அப்படி ஒருநாள் அவன் வரும் பொழுது அவள் வெளி வாசலில் நிற்கவில்லை. வண்டியை நிறுத்தும் முன்பே பொழிலி வெளியே வந்துவிட்டாள். ஆனாலும் இவன் வேக எட்டு வைத்து உள் வாசலுக்கு வந்துவிட்டு,
“எத்தனை முறைடி சொல்றது.. வெளில இருன்னு... அதை விட வேற என்ன முக்கியமான வேலை வந்துச்சு..” என்று கத்தினான்.
“ப்பா... ஏன் இப்படி கத்துறீங்க... கொற்கையனுக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருந்தேன். தண்ணி வேணும்னு கேட்டான். அதை எடுக்க தான் உள்ளே போனேன்... அதுக்குள்ள நீங்க ஏன் உள்ள வந்தீங்க. வண்டி சத்தம் கேட்டா வெளிய வர மாட்டனா...?” இப்பொழுது எல்லாம் இவளும் அவனுடன் மல்லுக்கு நிற்க தொடங்கினாள்.
அதில் அவனது விழிகளில் மின்னல் வெட்டியது.
“ம்கும்... நீ ஆடி அசைஞ்சி அம்மாவசைக்கு வருவ... அது வரையிலும் நான் வெளியவே நிக்கணுமா...? மேல வாடி உன்னை வச்சுக்குறேன்...” என்று கடுப்படித்துவிட்டு சென்றான்.
போய் ஐந்து நிமிடம் கூட இருக்காது.
“பொழிலி..” என்று அரண்மனையே அதிர அழைத்தான்.
“அதானே எங்க கூப்பிட காணோம்னு நினைச்சேன்...” புலம்பியவள் மீனாச்சியிடம் மகனை கொடுத்துவிட்டு, மேலே சென்றாள்.
“கீழ அப்படி கத்திட்டு இப்போ மட்டும் எதுக்கு பொழிலிய கூப்பிடுறீங்க...” என்றவள் அவனது சட்டை பட்டனை அவிழ்த்து விட தொடங்கினாள்.
அவளுக்கு வாகாக நின்றபடி, அவளின் இடையை தன் கைகளால் பற்றி தடவிக்கொண்டே,
“ம்ம்ம் உன் பேரு மறந்து போச்சா இல்லையான்னு தெரியல. அதான் கூப்பிட்டு பார்த்தேன்...” என்றவன் அவள் வைத்து இருந்த பிச்சி பூவின் வாசத்தை நுகர்ந்தான்.
“ம்ம்ம் வாசனையா இருக்குடி...”
“எவ்வளவு வாசனையா இருந்தாலும் இன்னும் ஒரு மணி நேரத்துல பிச்சி எரிய போறீங்க... அதுக்கெதுக்கு தினமும் இரண்டு முலம் பூவு... ஏதோ கொஞ்சம் கூட கலைக்காம ராத்திரி முழுசும் வச்சி ரசிக்கிற மாதிரி பேச்சு மட்டும் பெருசா பேச வேண்டியது...” நொடித்துக்கொண்டவள், குளியல் அறையின் உள்ளே சுடு தண்ணீரை விலாவி வைத்தாள்.
“வர வர வாய் கொழுப்பு ரொம்ப தான்டி கூடிப்போச்சு...” என்றவன் அவளது முந்தானையை பற்றி இழுத்து பக்கம் வர செய்தவன்,
“எதுக்குடி போன் பண்ண...” கேட்டான்.
“குளிச்சுட்டு வாங்க. சொல்றேன்...” என்றாள்.
“அதெல்லாம் நான் குளிச்சிக்குறேன் நீ சொல்லு...” என்றான்.
சுவற்றில் சாய்ந்துக்கொண்டு, “அது அண்ணி குழந்தை தரிச்சி இருப்பாங்க போல.” இழுத்தாள்.
“அதுக்கு...” என்றான் வெடுக்கென்று.
அவனது அந்த தோணியே அவளுக்கு அனுமதி கிடைக்காது என்று நன்கு விளங்கியது.
“இந்த வயசுக்கு மேல பெத்துக்க வேணான்னு நினைப்பாங்க போல...” தயக்கத்துடன் சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“அதனால நீ அவங்களுக்கு சேவகம் பண்ண போற ரைட்...” என்று அவன் முடிக்க, அவள் தலையை கீழே குனிந்துக்கொண்டாள்.
“ஏன்டி அவ தான் கூறுகெட்ட தனமா செய்யிறான்னா நீயம் ஒத்து போறியா...? முதுகு தோளு பிஞ்சிடும். இந்த வீட்டு வாசற்படிய தாண்டுநீன்னா...” கர்ஜித்தான்.
“ஏங்க அவங்க உங்க அக்காங்க...”
“அதனால தப்பு... தப்புயில்லன்னு ஆகிடுமாடி...?”
“அதுக்கு இல்லங்க...” அவனை சமாதான் செய்ய பார்த்தாள்.
