Notifications
Clear all

அத்தியாயம் 12

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

அதே நேரம் வெளியே வந்த பாண்டியன் அங்கு நடக்கும் செயல்களை பார்த்தவன், விரைந்து யாருக்கும் தெரியாமல் தோட்டத்துக்கு சென்றான்.

அங்கு அணில் குருவி காக்கா என்று எல்லாவற்றையும் காட்டி சோறு ஊட்டிக்கொண்டு இருந்தவளை காண காண மனம் நேச அலையில் அடித்து சென்றது.

பின்னிருந்து அவளை தாபமாக அணைத்துக்கொள்ள இரு கரமும் பரபரத்தது.. மகன் அணிலை பிடிக்க அதன் பின்னோடு ஓட, இது தான் சாக்கு என்று தன்னவளை பின்னிருந்து முரட்டு தனமாக கட்டிப்பிடித்தான்.

எதிர்பாரா இந்த செயலில் கத்த நினைத்தவளின் வாயை ஒரு கையால் பொத்தி இருந்தான் பாண்டியன்.

“நான் தான்டி...” அந்த ஒற்றை சொல் அவளுக்குள் பல ஆயிரம் உணர்வுகளை மீட்டி சென்றது.

“சின்னவன் இருக்கான். அவனுக்கு முன்னாடி ஏன் இப்படில்லாம்...?” சங்கடத்துடன் கேட்டவளை வளைத்து அவனது முகம் பார்க்க செய்தவன்,

“யாரு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை...” என்றவன், அவளது மறுப்புக்கான தண்டனையாய் அருகில் இருந்த பெரிய மரத்தின் பின்னாடி அவளை இழுத்துக்கொண்டான்.

விடுவிக்கும் பொழுது பொழிலியின் இதழ்களில் உத்திர கரை படிந்து இருந்தது.

“என்னை எதிர்த்து பேசும் முன்னாடி கொஞ்சம் யோசிச்சுட்டு பேசுடி...” மீசையை முறுக்கிக்கொண்டவன் தன் வேலையை பார்க்க சென்றான்.

போகும் முன்னாடி தன் மகனின் உணவு கிண்ணத்திலிருந்து உணவை எடுத்து ஒரு வாய் உண்டுவிட்டு, அதில் பாதியை பொழிலிக்கு வாயோடு வாய் வச்சு ஊட்டிவிட்டு அதன் பின்பே நகர்ந்தான்.

அவனது அடவாடியான காதலில் இவள் தான் திக்குமுக்காடி தளர்ந்து போய் அவனை எதிர்க்க முடியாமல் முழு சரணாகதியானாள்.

அதை எண்ணி பார்க்கும் பொழுது கொஞ்சம் ஊடல் தோன்றினாலும் அதை மீறி காதல் அவன் மீது அதிகம் ஊறியது.

மாலை பொழுதில், சின்ன பாண்டியனை முகம் கழுவ வைத்து, தன் முந்தானையால் அவனுக்கு துடைக்க போக, அப்பொழுது தான் வியர்வையில் குளித்து நனைந்து கலைத்து போய் வந்தவன்,

அவளது கையிலிருந்த முந்தானையை பற்றி தன்னோடு நெருக்கி,

“இது எனக்கு மட்டும் தான்டி சொந்தம். இதை வேற யாருக்கும் குடுக்க மாட்டேன். அது என் மகனா இருந்தாலும் சரி.. நீயும் இத மனசுல வச்சுக்க, இன்னொரு முறை இதுல அவனுக்கு துடைக்கிற பார்த்தேன்...” என்று எச்சரித்தவன்ற, அவளது முந்தானையைக்கொண்டு தன் வியர்வையை துடைத்துக்கொண்டான்.

“சொல்றது விளங்குதா...?” மேலும் கேட்டவனுக்கு  தலையை ஆட்டினாள்.

அவனது அடாவடியை கண்டு லேசாய் கலங்கி தான் போனாள்..

அருகில் இருந்த துண்டை எடுத்து அவளின் தோள் மீது போட்டவன்,

“இத வச்சி உன்ற மகனுக்கு துடை...” என்றவன் அவளது இடையில் ஒரு கில்லலை பரிசாக கொடுத்து சீண்டி விட்டுட்டு சென்றுவிட்டான். இவள் தான் சிறிது நாழிகைக்கு அசைய முடியாமல் அப்படியே இருந்தாள்.

அவனது ஒவ்வொரு செயலிலும் அவளின் அடி மனதில் தீ மூண்டுக்கொண்டே இருந்ததை அவன் அறியவே இல்லை.

