய்விடலாம் என்று தோன்றியது. மனதில் காதலனாய் விரித்தவனின் வார்த்தைகள் அவளை வெட்டி கூறு போட்டது. எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படியா பட்ட சூழல் வர கூடாது கடவுளே என்று நொந்து போனாள்.

“என்னங்க அம்மணி பதில் எதுவும் பேச மாட்டீங்களா... சரி ஓகே செயல் முறை விளக்கத்தை விட செஞ்சு பார்ப்பது இன்னும் சிறப்பு. நீங்க செயல்ல கூட எனக்கு செஞ்சு காமிக்கலாம்” என்ற பொது ஆராவின் உயிர் மரணத்தின் கடைசி கட்ட போராட்டத்தில் இருப்பது போல துடித்தது.

வலியுடன் அவனை பார்த்தாள். அதில் பிறைசூடனின் உள்ளம் கதறியது என்றாலும் தன் நிலையில் இருந்து அவன் பின் வாங்கவில்லை.

“இப்படி எல்லாம் பார்த்தா எனக்கு சம்மதம்னு அர்த்தம்” என்று சொல்லி “சரி வா எனக்கு செயலில் காண்பி” என்று அவளின் கை பிடித்து இழுத்து உள்ளே தள்ளி கதவை சாத்தினான்.

அதில் ஆரா துடித்து போனாள்.

“வேணாம் மாமா பிளேஸ் இதுக்கு மேல நீங்க ஏதாவது பேசுநீங்கன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது.”

“சரி பேசல” என்றவன் அறையின் விளக்கை அனைத்து விட்டு விடிவிளக்கை போட்டு விட்டு ஆராவின் புடவை முந்தானையை பிடித்து இழுத்து அவளை தன் வசம் கொண்டு வந்து அவளது உதட்டில் தான் இதழை பொருத்தி அவளை அவள் வசம் இழக்க செய்தான்.

“வேணாம் மாமா ப்ளீஸ் இது தப்பு” என்று கதரியவலை கொஞ்சமும் விடாமல் தான் நினைத்ததை சாதிக்க துடித்தான் பிறைசூடன். அவனது வேகம் கண்டு நிலைகுலைந்து போனாள் ஆரா.

“ப்ளீஸ் மாமா” என்று அவள் கெஞ்சிய கெஞ்சல்கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் போல வீணாய் போனது. அவனது ஆவேசத்தில் இருக்கும் கோவத்தை கண்டு அரா அவனை எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டாள்.

அவனாக விட்டால் ஒழிய அவனிடமிருந்து அவள் தப்பிப்பது இயலாத காரியம் என்பதால் அமைதியாகி போனாள் சொல்லோன்னாத வலியுடன்.

அதுவரை எதிர்ப்பு காட்டிக்கொண்டு இருந்தவள் சட்டென்று தன் எதிர்ப்பை கை விட அதை சற்று நேரம் கழித்தே பிறைசூடன் உணர்ந்தான்.

அவள் அவனுக்கு உடன் படுவது போல இருப்பதை கண்டு சட்டென்று அவளை உதறினான்.

“இது தான் மாமா நீ” என்று மனதுக்குள் சொல்லியவள் தான் கிடந்த கோலத்தை கண்டு பதறி எழுந்தவள் சட்டென்று அருகில் இருந்த புடவையை எடுத்து தன் மீது போட்டுக்கொண்டாள்.

அவளது வேகம் கண்டு தன்னையே வெறுத்தவன் வேகமாய் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் சென்றதை ஒரு வலியோடு பார்த்தவள் அவன் எப்படி விட்டானோ அப்படியே கிடந்தாள் சிறிது நேரம். பின் சுய நினைவு வந்து ஆரா தன்னை சீர் படுத்திக்கொண்டு பதறிய உள்ளத்தை நிறுத்த வழிவகை தெரியாமல் பிறைசூடனின் செல்லுக்கு அடித்தாள்.

அது அவனது அறையிலே ஒழிக்க ஐயோ என்று வந்தது. இருக்கிற கோவத்தை எல்லாம் வண்டியில் தானே காமிப்பான். எந்த அசம்பாவிதமும் நடந்துட கூடாது இறைவா... மாமா நல்ல படியா வீடு வந்து சேரனும் என்று கோரிக்கை வைத்தவள் எழுந்து தோட்டத்துக்கு சென்றாள்.

பிறைசூடன் அதிவேகமாக காரில் கிளம்புவதை கேள்வி பட்ட சித்ராவுக்கு மனசெல்லாம் புன்னை போனது. பிரகாஷை காட்டிலும் பிறைசூடன் பெரியவன் தானே. அவன் இருக்கும் போது சிறியவனுக்கு திருமணம் செய்து வைத்தது பெரும் பாவமாய் தோன்றியது.

