அத்தியாயம் 13

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

 

தன் அருகில் அமர்ந்து இருந்தவனின் முகத்தை தூங்குவது போல பாசாங்கு செய்து இருந்தவள் இமைகளை மிக லேசாக கீற்று போல விரித்து பார்த்தாள் தேனருவி. அவனின் முகத்தில் இது நாள் வரை அவள் காணாத பாவம்..

“ஏன் என்ன ஆச்சு இவருக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா? ஒரு நாள் கூட அலுவலகம் போகாம இருக்க மாட்டாரே. இன்னைக்கு ரொம்ப ஆய்ஞ்சு ஓய்ஞ்சு போன மாதிரி இருக்கிறாரே.. ஒரு வேலை என்னை பற்றிய கவலையாக இருக்குமோ” எண்ணியவள்,

“அதுக்கு வாய்ப்பே இல்ல... ஏன்னா இவரு என்னை முழுதா பார்த்தது கூட இல்ல. என் கிட்ட பேசுனது கூட இல்ல.. சோ என்னை பற்றிய கவலை இவரின் மனதில் எள் அளவு கூட எழ வாய்ப்பு இல்லை. வேற ஏதாவதாக தான் இருக்கும்.. என்னாவா இருக்கும்?” இவள் தூங்குவதை விட்டுட்டு கணவனின் கவலையை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

அப்படியே தூங்கியும் போனாள். அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்த மலையமனோ தன் எதிரில் இருந்த சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் சிந்தனை எல்லாம் எங்கோ இருந்தது. அதில் இருந்து வெளிவர முயன்று தோற்றுக் கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்துக்கு மேல் அந்த சிந்தனை அவனை கண்ட்ரோல் பண்ண ஆரம்பிக்க, சக்கரவியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமயூவாய் திணறிப்போனான். நெஞ்சில் சுருக்கென்று வலி பிறந்தது. ஆதரவற்ற பிள்ளையாய் அவன் தள்ளாடி மூச்சுக்கு ஏங்கிய நேரம் தேனருவியின் கை அவன் மீது விழ, பட்டென்று அந்த கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.

அவனது இறுக்கமான பிடியில் சட்டென்று கண்களை மலர்த்தியவள் தன் கையை அழுத்தி பிடித்துக் கொண்டு இருப்பவனின் முகத்தை திகைத்துப் பார்த்தாள்.

அவனின் முகம் அதீத காய்ச்சலில் சிவந்துப் போய் ஏதோ ஒன்று அவனை கட்டுப்படுத்துவது போல திணறிப்போனவனை கண்டவளுக்கு லேசாக பயம் வர,

“என்னங்க.. என்னங்க” என்று அவனை உசுப்பினாள். அவனின் சிந்தனை எங்கே இங்கு இருந்தது.. அவளின் அழைப்புக்கு அவனால் ரெஸ்பான்ஸ் பண்ணவே முடியவில்லை.

“என்ன இது இவரு இப்படி இருக்காரு..” முணகியவள்,

“என்னங்க.. என்னங்க” மீண்டும் அவனை உசுப்பினாள். சட்டென்று திகைத்துப் அவளை பார்த்தவன்,

“ஐ நீட்..” என்று மட்டும் சொன்னவன் அவளின் மீது அப்படியே சரிந்து கவிழ்ந்துக் கொண்டு அவளின் மென்மையான இதழ்களை தன் முரட்டு இதழ்களுக்குள் எடுத்துக் கொண்டான்.

கணவனிடம் இந்த செயலை எதிர்பார்க்காதவள், “ஹாங்..” என்று மிரண்டுப் போனாள்.

“என்னடா இது இவரை உசுப்ப போய் இப்ப நான் நல்லா மாட்டிக்கிட்டேன் போலையே..” மனதுக்குள் புலம்பினாள். ஏற்கனவே காய்ச்சல் கண்ட உடம்பு, இதில் கணவனின் இந்த அதிரடி முத்தத்தில் இன்னும் ஆட்டம் கண்டது.

“இவரை உசுப்பி விட்டது தப்பா போச்சு போலையே..” புலம்ப மட்டுமே முடிந்தது அவளால். அவனை தள்ளி அவள் முயலவே இல்லை.

