ஆனால் அவனது ரசனை வேறுவிதமாக இருந்தது. பாண்டியன் மண்ணின் மைந்தன். அவனது ரசனையும் அப்படியே அதை ஒட்டியே இருக்க, அந்த பெண்ணால் இயல்பாக இருக்க முடியாமல் போனது.
ஒரு சில நாட்கள் மட்டும் கடமையே என்று சேர்ந்து இருந்தவர்கள் அதன் பின்பு பிரிந்து சென்றுவிட்டார்கள்.
அதிலே அந்த பெண் கருவுற, அதை கலைக்க முனைந்தார்கள். ஆனால் ராக்காயியும் பிச்சாயியும் படாத பாடு பட்டு தங்களது குலவாரிசை காப்பாற்றினார்கள். அப்படி வந்தவன் தான் இந்த பொற்கைப் பாண்டியன்.
தாயில்லாமல் அவன் வளந்ததினாலோ என்னவோ ஆத்தா மார்கள் மூவரின் அணைப்பிலும் வளர்ந்தான்.
ஆனாலும் அவனுக்குள் அம்மா என்ற ஏக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. அதை மிக அழகாக தீர்த்து வைத்தாள் பூம்பொழிலி மாதுமையாள்.
அதிகம் ஒட்டி நின்றான் அவளுடன் அந்த சின்ன வாண்டு... பாண்டியனின் உணர்வு அலைகள் எல்லாம் எப்பொழுதோ கரைகடந்து சென்று இருந்தது.
ஆனால் ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு ஊருக்கு செல்ல வேண்டி வந்தது பாண்டியனுக்கு. வீட்டிலிருந்து நீண்ட தூரம். தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது எதிரே வந்த லாரி அவனை உரச வருவது போல வர, வேகமாய் வண்டியை திருப்பினான். அப்பொழுது அருகில் சிறிய பாலம் ஒன்று இரு பக்கமும் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு இருந்தது. அதில் விட்டால் கண்டிப்பாக பெரிய சேதாரம் ஆகும் என்று எண்ணியவன், இன்னும் கொஞ்சம் ஒடித்து திருப்பினான்.
அப்பொழுது அங்கு பயிர் நட்டுக்கொண்டு இருந்த விவசாய நிலா இருக்க, அதில் கொண்டு போய் விட்டான்.
அவனது நேரமோ என்னமோ அங்கு ஒரு பெரிய கல் வரப்பில் இருக்க, அதை இடித்து மோதிக்கொண்டே வயலில் சென்று விழுந்தான்.
அதில் அவனது நெற்றியில் காயம் ஏற்ப்பட்டது. அந்த விபத்தை பார்த்துக்கொண்டு இருந்த நடவு நட்டுக்கொண்டு இருந்த பெண்கள் எல்லோரும் வேகமாய் ஓடி வந்து அவனை சேற்றிலிருந்து தூக்கி கரையில் போட்டார்கள்.
வேறு எந்த ஆணும் இல்லாததால் அவர்களே பம்ப் செட்டிலிருந்து கொட்டிக்கொண்டு இருந்த நீரை பிடித்து இவனது முகத்தில் அடித்து சேறு போக கழுவி விட, அவனுக்கு கண்ணை திறக்க கொஞ்சம் சுலபமாய் இருந்தது.
முகத்தில் இருந்த நீரோடு விழிகளை மலர்த்தி பார்த்தான். எதிரே முகத்தில் தவிப்புடன், முட்டி கால் வரையிலும் சேற்றில் பதிந்து போய், அழகான சிவப்பு நிற புடவையில், கைகளில் சிவப்பும் வெள்ளையும் நிறைந்த கண்ணாடி வளையல்களுடன், இரு பக்க மூக்குத்தியுடனும், காதில் குடை ஜிமிக்கியுடனும் கண்களில் இட்ட மையோடு கூடவே பரிதவிப்பிலும் இளகி இருந்தது.
அவனால் சிறிது கூட கண்ணை அவளிடமிருந்து நகட்டிக்கொல்லவே முடியவில்லை. மந்திரம் போட்டு மயக்கியது போல அவனது விழிகள் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது.
அவளது விழிகளின் அசைவுக்கு ஏற்றவாறு அவனது விழிகளும் அசைந்துக்கொண்டு இருந்தது.