அதுவும் விரும்பிய பெண் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவனது அவஸ்த்தையை சொல்லவும் வேண்டுமா...

அவனுக்கு மட்டுமா வருத்தம் அவனை மட்டுமே உறவை கொண்டு வாழ்ந்து வரும் ஆரா.. அவளது உணர்வுகள் பாவம் இல்லையா. எல்லாமே விரைவாக சரியாகணும் என்று வேண்டிக்கொள்வதை தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

காரில் சிறிது நேரம் பயணித்தவனின் எண்ணம் முழுவதும் அவனுடைய ஆரா மட்டுமே நிறைந்து இருந்தாள். அவளுக்கு மட்டும் வருத்தம் இருக்காதா என்ன. அனு தான் அவளது உணர்வுகளோடு விளையாடுகிறாள் என்றால் தானும் அதே வேலையை செய்து வைத்திருப்பதை கண்டு தன் தலையிலே அடித்துக்கொண்டான்.

என்ன நிலையில் அவளை விட்டுட்டு வந்தேன் என்பது நினைவில் எழ கூடவே பேச தகாததை எல்லாம் பேசிவிட்டு அவளை உயிரோடு கொன்ன செயலை எண்ணி அவனை அவனாலே மன்னிக்க முடியவில்லை.

இன்னும் அந்த பேதை பெண் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ என்று மருகி போனான்.

அவளது நினைவு வர வேகமாய் வீட்டுக்கு திரும்பினான். அவனது என்ன படி அவள் தோட்டத்தில் தான் அமர்ந்து இருந்தாள். அவளது அந்த காத்திருப்பு அவனை சுட்டு பொசுக்க வேகமாய் அவளை நோக்கி சென்றான். அவனது வருகையை உணர்ந்த ஆரா வேகமாய் அவனிடம் விரைந்தாள்.

பாதி வழியிலே அவளை எதிர்கொண்டவன் வேகமாய் அவளை இழுத்து அனைத்து “சாரிடா நானும் உன்னை ரொம்ப காய படுத்திட்டேன். இனி ஒரு போதும் இப்படி நடந்துக்க மாட்டேன்” என்று அவளது முகம் எங்கும் முத்தம் இட்ட படி அவளிடம் சொல்ல அவனது அந்த வார்த்தையில் ஆராவின் மனம் நெகிழ்ந்து போனது.

“உன்னால் என்னை காய படுத்த முடியாது மாமா” என்று அவனது கண்ணை பார்த்து சொன்னவளின் கண்களில் தெரிந்த காதலில் கூனி குறுகி போனான்.

“சாரிடா..” என்று மேலும் புலம்ப

“ச்ச என்ன மாமா இது உனக்கு இல்லாத உரிமையா... நீ என்னை என்ன வேணாலும் பண்ணலாம் உனக்கு அந்த உரிமை இருக்கு. உன்னை தடுக்க எனக்கே உரிமை இல்லாதப்ப நீ போய் என் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு” என்று அவனை சமாதனம் செய்தவளின் மாசற்ற காதலில் உருகி போனான்.

“உன்னை போல ஒரு காதலி இருந்தா அவனுடைய வாழ்க்கை என்றும் மங்காது கண்ணம்மா..” என்று அவளின் நெத்தியில் முத்தம் இட்டு அவளை உள்ளே அழைத்து வந்து அவளது அறையின் {பிறைசூடனின் வீட்டிற்கு வரும்போது தாங்கும் அறை} கட்டிலில் அவளை படுக்க வைத்து தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.

அவனது அருகாமையில் சட்டென்று அவள் தூங்கி விட விடிய விடிய அவளது அருகில் தூங்காமல் அவளை பார்த்த படியே இருந்தான் சூடன்.

Loading spinner
Quote
Topic starter Posted : March 22, 2025 10:04 am
(@mrsbeena-loganathan)
Trusted Member

அனுவின் மேல் இருக்கும் கோபம்

ஆராவின் மேல் காட்ட

ஆரா பாவம் தானே

அழுகையில் கரைய

ஆராவை பற்றி யோசித்து

அவளை நெருங்கி

அவன் கைக்குள் வைத்துக் கொள்ள

அவர்களின் காதல்

அவர்களை சேர்க்கும்.....

Loading spinner
ReplyQuote
Posted : March 25, 2025 6:47 pm
(@gowri)
Estimable Member

பரவால்ல சூடன் கோவத்தை விட்டுட்டாங்க

Loading spinner
ReplyQuote
Posted : March 28, 2025 5:06 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top