“அச்சோ இப்ப தானே மாத்திரை போட்டேன்.. கசக்குமே..” முத்தத்தில் லயிக்காமல் இவளின் சிந்தனை கண்ட மேனிக்கு அலைந்துக் கொண்டு இருந்தது. அதை மலையமான் சிறிதும் கண்டுக்கொள்ளவே இல்லை. அவன் தொலைந்துப் போக ஒரு இடம் வேண்டும். அந்த இடம் அவனது மனைவியாக இருக்கும் பட்சத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை போல.. தன்னை மறந்துப்போக வேண்டும் தான் தொலைந்துப் போக வேண்டும் என்று எண்ணியவன் மனைவியை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அவளின் இதழ்களோடு இதழ் கோர்த்துக் கொண்டான்.

அவளை தவிர தொலைந்துப் போக வேறு இடம் அவனுக்கு எதுவும் தெரியவில்லை போல.. அவளிடமே தன்னை மறந்து தன் சிந்தை மறந்து ஒன்றிக் கொண்டான். அவள் மீது முழுமையாக படர்ந்து அவளின் இதழ்களை இடைவெளியின்றி சுவைத்துக் கொண்டான்.

இவளுக்கு தான் மூச்கிமுட்டிப் போனது. இதுநாள் வரை அவளிடம் கணவனாக அவன் நடந்துக் கொண்டதே இல்லை. கணவனுக்கு உரிய தொடுகையும் இருந்தது இல்லை. அதுவும் இந்த அறையில் நீ யாரோ நான் யாரோ தான். அவனின் அணுகுமுறை எல்லாம் கீழே செல்லும் பொழுது மட்டும் தான். அதுவும் தங்கையின் கண் பார்வைக்காக மட்டும் தான்.

இதற்கு முன்னாடி இதழ்களை கவ்வி இருக்கிறான் தான். ஆனால் இது போலொரு முத்தம் அவன் இட்டதே இல்லை. முதல் முறையாக இதழ் முத்தம் எப்படி இருக்கும் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்துக் கொண்டாள். அவள் மட்டும் அல்ல.. மலையமானுமே இதழ் முத்தத்தை அடி ஆழம் வரை சென்று கற்றுக் கொண்டவன் அவளிடமே அதை செய்துக் காட்டினான்.

கணவனின் இந்த விதமான அணுகுமுறையில் செயல்படாத பொம்மை போலவே இருந்துக் கொண்டாள். அவன் விடவே இல்லை. அவளின் இதழ்களை இன்னும் இன்னும் தனக்குள் எடுத்துக் கொண்டு தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தானே தவிர அவளுக்கு விடுதலையே வழங்கவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் மூச்சு முட்டிப் போக, அவன் தோளில் அடித்து விலக்கி விட்டாள். அப்பொழுதும் மிக லேசாக மட்டுமே தலையை விலக்கினான். அவள் மீது இருந்து எழுந்துக் கொள்ளவே இல்லை.

நன்றாக மூச்சை இழுத்து விட்டாள். ஆனால் அவள் மீது முழுமையாக பாரம் போட்டு படுத்து இருந்ததால் அவளுக்கு சுவாசிக்க அத்தனை கட்டலாய் போனது.

“இதென்னடா வம்பா போச்சு..” முணகியவள், “கொஞ்சம் எழுந்திரிங்க எனக்கு மூச்சு முட்டுது” என்றாள். அவளின் தவிப்பை ஒரு கணம் கூர்ந்துப் பார்த்தவன் பின்னர் விலகிக் கொண்டான். முழுமையாக தன் மீது இருந்து விலகிக் கொண்டவனை பார்த்துக் கொண்டே இழுத்து மூச்சை நன்றாக விட்டாள்.

“கொஞ்ச நேரத்துல கலவரம் பண்ணிட்டாரே” எண்ணியவள்,

“எனக்கு பீவரா இருக்கு..” என்றாள்.

“சோ” என்பது போல அவன் அவளை பார்த்தான்.

“இல்ல எனக்கு காய்ச்சல் வந்தா என்னை ஒட்டிகிட்டு இருந்தா உங்களுக்கும் காய்ச்சல் வரும். இனி இப்படி என்னை நெருங்காதீங்க” சொன்னவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.

“இவங்க வான்னா வரணும். போன்னா போகணுமாக்கும்” முணுமுணுத்தவள் மருந்தின் வீரியத்தில் மீண்டும் தூங்கிப் போனாள்.

அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவனுக்கு முன்பு இருந்த இறுக்கம் சற்று தளர்ந்துப் போய் இருப்பதை உணர்ந்துக் கொண்டான்.

லேசாக தன் உணர்வுகளை மடை மாற்றி விட்டது போல இருந்தது. இல்லை என்றால் இந்நேரம் அவனின் சிந்தனை சுழலுக்குள் சிக்கி சின்னாப்பின்னம் ஆகி இருப்பான்.

மனசு சற்றே ஆசுவாசமாக உணர அதன் பிறகு இயல்புக்கு திரும்பி கிளம்பி அலுவலகம் போய் விட்டான். வீடு வர இரவாகிப் போனது.

தேனருவிக்கும் நன்றாக தூங்கி கழியவும் உடல் சோர்வு சற்றே நீங்கி இருந்தது. படுத்தே இருந்தது ஒரு மாதிரி இருக்க எழுந்து கீழே வந்தாள். அவள் வந்த நேரம் இளவரசி இரவு உணவு உண்டுக் கொண்டு இருந்தாள். இவளை பார்த்து “உடம்பு எப்படி  இருக்கு, சாப்பிடு” என எந்த சொல்லும் உதிர்க்கவில்லை.

“இவ என்ன ரகமோ” எண்ணிக் கொண்டே அந்த மரத்தடிக்கு சென்றாள். இரவு நேரத்தில் மிதமான டிம் மடித்து ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில் அவ்விடம் மிக மிக அழகாக இருக்க அவ்விடத்திலே அமர்ந்து விட்டாள்.

கண்ணாடி வழியாக ஊடுருவும் நிலவின் வெளிச்சம் இங்கே இருக்கும் செயற்கை வெளிச்சத்தில் ஊடுருவ முடியாமல் இருப்பதை கண்டு, அங்கு இருந்த விளக்குகளை எல்லாம் அனைத்து விட்டு வந்து அமர்ந்தாள்.

இப்பொழுது  கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் வெளிச்சம் அங்கே ஊடுருவி வர, வாவ் என்று தோன்றியது. வாய்க்காலில் காலை விட ஆசை தான். ஆனால் மீண்டும் காய்ச்சல் வந்து விடுமே என்று எண்ணி தள்ளி அமர்ந்துக் கொண்டாள்.

சோபாவுக்கு கீழ் காலை நீட்டி தரையில் அவள் அமர்ந்து இருந்தாள். அந்த நேரம் காலடி சத்தம் கேட்க நிமிர்ந்துப் பார்த்தாள் தேனருவி. இளவரசி தான் வந்தாள்.

எதுவும் சொல்லவில்லை அவளும் ஒரு சோபாவில் அர்ம்ந்து விட்டாள். “என்ன இவ வந்தா ஒன்னும் சொல்லல.. எதுவும் பேசல..” எண்ணிய தேனருவிக்கும் பேச ஒன்றும் தோன்றவில்லை.

நீண்ட நேரம் அங்கு மௌனமே கவிழ்ந்து இருந்தது. கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு கிளம்பிவிட்டாள் இளவரசி.

சரியாக அவள் போன நேரம் மலையமான் வந்துவிட்டான். தங்கையின் முதுகை பார்த்துக் கொண்டே அந்த இடத்து வந்தவன்,

“இளா இங்க வந்தாளா?” என்று தேனருவியிடம் கேட்டான்.

“ம்ம்.. வந்தாங்க..”

“எதுவும் பேசினாளா?” அவனிடம் சின்ன பரபரப்பு இருந்தது.

“இல்ல.. எதுவும் பேசல.. ஆனா இங்க உட்கார்ந்து இருந்தாங்க.. பிறகு என்ன நினைச்சாங்கன்னு தெரியல.. இதோ இப்ப தான் போனாங்க” என்றாள்.

“ஓ...!” என்றவன் அப்படியே தளர்ந்துப் போய் அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான். தேனருவிக்கு ஒன்றும் புரியவில்லை. இவரு எதுக்கு இவ்வளவு பரபரப்பா இருக்காரு.. தங்கச்சி வந்துட்டு போறதெல்லாம் ஒரு பெரிய விசயமா? எண்ணியவள், பசி எடுக்கவே,

“சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க” என்று விட்டு முன்னாடி போனாள். போகும் அவளை பெருமூச்சு விட்டுப் பார்த்தவனின் நெஞ்சில் சின்னதாய் ஒரு முறுவல்..

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top