ஆனால் அவள் வெடிக்கும் நாள் வரவே போவது இல்லை என்று அறிந்திருந்தவள் அவனது செயல்களுக்கு தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தாள்.

அடுத்த நாள் கோயிலில் கறி விருந்து நடக்க சுத்து பட்டு பதினெட்டு பட்டியிலிருந்தும் முக்கியமான பெரிய பெரிய தலைகட்டுகள் வந்துவிட, இரவே விருந்து தயாரானது.

எல்லா தலைகளும் அவர்களின் உதவி ஆளோடு வந்து குவிந்தார்கள். அவர்களோடு இவர்களின் ஆளுகாரர்களும் வந்துவிட, விருந்து ஏற்பாட்டை இவர்கள் முன்னின்று கவனித்துக்கொண்டார்கள்.

ஐந்நூறு கிடா, ஆயிரம் கோழி, வடை பாயாசம், சைவ உணவு வகைகள், அதில் சில வகை வகையான உணவுகள் என பெரிய விருந்தே ஏற்பாடு ஆனாது. பெரிய தலைகட்டுகள் மட்டும் இல்லாது, தொழில் சம்மந்தப்பட்ட ஆட்கள், பணியாளர்கள், ஊர் மக்கள், பொது மக்கள், பதினெட்டு பட்டியில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு வந்த உறவினர்கள், அந்த ஊர்களின் குடிமக்கள், ஊர் சேவகர்கள் என்று திருவிழாவை தோற்கடித்துக்கொண்டு இருந்தது வந்த கூட்டம்.

இரவில் மகனை இருவருக்கும் இடையில் படுக்க விட்ட பொழிலி தன் வளையல்களை கழட்டி வைத்த நேரம், தன் மகனை தாவி வந்து அவள் மீது பொத்தென்று விழுந்தவன்,

“எதுக்குடி வளையலை கழட்டுற... இந்த சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... போடு...” என்று கலட்டி வைத்ததை அவளின் கரம் தொட்டு அவனே போட்டு விட,

“ம்மா... என் இடுப்பு போச்சு... இப்படியா வந்து விழுவீங்க...” அவனது பாரத்தை தாங்காமல் திணறியவள்,

“சின்னவன் முழிச்சுக்குவாங்க... நான் அப்புறம் போட்டுக்குறேன்...” அவனை பாராமல் சொல்ல,

“எப்புறம்...” என்றவன் அவளது முகம் சிவக்க கண்டு,

“எனக்கு இந்த சத்தமும் உன் கொலுசு சத்தமும் நம் கூடல் பொழுதுல இடைவிடாம கேட்டுக்கிட்டே இருக்கணும்டி... அதுல உன்னோட முனகல் சத்தமும் சேரு பொழுது இருக்குற சுகமும் கிக்கும் வேற எதுலையும் கிடையாதுடி. அதனால எதுக்காக இருந்தாலும் இந்த வளையல்களை கலட்டக் கூடாது...” என்றவன், அவளை உண்ணுவது போல பார்த்து,

“உன் மகன் எழுந்திரிக்காம நான் பார்த்துக்குறேன்... நீ ரொம்ப கவலை படாதடி... என்னை மட்டும் நினை...” என்றவன் வன்மையாய் அவளது இதழ்களை சிறை செய்தான்.

அவள் மேல் படர்ந்து இருந்த படியே முத்தம் கொடுக்கவும், அவளால் சிறிது கூட அசைய முடியாமல் போனது.

“ம்மா சரியான முரடனா இருப்பாரு போல...” என்று தன் இதழ்களை அவனுக்கு கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

அவனது கைகள் கீழிறங்கி அவளின் வெற்று இடையை இறுக்கிப்பிடித்து பிசைய தொடங்க, அவனின் மோகம் அவளுக்குள் இறங்கியது.

கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல்,

“ம்மா...” என்று கதறிவிட்டாள்.

“மாமா சொல்லுடி...” என்று சினந்தவன், இன்னும் வேகமாக அவளின் இடையை இறுக்கி பிடித்தான். மேலும் தன் மீசையை வைத்து அவளின் வயிற்றில் கோலமும் போட, அவனது முகத்தை அங்கும் இங்கும் அசைய விடாமல் இறுக்கி பிடித்துக்கொண்டாள்.

ஆனால் அவனோ அவளது கைகளை பற்றி விலக்கியவன், அவளின் வயிற்றில் தன் மூச்சுக்காற்றை கொண்டு ஊதி அவளை சிலிர்க்க செய்ய தளர்ந்து போனாள்.

“முடியல மாமா...” அவன் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு உணர்விலும் சிலிர்த்து நெகிழ்ந்து தளர்ந்து விழியோரம் ஒரு துளி நீரை சிந்தினாள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top