“அடியே பொழிலு... தம்பிக்கு நெத்தியில அடி பட்டு இருக்கு பாரு... உனக்கு தான் ஏதோ கை வைத்தியம் தெரியுமே... என்னன்னு பாரு...” என்று சொல்ல,
அவனது மனம் பொழில் என்று அசைப்போட்டது. இடுப்பில் இருந்த முந்தானையை லேசாக கிழித்து அவனது உதிரம் சிந்தும் இடத்தை துடைத்து விட லேசாக தயங்கினாள்.
அந்த தயக்கம் பாண்டியனுள் பெரும் கோவத்தை கிளறிவிட்டது.
“நான் என்ன அந்நியமாடி உனக்கு... இப்படி தயங்குற.” அவனது உதடுகள் கட்டுப்பாட்டையும் மீறி சொல்லை உதிர்த்தது.
“ஹாங்.. எதுவும் சொன்னீங்களா...?” பொழில் கேட்க, அவன் இல்லைஎன்று தலையசைத்தான்.
அதில் காயம் பட்ட இடத்தில் லேசாக வலிக்க, பெரிய அடி பட்டது போல,
“அம்மா...” என்று அலறினான். அதில் கூடி இருந்த அத்தனை பேரும் பதட்டமாக,
“நீங்க அந்த தண்ணியில போய் சுத்தம் பண்ணிக்கிடுங்க தம்பி. எங்க பொழிலு உங்களுக்கு மருந்து போட்டு கட்டு கட்டி விடுவா...” என்று ஒரு வயதான பாட்டி சொல்ல, சேற்றிலிருந்து எழுந்துக்கொண்டான். ஆனால் அவனுக்கு வழுக்கி விட, மீண்டும் சேற்றில் விழுந்தான் வேண்டுமென்றே...
அவன் பார்க்காத வயக்காடா... பார்க்காத நஞ்சையா... ஆனாலும் இங்கு அவனால் அவனாக இருக்க முடியவில்லை. தனக்காக பரிதவிக்கும் பெண்ணவளின் உணர்வு குவியல்களை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று பேராசை எழுந்தது.
அதனாலே தொடர்ந்து நடித்தான். வேறு வழியில்லாமல்
“என் கையை பிடிச்சிக்கோங்க..” என்று கை நீட்டினாள் பொழிலி.
“ம்ம்ம்...” என்றவன் மிக வலுவாக அவளது கையை பிடித்துக்கொண்டான். அவள் திகைத்து போய் அவனை பார்த்தாள்.
“கைய பிடிங்கன்னு சொன்னா... இப்படியா கையை உடைக்கிற மாதிரி பிடிப்பீங்க...” அவனுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டாள்.
“மறுபடியும் விழுந்தட கூடாது பாரு...” என்றவன் இன்னும் அழுத்தி பிடித்துக்கொண்டான் அவளை.
அதன் பிறகு ஓடிய பம்பில் அவனது உயரத்துக்கு அது பத்தாமல் போக, வேறு வழியின்றி அவனை கிணற்றுக்கு அழைத்து சென்றாள்.
“இந்தா இந்த சட்டையை அலசிப்போடு...” என்று சட்டையை வேட்டியை கலட்டி அவளிடம் கொடுக்க, அதிர்ந்து போனாள்.
அவளது விழிகளில் தெரிந்த அதிர்வை கண்டவனுக்கு கொஞ்சம் பாவமாய் இருந்தது. ஆனாலும் அவள் தன்னவள் என்கிற எண்ணம் எழவே அவளிடம் உரிமை கொண்டான்.
அவள் தான் தவித்து போனாள். அவன் குளித்துவிட்டு வரவும், அருகில் இருந்த சில பச்சிலையை கசக்கி அவனை நெருங்கி காயத்தில் மருந்து போட அவளின் வாசம் அவனை கிறங்க வைத்தது.
மனது என்னவோ தன்னவள் தன்னவள் என்றே உரக்க கத்திக்கொண்டு இருந்தது. அவனது மனைவியிடம் கூட அவனுக்கு இந்த அளவு நெருக்கம் ஏற்ப்படவில்லை. ஆனால் இவளிடம் தள்ளி இருக்கவே முடியவில்லை.
தன் கரங்களுக்குள் அவளை வைத்துக்கொள்ளவே தவியாய் தவித்து துடித்தான். அன்றைய நாளுக்கு பிறகு அடுத்த நாளே அவளை தேடி வந்தான்.
வந்தவனை கண்ணில் மின்னல் வெட்ட பார்த்தாள் பொழிலி.
பாரேன் இவன் வேலையை.... ஹ்ம்ம் நீ நடத்துப்பா.....