ஆனால் அவனை நெருங்க கூட முடியவில்லை.
“ஓங்கி அப்படியே ஒண்ணு விட்டேன்னு வை. செவிழு பிஞ்சுக்கும். அவ கொழுப்பெடுத்து ஏதாவது பண்ணி வச்சா அதுக்கு நாம பொருப்பேத்துக்கணுமா...? இதெல்லாம் நடிப்பா இருக்கும்.” என்றவன் தொடர்ந்து,
“அவ நாத்தனாரை எனக்கு கட்டி வைக்க ஆசைபட்டா. எனக்கு அதுல விருப்பம் இல்ல. அதனால உன்னை என்கிட்டே இருந்து பிரிக்க பார்க்குறா... நீயும் கூறு கெட்ட கணக்கா என்கிட்டே வந்து நிக்கிற...” முறைத்தான்.
“ஒரு வேலை அண்ணி சொன்னது உண்மையா இருந்தா...?” கொக்கி போட்டாள்.
“அது உண்மையா இருந்தாலும் உன்னை விட மாட்டேன்... ஒழுங்கா என்னை வந்து கவனிடி...” என்று அவளது கையில் சோப்பை திணித்தான்.
அதன் பிறகு அவள் எங்கு இருந்து சுய சிந்தனையில் இருப்பது. பாண்டியன் பாண்டியன் பாண்டியன் தான். பொழிலியின் மூச்சில் கலந்து இருந்தது எல்லாமே பசும்பூண் பாண்டியன் தான்.
அதை எவ்வளவு தனக்கு சாதகமாக்கிக்க முடியுமோ அந்த அளவு சாதகமாக்கிக்கொண்டான் பாண்டியன்.
அவளை சுய சிந்தனையில் இருக்கவே விடவில்லை அவன் பக்கம் இருக்கும் பொழுது மட்டும். இவளுக்கும் அவனது நெருக்கத்தில் எதுவும் நினைவில் வர மறுத்தது.
அவளையே அவள் தேட வேண்டி வந்தது...
அன்றிரவு “உங்களை பார்த்தா ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட மனுஷன் மாதிரி தெரியலைங்க...” அவனது பனியனை திருகிக்கொண்டே அவனது கை வளைவில் இருந்தபடி கூறினாள்.
அதில் நெடு மூச்சு விட்டவன்,
“நிஜமாடி எனக்கு என்னோட முதல் கல்யாணம் நினைவில் கூட இல்ல... அவ கூட மொத்தமே மூன்றே முறை தான் கூடி இருக்கிறேன்... என்னவோ என்னால அவக்கிட்ட இயல்பா இருக்க முடியல.. ஏதோ ஒரு தயக்கம். இப்போ உன்கிட்ட இவ்வளவு இயல்பா இருக்க முடிஞ்சா என்னால அவகிட்ட சுத்தமா நெருங்கவே முடியல.”
“கல்யாணம் ஆகியும் தள்ளி தான் இருந்தேன். அப்போ அவ கேட்டா... அதனால வேற வழியில்லாம அவளை நெருங்கினேன். அப்பாவும் முழுசா என்னால ஈடு பட முடியல...” என்றவன் கொஞ்சம் தவித்தான்.
“ஏங்க அப்படி...” அவளுக்குமே சங்கட்டமாய் போனது.
“தெரியலடி... ஆனா நீ என்னை விட்டு விலகி போனா என்னால வேற எதையும் யோசிக்கவே முடியல... உன்னை சுத்தியே தான் சிந்தனை இருக்கு... வேலையில ஈடுபட்டாலும் அப்பப்போ இந்த நேரம் என்ன பண்ணுவ, கொற்கையனை கொஞ்சிக்கிட்டு இருப்பியோ, அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவியோ.. இல்ல ஆத்தா மாறுங்க கிட்ட பேசிக்கிட்டு இருப்பியோன்னு தான் நினைக்க தோணுது...”
“ஆனா அவளை பத்தின நினைவு எனக்கு கொஞ்சம் கூட வரல.. கண்ணு மூடி கண்ணு திறக்கறதுக்குள்ள என் மகன் வந்துட்டான்... அவளுக்கும் என்னை பிடிக்கல... அதனால விவாகரத்து ரொம்ப சுலபமா கிடைச்சிடுச்சு...” என்றான்.
“நிஜமா என்னை அவ்வளவு பிடிக்குமா மாமா...?” வியந்து போய் கேட்டாள்.
“சொல்ல தெரியலடி... அதை நான் உன் கூட வாழ்ந்து காட்டிக்கிட்டு இருக்கேன்... நீயே கண்டு பிடிச்சுக்கோ...” என்றான்.
அவனது செயலில் தான் அவள் நன்கு உணர்ந்து இருக்கிறாளே கண்மூடி தனமான காதலை... இனி அதை வாய் வார்த்தையால் வேறு தனியாக கேட்டுக்கொள்ள வேண்டுமாக்கும்... அவனது நெஞ்சிலே சரிந்துக்கொண்டாள்.





